Powered By Blogger

Sunday, 29 December 2013

வேதாகம வினா-விடை போட்டி (11)
(2 ராஜாக்கள்)
1. யோர்தான் எத்தனை முறை இரண்டாக பிரிந்தது?
2. தன சேஷ்ட புத்திரனை அலங்கத்தின் மேல்   சர்வாங்க தகன பலியாக செளுத்தினவன் யார்?
3. முதற்பலனான் 20 வார்க்கோதுமை அப்பங்களை கொண்டு வந்தவன் எங்கிருந்து வந்தான்?
4. தமஸ்குவின் நதிகள் யாவை?
5.  சூநேமியாள் பெலிஸ்தரின் தேசத்தில் எத்தனை வருஷம் சன்சரித்தால்? 
6. கர்த்தர், யெகூவின் குமாரர் இஸ்ரவேலின் சிங்காசனத்தில் எத்தனை தலைமுறை வீற்றிருப்பார்கள் என்றார்?
7. சமாரியாவில் ஒரு மாதம் மட்டும் அரசாண்ட ராஜா யார்? அவன் தகப்பன் பெயர் என்ன?
8. ஒரே எழுத்து உடைய அரசன் பெயர் என்ன? அவன் எந்த தேசத்து ராஜா?
9. யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனை சிறையிலிருந்து புறப்பட பண்ணினவன் யார்?
10. மத்தானியா என்பவன் யார்? அவனது மறுபெயர் என்ன?
பதில் எழுதும்போது வசனக் குறிப்பை எழுத வேண்டும். 
சென்ற மாத விடைகள்:
1. 1ராஜாக்கள் 2:27, 2. 4:2, 3. 6:1, 4. 8:63, 5. 9:13, 6. 11:28, 7. 14:1,20 8: 18:3,4 9. 20:16 10. 16:34 
பரிசு பெற்றவர்கள்:
1. ஜான் சந்தோஷ் ராஜ் , மெஞ்ஞான புரம்  2. நான்சி பிரியா நில்கிரீஸ் 3.  மேரி ஸ்டெல்லா, மெஞ்ஞானபுரம். பரிசு பெற்ற அனைவரையும் வாழ்த்துகின்றோம்
சரியாக பதிலளித்தவர்கள்:
1 மரியாள் சென்னை - 12 2. ராஜ குமாரி நில்கிரீஸ் 3. கிருஸ்டி மார்டின் சென்னை -73. 4. ரீட்டா சென்னை - 125.
PROMISE OF 2014
                

Monday, 9 December 2013

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! ஏசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி  வரவேற்கின்றேன்! மிக நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை இந்த வலைத் தளத்தில் சந்திக்கின்றேன்! 
  கடந்த 12 வருடங்களாக  தமிழில் ஈ ஸ் கடோஸ்  என்ற பெயரில்  மாத  இதழை வெளியிட்டு வருகின்றோம். இதில் வேதாகம வினா - விடை போட்டி ஒன்றை கடந்த 9 மாதங்களாக வெளியிட்டு வந்தோம். இதில் குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்களும் கலந்து கொண்டு வேதத்தைப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வலைத்  தளத்திலும் வெளியிடுகின்றோம்.
வேதாகம வினாவிடைப் போட்டி (10)
(1இராஜாக்கள்) 
1.சாலமோன் யாரை கர்த்தருடைய ஆசாரியனாக இராதபடிக்கு தள்ளிப் போட்டான்? 
2. சாலமோனின்  பிரதான மந்திரி யார்?
3.  சாலமோன்  எந்த வருடம் எந்த மாதம் ஆலயத்தை கட்டத் தொடங்கினான்?
4. சாலமோன்  கர்த்தருக்கு சமாதான பலியாக எத்தனை ஆடு எத்தனை மாடுகளை பலியிட்டான்?
5. காபூல் நாடு - வாசிப்பது எங்கே?
6.சாலமோன் அவனைக் காரிய சமர்த்தனாக கண்டு........... - அவன் யார்?
7. யெரொபெயாமின் குமாரன்  யார்?
8. ஒபதியா என்பவன் யார்?
9. பெனாதாத்துக்கு உதவியாக வந்த இராஜாக்கள் எத்தனை பேர்?
10. எரிகோவை கட்டினவன் யார்? அவன் குமாரர் எத்தனை பேர்?
 விடைகள் 20/12/2013 வெள்ளிக்குள் வந்து சேரவேண்டும். சென்ற மாதம் திருமதி. ஜோதி தாமஸ் மதுரை அவர்கள்தான் பரிசை பெற்று இருக்கிறார்கள். கவனமாக வேதத்தைப் படியுங்கள். பதிலை அனுப்புங்கள். நன்றி! மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப் படும். 
உங்கள் முழு முகவரியோடு பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி:
zrmindia@gmail.com and copy to ddevanesan@hotmail.com
Thank you, God may bless you.
PROMISE OF THIS DECEMBRE