Powered By Blogger

Friday, 28 September 2012

GIVE........... ONE.

ஆண்டவர் அருளும் இரட்சிப்பு (செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப் பட்டுவிட்டது என்ற நிச்சயம் ) இலவசம்!! நாம் ஆடோ, கோழியோ பலி செலுத்தத் தேவையில்லை. மொட்டை போடவேண்டிய அவசியமும் இல்லை. மலைக்குப் போகவேண்டிய அவசியமும் இல்லை. அல்லது பாத யாத்திரை செல்ல வேண்டியதும் இல்லை. இயசுவிடம் மனமுருகி வேண்டிக் கொண்டால் - நான் செய்தது பாவம் என ஆண்டவரிடம் மறைக்காமல் ஒப்புக் கொண்டு, மன்னிப்புக் கேட்டால் ) இயேசுவே தருவதுதான் இரட்சிப்பு. இதற்கு என்னைப் போன்ற ஊழியர்கள் வழிகாட்ட முடியுமே தவிர,  இரட்சிப்பைக் கொடுக்க முடியாது. சுருங்கச் சொன்னால், பிறர் சொல்லி இரட்சிக்கப் படமுடியாது. உங்கள் உள்ளமே  - மனசாட்சியே - சொல்லும். உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப் பட்டுவிட்டது என. இது முற்றிலும் இலவசம்!!!. ஒரு பைசா கூட செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.ஆனால்  இந்த இரட்சிப்பை இலவசமாக ஒரே நேரத்தில் அநேகருக்கு அறிவிக்க முடியாது. தெருவில் நின்று கைப்பிரதி கொடுக்கலாம், சத்தமாக கத்தி சாட்சி கூறலாம். கைப்பிரதி அச்சிடக்கூட பணம் தேவையாய் இருக்கிறது.மிக எளிய விஷயம் என்னவெனில், இரட்சிப்பு இலவசம், ஆனால்  அதை அறிவிக்க பணம் அவசியம். போக்குவரத்து, ஊடகங்களுக்கான செலவு, கைப்பிரதி அச்சடிக்க, சிறு பிள்ளைகளுக்கான பரிசுகள் என செலவு பிடிக்கும் விஷயம் இது. எந்த நற்செய்தி அறிவிப்பும் இலவசமாக செய்ய முடியாது. எனவேதான், ஊழியத்துக்குக் கொடுக்கிறவர்களை ஆசீர்வதிக்கிறார். நமது ஊழியத்தில் உங்களுக்கும் ஒரு வாய்ப்பு தருகிறார்!
 1. சிறுவர் ஊழியம்: 
அ)  வாரந்திர சிறுவர் வேதாகம பாடசாலை.
ஆ) சிறுவர் ஊழிய பயிற்ச்சிப் பட்டறை 
இ) கிராமங்களில் வாரந்திர சிறுவர் வேதாகம பாடசாலை..
ஈ) சிறுவர் ஒடுக்கக் கூட்டங்கள் 
உ)  கோடை காலத்தில் சிறுவர் வேதாகமப் பள்ளிகள்.
ஊ) கிருஸ்துமஸ் காலங்களில் சிறுவர் கலாச்சார நிகழ்ச்சிகள்.
2. ஈஸ்கடோஸ்:
அ) சீயோனின்  எக்காளம். நமது மாதப் பத்திரிகை. (தமிழ்) இதன் அர்த்தம் கடைசி நாட்கள். 
ஆ) இதன் வருட  சந்தா 50/ ரூபாய்..இந்தியாவுக்குள். 
இ ) குடும்பங்களுக்கு ஆசீர்வாதம்.
3. கைப்பிரதி, அச்சிட்டு வெளியிடுதல்:
அ) இதுவரை பத்து தலைப்புகளில் கைப்பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டுள்ளோம்.
ஆ) கைப்பிரதிகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விநியோகிக்கப் பட்டு, ஆத்தும ஆதாயம் செய்யப் படுகிறது. 
இ) கைப்பிரதி ஊழியம் செய்வோருக்கு, மாதிரி கைப்பிரதிகள் இலவசமாக அனுப்பப் படுகின்றது. 
ஈ) இதன் நோக்கம், தமிழ் கூறும் நல்லுலகம்,  இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. எனவே உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எங்களைத் தொடர்பு கொண்டால், நாங்கள் அனுப்பி வைக்கிறோம். 
உ) உங்கள் முகவரியை எங்கள் கைபேசிக்கு குறுந்தகவல் மூலம் தெரிவியுங்கள். எண்கள் எண்: +91-9840836690. 
இந்த கைப்பிரதி ஊழியத்தில், நீங்கள், குடும்பமாக பங்கு பெற விரும்பினால் ரூபாய் 20000/ கொடுப்பதின் மூலமாக, நீங்கள விரும்பும் பெயரில் கைப்பிரதி அச்சிட்டு வெளியிடப் படும். அச்சிட தயாராக உள்ள தலைப்புக்கள்: 
1. காலந்தாழ்தினால் காலம் காலனாய் மாறும்.
2. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!!
3. பாலியல் ஒழுக்கக் கேடு.
4. உள்ளத் தூய்மைக்கு ஓர் அழைப்பு!!
5. உண்மையாகவே நீ சுகமாக விரும்புகின்றாயா?  மேலும் பல...... 
4. நமது ஒரு சில கைப்பிரதிகளைப் பற்றி சில வார்த்தைகள்:
1. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்: இயேசு கிறிஸ்து ஏன் இந்த உலகிற்கு வந்தார்?  என்பதை குறித்த வேத வசனங்களின் தொகுப்பு.
2. பொய்யைப் பற்றிய ஓர் உண்மை: பொய் என்றால் என்ன என்பதின் விளக்கம். ஆண்டவர் கொடுத்த பேசும் வரத்தை கவனமாக பயன் படுத்த யோசனை. குற்ற உணர்விலிருந்து உங்களை வெளியே கொண்டுவரும் ஒரு கைப்பிரதி.
3. உங்களால் வெற்றிகரமாக பாவம் செய்யவே முடியாது: குற்றம் செய்துவிட்டு தப்பிக்க முடியாது என்பதை விளக்குகிறது. இதைப் படித்தால்  தப்பு செய்வதற்கு மனம் வாராது.
4. காதல் கடிதங்கள் மண்ணில்......: குற்றப் பழியைச் சுமந்து கொண்டிருப்பவர்களுக்கு ஓர் ஒத்தடம். ஆண்டவரின் அன்பின் வெளிப்பாடு.
5. காலந்தாழ்த்தினால் காலம் காலனாய் மாறும்: ஆண்டவருக்காக முடிவெடுக்க காலதாமதம் செய்யவேண்டாம் என அறிவுறுத்துகிறது.
6. உங்களுக்கு ஓர் இரட்சகர்: கடன், வியாதி, பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிக்கும் இரட்சகரை அறிமுகப் படுத்துகிறது.
7. ஹைதர் காலத்து பெற்றோரும், நவ யுவ வாலிபரும்: தலைமுறை இடைவெளியை விளக்குவது, பெற்றோரும், வாலிபப் பிள்ளைகளும் எப்படி ஒருவரை ஒருவர் அணுக வேண்டும்? என கற்றுத் தருவது. இதன் மூலம் குடும்பத்தில் சமாதானம், மனமகிழ்ச்சி!
8. கடவுளிடம் (மனந்) திரும்புங்கள்: செய்த குற்றத்தை எப்படி சரி செய்வது? என்பதைக் குறித்து விரிவாக கூறுகின்றது. 
9. உங்களையும் சாவு சந்திக்கும்: இதன் கடைசி வரிகள்: உங்கள் வீடு மேலே இருக்கிறதா? சாவை இனிமையாக சந்திக்க வாழ்த்துக்கள்!!
10. உண்மையாகவே 'நீ சுகமாக விரும்புகிறாயா?': இயேசு கிறிஸ்து ஒரு வியாதியஸ்த்தனைப் பார்த்து கேட்டது தலைப்பு. வியாதி உள்ளவர்களுக்கு அற்புதத்தைக் கொண்டுவரும் கைப்பிரதி. ஆஸ்பத்திரி ஊழியத்துக்கு பயன்படும் கைப்பிரதி. விநியோகிப்பவர்களையும் ஆண்டவர் பயன் படுத்துவார். 
11.பாலியல் குற்றங்கள்: பாலியல் குற்றங்களின் கடுமையை எடுத்துக் கூறுகிறது. இக் குற்றத்திலிருந்து விடுதலை பெறுவது எப்படி? வழிகாட்டுகிறது. 
12.உள்ளத் தூய்மைக்கு ஓர் அழைப்பு: உள்ளத்தை எப்படி தூய்மையாக வைத்துக் கொள்ளுவது? சவால் விடும் ஒரு கைப்பிரதி.
13. கவலை - அதன் காரணங்கள், சாபங்கள், அதற்க்கான் சிகிச்சை: மனுக்குலத்தை ஆட்டிப் படைக்கும் ஒரு நோய். கவலையால் வரும் பிரச்சனைகளையும், கவலைப் படாமல் இருக்க வழிகளையும் கற்றுத் தருகிறது. காலமெல்லாம் கவலையின்றி வாழலாம்.  
4. கிராம ஊழியம்:
அ) அரசு விடுமுறை நாட்களில் ஒரு குழுவாக சென்று சென்னைக்கு அருகில் உள்ள கிராமங்களைச் சந்திக்கிறோம். 
உங்கள் ஜெபவின்னப்பம், கடிதம், சந்தா அனுப்ப வேண்டிய முகவரி: 
சகோதரன். செலவின் துரை,
சீயோன் இல்லம்,
#82/15, பி.வி. கோவில் தெரு,
குசப்பேட்டை, சென்னை 600 012. 
 WWW. YOUTUBE COM / ZION'S CHILDREN'S BIBLE SCHOOL 
www. facebook .com/selvin.durai.1.      

வங்கி மூலமாக நன்கொடை அனுப்ப விரும்புவர்கள்,
ZION REVIVAL MINISTRIES, 
INDIAN BANK OTTERI BRANCH,
A/C NO: 441176777
மேலும் நமது சில விடியோ பதிவுகளை, www.youtube.com/zion’schildrenbibleschool என்ற முகவரியில் பார்க்கலாம். நன்றி.

Wednesday, 26 September 2012

கைப்பிரதி கொடுப்போர் கவனத்திற்கு...

1. கைப்பிரதி கொடுத்து ஊழியம் செய்வோர், முத்தலாவது நீங்கள் கொடுக்கின்ற கைப்பிரதியைப படித்துப் பாருங்கள். படிக்கத்தெரியாதவர்கள், (மொழி தெரியாதவர்கள்) தெரிந்தவர்களை படிக்கச் சொல்லி, கவனமாக கேளுங்கள். ஒரு முறை நான் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் கைப் பிரதி கொடுத்துக் கொண்டிருந்தேன். மனதுக்குள் ஒரு சந்தோஷம், உலக அதிசயங்களில் ஒன்றிலே நான் ஊழியம் செய்கின்றேன் என்று! ஒரு வாலிபன் வந்தான் "ஈசு ஆப்கோ பியார் கர்த்தாஹே" எனக் கூறி ஒரு கைப்பிரதியைக் கொடுத்தேன். அதை வாங்கி என் முன்னாலேயே படிக்க ஆரம்பித்தான். எனக்கு மகிழ்ச்சி! சில வரிகள் வாசித்துவிட்டு வீசி அடித்தான்.எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தக் கைப்பிரதியின் முதல் பக்கத்தில் ஒரு வயதான தம்பதியினரின் படம் அச்சிடப்பட்டு இருந்தது. பின்பு அதை எடுத்து வைத்துக் கொண்டேன். அடுத்து வந்த வயதானவரிடம் கொடுத்தேன். அவர் சில வரிகள் படித்து விட்டு, நன்றாயிருப்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டிப் படித்துக்கொண்டே சென்றார். பின்பு ஹிந்தி தெரிந்த என் உறவினரிடம் விசாரித்தேன். அந்தக் குறிப்பிட்ட கைப்பிரதியை வயதானவர்களுக்கே கொடுங்கள் என்று கூறினார்கள். தயவு செய்து கைப்பிரதியில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியாமலேயே நோட்டிஸ் கொடுப்பது போலக் கொடுக்காதீர்கள். 
2. அதில் உள்ள வசனங்களைக் கவனியுங்கள்! படித்து மனப்பாடம் செய்யுங்கள் ! கைப்பிரதியில் உள்ள எல்லாவற்றைக் காட்டிலும் வசனம் கிரியை செய்யும். பின்பு கதைகள, சம்பவங்களை நினைவு கூறுங்கள்.) எல்லாவற்றையும் மனதில் வைத்து இக் கைப்பிரதியைப் படிக்கிற யாவரும் மனந்திரும்ப ஜெபியுங்கள்! கொடுக்கும் பொழுது ஆவியானவர் வழி நடத்தும்படியாய் ஜெபித்துக் கொடுங்கள்!!.
3. கைப்பிரதி கொடுக்கும் பொழுது தலைப்பைச் சத்தமாகச் சொல்லிக் கொடுங்கள். அது என்ன? என்று விசாரிப்பவரிடம் இயேசு உங்களை நேசிக்கிறார் என்று சுவிஷேசத்தைச் சொல்லிக் கொடுங்கள். (ஒரு சபையில் உள்ள வாலிபர்கள், கைப்பிரதியைக் கொடுத்துவிட்டு சபைக்கு வாருங்கள் என் அழைத்ததாக அந்த சபையின் போதகரே கூறி வருத்தப் பட்டார்.) கைப்பிரதிகள் சபைக்கு வரும்படி கொடுக்கப் படும் அழைப்பிதழ் அல்ல. விநியோகிப்போர் முகவரி இருக்கும் இடத்தில் சீல் இருந்தால், முகவரி நன்கு தெரியும்படி அடித்துக் கொடுங்கள். இல்லையெனில் தொடர்பு முகவரிக்கு தொடர்பு கொள்ளும்படி விட்டுவிடுங்கள். விசாரிக்கிறவர்களுக்கு நீங்கள் எங்கே இருந்து வருகின்றீர்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள். 
4.கைப்பிரதியை விலையேறப் பெற்றதாய் நினையுங்கள். யாரெல்லாம்  வாங்கி கீழே போட்டுவிடுவார்கள் என்று நினைக்கின்றீர்களோ அவர்களிடம் "உங்கள் நண்பருக்குக் பிரயோஜனமாய் இருக்கும்" எனக் கூறிக் கொடுங்கள். அப்பொழுதுதான் வாங்குபவர்களுக்கு கைப்பிரதியின் அருமை தெரியும். படிப்பார்கள்! இரட்ச்சிக்கப் படுவார்கள்!! ஒரே இடத்தில் இருந்து கைப்பிரதி கொடுப்பீர்களானால், கொடுத்து முடிந்த பின், கைப்பிரதி அருகில் எங்காவது கீழே கிடைக்கின்றதா? என் பார்த்து எடுங்கள். தூசியைத் தட்டி அடுத்த முறைக் கொடுப்பதற்க்கென்று சேர்த்து வையுங்கள். கீழே கிடந்த கிழிந்து போன கைப்பிரதியைப் படித்து இரட்ச்க்கப் பட்டு, சபை வைத்து ஊழியம் செய்யும் சகோதரனை எனக்குத் தெரியும். எனவே திரும்மக் கொடுக்க முடியாதபடி கிழிந்திருந்தால் வருத்தப்படாதிருங்கள்!  விட்டுவிடுங்கள்!!.
5. கிருஸ்தவராகிய உங்களுக்கு ஒருவர் கைப்பிரதி கொடுத்தால், நான் கிறிஸ்தவன்தான் என கூறாமல் உற்சாகப் படுத்துங்கள். உங்கள் ஊழியத்தை ஆண்டவர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன் என்க கூறலாம். ஒரு  டீ வங்கிக் கொடுக்கலாம். அல்லது ஒரு நல்ல காணிக்கைகூடக் கொடுக்கலாம். என்னால்தான் செய்ய முடியவில்லை, நீங்களாவது நன்றாகச் செய்யுங்கள். எனக் கூறி உற்சாகப்படுத்துகின்ற அநேக கிறிஸ்தவர்களைச் சந்திக்கிறேன். இயேசுவுக்கு சாட்சியாக் வாழுவதைக் குறித்து அவர்களோடு பேசுகின்றேன். ஜெபக் குறிப்புக் கொடுத்தார்களானால் அவர்களுக்காக என் தனி ஜெபத்தில் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். இதைப் போல செய்யுங்கள் ஆண்டவர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார்.
6. சிறுவர்கள் மூலமாக கைப்பிரதி ஊழியம் செய்யலாமா? இது ஒரு நல்ல கேள்வி! எங்கள் சிறுவர் ஊழியத்தில் கிருஸ்துமஸ் அன்று எங்கள் சிறுவர் ஊழிய மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எல்லாத் தெருக்களிலும் 'கேரல்' பாடல்களைப் பாடி பிள்ளைகள் மூலமாக கைப்பிரதி கொடுப்பதுண்டு. முதலாவதே அவர்களுக்கு என்ன சொல்லி கைப்பிரதியைக் கொடுக்க வேண்டும் என பாடம் நடத்துவதுண்டு. ஞாயிறு பாடசாலைப் பிள்ளைகளே பாடல்களைப் பாடுவார்கள், வசங்களைக் கூறுவார்கள், இனிப்புடன் கைப்பிரதியும் வழங்குவார்கள். எல்லாவற்றுக்கும் பயிர்ச்சி கொடுப்பேன். நானும் கூடச் செல்லுகிறபடியால் சார் கொடுக்கச்சொன்னார் என கூறுவார்கள். மற்றபடி பிள்ளைகளை வைத்துக் கொடுத்தால் மதிக்க மாட்டார்கள். சிறு பிள்ளைகளுக்குக் கொடுப்பதும் அறிவுடைமை ஆகாது. சிறு பிள்ளைகள் எனக்குக் கொடுங்கள் என கேட்டால் உங்கள் ஜெபத்தை நினைவு கூர்ந்து கொடுங்கள். கொடுக்கும் பொழுது உன் அம்மாவிடம் கொடு, அப்பாவிடம் கொடு, என கூறிக் கொடுங்கள். 
என்னுடைய சில அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். டெல்லியில் பொதுவாக மக்களைச் சந்திக்க வேண்டுமானால், வாரக் கடைசியில் பொதுவாக "பார்க்"கில் தான், சந்திக்க முடியும். மாலைப் பொழுதைக் குடும்பமாக களிப்பர்கள். நானும் ஹிந்தி கைப்பிரதிகளைக் கொடுப்பதுண்டு. குடும்பத்தில் முதியவர்கள், தங்களைப் போன்ற முதியவர்களோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். பெண்கள் ஒரு பக்கம். வாலிபர்கள் ஒரு பக்கம் பந்து விளையாடுவார்கள். சிறுவர்கள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒரு முதியவர் நடை பாதையில் வந்து கொண்டிருந்தார். ஒரு கைப்பிரதியை அவரிடம் கொடுத்தேன். அதைப் பார்த்தவுடன் அதைக் கிழித்தெறிந்தார். உடனே அவரை ஏறிட்டுப் பார்த்தேன். உடனே அவர் முகத்தில் தான் செய்தது தவறு என உணர்ந்ததைப் பார்த்தேன். ஒரு விநாடியில் அவர் அந்த இடத்தை விட்டு வேகமாகச் சென்றுவிட்டார். தூரத்திலே தன நண்பர்களோடு உட்கார்ந்து என் பக்கம் கையை நீட்டிப் பேசிக் கொண்டிருந்தார். நான் அவர்கள் பேசும் சப்தம் கேட்கும் இடத்தில் உட்கார்ந்து போவோர், வருவோருக்குக் கைப்பிரதி கொடுத்துக் கொண்டிருந்தேன். பின்பு வீட்டிற்க்குச் செல்லலாம் என் நினைத்து, வேறொரு வழியாக பார்க்கை விட்டு வெளியே வரும் பொழுது உள்ளே வருபவர்களிடமெல்லாம், கொடுத்துக் கொண்டே வந்தேன். அதில் ஒருவர், எனது முகவரி அச்சிட்ட பகுதியைப் பார்த்து விட்டு, ஒ..மதராஸ் வாலே ... என்று ஆரம்பித்து ஹிந்தியில் காச், மூச்சென்று கத்தினார். அவர் திட்டியதில் ஓரிரு வார்த்தைகள் புரிந்தது. போலிஸ் ஸ்டேஷன்  புரிந்தது. அவர் திட்டிவிட்டுச் சென்றுவிட்டார். நான் கைப்பிரதியை கொடுத்துக் கொண்டே வெளியே வந்தேன். வெளியே அருகில் இருந்த பஸ் நிலையத்தில் நின்ற ஒருவரிடம் கைப்பிரதி கொடுத்து விட்டு, இங்கு எங்கு   போலிஸ் ஸ்டேஷன் இருக்கிறது? என ஆங்கிலத்தில் கேட்டேன். அவர் கைகாட்டவே, நேராக   போலிஸ் ஸ்டேஷனுக்குள் சென்றேன். அங்கிருந்த ஆய்வாளரிடம் "ஈசு ஆப்கோ பியார் கர்த்தா ஹே". அவர் எழுந்து, இரு கைகளையும் நீட்டி கைப்பிரதியைத் தொட்டு வணங்கி, வாங்கிக் கொண்டார். பின்பு அங்கிருந்த பிற காவலர்களுக்கும் கொடுத்தேன். அதே பணிவோடு வாங்கிக் கொண்டார்கள். ஆண்டவருக்கு நன்றி கூறிக் கொண்டே வீடு திரும்பினேன். 
முன்பு வாரமொருமுறை சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில், நானும், ஒரு நண்பரும் சேர்ந்து கைப்பிரதி ஊழியம் செய்து வந்தோம். வெளியூர் செல்லும் அனைத்து ரயில்களிலும் கைப்பிரதி கொடுப்போம். எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சந்திக்கிறோம் என். ஒருநாள் கைப்பிரதி கொடுத்துவிட்டு வரும் பொழுது, ஒரு வாலிபன், எங்களிடம் "என்ன எல்லாப் போஸ்டர்களிலும், குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர்கள் கேட்கின்ர்ரர்கள்; செத்தவர்கள் உயிரோடு எழும்புகிறார்கள், என போடுகிறீர்களே எங்காவது யாரையாவது உயிரோடே எழுப்பினீ ர்களா? செத்தவனை உயிரோடே எழுப்பு, நான் இயேசுவை ஏற்றுக் கொள்ளுகிறேன், இல்லையானால் நீ பைபிளைப் படிக்கக் கூடாது, தூக்கவே கூடாது" என்றான். நான் அவனுக்கு என்ன பதில் கூறுவது என யோசித்த வேளையில், என் நண்பர் பேச ஆரம்பித்தார், "ஆண்டவர் தம்முடைய நேரத்தில் செய்வார், அவருடைய சித்தமிருந்தால் அதைச் செய்வார்" என கூறினார். நான், "யாரும் செத்தவர்களை அந்த்தக் கூட்டத்திற்கு கொண்டு சென்றிருக்க மாட்டார்கள், ஆகவே எழுப்பவில்லை" என கூறினேன். அவன் நாங்கள் சொல்லுவதைக்  கேட்பதாக இல்லை. மீண்டும் மீண்டும் அவன் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். "நாம் ஒரு கூட்டம் போடுவோம், நீ இயேசுவைப் பற்றிப் பேசு; இயேசு இருக்கிறார் என்பதை நிரூபி; நான் இயசுவை ஏற்றுக்கொள்ளுகிறேன்; இல்லாவிட்டால் நீ பைபிளை எடுக்கக் கூடாது" என்றான். நாங்கள் கூறுவதைக் கேட்பதாக இல்லை. மீண்டும், மீண்டும் தான் சொல்லுவதையே சொல்லிக் கொண்டிந்தான். நான் சற்று என் சத்தத்தை உயர்த்தி, "இங்க பாரு... உன் கண் முன்னாடியே ஒரு செத்த பிணம் இயசுவின் நாமத்தினாலே உயிரோடு எழும்பும். எனக் கூறினேன். பின்பு என் இடது பக்கமாக வந்த அவனைப பார்க்கத் திரும்பினேன். அவனைக் காணோம். எங்கே என்று தேடிய பொழுது, அவன் முகம் தூரத்திலே கூட்டத்தின் மத்தியில் தெரிந்தது., நான் கையைத் தூக்கி இங்கே வா என சைகை செய்தேன். அவன் ஓடியே போய்விட்டான். 
ஒரு முறை டெல்லி, 'இந்தியா கேட்' பகுதியில் ஹிந்தி கைப்பிரதி கொடுத்துக் கொண்டுருந்தேன். மாலை 6 மணிக்கு ஆரம்பித்தேன் எனோடு வந்த என் குடும்பத்தினரும், உறவினர்களும் ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நான் அதைச் சுற்றிலும் வந்து, டூரிஸ்டுகளுக்கும், உள்ளுர்க்காரர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருந்தேன். 4 தலைப்புகளில் என்னிடம் கைப்பிரதிகள் இருந்தது. எல்லாவற்றையும் கொடுத்து முடித்துவிட வேண்டும் என ஜெபத்தோடு பிரயாசப்பட்டுக் கொன்டிருந்தேன். 8 மணியாகி விட்டது. கூட்டம் குறைய ஆரம்பித்தது. எனவே, மீதி கொஞசம்  இருந்த கைப்பிரதியோடு வீட்டிற்க்குக் கிளம்ப ஆரம்பித்தேன். அப்பொழுது ஒரு தம்பதியினர், ஒரு 5 வயதுப் பையனோடு என்னைத் தேடி வந்து கைப்பிரதி கேட்டனர், "கையில் இருந்தவைகளில் ஒன்றைக் கொடுத்தேன்; இது அல்ல, வேறொன்று. அடுத்ததைக் கொடுத்தேன், இது அல்ல, வேறொன்று. இரண்டு தலைப்புகளில் மட்டுமே இருந்தது. இது தான இருக்கிறது என்றேன். அவர்கள் முகத்தில் எமாற்றம். குறிப்பாக அந்தச் சிறுவனின் முகத்தில். அவர்கள் சொன்னதில் இருந்து, தெரிந்தது, அவர்கள் கேட்டது, "எ ஹேங் சுப் சந்தேஷ்" என்ற கைப்பிரதி. அது "ஸ்கிரிப்சர் கிபிட் மிஷன்" வெளியிட்ட மிக அருமையான கைப்பிரதி. பொதுவாக எப்பொழுதும் சிறுவர் மத்தியில் ஊழியம் செய்யும் ஊழியர்கள் வார்த்தை இல்லாப் புத்தகம் ஒன்றைக்  கையில் வைத்திருப்பார்கள். அட்டை பச்சை, அடுத்து கருப்பு, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறங்களில் அந்தப் புத்தகம் இருக்கும். அதை வைத்து, எப்பொழுது வேண்டுமானாலும் சுவிஷேசத்தை அறிவிக்கலாம். அந்தக் கைப்பிரதி அதே நிறங்களில் ஆனால் வேத வசனங்களோடும், படங்களோடும்   மிக நேர்த்தியாய் இருக்கும். அந்த சிறு பையனின் விருப்பத்தை நிறைவேற்றும் படியாக என்னைத் தேடி அலைந்து பிடித்து விட்ட மகிழ்ச்சி, கடைசியில்              ஏமர்ற்றமாக முடிந்து விட்டதைப் பார்த்து எனக்கும் மிகுந்த வருத்தம். அந்தச் சிறுவனின் மூலமாக அந்தக் குடும்பம் முழுவதும் சத்தியத்தை அறிந்து கொண்டிருக்கும் என் நினைத்தேன். மற்ற இரு தலைப்புகளில் இருந்த கைப்பிரதிகளைக் கொடுத்து அனுப்பினேன். அந்தக் குடும்பம் இயசுவை ஏற்றுக் கொள்ளவேண்டும் என் ஜெபித்தேன்.

உங்கள் கைப்பிரதி ஊழியத்தின் மூலமாக கூட்டங் கூட்டமாக மக்கள் சத்தியத்தை அறிந்து இயேசுவை ஏற்றுக்கொள்ள வாழ்த்துகின்றேன்  நன்றி!!! 

http://www.youtube.com/watch?v=cXbANmkaMoI&feature=colike 

Tuesday, 25 September 2012

சும்மா இருந்தால் அது பாவம்.

சும்மா இருந்தால் அது பாவம்.
நம்மில் அநேகர், பொய் சொல்லுவது, பிறருக்குத் தீமை செய்வது, பிறரது பொருட்கள் மீது ஆசை, இச்சை கொள்ளுவது, திருடுவது, கொலை, கொள்ளை, பிறர் மீது பழி சுமத்துவது, இன்னும் பிற, இவைகள்தான் பாவம் என் மக்கள் நினைக்கின்றனர், இதுவும் பாவந்தான், 'சும்மா' இருப்பதும் மேலே உள்ளவைகளுக்குச் சமமான பாவமாகும்.என் பைபிள் கூறுகிறது. மேலே வாசியுங்கள், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து  சும்மா இருப்பதின் பாவத்திலிருந்து உங்களை விடுவித்து காத்தருளுவராக.
சும்மா என்ற வார்த்தை வேறு பாஷைகளில் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன இந்தப் பக்கம்? என் கேட்டால் சும்மா வந்தேன் என் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். சும்மா என்ற வார்த்தையைக் கூட நாம் சும்மா உபயோகிக்கிறோம். 
மத்தேயு 25ல், இயேசு கூறிய ஒரு உவமைக் கதை எழுதப்பட்டுள்ளது.இது    தாலந்துகளின் கதை. கிறிஸ்த்தவர்கள் மிகத் திறமையாகச் செயல்படுவதைக் குறித்து பேசும் பொழுது, இந்தப் பகுதியில் இருந்து எடுத்துப் பேசுவார்கள். இந்த வேத பகுதியை நாம் தியானிக்கும் பொழுது,  எல்லா மனிதரும் சமமாக படைக்கப் பட்டுள்ளனர் என்ற கூற்றை ஏற்றுக் கொள்ளுவது கடினம். ஒரு தேசத்தில் பிறந்த எந்த ஒரு குடிமகனும் தன் தேசத்தில் வாழ, சம உரிமையும், சம நீதியும் உடையவனாய் இருக்கின்றான். உடனே நாம் எல்லாரும் சமமாகப் படைக்கப் பட்டுள்ளோம் என் நாம் நம்புகிறோம். ஆனால் திறமைகளையும், செயல் திறனையும், கொடுக்கின்ற ஆண்டவரிடம் வரும் பொழுது, நாம் எல்லா மனிதர்களும் சமம் என் எடுத்துக் கொள்ளமுடியாது. 
பைபிளில் உள்ள "தாலந்துகளின்" உவமைக் கதையில் பணமும், வேலைக்காரருமுள்ள ஒரு மனிதனை அறிந்து கொள்ளுகிறோம். அவன் ஒரு சுற்றுலா செல்லத் திட்டமிட்டான். தன பயணத்தைத் தொடங்குமுன், தன் வேலைக்காரரை ஒன்றாக் அழைத்தான். தன்னுடைய பணத்தை அவனுக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். ஒருவனுக்கு  5 தாலந்துகள், ஒருவனுக்கு  3 தாலந்துகள், மூன்றாமவனுக்கு ஒரு தாலந்து கொடுத்து, இதை உபயோகித்து மேலும் சம்பாதியுங்கள் என் கட்டளையிட்டான். பின்பு பிரயாணப் பட்டுப் போனான். பல நாட்கள் சென்று குறித்த நாளில், திரும்பி வந்தான். தன் வீட்டிற்க்குத் திரும்பி வந்தபின், தன் வேலைக்காரரை ஒன்றாக அழைத்து, தான் அவர்களிடம் ஒப்படைத்த பணத்துக்கு (தளந்துக்குக்) கணக்குக் கேட்டான். முதலாவது மனிதன் வந்து "ஆண்டவனே 5 தாலந்தை என்னிடம் ஒப்புவித்தீரே, அதைக் கொண்டு நான் வேறே  5 தாலந்தை ஒப்புவித்தேன்.அவனது எஜமான் அவனை நோக்கி,  

"நல்லது, உத்தமும்  உண்மையுமுள்ள,   ஊழியக்காரனே, கொஞசத்தில் உண்மையாய் இருந்தாய். உன்னை அநேகத்தின் மீது அதிகாரியாக வைப்பேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி" என்றான். 

இரண்டாவது மனிதன் வந்து சொன்னான், ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடம் ஒப்புவித்தீரே. அவைகளைக் கொண்டு வேறே இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன். இதோ 4 தாலந்துகள் என்றான். அதற்க்கு ஆண்டவன் அவனை நோக்கி,  

"நல்லது, உத்தமும்  உண்மையுமுள்ள,   ஊழியக்காரனே, கொஞசத்தில் உண்மையாய் இருந்தாய். உன்னை அநேகத்தின் மீது அதிகாரியாக வைப்பேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி" என்றான். 

ஒரு தாலந்தை வாங்கினவன் வந்தான். "ஆண்டவனே  நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடின இருதயமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால் நான் பயந்து போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ உம்முடையதை வாங்கிக் கொள்ளும் என்றான்".அவனுடைய எஜமான் பிரதியுத்திரமாக: 

"போல்லாதவனும், சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் , தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும், அறிந்திருந்தாயே. அப்படியானால் நீ என் பணத்தைக் காசுக்காரர் வசமாய் போட்டுவைக்க் வேண்டியதாய் இருந்து. அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வங்கிக் கொள்வேனே. என்று சொல்லி, அவனிடத்தில் இருக்கிற தாலந்தை எடுத்து, பத்து தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும். பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக் கொள்ளப் படும். பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப் போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். என்றான்". 

 இப்பொழுது, நாம் இந்த மனிதனின் அனுபவங்களை எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். கர்த்தர் நம்மிடம் கொடுத்திருக்கும் பொறுப்புக்களை மேன்மைப் படுத்த ஒவ்வொருவரும் உற்சாகப்படுத்தப்படுகிறோம். இந்த மனிதன் நம்மிடையே உள்ள அநேகரைப் போல, ஒரு தாலந்து மனிதன். இந்த உலகில் 5 தாலந்து உள்ள மனிதர்கள் சிலர். 3 தாலந்து உள்ள மனிதர்கள் சிலர் இருக்கின்றனர். தாமஸ் ஆல்வா எடிசனைப் போன்று சில மனிதர்கள்தான் இருக்கின்றனர். இவர் தன வாழ்நாட்களில் ஆயிரக்கணக்கான வித்தியாசமான கண்டுபிடிப்புக்களைச் செய்தவர். லியானோ டாவின்சியைப் போல ஒரு சிலரே இருக்கின்றனர். இவர் உலகப் பிரசித்தி பெற்ற ஓவியர். இந்தத் தாலந்து என்ற உவமைக் கதையில் இருந்து, ஒரு தாலந்து மனிதனிடமிருந்த 3 காரியங்களில் சிறப்புக் கவனம் செலுத்த உள்ளோம். 1. சும்மா இருத்தலின் பொல்லாப்பு. 2. சும்மா இருத்தலின் விலைக்கிரையம். 3. சும்மா இருத்தலின் முட்டாள்த்தனம். 
1. சும்மா இருத்தலின் பொல்லாப்பு: அவனுடைய எஜமானன் அவனைப் பார்த்து, "பொல்லாதவனும், சோம்பலுமான ஊழியக்காரனே..." என் அழைத்தான். பொல்லாதவன் என்பதின் அர்த்தம், அழிம்பன், கெடுமதியாளன், தீய குணத்தை உடையவன், மாசு படிந்தவன், கரைபடிந்தவன் என்பதாகும். இந்த வார்த்தை புதிய ஏற்ப்பாட்டில் ஒரு வலிமையான சாப வார்த்தையாகும். (பெரியோர் சொல்லும் வசைச் சொல், அல்லது கண்டனம்) புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களில்  இந்த வார்த்தை, 16 முறை வருகின்றது. இயேசு இந்த வார்த்தையை 8 முறையும் பவுல் 7 முறையும், யோவான் 3 முறையும் ரோம ஆட்சியாளர் ஒரு முறையும் உபயோகித்துள்ளனர். பழைய ஏற்பாட்டில் எங்கேயோ தென்னந்தெரிசலக, உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த வார்த்தை மிகக் கடுமையான பொருளை உடையது. நாமும் சில வேளைகளில் முட்டாள்த்தனம், தரித்திரம், நேர்மையற்ற என்ற வார்த்தைகளைத் தான் உபயோகப் படுத்துவோமே தவிற இப்படிப்பட்டக் கடினமான வார்த்தைகளை உபயோகப் படுத்துவதில்லை. 
ஆண்டவர் அந்த மனிதனை பொல்லாதவன் அல்லது தீயவன் என்று அழைக்க அந்த மனிதனில் என்ன இருந்தது? இந்த மனிதன் திருடன் அல்ல என்று நாம் அறிகிறோம். அவனிடத்தில் இருந்த தாலந்தை அவன் திருடவில்லை, அது அவனுக்குக் கொடுக்கப் பட்டது. அவன் உதாரியாகவும் இல்லை, நல்ல பணமும் இருந்தது. லூக்கா 15ம அதிகாரத்தில் வரும் வாலிபனைப் போல பணத்தை தூர தேசத்திற்கு எடுத்துச் சென்று, வீனான் வழியில் செலவழித்து, கொட்டமடித்தவனும் இல்லை. முன்னேறிச் செல்லுவதற்க்கான பணத்தை உடையவனாயும்  இருந்தான்.ஆனால் அதை அவன் செய்யவில்லை. கீழான வாழ்க்கையோ, டாம்பீகமான வாழ்க்கையோ வாழ வில்லை. மேலும் இவன் பொய்யனும் இல்லை. தன்னை நியாயப் படுத்திப் பேசுபவனையும் இருந்தான். "நான் வேலை செய்து 2 தாலந்துகளைச் .சம்பாதித்தேன். நேற்றுதான் ஒரு திருடன் என் வீட்டைக் கன்னமிட்டு நான் சம்பாதித்த எல்லாவற்றையும்  திரூடி விட்டான்.இப்பொழுது என்னிடம் இருப்பது ஒரே ஒரு தாலந்துதான்" இப்படியெல்லாம் அவன் கூறவில்லை. அவன் உண்மையைச் சொன்னான். பொய் சொல்லி ஏமாற்றவில்லை. பிறகு என்னதான் இந்த ஒரு தாலந்து மனிதனிடம் காணப்பட்ட தீய குணம்? இதன் பதில் "பயன்படுத்துதல்" என்ற அடிப்படையில்தான் உள்ளது. அவன் தாலந்தை புதைத்து வைத்தான். உபயோகப் படுத்த மறுத்தான். 
அவன் சும்மா இருந்ததினால் அவனுக்கு தீயவன் என்னும் பெயர் வந்தது. இது வித்தியாசமான தீய குணம். ஒரு வேளை நமது சமுதாயத்தில் சும்மா இருப்பது என்பது சரியாகத் (அறமாகத்) தோன்றலாம். ஆனால் இயசு கிறிஸ்துவின் பார்வையில் சும்மா இருப்பது என்பது தீய குணம் என இந்த உவமைக் கதை நமக்குக் கற்றுத் தருகின்றது. இயசு சொன்ன இன்னொரு கதை - ஒருவன் எருசலேமில் இருந்து எரிகொவுக்க்ப் பயணம் செய்தது - உங்களுக்கு நினைவு இருக்கும் என் நான் நினைக்கின்றேன். அவன் திருடர்களால் தாக்கப் பட்டான். அவர்கள் அவனை அடித்துக் குற்றுயிராக பாதையில் விட்டுச் சென்றனர். இயேசு அந்தத் திருடர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும் சொல்லவில்லை. அவர்கள் ஏற்கனவே தண்டனைக்குள்ளாக இருக்கின்றார்கள். அவர், பரிசேயனுடைய, லேவியனுடைய் பாவத்தைச் சுட்டிக் காட்டவே, கூறினார். அவர்கள் அந்த வழியே வந்தார்கள், தேவையில் உள்ள அந்த மனிதனைப் பார்த்தார்கள். பார்த்துக்கொண்டே வழிவிலகிச் போனார்கள். ஒரு உதவியும் செய்யவில்லை. அது இயேசுவின் பார்வையில் "சும்மா" இருத்தலாகிய தீய குணம். அடிபட்டுக் கிடந்தவனை விசாரிக்காத தீய குணமல்ல. வேலை செய்யாத தீய குணம். இது ஜெபிக்காத, காணிக்கை கொடுக்காத சாட்சி சொல்லாத தீய குணமல்ல. வேத வாசனத்தை நினைவு படுத்துங்கள், ".......ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமல் போனால், அது அவனுக்குப் பாவமாய் இருக்கும்". யாக்கோபு 4:17. ஒரு தாலந்து மனிதனிடம் நாம் காணும் சோம்பேறித்தனமாகிய தீய குணம்.
2. சும்மா இருத்தலின் விலைக்கிரையம்: கடவுள் சொன்னார், "அவனிடத்தில் இருக்கிற தாலந்தை எடுத்து, பத்து தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும். பரிபூரணமும் அடைவான். இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும். வேதாகமத்தின் இந்தப் பகுதி மிக ஆச்சரியமூட்டுபவையாக  இந்த நாட்களில் நமக்குத் தோன்றுகின்றது. வேகமாக முன்னேறிச் செல்லுகிற நம் நாட்டில் அரசியல்வாதிகள் சொல்லுகிறார்கள், "இருக்கிறவனிடமிருந்து வாங்கி இல்லாதவனுக்குக் கொடு".இங்கு கடவுள் "இல்லாதவனிடமிருந்து எடுத்து இருக்கிறவனுக்குக் கொடு"   என்கிறார்.
சிலர் வேதாகமத்தில் உள்ள கடினமான பகுதிகளில் இதுவும் ஒன்று என் கூறுகின்றனர். ஆனால் இதன் அர்த்தம்  உள்ளங்கை நெல்லிக்கனி போனறது நம் வாழ்க்கையின் அடிப்படைச் சட்டத்தில் இதுவும் ஒன்று. உன்னிடம் இருப்பதை உபயோகப் படுத்து அல்லது அதை இழந்துவிடு. இந்த விதி வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் செயல்படக் கூடியது.சிறிது நாட்களுக்கு உன் வலது கையை பின்பக்கம் மடித்து வைத்துக் கொண்டு உபயோகப் படுத்தாமல் இருந்து, பின்பு உபயோகப்படுத்தினால் உடனே வேலை செய்யாது. நீண்ட பயிற்ச்சியும், முயற்ச்சியும் எடுத்துக் கொண்டால்தான் மீண்டும் பழைய நிலைமைக்குள் வரமுடியும். நமது சரீரத்தின் தசைகளை, குறிப்பிட்ட நிலையிலேயே தொடர்ந்து வைத்திருந்தால்,  இரத்த ஓட்டம் இல்லாமல் உடனடியாக உபயோகப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. உதரணமாக ஒரே நிலையிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்த பின்பு, எழுந்து நடக்க முயற்ச்சிக்கும் பொழுது.
இதே விதி மனிதர்களுக்கிடையில் உள்ள உறவில் கூட செயல்படும். ஒரு மனிதன் தனது நடப்பை முறித்துக் கொள்ள வேண்டுமானால், தன நண்பனோடு சண்டையிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. அலட்சியப் படுத்தினால் போதும். வந்த கடிதத்துக்கு பதில் எழுதாமல், பார்க்காமல் தொலைபேசியில் பேசாமல் இருந்தாலே போதும். நட்பு முறிந்துவிடும். ஒரு மனிதன் வீட்டு அமைதியை / மகிழ்ச்சியைக் கெடுக்க விரும்பினால் அவனுடைய மனைவியை அடிக்க வேண்டாம், அவளைத் தனியாக விட்டுவிட வேண்டும். நேசித்தலின் பிரதிபலிப்பைக் காட்டாமல், அவளுடைய செயல்களை அங்கிகரியாமல், நல்ல சமையலுக்காக் எடுப்பான் உடைக்காக பாராட்டாமல் 'சும்மா'  இருந்தாலே போதும். தன குடும்பத்தின் மகிழ்ச்சியை தானே உடைக்க முடியும். ஒருவன் தன பிள்ளைகளின் குணத்தைக் கெடுக்க விரும்பினால், தன பிள்ளைகளின் உதவிக்காக எதையும் செய்யாமல், இழிவான் உணர்ச்சியைத் தூண்டக் கூடிய புத்தகங்களை வாங்கிவந்து வீடு முழுவதும் பரப்பி வைத்து, பிள்ளைகளின் மனதையும், குணத்தையும் ஒருங்கே கெடுத்துவிட முடியும்.பிள்ளைகளின் இஷ்டத்திற்கு, போகிற போக்கிலே விட்டுவிடலாம். பிள்ளைகளின், நண்பர்கள் யார் என் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. இரவு எங்கே போனான் என் கேட்கத் தேவை இல்லை. இரவு எப்போது வீட்டிற்கு வருகிறான் என அறிந்து கொள்ளத் தேவை இல்லை. என்ன செய்கிறர்கள்? என் அறிந்து கொள்ளத் தேவை இல்லை. அவர்களை அலட்சியப் படுத்தினால் போதும். குடும்பத்தின் அமைதி, பிள்ளைகளின் வாழ்க்கை எல்லாவற்றையும் அழித்துவிடலாம். ஒரு விவசாயி தன நிலத்தை அழிக்க நினைத்தால், தன நிலத்தை உழ வேண்டாம். விதை விதைக்க வேண்டாம்., ஒரு ஈஸிச்சேரில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தால் போதும். சும்மா இருந்து நாள் தோறும் சும்மா இருந்து, விதைப்பதையும், அறுப்பதையும் அலட்சியப் படுத்தி,  ஒரு விவசாயி தன நிலத்தையும் வருமானத்தையும் இழக்கலாம். 'சும்மா' இருந்தால் வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும் நாம் விலைக் கிரயத்தைச் செலுத்த நேரிடும். 
இதே விதிமுறை நம் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் செயல் படும். நீ போகிற சபையைக் காயப் படுத்த வேண்டுமா? நான் உங்களுக்கு ஒரு திட்டம் தருகிறேன், முடிவு நிச்சயம்,  அது என்னவெனில் ஆண்டவரை நினைக்க முடியாத அளவிற்கு உலக வேளைகளில் மிகவும் சுறுசுறுப்பாய் இருங்கள், சபைக்கு சும்மா போய்விட்டு வாருங்கள், ஞாயிறு காலையும் மாலையும் செல்ல வேண்டாம். பண்டிகைக்குப் பண்டிகை சென்றால் போதும். ஜெபிக்க வேண்டாம், பொறுப்பு எதிலும் தலையிடதிருங்கள்; சாட்சி சொல்ல வேண்டாம்; கொடுக்க வேண்டாம்; சும்மா இருந்தால் போதும். வேறு எந்த வழியிலும் இல்லாமல் இந்த வழியில் சபையை நீங்கள் காயப்படுத்தலாம். இயேசு சொல்லுவார், "அவனிடமிருந்து தாலந்தை எடுத்து விடுங்கள்". 'சும்மா' இருப்பதின் பலன் அல்லது விலைக்கிரையம் இது.
3. சும்மா இருப்பதின் முட்டாள்தனம்: கடைசிக் குறிப்புக்குள்ளாக நாம் வந்திருக்கிறோம்.   இப்பொழுதுதான் இந்த தாலந்து உவமைக் கதையைக் கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது என்னுடன் வாருங்கள். இந்த ஒரு தாலந்து மனிதன் என்ன விளக்கம் எஜமானுக்கு அளித்தான் என் பார்ப்போம்.  "ஆண்டவனே  நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடின இருதயமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால் நான் பயந்து போய்,..........." இத்துடன் நிறுத்திக் கொள்ளுவோம்.  அவனுடைய விளக்கத்தின், அடிப்படையில் அவனைப் பார்ப்போம். இப்பொழுது இந்த அறிமுக வார்த்தைகளை அறிகுறியாக (சூசகமாக) எடுத்துக் கொள்ளுவோம். தர்க்க ரீதியாக அந்த மனிதனின் விளக்கங்கள் எப்படி இருந்திருக்க வேண்டும்? சொடக்குப் போட்டு, நான் கடுமையாக உழைத்தேன், இந்த மனிதர்களோ இரு மடங்குதான் சம்பாதித்தனர், நானோ மூன்று மடங்கு சம்பாதித்தேன் என 3 தாலந்தைக்  காட்டியிருக்க வேண்டும். ஆனால் அந்த மனிதனோ நான் சும்மா இருந்தேன் என்றான். எவ்வளவு முட்டாள்தனம்! நமது விளக்கங்கள் நியாயத் தீர்ப்பின் நாளிலே எப்படி இருக்கும்? நிச்சயமாக, நன்றாகத்தான் இருக்கும். என் நான் நினைக்கிறேன். 
இந்த ஒரு தலந்து மனிதனைப் போல் நாமும் சொல்லலாம், "ஆண்டவரே கிறிஸ்து இல்லாமல் என் நண்பர்கள் நரகத்துக்குச் செல்லுவார்கள் என எனக்குத் தெரியும், நன்றாகவே தெரியும் ஆனாலும் நான் 'சும்மா'  இருந்தேன். எனக்குத் தெரியும் ஊழியத்துக்கு என் தாலந்துகள், எனது ஆதரவு, என் உற்சாகமூட்டுதல் தேவை என்பதை நான் அறிவேன்.   ஆனாலும் நான் 'சும்மா'  இருந்தேன். உலக மக்களின் பாவத்துக்குப் பரிகாரியாக இயேசு சிலுவையில் மரித்தார் என்பதை நான் நன்கு அறிவேன், ஆண்டவரே, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இந்த அன்பின் நற்செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் நன்கறிவேன்.ஆனாலும் எனது தாலந்துகளைப் புதைத்து வைத்து 'சும்மா' இருந்தேன்.கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு சிங்காசனத்தின் முன்னால் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தால் அது எவ்வளவு முட்டாள் தனம்!
ஒரு தாலந்து மனிதர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் காரியம், என்னால் ஒன்றும் செய்யமுடியாது ஆகவே நான் 'சும்மா' இருந்தேன். அப்போஸ்தலனாகிய பவுலைப் போல எனக்கு பேச்சுத் திறமையிருந்தால் நாம் அவரைப் போல கிறிஸ்துவுக்கு சாட்சி கொடுக்க முடியும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.. எனக்கு அந்த அளவுக்குப் பேச்சுத் திறமை இல்லாததால் எனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை, ஆனால் ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்ப்பது எல்லாம், திக்கித்திக்கிப் பேசினாலும், நாக்கு குழறிப் பேசினாலும்  நம்மால் முடிந்த அளவு நன்றாக - நமது நண்பர்களிடமும், உற்றார் உறவினரிடமும், அக்கம் பக்கத்தாரிடமும் நமக்கும் இயேசுவுக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றிக் கூறவேண்டும் என்பதுதான். நாம் லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து ஊழியத்தைத் தாங்க வேண்டும். ஆனால் எனக்கு  போதிய வசதியை ஆண்டவர் கொடுககாததால் (திறன் இல்லாததால்) இதில் எனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவர் உன்னை எந்த அளவிற்கு ஆசீர்வதித்திருக்கிறாரோ அந்த அளவிற்கு கொடுத்துத் தாங்க வேண்டும். என் எதிர்பார்க்கிறார். நம் உள்ளத்தில் ஆண்டவர் என்ன கூறுகிறாரோ அதைச் செய்ய வேண்டுமே தவிர மற்றவர்கள் என்ன கொடுக்கிறார்கள் என் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. ஆனால் தேவனுடைய ஊழியம் ஒரு தாலந்து மனுஷன் / மனுஷியுடைய அர்ப்பணிக்கப்பட்ட முயற்சியின் பலனில் இருக்கிறது.     தரவில்லை. 
இரண்டாம் உலகப் போரின்போது  நடைபெற்ற இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சர்சில் என்பவரைப் பற்றிய ஒரு ஆர்வமான் கதை ஒன்று உண்டு.இது ஜெர்மானியருடன் நடை பெற்ற போரின் போது நடந்தது. இரவும் பகலும் இங்கிலாந்து கால்வாயைக் கடந்து போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கின. பிரிட்டீஷ் இராணுவ தொழிற்சாலைகள் இரவும் பகலும் இயங்கின. ஒரு நாளைக்கு 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும். இங்கிலாந்து தொழிறச்சாலைகள்  இப்படிக் குதிரை வேகத்து வேலைக்குப் பழக்கப் படவில்லை. எரி பொருள் தட்டுப்பாடு வருவதை உணர்ந்தனர். இங்கிலாந்து தேசத்தின் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை இலண்டனில் ஓரிடத்தில் கூடி வரச் செய்தார். அவர்கள் முன்பு எழுந்து நின்று ஒரு கற்பனையான வெற்றிப் பேரணி ஒன்றை நடத்துமாறு கூறி, இது இலண்டன் மா நகரத் தெருக்க்களில்  ஒருநாள் நடைபெறும் என்று அறிவித்தார். மேலும் அவர். "ஒரு குருடன் ஒருவன், அந்த வெற்றிப் பேரணியில் வரும் பொழுது வேடிக்கை பார்த்த ஒருவன், "வீரனே, இங்கிலாந்து தேசத்தின் நம்பிக்கை இழந்து இருள் சூழ்ந்த நாட்களில் நீ எங்கே இருந்தாய்?" என் கேட்டார். அந்த வீரன் பெருமையுடன் கூறினான், "உரிமைக்காக போரிட்டு நுர்ற்றுக்கணக்கான வீரர்கள் வீர மரணமடைந்த டன்கிர்க் என்ற இடத்திலே இருந்தேன் என்பான். அதே பேரணியில் ஆயுதமில்லாமல்  வந்த ஒரு வீரனைப் பார்த்து கூட்டத்தில் இருந்த  ஒருவர் கேட்டார், "ஏய், இங்கிலாந்து தேசத்தின் நம்பிக்கை இழந்து இருள் சூழ்ந்த நாட்களில் நீ எங்கே இருந்தாய்?" என் கேட்டார். இந்த வீரன் பெருமையுடன், "நான் பிரான்சில் முன்னணியில் இருந்து என்னுடைய் முழுத் திறமையையும் என்னுடைய நாட்டிற்குக் கொடுத்தேன்" என்பான். மேலும் அதே வெற்றிப் பேரணியின் கடைசி அணியில் ஒரு மனிதன் விளக்குடன் கூடிய தொப்பியை அணிந்து, முகத்தில் கறுப்புக் கறையுடன், கையில் ஒரு குத்துக் கம்புடன், வீறுநடை போட்டு வந்தான். வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவன், கேலிக்குரலில் அவனைப் பார்த்து,  "ஏய், ஏய்  இங்கிலாந்து தேசத்தின் நம்பிக்கை இழந்து இருள் சூழ்ந்த நாட்களில் நீ எங்கே இருந்தாய்?"  வின்ஸ்டன் சர்சில், கூறினார், "அந்த மனிதன் பெருமையாக, நான் ஆழமான குழியில், எனது முகம் கறுப்புச் சுவரைப் பார்த்தபடி இருந்தது" என்றார். பின்பு அவர் தொழிலார்களை வீட்டுக்கு அனுப்பி விட்டார். இங்கிலாந்து தேசம் தனக்குத் தேவையான் எரிபொருளைப் பெற்றது. இந்த உலகப்பிரகரமான ஆட்ச்யாளர், இதைப் போல தன குடிமக்களை வைத்து வெற்றிப் பேரணி நடத்தக் கூடுமானால், நாம் எப்படி ஆண்டவருடைய அழைப்பிற்கு, எவ்வளவு அதிக உற்சாகத்துடன் பதிலளிக்க வேண்டும்!! 
இப்பொழுதும் என் நண்பனே உன்னுடைய பெயர் தேவனுடைய இராஜியத்தில் ஒளியில்,  ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட சாத்தியக் கூறுகளே இல்லை. ஏனெனில் நீ ஏசுகிருஸ்துவுக்காக ஒரு சிறு முயற்சி கூட எடுக்கவில்லை. ஆனால் ஒன்று நமக்கு நிச்சயமாகத் தெரியும்; அந்த ஒரு தாலந்து உன்னுடையதாக இருந்தால், உனது இடத்திலே, உனது சொந்த வழியிலே, எவ்வளவு ஆண்டவருடைய ஊழியத்திலே உபயோகப் படுத்த முடியுமோ உபயோகப்படுத்து. ஒரு நாள் இயேசு கூறுவதை நீ கேட்பாய்: "நல்லது, உத்தமும்  உண்மையுமுள்ள,   ஊழியக்காரனே, கொஞசத்தில் உண்மையாய் இருந்தாய். உன்னை அநேகத்தின் மீது அதிகாரியாக வைப்பேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி" 
இரட்சிப்புக்கு ஆண்டவர் பெரிய திட்டங்களை வைத்துள்ளார். நம்முடைய பாவங்களுக்காக தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயசுவை, கோரமான சிலுவையில் அடிக்க, பாடுபட்டு மரிக்க ஒப்புக்கொடுத்தார். இயேசு நம்மைப் பாவத்தின் தண்டனையில் இருந்து, தம்முடைய இரத்தத்தைச் சிந்தி விடுவிக்கும் படியாக பரலோகத்திலிருந்து, இந்த உலகிற்கு இறங்கி வந்தார். ஏதோ கடமைக்காகவோ, பிதாவானவர் வற்புறுத்தியோ வரவில்லை. அவர் இலவசமாக தம்மை அர்ப்பணித்து இதைச் செய்தார். அவர் நம்முடைய இரட்சிப்புக்காக ஒன்றுமே செய்யாமல், 'சும்மா' இருந்திருந்தால், நாம் அனைவருமே பாழ்பட்டு, உருபபிடாமல் போயிருப்போம். இந்தத் திட்டத்தை நாம் ஏற்றுக் கொள்ளாதிருந்தால், நாம்தான் இழந்தவர்கள். நாம் சும்மா இருந்தால் நித்தியத்துக்கும் இழந்து போனவர்கள்தாம். பொல்லாதவனாகவும் /தீயவனாகவும் / இதுவரை செய்த தவறுகளைக் காட்டிலும் மோசமான / அதிக விலையுள்ள குற்றத்தைச் செய்தவர்களாகவும் இருப்போம். 'சும்மா' இருந்தால்  ஒருபோதும் சாகாத நம் ஆத்துமாவிற்கு நாம் முட்டாள்தனமாக நடந்து கொள்ளுகிறோம். இவ்வளவு பெரிதான் இரட்சிப்பை  நாம் அலட்சியப் படுத்தினால் எப்படி நாம் தப்பித்துக் கொள்ளுவோம்?
இன்னும் பாவத்தின் இருளிலே நீங்கள் இருந்தால், ஒளியாகிய இயேசுவிடம் வாருங்கள்! 
ஜெபிப்போம்:
அன்பும் இரக்கமும் உள்ள பிதாவே. இயேசுவின் நாமத்தில் தேவ சமுகத்தில் வருகின்றோம். இப்பொழுது எங்களோடுகூட வாசித்த் என் அன்பு சகோதர, சகோதரிக்காய்  நன்றி செலுத்துகிறோம் சும்மா இருப்பதின் முட்டாள்தனம், விலைக் கிரையத்தைக் குறித்து நங்கள் அறிந்ந்து கொண்டோம். ஒவ்வொருநாளும் உம்முடைய நாம் மகிமைக்காக உமக்கு சாடசி கூற கிருபை தாரும் . அழிந்து போகிற ஆத்துமாக்கள் மேல் கரிசனை உள்ளவர்களாய் இருக்கவும், ஊழியத்தை  எங்களால் முடிந்த அளவு கணிக்கையினால் தாங்க எங்களுக்கு உதவி செய்யும். காலத்தின் அருமையை உணர்ந்து செயல்பட உதவி செய்யும்.  இயசுவின் நாமத்திலே ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். 

Sunday, 23 September 2012

உங்களால் வெற்றிகரமாக பாவம் செய்யவே முடியாது

உங்களால் வெற்றிகரமாக பாவம் செய்யவே முடியாது
பரிசுத்த விவிலியத்தில்  எண்ணாகமம் 32:23ல், ஆண்டவர் மோசேயின் மூலமாக இவ்வாறு கூறுகிறார் "நீங்கள் இப்படிச் செய்யாமற் போனால், கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தவர்களாய் இருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்".
எந்த இடத்தில் ஆண்டவர் இதைச் சொன்னார் எனில், 12 இஸ்ரவேல் கோத்திரங்களில் 2 கோத்திரத்தார், மோசேயிடம் தாங்கள் யோர்தான் நதியைக் கடந்து கானானுக்குள் செல்லாமல், நதியின் கிழக்குப் பகுதியிலே தங்கவேண்டும் என அனுமதி கேட்ட பொழுது, மேற்க்கண்டவாறு ஆண்டவர் பதிலளித்தார். அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட இடந்தான் அது. யோர்தானைக் கடந்து போய் மற்ற 10 கோத்திரத்தாருக்கும் உதவி செய்யாமல் தாங்கள் இங்கேயே தங்கிவிட முடிவெடுத்த பொழுது, நீங்கள் அவர்களுக்கு உதவி செய்யாமற் போனால், பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்பதை நிச்சயமாய் அறியுங்கள். "உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும்  என்பதை நிச்சயமாய் அறியுங்கள்.  என்ற இந்த வாக்கியம் நித்தியத்துக்கும் அழியாத ஒரு சத்தியமாகும்.
மேலை நாட்டில் நடந்த ஒரு சம்பவமிது. ஒரு நாள் இரண்டு பேர்  தாங்கள் வசித்துவந்த அறைக்கு அருகில் இருந்த ஒரு சர்வீஸ் ஸ்டேஷனில் புகுந்து, அங்கிருந்த பெயின்ட் டப்பாக்கள், பெயின்ட் அடிக்கப் பயன்படும் ஸ்ப்ரேயர் ஒரு கருவிப் பெட்டி (Tools Box) ஆகியவற்ரைத் திருடிக் கொண்டு வந்து விட்டார்கள். தங்களை யாரும் பிடிக்கமுடியாது என் நினைத்தார்கள். ஆனால், ஒரு சில மணி நேரத்துக்குள் போலீஸ் அவர்களைப் பிடிக்க அவர்கள் ரூமுக்கு வந்து விட்டார்கள். ஒரு பெயின்ட் டப்பா ஒழுகிக்கொண்டே வந்து அவர்களாகக் காட்டிக் கொடுத்து விட்டது. அவர்கள் பாவம் அவர்களைத் தொடர்ந்து பிடித்தது. 
பிசாசானவன், பாவம் செய்யலாம் - அதன் மூலம் ஆண்டவருடைய சட்டத்தை மீறலாம், யாரும் கண்டுபிடிக்க முடியாது என் மக்களை ஏவுகிறான். ஏமாற்றுகின்றான். அவனுடைய தத்துவமே 'ஒருவனும் ஒருக்காலும் அறியமாட்டான்' என்பதுதான். நம்முடைய வாழ்க்கையிலே நாம் சிலவற்றைக் குறித்து அறியாமல் இருக்கலாம். ஆனால் பாவம் நமக்குள்ளே இருந்து அதன் பலனை அனுபவிக்கும் நாளை நிச்சயமாகவே கொண்டுவரும். "உங்கள் பாவம் உங்களை தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாகவே அறியுங்கள்'.
ஆரம்பத்தில் பாவம் அழகாகவும், அழைப்பதைப் போலவும் நம்மைக் கவர்ந்து ஈர்ப்பதைப் போலவும் இருக்கும். என்வே மனிதனின் இயற்கையான குணம் அதனோடு விளையாட ஆரம்பிக்கிறான். ஆனால் உண்மையான மகிழ்ச்சியை அந்த பாவம் கொடுக்க முடியாது என்பதை கடைசியாக அறிகிறான். ஒரு இளம் பெண் தவறாக வாழ்ந்து, குழந்தையை எதிர்பார்க்கிறாள். ஒரு இளம் வாலிபன் வேகமாக காரோட்டி, ஒரு மனிதனைச் சாகடிக்கிறான். ஒருவன் சூதாடுகிறான். பின்பு தன சொந்த தேவைகளையே நிறைவேற்ற முடியாமல் பாடுபடுகிறான்.  பிசாசு எப்பொழுதுமே பாவத்தின் சம்பளத்தைக் குறித்து மக்களுக்குக் கூறமாட்டான். பாவத்தின் பளபளப்பையும், ஈர்ப்பையும் மட்டுமே பிசாசு காட்டுவான். அதில் விழுந்தவர்கள், நோறுக்கப்பட்டவர்களாய், வாழ்க்கையில் மிகப் பெரிய விலைக் கிரையத்தைக் கொடுப்பார்கள். ஆனால் இதைவிட பாவம் மோசமாக வெளிச்சத்திற்கு வரும். அப்பொழுது மறைக்க முடியாமலும் போகும். பாவம் மறைப்பில்லாமலும், பாதுகாப்பில்லாமலும் வெளிப்படும் சில வழிகளைப் பற்றி சற்று வழக்கமாகப் பார்ப்போம்.
1. பாவம் நமது சரீரத்தைத் தொடர்ந்து பிடிக்கும்:
பாவம், எப்பொழுதுமே - லேசான தோற்றத்தைக் கெடுக்கக் கூடிய, வடுக்க்களை  / சில சமயங்களில் மாறாத அடையாளங்களை சரீரத்தில் பதித்து விடுகிறது. ஆண்டவருடைய சட்டங்களை மீறினால், நீ விதைத்தவைகளை உன் சரீரத்தில் கூட அறுவடை செய்ய நேரிடும்.  அனேக மக்களைப் பாவம் தொடர்ந்து பிடித்ததினால், சரீரம் உடைக்கப்பட்டவர்களாய், உள்ளம்  நோறுக்கப்பட்டவர்களாய் இருக்கின்றனர். சரீர வியாதிகளில் அநேகம் பாவம் நிறைந்த வாழ்க்கையினால் உண்டாகிறது. 
விமரிசனமும், கோபமும் முகத்தில் வடுக்களை ஏற்படுத்துகிறது. தொண்டை கிழிய கூப்பாடு போட்டு குற்றம் சாட்டுவது, நன்றியில்லாத தன்மையோடு நடப்பது, இவையெல்லாம் சரீரத்தைப் பாதிக்கிறது. குடிப்பழக்கம் ஈரலைப் பாதிக்கிறது. அதிகமாகும் பொழுது சரீரத்தின் எல்லாப் பகுதிகளையும் பாதிக்கின்றது. புகைப் பிடித்தல் குரலைப் பாதிக்கின்றது. இருமியே சாகவேண்டும். விபச்சாரம், வேசித்தனம், பல்வேறு பாலுறவு வியாதிகளைக் கொண்டு வருகின்றது. (எயிட்ஸ் உட்பட) சில நேரங்களில் கட்டுக்கடங்காத உணர்ச்சிகளையும் கொண்டுவந்து சரீரத்தைப் பாதிக்கின்றது.  புகைப் பிடிப்பவர்கள், மது குடியர்கள், பான் பராக்கு, வெற்றிலை பாக்கு, புகையிலை போடுபவர்கள், சரியான பழக்கவழக்கம் இல்லாதவர்கள், நல்ல வலிமையான, சுத்தமான சரீரத்தோடு இருப்பதில்லை. அதே நேரத்தில் சரியான பழக்கவழக்கம் உள்ளவர்கள், நல்ல ஆரோக்கியமான வலிமையான சரீரத்தோடு வாழ முடியும். தவரான வாழ்க்கை ஒரு மனிதனை வியாதிக்குள் நடத்திவிடும்.
பாவம் சரீரத்தை பலவீனமாக்கி விடுகின்றது. 38 வருடங்களாக வியாதியோடு இருந்த மனிதனை இயேசு சுகமாக்கிய பின், அந்த மனிதனிடம் இயேசு கிறிஸ்து பேசிய பொழுது, 

 "இதோ நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனி பாவம் செய்யாதே என்றார்". (யோவான்  5:14). 

இயேசு, இனி மேலும் பாவம் செய்தால் உன் சரீரம் அதிகமாக பாதிக்கப் படும் எனக்கூறினார்.  பாவம் நமது சரீரத்தைத் தொடர்ந்து பிடிக்கும்.
2. பாவம் நமது சிறப்பு இயல்புகளைத் தொடர்ந்து பிடிக்கும்:  பாவம் ஒரு மனிதனின் முகத்தோடும், சரீரத்தோடும் நின்று விடாமல், அம மனிதனின் குணத்தையும் தொடர்ந்து பிடிக்கின்றது. நிச்சயமாகவே நாற்றமெடுத்த குணம். கெட்டுப்போன / அழுகி நாற்றமெடுக்கும் சரீரத்தைவிட மோசமானது. 
உதாரணமாக, ஒரு மதுக் குடிக்கும் மனிதனை எடுத்துக் கொள்ளுவோம். அவன் குடிக்கும் முன் இருந்த மனிதனாக மது குடித்தபின் இருக்க மாட்டான். அவனது நுரையீரல், கனையம், இவைகளைப் பாதிப்பது மட்டுமல்லாமல், அவனது குணத்தையே மாற்றிவிடுகிறது. அவனது தன்னம்பிக்கை குறைந்து விடுகிறது. சுய கட்டுப்பாடு போய்விடுகிறது. எது சரி? எது சரியில்லை? என் நிதானிக்கும் தன்மை முடிவுக்கு வந்துவிடுகிறது.  எந்த மனிதனும் பாவம் செய்வதினாலே, உள்ளான மனிதனுக்கு  கெடுதல செய்யாமல், மகிழ்ச்சியை அடைய முடியாது. அப்போஸ்தலர் பேதுரு, 

"ஆத்துமாவுக்கு விரோதமாய் போர் செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி ....." என் கூறுகிறார். 1பேதுரு 2:11)
ஊழியர் ஒருவரது ஊழியத்தில் நடந்த சம்பவமிது, அவரே கூறுகின்றார்: நான் நியுயார்க் நகரத்தில் பௌரி மிஷனில் நடந்த ஊழியத்தில் அழைப்புக் கொடுக்கப் பட்ட பொழுது முன் வந்து இயேசுவை ஏற்றுக் கொண்ட ஒருவருக்கு ஆலோசனை கொடுக்க வேண்டியது எனது பொறுப்பானது. அவர் என் அருகில் வந்த பொழுது 'விஸ்கி' வாடை வந்தது. அவருடைய மனைவி அவரை விட்டு சென்று விட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன் வேலை போய்விட்ட்டது.  அவர் மிகவும் புத்திசாலியாய் இருந்தவர். 2 பிள்ளைகள், 2 பேரப்பிள்ளைகள். இப்பொழுதோ குடிப் பழக்கத்திற்கு அடிமை. தெருக்களில் அலைந்து கொண்டிருந்தார். மட்டுமல்ல அவருக்கு போதைப் பழக்கமும் ஏற்ப்பட்டது. நிலை குலைந்து காணப்பட்டார். அவர், "நான் சரியானால் என் மனைவி, என்னுடன் வந்துவிடுவார். இழந்த வேலையை, அல்லது அதைப் போல் ஒரு வேலையைப் பெற்றுக் கொள்ளுவேன். ஆனால், என் கௌரவம் எல்லாம் போய்விட்டது". என்றார். நான் அவரைப் பார்த்த பொழுது, அவர் இப்படியே சென்றாரானால், பாவத்திற்கு அடிமையாக, சுயக் கட்டுப்பாடு இல்லாமல், இப்படியேதான் இருக்கவேண்டும். அவருடைய மனைவி அவரை நேசித்து திருமணம் புரிந்த ஆள் போல அவர் இப்பொழுது இல்லை. பாவத்தின் சம்பளம் மரணம் சரீரத்துக்கு மட்டுமல்ல, மனித கௌரவத்தையும், குணத்தையும் பாதிக்கின்றது.
3. பாவம் நமது பிள்ளைகளையும் தொடர்ந்து பிடிக்கும்:  
பாவத்தைப் பற்றிய பயங்கரங்களில் ஒன்று, என்னவெனில், அதனால் வரும் சாபம். அடுத்தவர்களின் மேலும் விழுகிறது. ஒருவன் தான் செய்த பாவத்தின் பலனைத் தானே அனுபவித்தாலும் பரவயில்லலை, அவன் செய்த பாவம் பிறரையும்  பாதிக்கின்றது. பாவத்தின் பலன்  நம்முடைய வாழ்வில் வருவதை நம்மால் கட்டுப் படுத்த முடியாது. ஆண்டவர், சொல்லுகிறார்: 
"உன் தேவனாகிய உன் கர்த்தராயிருக்கிற, நான் எரிச்சலுள்ள தேவனாய் இருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து, பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிரவராக இருக்கிறேன்". (யாத்திராகமம் 20:5) 
இந்தச் சட்டம் தாவீதின் வாழ்க்கையில் செயல்பட்டது. தாவீது பத்செபாளுடன் செய்த விபச்சாரம், அவளுடைய கணவனாகிய உரியாவைக் கொலை செய்யும் அளவிற்குப் போனது. தாவீதின் பாவம் அவனைத் தொடர்ந்து பிடித்தது. முதலாவது, பாவத்தினிமித்தம் பிறந்த குழந்தை மிகுந்த சுகவீனமானது. உடனே தாவீது உபவாசம் இருந்தான். குழந்தை பிழைக்க வேண்டும் என்று ஏழு நாட்கள் சாப்பிடாமல் இருந்தான். ஆனால் குழந்தை செத்தது.  இதைக் கேள்விப்பட்ட தாவீது குளித்து, சாப்பிட ஆரம்பித்தான். அவன் தன மனதுக்குள்ளே, இனி நான் துக்கமாய் இருக்கத் தேவையில்லை, குழந்தை இறந்ததும் நல்லதுக்குத்தான்.  இதோடு காரியம் முடிந்தது" என சொல்லிக் கொண்டான். ஆனால் முடிந்ததா? அடுத்தவன் மனைவியிடத்தில் பிரவேசித்து, அவளோடு சயனித்து, அவளைத் தீட்டுப் படுத்தி பின் அவள் புருசனைக் கொலை செய்தது எல்லாம் பிள்ளை செத்ததோடு முடிந்து விட்டதா? இல்லை.  தாவீது தன பிள்ளைகளிடத்தில் தன பாவத்தின் பலனை அனுபவித்தான். தவீதுக்கு அம்னோன் என்ற புத்திரன் இருந்தான். அவன் மகா முரடனாய் இருந்தான். அவன் தாவீதின் லீலைகளை எல்லாம் அறிந்திருந்தான். அவன் தாவீதின் மறுமனையாட்டிக்குப் பிறந்த தாமார் என்னும் அழகான பெண்ணை விரும்பினான். ஒரு நாள் தான் வியாதிப் பட்டவனாக நடித்து, தன் வீட்டிற்குத் தாமாரை வரவழைத்து, அவள் அவனுக்கு உணவு தயாரித்துக் கொண்டு வந்தபொழுது, அவளைக் கற்பழித்தான். தன் சொந்த சகோதரியையே. இதை கேள்விப்பட்ட தாவீதின் மனது எவ்வளவு பாடுபட்டிருக்கும். அவனது மகள் அவன் மகனாலேயே தாறுமாறாக்கப் பட்டாள். தாவீதின் மனது எப்படி தன்னைத் தானே குற்றப் படுத்தியிருக்கும். நான் எப்படி இவனைத் தண்டிப்பேன். நான் பத்செபாளுடன் செய்த பாவத்தையே இவனும் செய்திருக்கிறானே. நான் எதை விதைத்தேனோ அதையே அறுவடை செய்கிறேன்.
தாவீதின் இன்னொரு மகன் அப்சலோம், தன சகோதரிக்கு ஏற்பட்ட மான பங்கத்திற்காக அம்னோனை அடித்துக் கொன்றான்.   இதில் தாவீதின் குழந்தை இறந்தது. தாமார் கற்பழிக்கப் பட்டாள்.  அம்னோன் கொல்லப்பட்டான். அதன் பின்பு அப்சொலோமும் தனது தகப்பன் இராஜ்யபாரத்துக்கு, எதிராகக் கலகக் காரனாக மாறினபடியால்,  தாவீதின் படைகளாலேயே கொல்லப்பட்டான். நண்பர்களே, ஆண்டவருடைய சட்டத்தை மீறுவது கடினமானது. உங்கள் பாவங்கள் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும்.  உங்களால் வெற்றிகரமாக பாவம் செய்யவே முடியாது.  ஒரு காலத்தில் பெத்தலேகேம் ஊரோரங்களில் இருந்த மலையோரங்களில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீது, அநேகமாக தன்னுடைய வாழ்க்கையை துக்ககரமகவே மாற்றிவிட்டான். இப்பொழுது காலம் பிந்திவிட்டது. 
4. பாவம் நமது மனசாட்சியைத் தொடர்ந்து பிடிக்கும்: நாம் நம்முடைய பாவங்களை பிறரிடமிருந்து மறைத்து விடலாம், ஆனால் நம்மிடம் இருந்து மறைக்கவே முடியாது. யோசேப்புக்கும், அவனுடைய சகோதரர்களுக்கும் இடையே நடந்த சம்பவங்கள் இதை நமக்கு விளக்குகின்றன.யோசேப்பின் சகோதரரர்கள், யோசேப்பை எகிப்து நாட்டிற்கு அடிமையாக விற்றார்கள். இதை மிக நேர்த்தியாக மறைத்தார்கள். அவர்கள் யோசேப்பின் சட்டையை எடுத்து கிழித்து, ஆட்டு இரத்தத்தை அதன் மீது தெளித்து, பின்பு காட்டிலுள்ள துஷ்ட மிருகம் அவனைக் கொன்று போட்டதாக தங்கள் தகப்பனை (யாக்கோபை) நம்பப்பன்னினர்கள். எமாற்றி வஞசித்தர்கள். அவர்களுடைய தகப்பன். யோசேப்பு மரித்துப் போனான். மற்ற பிள்ளைக்லேள்ளாரும், கபடற்றவர்கள் என எண்ணினான். சகோதரர்கள் எல்லாவற்றையும் மறைத்து விட்டோம் இனி கவலை இல்லை என் நினைத்தார்கள். ஆனால் பாவம் அவர்களைச் சும்மாவிடவில்லை. அவர்களின் மனசாட்சியைத் தொடர்ந்து பிடித்தது.  
பல வருடங்களுக்குப் பின் சகோதரர்கள் பஞசத்திநிமித்தம், எகிப்துக்குத் தானியம் வாங்கும்படி சென்றபோது, பேஞசாமின் என்ற தங்களுடைய இளைய சகோதரனைக் கூட்டிக் கொண்டு வரும் வரை, இன்னொரு சகோதரனை சிறையில் அடைத்த பின்,  ஊர் திரும்பிக் கொண்டிருந்த பொழுது, 

"நம்முடைய சகோதரனுக்கு (யாக்கோபுக்கு)  நாம் செய்த துரோகம் நம்மீது சுமந்தது; அவன் நம்மைக் கெஞசி வேண்டிக் கேட்டுக் கொண்டபோது அவனுடைய மன வியாகுலத்தைக் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற் போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என ஒருவரையொருவர் பார்த்து சொல்லிக் கொண்டார்கள்". (ஆதி.42:21)
எப்படித் தங்கள் சகோதரனான யாக்கோபை பலவந்தமாக அன்னியரின் கைகளில் விற்றுப் போட்டோம் என்பதை நினைத்துக் கொண்டார்கள். அவர்களின் மனசாட்சி அவர்களை குற்றஞசாட்டியது. யோசேப்பின் சகோதரர்கள் நெடுநாளாய் இரவுகளைத் தூங்காமல் கழித்தனர். உள்ளான் மனது அவர்களை வாதித்தது மனசாட்சி அவர்களைக் குற்றம் சாட்டியது. 
பல வருடங்களுக்கு முன் அமெரிக்க தேசத்திலே நடந்த சம்பவமிது. அது ஒரு பத்திரிகையில் வந்தது. ஒருவன் போலிஸ் ஸ்டேசனுக்கு சென்று, நான் ஒரு கொலைக் குற்றவாளி, 23 வருடங்களுக்கு முன்பாக நான் எப்படிக் கொலை செய்தேன் என்பதைக் குறித்து விவரித்துக் கூறினான். அந்த மனிதனை யாரும் ஒருபோதும் சந்தேகித்ததே இல்லை. இப்பொழுதோ அவர் யாவரும் மதிக்கக் கூடிய பெரிய மனிதராக இருந்தார். அவருக்கு ஒரு நல்ல குடும்பம் இருந்தது. இப்பொழுதோ தான் ஒரு கொலைகாரன் என் கெஞசிக் கொண்டிருந்தார். உடனே எந்தப் பட்டணத்தில் கொலை நடந்ததோ அந்தப் பட்டணத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அங்குள்ள காவல் நிலையத்தில் விசாரித்தார்கள். அதிலே 23 வருடங்களுக்குமுன் கொலை நடந்ததாகவும், குற்றவாளி பிடிபடவில்லை என்றும் தெரிய வந்தது. 
கொலையை ஒத்துக் கொண்ட மனிதன் வேறொரு பெயரில் வாழ்ந்து வந்தார். பின்பு நாட்டின் மேற்குப் பகுதிக்குப் போய்,  அங்கு திருமணம் புரிந்து அங்கே அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இப்பொழுது மீண்டும் அந்த ஊருக்கு அனுப்பப் பட்டு தண்டனையை ஏற்கத் தயாரானார். அந்தக் கொலைவழக்கை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரி, அந்தக் கொலையாளியைப் பார்த்து, "ஏன் இத்தனை நாட்களுக்குப் பின் இதை ஒப்புக் கொள்ளுகிறாய்? ஒரு நேர்மையான வாழ்க்கை வாழுகின்றாய், குற்றத்தை யாரும் கண்டு பிடிக்க முடியாத இந்த நேரத்தில் வந்து - இத்தனை வருடங்களுக்குப் பின், ஏன் நீயாக வந்து மாட்டிக் கொள்ளுகிறாய்? நடுக்கத்தோடிருந்த மனிதனின் பதில் மிக முக்கியமானது. நான் என் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியவில்லை. எதிர் பாராத விதமாக என் கையைப் பிடித்து யாரோ திருக்குகிரார்கள்.  என் உள்ளம் பயத்தினால் நிறைகின்றது. எப்போதும் ஒரு போலிஸ் அதிகாரி என்னைப் பார்த்து நீ கொலைக் குற்றத்துக்காகத் தேடப்படும் குற்றவாளி என என்னைப் பார்த்துக் கூறுகின்றார். இப்படியாக நான் மனவேதனையையும், சித்திரவதையையும் அனுபவிக்கிறேன். 23 வருடங்களாக என் மனசாட்சி என்னை உறுத்துகிறது. என்னுடைய மனசாட்சியை நான் எதிர் கொள்ள வேண்டியதிருக்கிறது. (தமிழிலே 'நிலவே நீ சாட்சி' என்ற பழைய திரைப்படம் ஒன்று மனசாட்சி குற்றஞசாட்டுவதைப் பற்றிக கூறுகிறது.) நான் பாவஞ செய்துவிட்டுத தப்பி விடுவேன் என நினைக்கிற எல்லாருக்கும் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் மனசாட்சி உன்னைக் குற்றஞசாட்டுவதைக் காட்டிலும், பெரிதான தண்டனையை நீ பெறமுடியாது. பாவம் உனது மனசாட்சியைத் தொடர்ந்து பிடிக்கும்.
5. பாவம் நித்தியத்தையும் தொடர்ந்து பிடிக்கும்: சுருக்கமாகக் கூறினால் நாம் செய்கிற ஒவ்வொரு குற்றமும் முதலாவது பார்த்த அந்த பெயின்ட் டப்பா எப்படிக் காட்டிக் கொடுத்ததோ  அதைப் போல் நம்மைச் சுட்டிக் காட்டுவதாக அமையும். மற்ற மனிதர்களின் பார்வைக்கு மட்டுமல்ல எல்லாவற்றையும் எல்லாவற்றையும் பார்க்கின்ற ஆண்டவரின் கண்களுக்கு முன்பாக வெளியரங்கமாய் சுட்டிக்காட்டும். பெய்ன்ட் டப்பாவைத் திருடிய திருடர்கள் உடனே பிடிபட்டது போல எல்லாப் பாவமும் உடனே வெளிச்சத்துக்கு வருவதில்லை. ஒரு சில பாவங்கள் பல வருடங்களுக்குப் பின் வெளிப்படும். சில பாவங்கள் நமது வாழ்க்கையில் வெளிப்படாது. சில பாவங்கள் சாகும் வரையில் மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாதபடி இருக்கும். ஆனால் எல்லாவற்றையும் நாம் நித்தியத்தில் சந்திக்கவேண்டியதாக இருக்கும். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் பரிகாரம் இந்த பூமியிலே செய்யப்ப்படாவிட்ட்டால் மன்னிப்பை பெற்றுக் கொள்ளுவதற்கு காலம் தாழ்ந்துவிடும். 
அநேக வருடங்களுக்கு  முன் ஒரு விவசாயி பணம் எடுப்பதற்காக வங்கிக்கு மாலைப் பொழுது சென்றார். பணம் எடுத்து விட்டு தன் குதிரை மீது ஏறினார். அதன் பின் அவர் காணப்படவே இல்லை. அடுத்த நாள் அவருடைய குதிரை அவரது பண்ணை வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தது. அவர் போராடியதற்கு எந்த அடையாளமும் இல்லை. எல்லாம் சரியாக இருந்தது. ஆனால் அந்த விவசாயியை மட்டும் காணவில்லை. கொஞச நாட்களுக்கு முன் அவரோடு சண்டையிட்ட பக்கத்து வீட்டுக் காரரை போலீஸ் கைது செய்தது. ஆனால் அவர்தான் கொலை செய்தார் என் நிரூபிக்கக் கூடிய சாட்சியம் எதுவும்  இல்லாததால் அவரை விடுதலை செய்தனர். 
அனேக வருடங்களுக்குப் பின் அந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது நிலத்தை விற்றுவிட்டு தூர தேசத்திற்குச சென்று விட்டார். வருடங்கள் பல கழிந்தன. ஒரு கடும் கோடை காலத்தில் அவர் விற்றுச் சென்ற நிலத்தில் இருந்த சிறிய குளத்தில் தண்ணீர் வற்றியது. வறண்டு போன அந்தக் குளத்தின் மத்தியில் ஒரு எலும்புக் கூடு சங்கிலியினால் கட்டப் பட்ட நிலையில் கிடந்தது. அந்தச் சங்கிலியில் முன்பு கொலைக்காகக கைது செயப்பட்டவரது இனிஷியல் அதில் பொறிக்கப் பட்டிருந்தது. கடைசியாக அந்த நபர் தூர தேசத்தில் இருந்த ஒரு முதியோர் இல்லத்தில் கண்டு பிடிக்கப் பட்டார். அவர் டி.பி. நோயினால் பாதிக்கப் பட்டு, இறக்கும் தருவாயில் இருந்தார். இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு தான் செய்த கொலையையும் தனது  குளத்தில் மூழ்கடித்ததையும்  ஒப்புக் கொண்டார்.
இந்த மனிதன் தன் பாவத்தை தான் இறக்கும் வரை மறைத்து வைத்தார். சில வேளைகளில் நமது பாவங்கள் நமது வாழ்க்கையில் கண்டு பிடிக்க முடியாமலேயே போகலாம். ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டும். வேதம் சொல்லுகிறது,பிரசங்கி 12:14ல், "ஒவ்வொரு கிரியையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும். தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்".  ஒரு நாளில் அறிக்கையிடாத பாவங்கள் அனைத்தும் நியாயத் தீர்ப்புக்காக கொண்டுவரப்படும். இந்த வாழ்க்கை இத்துடன் முடிந்து போவதில்லை. இதற்கு மேலும் அதிகம் இருக்கிறது. ஒரு வேளை பாவம் இந்த வாழ்க்கையில் வெளிப்படாவிட்டாலும் வருகின்ற வாழ்க்கையில் வெளிப்படும்.
இதற்கு முன் மனச்சாட்சியைப் பற்றிக் கூறிய அனைத்துமே சத்தியமனவைகள். எது எப்படியானாலும் வேதவசனங்களில் ஒரு நல்ல செய்தி காணக்கிடக்கின்றது. வேதம் கூறுகின்றது: 

"பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்  பெருகிற்று".
பாவம் எவ்வளவு பலம் பொருந்தியதாய் இருந்தாலும், இருன்டதாய் பயங்கரமாய் இருந்தாலும் இதைக் காட்டிலும் வல்லமை மிகுந்ததாய், பலம் வாய்ந்ததாய் உள்ள இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல் பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். மனந் திரும்பி பாவங்களை அறிக்கை செய்து, இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து, பாவ வாழ்க்கையில் இருந்து மணந திரும்பினால் பாவத்திற்குத் தண்டனை எதுவும் இல்லை. 

"உங்கள் பாவம் சீவீரென்று இருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாய் இருந்தாலும்  பஞசைப் போலாகும்". (ஏசாயா 1:18) 

ஒருவர் இயேசுவின் இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கப் பட முடியும் என்றாலும், குற்ற மனசாட்சி முழுவதுமாக அழிக்கப்பட முடியாது. ஆனால் உன் பாவம் மன்னிக்கப் படும். கிறிஸ்தவ மனிதனாக இருந்தாலும், பாதுகாப்பற்ற நிலையில் ஒரு கண்ணை இழந்தால் அவன் பாவம் மன்னிக்கப் படும். எஞசிய வாழ்க்கை முழுவதும் ஒற்றைக் கண்ணனாகத்தான் வழ வேண்டும். அவன் தொடர்ந்து குற்ற மனசாட்சியினால் வாதிக்கப் பட்டவனாகத்தான் இருப்பான்.(இதற்க்கு மாற்றுக் கருத்தும் உண்டு)
ஒரு மனிதனின் பாவ வாழ்க்கை, அவனை மகிழ்ச்சியற்ற துயரமிகுந்த நிலையில் வைத்திருந்தபடியால், ஒரு ஊழியரிடம் வந்தான். அந்த ஊழியக்காரர் அவனைப் பார்த்துக் கேட்டார், "இப்பொழுது இயேசுவை நேருக்கு நேர்  பார்த்துப் பேச ஒரு வாய்ப்புக் கிடைத்தால் நீ அவரிடம் என்ன கேட்பாய்?" உடனே அந்த மனிதன், நான் அவரிடம், "என்னை மீண்டும் பழைய நிலைமைக்கு மாற்றும்"என் கேட்பேன் என்றான். நண்பரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்று உமக்கு என்ன செய்ய வேண்டும் என் எதிர் பார்க்கிறீர்?               
அவர் உன் பாவத்தை மன்னிக்க விரும்புகிறார்.மீண்டும் உன்னைப் பழைய நிலைமைக்குள் கொண்டுவர விரும்புகிறார். உன் பாவத்தினால் வந்த வியாதியில் இருந்து உன்னைக் குணமாக்க விரும்புகிறார். உன் வியாதிப் படுக்கையை மாற்றி, புது வாழ்வு தர விரும்புகிறார். உன் தவறான நிர்வாகத்தினால் ஏற்ப்பட்ட கடன் பிரச்னையை மாற்ற விரும்புகிறார். உன் அறியாமையை நீக்கி உனக்கு தன ஞானத்தைத் தர விரும்புகின்றார். இன்று நீ ஒரு முடிவெடுக்க வேண்டும். திறந்த மனதோடு இயேசுவிடம் வர வேண்டும். ஆண்டவரிடம் நீ எதையும் மறைக்க வேண்டாம். உன் பாவத்தை அறிக்கை செய். இயேசு தமது இரத்தத்தினால் உன் உள்ளத்தைக் கழுவி சுத்திகரிக்க இயேசுவிடம் கேள். உன் எதிரிகளை மனதார மன்னித்து விடு. இயேசு தமது அன்பினால் உன்னை நிறைப்பார். உன் உள்ளம் இலகுவாகும். இரத்தாம்பரச் சிவப்பன் உன் பாவத்தை கழுவி சுத்திகரித்து, பஞசைப் போல          வெண்மையாக்குகிறார். உன் வாழ்வு மலரும். நானும் உனக்காக் ஜெபிக்க விரும்புகிறேன். 
ஜெபம்: அன்புள்ள பிதாவே, இந்தச் செய்தியைப் படித்து உம்மைப் நோக்கிப் பார்க்கிற என் அன்பு சகோதர / சகோதரிக்காய் ஜெபிக்கிறேன். நீர் கல்வாரிச் சிலுவையில் பாடு பட்டதை நினைத்து, இவர்களின் பாவங்களை மன்னிக்கும் படியாய் ஜெபிக்கிறேன்.அன்று கானானிய ஸ்திரிக்காக உமது சீசர்கள் உம்மிடம் பரிந்து பேசியதைப் போல உம்மிடத்தில் ஜெபிக்கிறேன். உண்மைய உம்மை நோக்கிக் கூப்பிடுபவர்களுக்கு தேவன் சமீபமாய் இருக்கிறார் என்று எழுதியிருக்கிறபடி நீர் சமீபமாய் இருப்பதற்காய் நன்றி. இவர்களின் மன வாஞசை யைக் கண்டு ஒரு அற்ப்புதத்தைச் செய்வதற்காய் உமக்கு நன்றி. எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதனம் இவர்களை நிரப்புவதர்க்காய் நன்றி. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன் எங்கள் நல்ல பிதாவே. ஆமென். 
அற்புதத்தை  எதிர்பாருங்கள்! ஆண்டவர் உங்களுக்குச் செய்ததை எங்களுக்கும் எழுதுங்கள்! நன்றி. 
இயேசு உங்களை அளவில்லாமல் நேசிக்கிறார்!

Friday, 21 September 2012

"பொய்யைப் பற்றிய் ஓர் உண்மை"

ஆண்டவர், தமது மக்களுக்கு கூறிய 9வது கட்டளையாக, "பிறனுக்கு விரோதமாகப் பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக" என  யாத்திராகமம் 20:16ம், புதிய ஏற்பாட்டில், எபேசியர் 4:25ல், "....பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்". எனவும் கூறியிருக்கிறார்.
கடவுள் தாம் படைத்த எல்லாவற்றைக் காட்டிலும் விஷேசித்த ஒரு நன்கொடையாக மனித இனத்துக்கு பேசும் வரத்தைக் கொடுத்திருக்கிறார். இது  மிருக ஜாதிகளைக் காட்டிலும் மனிதனை மேன்மை படுத்திக் காட்டுகின்றது. திட்டமிட, அதன் மீது செயல் பட , விளையாட, சண்டையிட பேச்சாற்றல் பயன் படுகிறது. தங்கள் பயத்தை வெளிக்காட்ட மிருகங்களால் முடியும். ஆனால் இவைகளால் தங்களது யோசனையை பேச்சாற்றலால் வெளியிட முடியாது. பேசுகின்ற தன்மை மனித இனத்துக்குக் கடவுளால் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய, உபயோகமுள்ள நன்கொடையாகும். வார்த்தைகள் மூலமாக ஒருவரை ஒருவர் தேற்றவும், தைரியப் படுத்தவும் முடியும். ஆனால் பேச்சின் மூலமாக பிறரைக் காயப்படுத்தவும், நிர்மூலமாக்கவும், கொல்லவும், கூட முடியும்.
இந்த 9ம் கட்டளை, நாவைத் தவறாகப் பயன்படுத்துவதைக் குறித்தும், முக்கியமாக நாவைக் கொண்டு மக்கள் மனத்தைக் காயப்படுத்துவதைக் குறித்தும், உண்மையில்லாததை பேசுவதைக் குறித்தும், நடந்தவற்றை மாற்றிப் பேசுவதைக் குறித்தும் கூறுகின்றது.
நாம் கள்ளத்தனமாக நடக்க முடியாது. அதாவது, உண்மை இல்லாதவைகளை பேசக்கூடாது. சுருக்கமாகக் கூறினால் 9ம் கட்டளை இப்படிக் கூறுகிறது: பிறனுக்கு விரோதமாக பொய் சாட்சி சொல்லாதிருப்பயாக.சரியாகச் சொன்னால் இக் கட்டளை நம்மை எப்பொழுதும் உண்மையையே பேச வேண்டும் எனக் கூறுகின்றது.
நாக்கிலே நரம்பில்லாமல் பேசக் கூடிய மக்கள் மத்தியில் நாம் வாழ்ந்து வருகிறோம். அவர்களுக்கு பொய் பேசுவது பெரிய காரியமல்ல. ஆனால் ஆண்டவர் பொய்யை அப்படிப் பார்ப்பதில்லை. ஆண்டவர் கூறியுள்ள 10 கற்பனைகளில், அதிகமாய் மீறப்படுவது இந்த 9ம் கற்பனைதான்.
 மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வின்படி, ஒருவர், வருடத்திற்கு 1,10,00,000 வார்த்தைகளைப் பேசுகின்றார். அதாவது ஒரு நாளைக்கு 30,000 வார்த்தைகள் பெரும்பாலானோர் கடைகளில் திருடுவது பற்றியோ, வருமான வரியை ஏய்ப்பது பற்றியோ, பிறர் மனைவியோடு விபச்சாரம் செய்வது பற்றியோ ஒரு முறைகூட யோசித்துப் பார்ப்பதில்லை. ஆனால், பிறரைப் பற்றி தவறான கருத்துக்களைக் கூறாமலோ, தேவையில்லாத பேச்சிக்களைப் பேசாமலோ ஒரு நாளையாவது கழிப்பதில்லை. எதிலும் உண்மை என்ற தன்மையை நாம் நம் வாழ்க்கையில் போற்றிப் பாதுகாத்து வளர்ப்பது அவசியம். நாம் மிகச்சரியாகப பேசும் தன்மையையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு வார்த்தைகளைக் கையாள வேண்டும்.  ஆண்டவர் கூறுகின்றார், ந

பொய் சாட்சிக்காரன்  தண்டனைக்கு உட்படுத்தப் படுவான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.(இது எனது மொழிபெயர்ப்பு)
1. நாம் நேர்மையறவர்களாய் இருக்கக் காரணங்கள்: ஒரு பொய்யின்  நோக்கமே ஏமாற்றுவதுதான். இது உன்மையில்லாதவைகளைப் பேசுவதைக் காட்டிலும் மோசமானது. ஒரு வார்த்தையின் மூலமாகவோ, ஒரு செயலின் மூலமாகவோ, அல்லது பேசாமல் மௌனம் சாதிப்பதின் மூலமாகவோ பொய் சொல்லலாம். ஆண்டவர் கூறுகிறார், சங்கீதம் 119:104ல் , 

"......எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன்".
ஏமாற்றுவது என்பது நம்மைச் சுற்றிலும் பொதுவாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மனித இனத்தின் குறுகிய மனப்பான்மையும், மனிதன் நேர்மையற்றவர்களாய் இருக்க ஒரு காரணமாகும். டாக்டர்.லெனார்ட் கீலர் (புகழ் பெற்ற கீலர் உண்மையறியும் சோதனையைக் கண்டு பிடித்தவர்) பல்லாயிரக்கணக்கான  மக்களைச் சோதித்த பின்னர் ஒரு முடிவுக்கு வந்தார். அது அடிப்படையிலேயே மனிதர்கள் நேர்மையற்றவர்கள் என்பதுதான். இதையே எரேமியா என்ற தீர்க்கத்தரிசியும் 5000 வருடங்களுக்கு முன்பே கூறியிருக்கிறார்.  "எல்லாவற்றைப் பார்க்கிலும் (மனித) இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. (எரேமியா 17:19) நமது இயற்கையான தன்மையே பாவம் நிறைந்ததாய் இருக்கிறபடியால் பிறரை எளிதாக ஏமாற்றுகிறோம். 
அடுத்த காரணம், உண்மையிலலாதவர்களாய் இருப்பது எளிதானது. மனிதன் தான் செய்த செயலின் விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள உன்மையில்லாதவைகளைப் பேசுகிறான்.தன்னைக் கண்டு பிடித்து விடுவார்களோ என் பயந்து, உண்மை சொல்ல மறுக்கிறான்.அல்லது தவறான செயல்களைத் தொடர்ந்து செய்கிறான். 
பொய் சொல்ல அடுத்த காரணம், கவனமின்மை. தான் சொல்லுவது மிகச் சரியானது என்பதை அறிந்து கொள்ளாமலேயே ஒரு மனிதன் தொடர்ந்து தவறான அறிக்கைகளை செய்ய முடியும். பொய் சொல்ல வேண்டும் என்ற நோக்கமில்லாமலேயே உன்மையில்லாதவைகளைப் பேச முடியும். கவனமில்லாமல் பேசும் பேச்சு எப்பொழுதுமே  உறுதியில்லாததாக, இருக்கும். எனவே அந்த வார்த்தைகள் உண்மையில்லாததாகவும், பின்பு அது பொய்யாகவும் உருவெடுத்து விடுகிறது. 
மேலும், பொய் சொல்ல அடுத்த காரணம், முகஸ்துதி. நம்மில் வெகு சிலர் மட்டுமே, உண்மையில் நடந்த சம்பவங்களை மிகச் சரியாக, தன்னை உயர்த்தாதபடி பேசுகின்றார்கள். இப்போதைய வழக்கில் "பிட்டு" போடாமல் பேசுகின்றார்கள். பேசப் படுகின்றது. அப்படிப் பிட்டு போட்டு பேசுவதுதான் சரி என்ற நிலைமைக்கு நமது சமுதாயமும் சென்று கொண்டு இருக்கிறது. இயற்கையிலே நாம் எப்படி இருக்கிறோமோ அதைவிட சற்று அதிக கௌரவத்தைத் தேடுவதில் ஆர்வமுள்ளவர்களாய் இருக்கிறோம். முகஸ்துதியைக குறித்த ஒரு சிறிய கதை: "எறும்பும் யானையும்" யானையின் முதுகில் உட்கார்ந்து இருந்த ஒரு எறும்பு, ஒரு பாலத்தைக் கடந்த பின்,  இப்படிக் கூறியதாம் "நான் - இல்லையில்லை  - நாம் இந்தப்  பாலத்தையே அசைத்துவிட்டோம்" என்று. (அந்த பழைய மரப் பாலம் யானையின் எடை தாங்காமல் அசைந்தது. ஆனால் எறும்பு அதில் தனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பது போல பேசியது.)
நாம் ஒரு பொய்யைச் சொல்லி, மாட்டிக் கொண்டால் என்ன செய்வது? என்ற நினைப்பு  மனதை உறுத்திக்கொண்டே இருக்கும். தொடர்ந்து உன்ன்மையில்லாதவைகளைப் பேசினால் அது நம்மைக் குறற மனச்சாட்சிக் குள்ளாக கொண்டு சென்று விடும். உண்மையான மகிழச்சியை இழந்து விட நேரிடும். 
சில நேரங்களில் உன்ன்மையில்லாதவைகளைப் பேசுவது, தர்ம சங்கடமான  நிலைமைக்குள் நடத்திவிடும்.  சில வருடங்களுக்கு முன்பதாக, ஒரு கோழிக்கறிக் கடையில் நடந்த ஒரு சம்பவம்.இது. மார்க்கெட்டில் கடையை அடைக்க வேண்டிய நேரம், ஒரு கோழி மட்டும் விற்காமல் மீதி இருந்தது.(அது கடைக்கு வெளியில் இருந்து பார்த்தால் தெரியாத இடத்தில் இருந்தது) அப்பொழுது ஒரு வாடிக்கையாளர், கோழி இருக்கிறதா? என் கேட்டு வந்தார்.  பார்க்கிறேன் என சொல்லிவிட்டு உள்ளே சென்று அந்தக் கோழியை எடுத்து வந்து எடை போட்டார். "இது 90ரூபாய் ஆகிறது" என்றார். அந்த வாடிக்கையாளர் இதைவிடப் பெரியது இருக்கிறதா?" என கேட்டார். "பார்க்கிறேன்" எனக் கூறிவிட்டு அந்தக் கோழியோடு உள்ளே சென்றார். வேறு கோழியை எடுப்பது போல சில வினாடிகள் கழித்து (அவரிடம் இருந்ததே ஒரே ஒரு கோழிதான்) அதே கோழியை எடுத்து வந்து எடை போட்டு,  "இது 108 ருபாய்" என்றார். அந்த வாடிக்கையாளர் என்ன சொன்னார் தெரியுமா? "நான் இரணடு கோழிகளையும் வங்கிக்கொல்லுகிறேன்" என. உண்மையில்லாதவை களைப் பேசுவது, தர்ம சங்கடமான  நிலைமைக்குள் நடத்திவிடும் 
உண்மைக்கு மாறானவைகளைப்  பேசுவது மிகக் கடினமானது. கண்டு பிடிக்கப் பட்டால் என்னாவது என்று மனது உறுத்திக் கொண்டே இருக்கும். பொய் சொல்லுகிறவர்கள் பரலோகத்தில்  பிறவேசிக்க முடியாது என வேதாகமம் கூறுகிறது. உண்மையில்லாதவர்களாய் இருக்க இயற்கையாக பொறாமை, பய உணர்ச்சி, முகஸ்துதி, கவனமின்மை இவைகளே காரணம் என  பார்த்தோம்.
2 எவையெல்லாம்  பொய் சாட்சி இல்லை: 9ம்  கட்டளையின்படி எவையெல்லாம் பொய் சாடசி இல்லை என  பார்ப்போம்.
அ) எல்லாத் தவறுகளையும் நாம் பொய்கள் என எடுத்துக் கொள்ள முடியாது. தவறான வார்த்தை அல்லது செய்கையினால் ஒருவரை ஏமாற்ற நோக்கங் கொள்ளுவதுதான் பொய்யாகும். ஒரு சாதாரண நிகழ்ச்சி தவறாக அறிவிக்கப்பட்டிருந்து, நோக்கம் ஏமர்ற்றுவதாக இல்லாமலிருந்தால் அது பொய்யாகாது. உதாரணமாக, நான் ஒருவரிடம் என் மனைவி வங்கியில் வேலை செய்கிறார் என் கூறுகிறேன் என வைத்துக் கொள்ளுவோம். நான் சொன்ன அந்த நேரத்தில் வங்கிக்கு அருகில் உள்ள வீட்டில் உள்ள சுகவீனமான  ஒருவருக்கு ஜெபிக்கச் சென்றிருந்தால், நான் சொன்னது பொய்யாகாது. நான் தவறான தகவலைத்தான்  கொடுத்து இருக்கிறேனே தவிர, பொய் சொல்லவில்லை. கூறும்போது நேர்மையோடு, ஆனால் அவரை ஏமாற்றும் நோக்கத்தோடு கூறவில்லை. தவறான தகவலைத்தான் கூறியிருக்கிறேன்.
ஆ )  "உண்மை கசக்கும்" என்ற முதுமொழிக்கேற்ப உண்மைகள் சொல்லப்படுவதில்லை. அனேக நேரங்களில் மற்றவர்களைப் பற்றிய கசப்பான உண்மைகளை உரிய அதிகாரிகளிடம் சொல்ல நேரிடும். உண்மையான அன்பு உண்மைகளை பளபளக்கச் செய்ய முடியாது. கிறிஸ்தவர்களில் நேர்மையற்றவர்களை கடினமாக நடத்தவும், சரியாகவில்லையெனில் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளவும் பரிசுத்த வேதாகமம் 1கொரி. 5:1-13ல் கூறுகிறது. 
3. பொய் சாட்சி கூறுவதற்க்கான வழிகள்: மார்க் டுவைன்  என்னும் அறிஞர், ஒரு நாள் உட்கார்ந்து பொய்சாட்சி சொல்ல 869 வழிகள் இருக்கிறது என கண்டு பிடித்தார். பெரும்பாலானோர் கடைப்பிடிக்கிற சில வழிகளைப் பார்ப்போம்.
அ ) நேரடிப் பொய்: 9வது, கட்டளையை மீறுகின்ற மிகச் சாதாரண வழி, நேரடியாகப் பொய் கூறுவதாகும். கர்த்தர், காயீனிடம் ஆபேல் எங்கே? என்று கேட்ட கேள்வி ஒரு உதாரணமாகும்.  

கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே? என்றார். அதற்க்கு அவன்: நான் அறியேன். (அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது). 

பேதுருவின் நேரடிப் பொய்யை மாற்கு 14:67,68ல், பார்க்கிறோம். 

"குளிர் காய்ந்து கொண்டிருந்த பேதுருவைக் கண்டு, அவனை உற்றுப்பார்த்து நீயும் நசரேயனகிய இயசுவோடே இருந்தாய். என்றாள். அதற்கு அவன்: நான் அறியேன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து....." 

இது எவ்வளவு வேகமாகவும், எளிதாகவும் நமது இருதயம் பிரச்சனைக்குள்ளாக போகும் பொழுது, உண்மையிலிருந்து விழுந்து விடுகிறது எனக் கட்டுகிறது. 
10 கட்டளைகளில் பொய் சொல்லுவது தவிர்க்கப்பட வேண்டியது என்று மட்டுமல்ல, கர்த்தருடைய குரல் திரும்பத் திரும்ப இப்பாவத்திற்க்கு விரோதமாக ஒலிக்கிறது. சங்கீதம் 31:18ல், 

 "பொய் உதடுகள் கட்டப்பட்டுப் போவதாக".  

கர்த்தர் வெறுக்கின்ற 7 காரியங்களில் பொய் உதடும் ஒன்று. எபேசியர் 4:25ல்,  

"பொய்களைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்" என்று கர்த்தர் அறிவுறுத்துகிறார்.

ஒரு செவிலியர், புற்று நோயாளியைப் பார்த்து, "இப்பொழுது சுகமாகிக் கொண்டு வருகின்றீர்கள்" என் கூறுகிறார். நாமனைவரும் அறிவோம், ஒரு அற்புதம் நிகழ்ந்த்தாலொழிய சுகம் கிடைக்காது என்று. ஓனர் உள்ளே இருந்துகொண்டே தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம் அவர் இல்லை எனக் கூறும்படி தன் உதவியாளரை வற்புறுத்துகின்றார்.கிருஸ்துமஸ் நாட்களிலே கிருஸ்துமஸ் தாத்தா தோன்றி இந்த அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு மறைந்து விட்டார். என் தன பிள்ளைகளிடம் கூறும் பெற்றோரும் உண்டு. இவையனைத்த்தும் ஏமாற்றுகின்ற பொய்கள். பேசுகின்ற அனைத்தும் தவறான படத்தைக் காட்டுகின்றன. சரியான வார்த்தைகளைப் பயன் படுத்தி உன்மையில்லாதவைகளைப் பேச முடியும். வேறு அர்த்தத்தோடு .
ஆ) அவமதித்தல்: அடுத்தவர்களின் கௌரவத்தை உடைக்கும்படியான தவறாகப் பேசுதல். இது பொதுவாக ஒருவரது வார்த்தைகளைப் பினைத்து அவர் சொன்னதைத் தவறான அர்த்தத்திலே எடுத்துக் கொண்டு, திரும்பத் திரும்ப அவரைப் பற்றிய கதைகளை - உண்மையை அறிந்து கொள்ளாமல் பேசுவது. எரேமியா 18:18ல், ".......இவன் வார்த்தைகளைக் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப் போடுவோம் வாருங்கள் என்றார்கள்." கட்டுப் படுத்த முடியாத நாவினால் மக்கள் பல வருடங்களாக பிறரின் கௌரவத்தைப் பாதிக்கும்படி அவமானப்படுத்துகின்றனர். கர்த்தருடைய முழு அனுமதியுடன் நடந்தாலும், இயேசு சிலுவையில் அடிக்கப்படக் காரணம், அவருடைய வார்த்தைகளைத் திரித்துக் கூறியதாலும், தவறாகப் பேசியதாலேயுந்தான். 
நமது சொந்த தோல்விகளை மறைக்கவும், அடுத்தவர் கண்களிலே நம்மைப் பற்றி பெரிதாக நினைக்கவும், நாமே பிறரிடம் வளைந்து,  குழைந்து நடந்து கொள்ளுகிறோம். அடுத்தவரது கிரீடத்தை தேய்த்து, தேய்த்து சுத்தப்படுத்துவது, நமது பார்வைக்குச் சரியாகத் தோன்றுகின்றது. அவருடைய நல்ல பெயரும் அவருடைய சொத்துக்களைப் போலவே புனிதமானது. அடுத்தவர் வீட்டுக்குள்ளே பிரவேசித்து அவரது வீட்டிலுள்ள சாமான்களை எல்லாம் உடைத்து வெளியே எரிவதைப் போலத்தான் அவருடைய பெயருக்கு களங்கம் விளைவிப்பதும். 
இ) அமைத்தியாய் இருத்தல்: பொய்சாட்சியின் அடுத்த பகுதி, குற்றஞசாட்டப்பட்ட நபரைப் பற்றிய சரியான தகவலை அறிந்திருந்தும் சொல்லாமல் அமைதி காப்பது. வார்த்தையின் மிகுதியினால் எப்படி பாவமில்லாமல் போகாதோ, அதைப் போல பேசவேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும். 
உன் பக்கத்திலுள்ளவர் தவறு செய்தவராக் குற்றம் சாட்டப்படும் பொழுது - அவர் குற்றமில்லாதவர் என்று உங்களுக்கு தெரிந்து - நீங்கள் பேசாமலிருந்தால் அது அவருக்கு விரோதமாக பொய்சாட்சி சொல்லுவதைப் போன்றது.ஒருவரைப் பற்றி ஒருவர் பேசுகின்ற காரியம் தவறு என்று தெரிந்தும் நீங்கள் அதை சரி செய்யாமல் அமைதியாய் இருந்தால் அது பொய் சாட்சியாகும். அமைதியாய் இருப்பது நல்லதுதான், சில சமயங்களில் அதுவும் பாவமாகி விடுகின்றது.
ஈ) மிகைப்படுத்துதல்: ஒரு காரியத்தை, உண்மை என்ற எல்லைக் கோட்டையும் தாண்டி பெரிதாகக் காட்டுவது.  இது ஒரு வகையில் பொய்யாகும். இப்படித் தொடர்ந்து பேசும்பொழுது, எப்பொழுது எதைப் பேசினாலும் மிகைப்படுத்துதல் கலந்து விடும். ஒரு சிறுவன் தான் மிருககாட்சி சாலையில் பார்த்த ஒட்டகசிவிங்கியைப் பற்றி தன் அம்மாவிடம் கூறும் பொழுது, "அம்மா அந்த சிவிங்கிக்கு கழுத்து ஒரு மைல் நீளமிருந்தது" என்றான். அதற்க்கு அவன் அம்மா அவனைப் பார்த்து, "எத்தனை முறை சொல்லுவது? மிகைப்படுத்தி பேசாதே " என்று கூறினார்கள். இப்பொழுது தினசரிப் பத்திரிக்கைகளை வாசித்தொமானால் ஏறக்குறைய எல்லா செய்திப் பத்திரிக்கைகளிலும் மிகைப்படுத்துதல் இருக்கும். உண்மை எப்பொழுதுமே சுவராஸ்யமாக இருக்காது. 
உ) வதந்தி: பிறரைப் பற்றிப் பேசும் உரையாடலில் தேவையற்ற பகுதிதான் வதந்தி. ஒருவரது தனிப்பட்ட, நெருங்கிபபழ்குகிறவர்களைப பற்றி தேவையறவைகளைப் பேசுவதே வதந்தியாகும். வதந்தியைப் பரப்புபவர், பிறரது வேலையைப் பற்றிய செய்திகளை சூடாக வைத்திருப்பார்.  அவர் பிறரது கௌரவத்தைப் பாதிக்கின்ற காரியங்களைப் பேசமாட்டார் என்ற போதிலும், அவரைப் பார்க்கும் போதெல்லாம் பிறரைப் பற்றிய புதிய செய்திகளை எப்பொழுதும் வைத்திருப்பார். அவர் எப்பொழுதும் பிற குடும்பங்களில் என்ன நடக்கின்றது? பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? புதிய வீட்டை என்ன விலைக்கு வாங்கினார்? என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பார். சமுதாயத்தில் என்ன நடக்கின்றது? என்பதைத் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் வதந்தி என்பது அடுத்தவரது தனிப்பட்ட விஷயங்களைத் தெரிந்து கொள்வது. இது ஆபத்தை விழைவிக்கும். ஒரு உதரணமாக, ஒருவர், இந்தப் பொருளை  செலவின், ஜெயக்குமாரிடம் வாங்கியிருக்கிறார் என் கூறினார். அவர் அடுத்தவரிடம் இந்த பொருளை செலவின், ஜெயக்குமாரிடமிருந்து பெற்றுக் கொண்டார் என் கூறினார். அவர் அடுத்தவரிடம், இந்தப் பொருளை செலவின் ஜெயகுமாரிடம் இருந்து எடுத்துக் கொண்டார் என் கூறினார்.  அவர் அடுத்தவரிடம், இந்தப் பொருளை செலவின், ஜெயக்குமாரிடமிருந்து திருடிவிட்டார் எனக் கூறினார். அடுத்தவரைப் பற்றிய தகவல்களைப பரிமாறும் பொழுது, அதிகப்படியான  தகவல்களை,  அதிகப்படியான  தகவல்களை, அதிகப்படியான  தகவல்களை, கொடுத்துக் கொடுத்து கடைசியாக வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பாக பொய்யாக வந்து சேருகிறது. இப்படி வதந்தி ஆரம்பித்து, பேசப்படுகிற நபருக்கு ஆபத்தாகப் போய் முடிகிறது. வேதம் சொல்லுகிறது, 1தீமோத்தேயு 5:13ல், 

"...மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும், தகாத காரியங்களைப் பேசுகிறவ்ர்களாயுமிருப்பர்கள்".
ஊ) தேனொழுகப் பேசுதல்: இது ஒழுக்கமில்லாமல் புகழுதல், இப்படிப் பேசுகின்றவர், முகத்திற்கெதிரே புகழ்ந்து பேசுவர்.முதுகிற்குப் பின்பும் அதேபோல பேசுவர் என  எதிர் பார்க்க முடியாது. ஏனெனில் அவர்கள் தேனொழுகப் பேசுவர். என்ன பேசுகிறோம்? என்பதைக் குறித்து அவர்களுக்கு கவலையில்லை.இப்படிப் பேசுவதும் பொய்யின் ஒரு பகுதியே. வேதாகமம் சொல்லுகிறது, 

"இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப பேசுகின்ற நாவையும் கர்த்தர் அறுத்துப் போடுவார்". 

சங்கீதம் 12:3. நம்பிக்கை - உறுதி - தெளிவு இல்லாமல் அநேக காரியங்களுக்கு கவனமில்லாமல் அதிகமான மதிப்பு கொடுக்கப்படுகிறது. பேசுபவர், தமது உண்மையான வழி - நம்பிக்கை-மதிப்பீடு - பார்வை எது? என் அறியாமலேயே அதிகமான வார்த்தைகளைப் பேசுகின்றனர். எங்கே தகுதி இருக்கிறதோ அங்கே புகழ்ந்து கூறப்படுதலும் இருக்கிறது. ஆனால்  அது உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருவதாக இருக்க வேண்டும்.
நேரடிப் பொய், அவமதித்தல், அமைதியாய் இருத்தல், வதந்தி, தேனொழுக பேசுதல் இவை எல்லாம் தவறான சாட்சிகளுக்கு சில பொதுவான வழிகளாய் இருக்கிறது. ஆண்டவர் அருளிய 9ம்  கட்டளையை மீற இன்னும் அனேக வழிகள் இருக்கின்றது. உதாரணமாக மாய்மாலம். வேதம் சொல்லுகிறது. ஒருவன் தன்னைக் கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொண்டு,  அதன் வழிகளில் நடக்காவிட்டால் அவன் பொய்யன். நாம், நம்மை கிறிஸ்துவைப் பின்பற்றுகின்றவன் என் அழைத்துக்கொண்டு, ஆண்டவரோடு ஐக்கியம் கொண்டிருக்கிறேன் என் உரிமை பாராட்டிக் கொண்டிருந்து, இருளான காரியங்களையும் (அரசாங்கத்தை ஏமாற்றிக் கொண்டு இன்னும் பல) பாவத்தை விடாமலும் இருந்தால், 
"சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாய் இருப்போம்." (1யோவான் 1:6) என வேதம் கூறுகின்றது. 
எப்பொழுதும் மிகச் சரியாக உண்மையே பேசுவது எளிதான செயல் அல்ல. எப்பொழுதுமே பிறரை எமர்ற்றுகின்ற இந்த சோதனையில் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளுவது அவசியம். பைபிள் சொல்லுகிறது: 

"பொய் சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை".
 (நீதி.19:5) தொடர்ந்து தவறான சாட்சியோடு நாம் இருப்போமானால் விளைவு, கர்த்தரிடமிருந்து வரும் கடுமையான் தண்டனையாக இருக்கும். கர்த்தர் பரலோகத்தைப் பற்றிப பேசும் பொழுது, (வெளி.21:8ல்) "பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்". என்கிறார்.
அடுத்த முறை பிறரைப் பற்றி இழிவாகப் பேச சோதிக்கப்படும்போது, வதந்தியைப் பரப்ப வாய்ப்புக் கிடைக்கும்பொழுது, உண்மையின் அளவுக்கு மீறி பேச வாய்ப்பு வரும் பொழுது  - கர்த்தர் பொய் சாட்சியைப பற்றிக் கூறிய தண்டனையை நினைத்துப் பார்ப்போம். ஆண்டவர், சத்தியத்தைப் (உண்மையை) பேசக் கவனமாய் இருப்போரை கனப்படுத்தி ஆசீர்வதிக்கின்றார். மட்டுமல்ல, பொய்யான சாட்சி கூறுவோரைக் கடிந்து கொள்ளுகிறார். ஒரு பிரபலமான செய்யுளின் சில  குழந்தைத்தனமான வரிகள் இப்படிக் கூறுகிறது,
இங்கே ஒரு சிறிய கதவு 
எல்லாரும் அதைப் பூட்டலாம்:
அந்தச் சிறிய கதவு,
சற்று உங்கள் மூக்குக்கு கீழே.
நமக்கு விடுதலையளிக்கும்படியாய் 10 கட்டளைகளும் நமக்குக் கொடுக்கப்படவில்லை. நம் இரட்சகராகிய இயேசுவிடம் அவை நம்மை துரத்துகின்றன. புதிய ஏற்பாடு நமக்கு, ஆண்டவருடைய பிரமாணங்கள் (10கட்டளைகள்) அனைத்தும் நம்மை இயசுவிடம் வழிநடத்தும் பள்ளிக்கூட வாத்தியார்  போல செயல்படுகின்றது. 

"நாவை அடக்க ஒரு மனிதனானாலும் கூடாது." (யாக்கோபு 3:8)

 ஆனால்  இயேசுகிறிஸ்துவால் மட்டுமே முடியும். (தேவனால் எல்லாம் கூடும்) நீங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், இயேசுவிடம் வந்தால், அவர் உங்களது கசப்பான நாவை, இனிமையானவைகளைப் பேசுகின்ற நாவாக மாற்றித் தருவார். 
ஜெபிப்போம்!
எங்களை நேசிக்கின்ற அன்பான தகப்பனே! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம். நீர் எங்கள் மனித ஜாதிக்கு மா பெரும் கொடையாகக் கொடுத்திருக்கிற பேசும் வரத்திற்காக நன்றி செலுத்துகின்றோம். எங்கள் நாவை மிகச் சரியாக பயன்படுத்தி உம்முடைய நாமத்தை மகிமைப் படுத்த உதவி செய்யும். வாயின் வார்த்தைகளில் நங்கள் கவனமாய் இருக்க உதவி செய்யும். கிருபையுள்ள வார்த்தைகளைப் பேசி பிறருக்கு ஆசீர்வாதமாய் இருக்க எங்களுக்கு உதவி செய்யும். இயசுவின் நாமத்தில் ஜெபங்களும், எங்கள் பிதாவே. ஆமென்.