Powered By Blogger

Friday, 29 January 2016

ON OUR TRACT MINISTRY @ HIMACHALPRADESH, INDIA

ஹிமாச்சலப்பிரதேசத்தில் நடந்த கைப்பிரதி ஊழியத்தில் பார்த்த இயற்கை காட்சிகள்
இந்த இடம் குப்ரி. சீன தேசம் பின்னால் உள்ள மலைகளுக்கு பின் இருக்கின்றது.தமிழ் நாட்டில் ஊட்டிக்கு அருகில் இருக்கும் தொட்டபெட்டா சிகரத்தைப் போல, சிம்லாவுக்கு அருகில் உள்ள இடம். கேமரா என்னிடம் இருந்தபடியால் நான் கைப்பிரதி கொடுப்பதை அதிகமாக போட்டோ எடுக்க இயலவில்லை. 

இந்த மலைகளுக்குப் பின் பாக்கிஸ்தான் இருக்கின்றது.

நான் எனது மனைவி செல்வாவுடன்...

மேலும் சில காட்சிகள் அடுத்த படங்களிலும்....


குப்ரியில் இருந்து சிம்லாவுக்கு இறங்கிய பொழுது எடுத்த படம் 

மாலை நேரம் சிம்லாவில் உள்ள மால் ரோட்டில் கைப்பிரதி கொடுக்கச் சென்றோம். அங்குள்ள பழங்கள். இதன் பெயர் குர்பானி.  அடுத்த படமும்.


இப்பொழுது மாலை ஏழு மணி. இந்த நேரத்திலும் சூரியன் மறையாமல் இருந்தது.

அந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 

செல்வாவை நிற்க வைத்து பின்னணியில் சூரியன். இந்த ரோட்டில் நிறைய கைப்பிரதிகள் ஜெபத்துடன் விநியோகிக்கப்பட்டது.

நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து சிம்லாவின் தோற்றம் அடுத்த இரண்டு புகைப்படங்களிலும்.



சிம்லாவில் இருந்து மணாலிக்கு செல்லும் வழியில், பியாஸ் நதி அடுத்த நான்கு படங்களும். 






குல்லுவில் உள்ள ஷால் நெய்யும் இடத்தின் வெளியே. நாங்கள் சென்ற காருடன்.


முதன் முதலாக குல்லுவில் இருந்து மணாலிக்கு செல்லுகையில் பார்த்த  பனிமலையின் முகடு 


மணாலியில் இருந்து ரோட்டாங் பாஸ் செல்லும் வழியில் இது  கடல் மட்டத்திலிருந்து 9397 அடி உயரத்தில் உள்ள இடம். பனி மலையின் பின்னணியில் 

மேலும் சில காட்சிகள் 

எங்களுக்கு முன்னால் சென்ற கார்கள்...








கீழே கார்களை ஓரமாக நிறுத்தி இருக்கும் காட்சி. அரை அடி நகர்ந்தால் அதல பாதாளத்தில் விழ வேண்டும். அப்படிப்பட்ட பயணம்.

சின்ன சின்ன தீப்பெட்டிகளை வரிசையாக வைத்ததைப் போன்று கார்களின் வரிசை.








உல்லாச பயணிகளின் பனி சறுக்கு விலையாடும் இடம்.

இயற்கையின் எழில் வண்ணங்கள்... அடுத்த சில புகைப்படங்களிலும்....




எனது மனைவியுடன். இயற்க்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்கு.... அடுத்த படமும்... 


பனி முகடு...

இங்குள்ள (மணாலி) கடிம்பா என்ற இந்துக்களின் கோவிலின் சுற்றுப்புறத்தில் .... இந்த கோவிலுக்கு வந்த உல்லாசப் பயணிகளுக்கும், சுற்றுப்புறத்தில் கடைகள் வைத்திருந்தவர்களும் நமது கைப்பிரதிகளால் சந்திக்கப்பட்டனர். எனது பிள்ளைகள் இந்த இடத்துக்கு வரவே கூடாது என அடம் பிடித்தனர். நான் இங்கு வந்ததே ஊழியத்துக்குத்தான். எனவே கண்டிப்பாக போக வேண்டும் என கூட்டிக் கொண்டு வந்தோம்.

மீண்டும்  நாங்கள் தங்கிய இடத்துக்கு திரும்பிய பொழுது பியாஸ் நதியின் பின்னணியில் இன்னும் நான்கு புகைப்படங்களுடன்....




நதிக்கு உள்ளே இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். மேலும் நான்கு படங்களுடன்... 




இந்த நாளின் மாலையில் தான். மின்சாரம் உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து, அறிவிப்பு எதுவும் இல்லாமல் இந்த நதியில்  தண்ணீரைத் திறந்து விட்டதில் ஹைதராபாத்தை சேர்ந்த பொறியில் மாணவர்கள்  26  மரணம் அடைந்தனர்.

ரோட்டோரம் இருந்த கொடிகளில் மலர்கள்.... அடுத்த படமும்...


நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து இயற்க்கை....






என்னிடம் கைப்பிரதி வாங்கிய கிஷன்... இரட்ச்க்கப்படுவார்...

தெருவோரம் வீடுகளில் மலர்செடிகளை வளர்க்கின்றனர்... மேலும் நான்கு படங்கள்...





பியாஸ் நதி...... மேலும் ஒரு படம்....


வீட்டோரங்களில் பூஞ்செடிகள்.........

மேலும்.....

மேலும்....

மேலும்.....

இந்த பார்க்குக்குள்ளே செல்லுவதற்கு முன், பஸ்ஸில் இருந்து இறங்கி வரிசையாக சென்று கொண்டிருந்த பள்ளி மாணவ மாணவியர் நூறுக்கும் அதிகமானோருக்கு கைப்பிரதி கொடுக்கப்பட்டது 








மணாலியில் இருந்து திரும்பும் போது ஆப்பிள் ஆர்ச்சாடு ... அடுத்த படமும்...


கமிஷன் கடை ரோட்டோரம்..... அடுத்த இரு படங்களும்...



சண்டிகாருக்கு திரும்பும் வழியில் நாங்கள் மதிய உணவு சாப்பிட்ட உணவு விடுதியில் இருந்து... 

மேலும்....

மேலும் இரு படங்கள்....



மேலும் விபரங்கள் இந்த அறிவிப்பு பலகையில்....

மேலும் பத்து படங்கள்..... 



















இங்கே வேலை செய்யும் தமிழரை சந்தித்து சுவிஷேசம் அறிவித்தேன்...








சண்டிகர் மலைத்தோட்டம்.

மேலும் 33 புகைப்படங்களுடன்... 


































மேலே உள்ள அத்தனையும் கழிவு பொருட்களை வைத்து கலைவண்ணம் படைத்திருக்கின்றார்கள்.

சண்டிகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஏரி மேலும் மூன்று புகைப்படங்களுடன்..




இந்த ஏழு படங்களும், குருஷேத்திராவில் எடுத்தேன்... இங்கும் பல்வேறு கடைகளுக்கு கைப்பிரதி கொடுக்கப்பட்டது....






ஊழியத்தை முடித்து டெல்லி திரும்பினோம்: தங்கி இருந்த இரு நாட்களும் சுற்றுப்புறங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் வருகின்ற ஒவ்வொரு நபருக்கும் நற்செய்தியோடு கைப்பிரதி கொடுக்கப்பட்டது. ஆண்டவருடைய நாமம் மகிமைப்பட்டது. இந்த ஊழியத்துக்கு நமது ஊழியத்திலிருந்து ஒரு பைசா கூட செலவழிக்கப்படவில்லை. எனது மனைவியின் LTCயில் சென்று ஆத்துமாக்களை ஆதாயப் படுத்தினோம். "..... என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன்" ஏசாயா 10:20ன்படி ஆத்துமாக்களை சந்தித்தார்.


Sunday, 14 September 2014

JESUS SHALL SUSTAIN YOU!!

இயேசு உன்னை ஆதரிப்பார்
"கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளடவொட்டார்".(சங்கீதம் 55:22)
கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களுக்கு, இயேசுவின் நாமத்தில் நல் வாழ்த்துக்கள்! இந்த செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என கர்த்தருக்குள் நான் நம்புகின்றேன்!
1. கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு: பாரம் எனில், கண்ணீர், கவலை, தோல்வி, பயம், நிந்தை, சோர்வு, கடமை, பொறுப்பு மற்றும் சுமை என பொருள் படும். அனுதினமும் நாம் சந்திக்கின்ற பல்வேறு பிரச்சனைகள் நமது வாழ்வில் கவலையை கொண்டுவருகின்றது. நாம் நினைத்தது நிறைவேறாத பட்சத்தில், சோர்வு, மற்றும் எதிர்காலத்தைக் குறித்த பயம் இவைகளை கொண்டு வருகின்றது. இங்கே வேதம் தெளிவாக அறிவுறுத்துகின்றது, கர்த்தர்மேல் இந்த சுமைகளை - பாரத்தை வைக்கவேண்டும். இதை எப்படி வைப்பது?  சிலர் தங்கள் பாரத்தை  கர்த்தர் மீது வீசி எறியவேண்டும் என எறிகின்றனர். வேறு சிலரோ, தங்கள் பிரச்சனைகளை பிறர் மீது வைத்து, நல்லவேளை அடுத்தவர் மீது போட்டுவிட்டேன் என விசுவாசிக்கின்றார்கள். இது வேத வசனத்துக்குப் புறம்பானது. தீமையைத்தான் கொண்டுவரும். மேலும்  சிலர், தலையில் உள்ள பாரத்தை கீழே போடுவதுபோல ஆண்டவரை கீழே உட்காரவைத்து அவர் மீது போடவேண்டும் நினைக்கின்றனர், நமது நிலைக்குக் கீழ் கர்த்தரைக் கொண்டு வர முடியாது. அவர் துதிக்குப் பாத்திரர். சகலத்தையும் படைத்தவர்; உன்னதங்களில் வீற்று இருக்கின்றார். அவரை நாம் நமக்குக் கீழ்படுத்த முடியாது. மேல் வைத்துவிடு என்றால் அவரிடம் கொடுக்க வேண்டும். உள்ளத்தில் பாரம் வரும்போது ஆண்டவரிடம் கொடுத்துவிட வேண்டும். கொடுப்பது எப்படி? நமது ஜெபத்தின் மூலமாகவும், விசுவாசத்தின் மூலமாகவுந்தான் கொடுக்க வேண்டும்.
சமுதாயத்தில் அநேகர் தங்கள் கவலைகளை தாங்களே சுமந்து கொண்டிருக்கின்றனர். எனவே சுமை தாங்காமல் குடிப்பழக்கம், போதைக்கு அடிமை, மற்றும் தற்கொலைக்கு விரைகின்றனர். ஆண்டவர் ஒரு எளிய நேர்த்தியான் வழியை வைத்திருக்கின்றார், அது பாரத்தை ஆண்டவரிடம் கொடுத்துவிடுவதுதான். சுமையை ஆண்டவரிடம் கொடுப்பதால் வரும் பலன் எல்லாபுத்திக்கும் மேலான தேவ சமாதானம்.
ஒருமுறை சென்னையின் ஒரு பகுதியிலே, கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். (நானும் நமது ஞாயிறு பள்ளி மாணவர்களும்) அப்பொழுது ஒரு ஆட்டோ ஓட்டுனர் என்னிடம் வந்து நான் குடிக்காமல் இருக்க வேண்டும் எனக்காக் வேண்டுங்கள் எனக் கூறினார். சரியென்று அவர் வீட்டுக்குச் சென்றேன். அது ஓரறை வீடு. ஒரு கட்டிலிலே ஒரு சிறு குழந்தையோடு ஒருவர் படுத்திருந்தார். இது என்னுடைய பெரிய பெண். குழந்தை பிறந்து ஒருவாரந்தான் ஆகின்றது என்றார். அடுத்து வெளியே இருந்து ஒரு வாலிப பெண் உள்ளே வந்தாள். இவள் +2 படிக்கின்றாள். அடுத்து ஒரு மகன் 8வது படிப்பவன், தனது பெயரைக் கூட (ஜீவா) எழுதத்தெரியாது. அவரது மனைவி வீட்டிலே இருப்பவர். நான் ஒருவன் தான் இந்தக் குடும்பத்திலே சம்பாதிப்பவன். வருமானம் காணவில்லை. மேலும் என்னை என் வீட்டில் யாருமே மதிப்பதில்லை. எப்பொழுது வீட்டுக்கு வந்தாலும் பணம் கொண்டுவந்தியா? என்ற கேள்விதான் கேட்பார்கள், எனக்கு ஜுரம் இருந்தால் கூட வீட்டிலே சொல்லமாட்டேன். போற இடத்திலே மாத்திரையை வாங்கிப் போட்டுக்கொள்ளுவேன். எனக்கு கவலையாகத்தான் இருக்கின்றது என்றார். ஒரு தகப்பனின் நிலையைப் பாருங்கள். 
நான் அவர் மனைவியை பார்த்து, 'அவர் பனங்காயிக்கும் மரம் இல்லை. வேலை முடித்து வீட்டுக்கு வந்தால், வென்னீர் போட்டு வைக்க வேண்டும். அவருடைய சட்டை பேண்டை துவைத்து மடித்து வைக்கவேண்டும். அவரை மதியுங்கள்.' என்றேன். ஜீவாவுக்கு, டியுசனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தேன். படிக்கின்ற மகளைப் பார்த்து வீடு ஏன் சுத்தமாக இல்லை? வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் எனத் தெரியாதா? எனக் கேட்டேன். இனிமேல் சுத்தமாக வைக்கவேண்டும் என அறிவுறுத்தினேன். அவரிடம் பிள்ளைகளால் பற்றிய கவலை, பணப் பற்றாக்குறை இவற்றைப் பற்றிய நினைப்பு வரும்போது, ஆண்டவரிடம் சொல்லுங்கள் எனக் கூறி ஜெபித்த்துவிட்டு வந்தேன்.
ஆண்டவரிடம் பாரத்தைக் கொடுக்கும் போது, அவர் ஆதரிப்பார் / தாங்குவார். பாதம் கல்லில் இடறாதபடிக்கு.
கால்களைத் தள்ளாட விடமாட்டார்: பிரச்சனை வரும்போது அங்கும் இங்கும் ஓடி ஒளியாமல் ஸ்திரமாக நின்று சாதிக்க உதவி செய்வார். அல்லேலுயா! இன்றைய கிறிஸ்தவர்களில் பலர் ஜெபத்திலே தங்கள் பாரங்களை ஆண்டவரிடம் கொடுத்துவிடுகின்றனர். சமாதானத்தையும் பெற்றுக் கொள்ளுகின்றனர். மீண்டும் இந்தப் பிரச்சனை வந்துவிடுமோ என சந்தேகப் படுகின்றனர். இதனால் ஆண்டவரிடம் கொடுத்த சுமையை தாங்களாகவே வாங்கிக்கொண்டு, மீண்டும் சுமக்க ஆரம்பிக்கின்றனர். உள்ளத்தில் சமாதானத்தைப் பெற்றுக் கொண்டவுடனே அதைக் கொண்டாடவேண்டும். ஆண்டவர் வெற்றிசிறந்தார். மேலும் ஆண்டவருடைய நுகத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும். (வேத வசனத்துக்கு கீழ்படிய வேண்டும்) நன்மையும், கிருபையும் என்னைத் தொடரும் என அறிக்கைபண்னவேண்டும். இவ்வாறு செய்யும்போது தமது கிருபையினாலே மூடி நடத்துவார்.
ஜெபிப்போம்!
எங்களை நேசிக்கின்ற எண்கள் அன்பின் தகப்பவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம். இதைப் படிக்கின்ற அனைவரும் தங்கள் கவலைகளை உடனுக்குடன் தேவனே உம்மிடத்தில் கொடுத்து நீங்காத சமாதானத்தை பெற்றுக் கொள்ள உதவி செய்வதர்ர்க்காய் நன்றி செலுத்துகின்றோம். எங்கள் கால்களைத் தள்ளாட வொட்டாமல் எங்களைக் காக்கிரபடியால் நன்றி. கடைசி காலத்திலேயே வெளிப்பட ஆயத்தமாக்கப் பட்டிருக்கிற இரட்ச்ப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற நாங்கள் பிதாவாகிய தேவனுக்கு துதியும் கணமும் மகிமையையும் செலுத்துகின்றோம். இயேசுவின் மூலம் பிதாவே.
இயேசு என்னை ஆதரிப்பார்!
கிறிஸ்துவில் பிரியமானவர்களே உங்களது மேலான கருத்துக்களை  பிறருக்கு நன்மையுண்டாக இங்கே பதிவு செய்யும்படி வேண்டுகின்றேன்!

Friday, 25 April 2014

ஒன்றுபட்ட ஜெபமும் பக்தியும்


ஒன்றுபட்ட ஜெபமும் பக்தியும்

"இன்றைய ஊழியங்களில் ஒரு தெளிவான ஆவிக்குரிய தன்மை தேவைப்படுகிறது. மற்றவர்களின் ஊழியத்திலும், என்னுடைய ஊழியத்திலும் இதை நான் உணர்கிறேன். நாம் ஒரு தாழ்ந்த, ஆற்றலுள்ள, திட்டமிட்ட, கட்டுப்பாடான மனநிலையில் காணப்படுகிறோமே என்று பயந்திருக்கிறேன். ஒருவரின் விருப்பத்திற்கும், மற்றவரின் வெறுப்புக்கும் நம்மை நாமே ஆளாக்கிக் கொள்கிறோம். ஊழியம் ஒரு மகா பரிசுத்த வேலையாயிருக்கிறது. அது நம்மில் எளிமையான ஆவியையும், எல்லா விளைவுகளுக்கும் பரிசுத்தமும், தாழ்மையுள்ள மனப்பான்மையையும்
எதிர்பார்க்கிறது. கிறிஸ்தவ ஊழியர்களில் காணப்படும் தலையாய குறைபாடு பயபக்தியாகும்" - ரிச்சர்ட் சிசில்.