Powered By Blogger

Saturday, 11 March 2017

HOW TO HANDLE YOUR ANGER?

நண்பர்கள் யாவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

ஒரு குக் கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில், திரவியம் என்ற சிறுவன் அருகில் இருந்த கிராமத்தில் இருந்த பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வந்தான். 6ம் வகுப்பு முடிக்கும் தருவாயில் ஒரு வருடமாக அந்த கிராமத்தில் மழை இல்லாததினால், அது வானம் பார்த்த பூமியாய் இருந்தபடியால் வருமானத்துக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. எனவே பிழைப்பு தேடி அந்த குடும்பம் நகரத்தை அடைந்தது. அந்த சிறுவனின் உறவினர் ஒருவர் அவனுடைய படிப்புக்கு உதவியபடியால், ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு சேர்க்கப்பட்டான். 
கிராமத்தில் உள்ள கூரை வேய்ந்த பள்ளியில் (நடுநிலைப்பள்ளி) படித்த அவனுக்கு, நகரத்தில் எல்லாமே பிரமாண்டமாக தெரிந்தது. பள்ளிக்கட்டிடங்கள் எல்லாமே 3,4 மாடிகள். ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு ஆசிரியர்கள், இவன் வகுப்பில் மட்டும் 60 மாணவர்கள். (கிராமத்தில் இவன் வகுப்பில் 20 பேர்) பள்ளியில் 3000 மாணவர்களுக்கு மேல். இப்படி அனைத்துமே அவனை மலைக்க வைத்தது. இந்த புதிய சூழலில் அவனால் சீக்கிரமாக ஒன்றிணைய முடியவில்லை. +2 மாணவர்கள் அனைவரும் இவன் கண்களுக்கு மிகப் பெரியவர்களாக தெரிந்தனர். பயத்தோடும், ஒருவித வெட்கத்தோடும் ஒரு வாரமாக பள்ளிக்குச் சென்று வந்தான். 
ஒருநாள் அங்கு படித்த கலைமணி என்ற +2 மாணவனுக்கும் திரவியத்துக்கும் இடையில் ஒரு தகராறு வந்தது. இவன் விலகிச் சென்றாலும் அவன் விடுவதாக இல்லை. அது ஒரு வெள்ளிக்கிழமை, மதியம் சாப்பாட்டு நேரத்தில் கலைமணி, திரவியத்தைப் பார்த்து, இன்று பள்ளிக்கூடம் முடியட்டும், உன்னை அடிக்காமல் விட மாட்டேன் என சொல்லிவிட்டு சென்றான். என்ன ஆகுமோ என பயந்து கொண்டே இருந்தான். வகுப்பில் பாடங்களை கவனிக்க முடியவில்லை. மாலையில் பள்ளி முடிந்ததும், பையை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினான். ஒரு தெருவில் திரும்பியவுடன் அங்கே மிக அருகில் கலைமணி. இவனால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. 
அருகில் வந்த கலைமணி, திரவியத்தின் சட்டையை பிடித்து இழுத்து அடி, அடி என அடித்தான். சட்டை கிழிந்து, முகத்தில் இரத்தம் வரும்வரை அடித்தான். திரவியத்தால் ஓரளவு தடுக்கவே முடிந்தது. பள்ளி விட்டு வந்த மாணவர்கள் யாரும் சண்டையை வேடிக்கை பார்த்தார்கள் ஒழிய விலக்கிவிட முன்வரவில்லை. திரவியம் அடிபட்டு கீழே விழுந்தான். கலைமணி, அவனை விட்டுவிட்டு சென்றுவிட்டான். 
திரவியம் மெதுவாக எழுந்து, கீழே கிடந்த பையை எடுத்துக்கொண்டு, நடக்கமுடியாமல் மெதுவாக நடந்து வீடு வந்து சேர்ந்தான். புதிய ஊர். யாரும் சரியாக பழகவில்லை. அவனது அம்மா ஓடிவந்து என்ன நடந்தது என விசாரித்தார்கள். இவன் நடந்ததைக் கூறினான். 
"அம்மா, மனிதர்கள் ஏன் இப்படி இருக்கின்றார்கள்? பிறரை ஏன் அடிக்கின்றார்கள்?"

அவனது அம்மா, 
"எனக்கு தெரியவில்லையே, இப்படிப்பட்டவர்களிடத்தில் ஏதோ தவறு இருக்கின்றது....."
"திங்கட்கிழமை சென்று பள்ளித்தலைமை ஆசிரியரிடம் புகார் செய்யலாம்" 
எனக் கூறிக்கொண்டே காயத்துக்கு எண்ணையைக் காய வைத்து போட்டார்கள்.
8 மணி இருக்கும் எதேச்சையாக முகம் பார்க்கும் கண்ணாடியை பார்க்க நேர்ந்தது. முகமெல்லாம் வீங்கி இவனையே இவனுக்கு அடையாளம் தெரியவில்லை. 
"அம்மா நான் எப்படி இருக்கிறேன்?"
அவர்கள் வருத்தத்துடன், 
"நாளைக்கு எல்லாம் சரியாகிவிடும், நீ தூங்கு" என்றார்கள்.
"எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு..... எனக்கு அந்த அண்ணனை வெறுக்கவே இல்லை, ஆனா எனக்கு கோபம் வந்தது... வேறு யாரும் அவரைப்போல இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளவே முடியாது"
எனக்கன்பானவர்களே.... 
பிறர் உங்களைக் கோபப்படுத்தும் போதும், உங்கள் உள்ளத்தைக் காயப்படுத்தும் போதும், நீங்கள் எப்படி நடந்து கொள்ளுகிண்றீர்கள்? இதற்க்கு வேதம் நிறைய வழிகளை வைத்துள்ளது. இயேசுவின் போதனைகளும் உள்ளன. மத்தேயு 5:38 முதல் 48 வரை வாசித்துப் பாருங்கள். 
1. திரவியம், இயேசுவின் வழியில் சூழ்நிலையை கையாண்டானா? ஏன்? அல்லது ஏன் இல்லை?
2. இயேசு தமது வாழ்க்கையில் எப்படி நடந்துகொண்டார்?
யோசித்துப் பார்க்க: தொலைகாட்சி தொடர்களில் வரும் சில கதாபாத்திரங்கள் கோபமான சூழ்நிலையை எப்படி கையாழுகின்றார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள், அதே வழியில் மக்கள் தங்கள் கோபத்தைக் கையாண்டால், என்ன நடக்கும்?அடுத்தமுறை ஆலயத்துக்கு செல்லும் முன் உன் பேரில் உன் சகோதரனுக்கு இருக்கின்ற குறைகளை சரி செய். (மத்தேயு 5:23,24)
மேலும் கீழ்கண்ட வேதவசனங்களும் உங்களை வழிநடத்தும்:
நீதிமாழிகள் 15:1; மத்தேயு 5:17-26; எபேசியர் 4:17-32  

கிறிஸ்தவ நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு: இதை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். படித்துவிட்டு உங்களிடம் பைபிள் கேட்டால் உங்களிடம் இருக்கு வேதாகமத்தைக் கொடுத்துவிடுங்கள். அல்லது வாங்கி கொடுங்கள். 
இந்த வலைத்தளத்தில் உறுப்பினராக இணைந்திருங்கள். நன்றி!

Wednesday, 7 December 2016

EARN - ONLINE

BTCClicks.com Banner

வலைப்பின்னலில் சம்பாதிக்க மற்றுமொரு வாய்ப்பு (1):
நண்பர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்!
இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களுக்குத் தக்க உங்களுக்கு பிட் காயின் தரப்படுகின்றது.
ஒரு பிட் காயின் என்பது $756.62 என்ற மதிப்புக்குச் சமம். 
நான் இந்த வலைத்தளத்தில் 21/11/2016ல், சேர்ந்தேன். இன்றய தேதி:7/12/2016 இதுவரை, 121 விளம்பரங்களை பார்த்துள்ளேன். எனது கணக்கில், 0.01948 எம்.பி.டி.சி. உள்ளது.
இதற்காக நாள் முழுவதும் கணினியிலேயே உட்காரவில்லை.
இந்த வலைத்தளத்தில் நான் மிக குறைந்த நேரமே செலவிட்டேன். (தினமும் நீங்கள் எப்பொழுது கணினியில் உட்காருகிண்றீர்களோ, அந்த நேரத்தில் இந்த வலைத்தளத்தில் சென்று, விளம்பரங்களை பார்த்ததால் போதும். எனது நேரம் தினமும் காலை 6:00 மணி)நான் எனது வலைத்தளத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு கொண்டு செல்லவே இதில் இணைந்திருக்கின்றேன்.
உங்களுக்கு நேரம் இருக்கும் பட்சத்தில், மேலே உள்ள பேனரை சொடுக்கி உங்களை பதிவு செய்து, ரூபாயை சம்பாதிக்க ஆரம்பியுங்கள். மேலும் எளிதாக சம்பாதிக்கும் வலைத்தள தொடுப்புடன் உங்களை சந்திக்கின்றேன்.
(ஒருவேளை உங்கள் வீட்டுக்கே தங்க டாலர் வரும்படியான இந்திய வலைத்தள தொடுப்பு இதே வலைத்தளத்தில் வெளியாகும்) எனவே இலவசமாகவே இந்த வலைத்தளத்தின் சந்தாதாரர் ஆகுங்கள்.

வாழ்த்துக்களுடன்,
உங்கள் சகோதரன்,
செல்வின் துரை,
செல்லிட பேசி :9840836690

Wednesday, 20 April 2016

KINGS SHALL BE AMONG YOUR DESCENDANTS!!

"உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுக்கப் பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்"

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!

இந்த வசனத்தில் ஆபிரகாமுக்கு சொன்னவர் 17:16ல், சாராளுக்கும் இதே வாக்குத்தத்தத்தைக் கொடுக்கின்றார். பின்பு இவர்களின் பேரனாகிய யாக்கோபுக்கும் இதே வாக்குத்தத்தத்தைக் கொடுக்கின்றார். (ஆதி. 35:11) 

பொதுவாகவே ஆண்டவர் தமது வாக்குத்தத்தத்தை தமக்கு கீழ்படிகின்றவர்களுக்கே கொடுக்கின்றார். (ஆதி.12:1) மேலும் 17:1ல், எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாய் இரு எனக் கூறுகின்றார். ஆண்டவருக்குமுன் நீங்கள் உத்தமனாய் இருக்க பிரயாசப்படுங்கள். சக மனிதர்களிடம் பிரச்சனை இருக்கின்றதா? அந்த மனிதரையே நோக்கிக் கொண்டிராமல், ஆண்டவரோடு கூட உள்ள ஐக்கியம் எப்படி இருக்கிறது? எனப் பாருங்கள்!! பலுகிப் பெருகச்செய்வார். வெற்றி பெறும் பொழுது முதலாவது ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்! அது வெறுமனே வாயிலிருந்து வராமல் உங்கள் ஜெபத்திலிருந்து அதாவது ஆண்டவரிடத்தில் நீங்கள் உதவி கேட்ட இடத்திலிருந்து வரவேண்டும்.

யாக்கோபுக்கு வாக்கு கொடுத்தபொழுது, அவன் அந்நிய தெய்வங்களைப் புதைத்திருந்தான். கர்த்தருக்கு பலிபீடம் கட்டினான், குடும்பத்தில் இழப்பை சந்தித்திருந்தான். அப்பொழுது ஆண்டவர் அவனுக்கு தரிசனமானார். 

உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள் என்றால், என் பிள்ளைகள் அல்லது பிள்ளைகளின் பிள்ளைகள் உலக மக்களுக்கு மிகவும் பயன்படும் பொருட்களைக் கண்டுபிடிப்பார்கள்; குறிப்பாக அவர்களின் சொல் சபையிலே (மக்களால்) ஏற்றுக்கொள்ளப்படும்.

ஜெபிப்போமா?

அன்பின் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வருகின்றேன்! இந்த வாக்குத்தத்தத்திற்க்காக நன்றியும், துதியும் மகிமையையும் செலுத்துகின்றேன். வசனத்துக்கு கவனமாக இருந்து கீழ்படிய கிருபை செய்யும். பிள்ளைகளைப் பற்றிய கவலைகளை ஒழித்துவிட்டு நாங்கள் உமது வாக்குத்த்தத்தைப் பற்றிப் பிடித்தக் கொண்டு முன் செல்ல உதவி செய்யும். எங்கள் பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள், அவர்களுடைய சமாதானம் பெரிதாயிருக்கும் என்று அறிக்கையிட கிருபை செய்யும், இயேசுவின் மூலம் பிதாவே, ஆமென், ஆமென்.


Friday, 8 April 2016

TO-DAY'S MORNING PRAYER - 3

இன்றைய காலை ஜெபம் - 3 

என் தேவனே நீர் எனக்கு ஜீவனைக் கொடுத்திருக்கின்றீர், இன்று உமக்குப் பிரியமானதைச் செய்ய நீர் விரும்புகின்றீர் என்பதை நான் அறிவேன்,
எனது சரீரத்தை சரியான நிலையில் வைத்துக்கொள்ளவும்,
மனதை கூர்மையாக வைத்துக் கொள்ளவும், 
எனது நினைவுகளை பரிசுத்தமாக காத்துக் கொள்ளவும்,
எனது வாயின் வார்த்தைகளை சுத்தமாகவும் உண்மை உள்ளதாகவும் 
இருக்க கிருபை செய்யும்,
இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே, ஆமென், ஆமென்.

Saturday, 2 April 2016

TO-DAY'S MORNING PRAYER - 2

இன்றைய காலை ஜெபம் - 2

அன்புள்ள தேவனே,
இன்று நான் பயப்படும் காரியங்களை சந்திக்க எனக்கு தைரியத்தையும்;
நல்ல காரியங்களைச் செய்யவிடாமல், கெட்ட காரியங்களைச் செய்யத் தூண்டுகின்ற சோதனையை மேற்கொள்ள தேவையான பெலத்தையும்;
நான் செய்யும்படியாய் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை விடாமுயற்சியுடன் செய்யவும்,
எப்பொழுதும் பிறருக்கு உடனே உதவி செய்யும்படியான இரக்க குணத்தையும்;
 நீர் எப்பொழுதெல்லாம் என் உள்ளத்திலே பேசுகின்றீரோ அப்பொழுதெல்லாம் கீழ்ப்படியவும் 
என்னை இன்று உருவாக்கும்.
நான் பரிசுத்தமாய் வாழவும்,
உண்மை பேசவும்,
அன்பினால் கிரியை செய்யவும்
எனக்கு இந்த நாள் முழுவதும் உதவி செய்யும்...
இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே! ஆமென், ஆமென்.