Salvation, is the saving of the soul from sin and its consequences.It may also be called "deliverance" or "redemption" from sin and its effects.It is completely free.Salvation can't be obtained by the sacrifice of animals nor by shedding our hair.It can't be obtained by visiting pilgrims or by hurting ourselves with sharp things.
To be saved,we have to confess our sins to Jesus Christ.Then he will clense us from our sins,by his blood and purify us.No man on earth can save you,it can be done only by christ and the people of God will be able to guide you to be saved.Jesus said in Mark 16:15,16,
“ And he said unto them, Go ye into all the world, and preach the gospel to every creature. He that believeth and is baptized shall be saved; but he that believeth not shall be damned”.
The expense of proclaiming the gospel to the gentiles is more. We can testify in the streets, distribute tracts and give gifts to children. It is also expensive to print and buy tracts. We are unable to do the gospel work without money.
Let God bless those who donate towards this ministry.
We do these ministries,
1. ZION'S CHILDREN MINISTRY:
a. Training program for volunteers
b. Weekly Sunday Schools in villages also.
c. Children Re-treat.
c. Children Bible School in summer holidays
d. Cultural programs @ Christmas times.
2. “ESCHATOS”: A monthly magazine (trumpet of zion)
It’s subscription Rs.50/- per year. Rs.600/- Life in India
$ 10/- per year and $ 500/- Life.
3. TRACT PRINTING & PUBLISHING.
We published 10 Tracts.
1. You have appointment with death.
(ungalaiyum saavu santhikkum)
2. The truth about the lie.
(poiyai pattrria oor unmai)
3. Repentance toward God
(kadavulidam (manan)thirumpungal)
4. Old fashioned parents and modern age youth
(hyder kaalaththu perrorum nava yuga izhaignarkalum)
These tracts are translated from “BIBLE HELPS” booklets and tracts
5. Christmas vaazhththukkal (Christmas greetings)
6. unagaluku oor iratchchakar (A savior for you)
These tracts are distributed in Tamilnadu and in few other countries to transform the Tamil community. If you want to pariticipate in the ministry to distribute tracts, please send in your postal address to +919840836690. Sample tracts will be sent to you freely. Thank you, God bless you.
Some tracts are yet to be printed,
1. “Vice of sexual immorality” (paaliyal kuttrrangal).
2. “The search for Happiness”(magizhchchiyai thedi).“Bible helps”
If you want be a part of this tract ministry,please donate Rs.20,000 for tracts to be printed and distributed all over the world in your family name.
4. VILLAGE MINISTRY: We do this ministry once in evrey month in villages nearby Chennai (government holidays).
Contact:
Bro.K.Selvin durai
zion house
#82/15, P.V.Kovil Street,
Kosapet, Chennai - 600 012
www.youtube.com/zion’schildrenbilbeschool
www.facebook.com/selvin.durai.1
Donation through bank:
Zion Revival Ministries, Indian Bank ottery branch, A/c No:441176777.
“.......for God loveth a cheerful giver”. 2Cori.9:7
GOOD WORKS SUCCEED ONLY THROUGH SELF SACRIFICE
Tuesday, 27 November 2012
Monday, 12 November 2012
FROM HEARING..........No: TWO
பிள்ளைகளின் படிப்பில் பெற்றோரின் பங்கு என்ன?
விழுப்புரம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து 10வது படித்த ஒரு மாணவன் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அவனது ஆசிரியர்கள், நீங்கள் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தால் இவனது எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றனர். அவனுடைய பெற்றோர் சென்னையில் எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என விசாரித்ததில் ஒரு சிலர் D .A .V . பள்ளியை சிபாரிசு செய்யவே சென்னைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். அருகில் ஒரு வீடடை வாடகைக்கு எடுத்து, தங்கிப் படித்தான்.
பின்பு அவன் தனக்கு டியூசன் தேவை என நினைத்ததால் டியூசன் எங்கு நன்றாக இருக்கும்? என் விசாரித்ததில் புரசைவாக்கத்தில் ஒரு டியூசன் மையம் அறிமுகமாகியது.
அந்த மையத்தில் விசாரித்ததில், நாங்கள் காலை 6 மணிக்கெல்லாம் பாடங்களை ஆரம்பித்து விடுவோம். எனவே முகப்பேரில் இருந்து இங்கு வந்து கற்றுக் கொள்ள முடியாது என்று கூறினர். (முகப்பேர் TO புரசைவாக்கம் 15 km) சரியென புரசைவாக்கத்தில் வாடகைக்கு வீடு பார்த்திருக்கிறார்கள். அஸ்பெஸ்டாஸ் போட்ட ஒரு அறை வீடுதான் கிடைத்திருக்கிறது. வாடகைக்கு எடுத்து (+1, +2 இரு ஆண்டுகளுக்கு) அம்மாவும் மகனும் தங்கினார்கள். படித்தான். இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து Maths , Physics, Chemisty, Biology என 4 பாடங்களுக்கும், ரூ 40,000/- கட்டினார்கள்.
+2 தேர்வு எழுதினான். அவன் எழுதிய அந்த வருடத்திலே கணக்கில் ஒரு மார்க் கேள்வி ஒன்று கடினமாக இருக்கவே, தேர்வு எழுதிய பின் தனது டியூசன் ஆசிரியருக்கு போன போட்டு, சார், நான் கணக்கில் 100/100 எடுக்க முடியாது என கூறி தனது பிரச்சனையைக் கூறினான். அதற்க்கு அவர், அந்த கேள்வியே தப்பு என்று உனக்குத் தெரியவில்லையா? அதை attend பண்ணி இருந்தாலே போதும். மதிப்பெண்கள் கிடைக்கும் என்றார்.
தேர்வு முடிவுகள் வந்தன. இப்பொழுது அவன் M.M.C யில் (மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில்) படித்துக் கொண்டிருக்கிறான். தமது பிள்ளைகளின் படிப்புக்காக இந்த பெற்றோரின் அர்ப்பணிப்பு எப்படி இருந்தது பார்த்தீர்களா?
யாரோ ஒருவர் இப்படி சொன்னார்: "நான் வாலிபனாக இருந்த பொழுது எனக்காக வாழ்ந்தேன், திருமணம் முடித்த பொழுது என் மனைவிக்காக வாழ்ந்தேன், பிள்ளைகள் பிறந்த பின் நாங்கள் பிள்ளைகளின் நலனுக்காக வாழ்கிறோம்".
நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது? பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.நமது அர்ப்பணம் நமது பிள்ளைகளுக்குத் தெரிந்தால்,எந்த காலத்திலும் அவர்கள் பெற்றோருக்கு ஆதரவாக இருப்பார்கள்.
எங்களது ஞாயிறு வேதாகம பள்ளியில், நாங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோரின் அருமையை சொல்லிக் கொடுக்கிறோம். பெற்றோரை நேசிக்கவும், அவர்களுக்கு கீழ்ப்படியவும், நிலைமையை விவாதிக்கவும் பைபிள் வசனத்தைக் கொண்டு கற்றுக் கொடுக்கிறோம். தன்னார்வப் பணியாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் எப்படி? எப்பொழுது? பிள்ளைகளுக்காக ஜெபிப்பது, என்பதைக் குறித்து கற்றுக் கொடுக்கிறோம். நீங்களும் பிள்ளைகளின் நல்வாழ்விற்காக ஞாயிறு பள்ளி இல்லாத சபைக்கு செல்லவேண்டாம். உங்கள் பிள்ளைகளை ஞாயிறு பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். நன்றி.
Sunday, 11 November 2012
WE WISH YOU A HAPPY CHRISTMAS!! (ENGLISH)
Why did JESUS come to this world?
“....... for I am not come to call the righteous, but sinners to repentance”. Math. 9:13
“.....I came not to call the righteous, but sinners to repentance”. Mark 2:17.
“This is a faithful saying, and worthy of all acceptation, that Christ Jesus came into the world to save sinners;....1 Timothy 1:15
What is sin?
"
All unrighteousness is sin: ....” 1 John 5:17
“Beware that there be not a thought in thy wicked heart, ........ and thine eye be evil against thy poor brother, and thou givest him nought; and he cry unto the LORD against thee, and it be sin unto thee”. Exodus.15:9
“In the multitude of words there wanteth not sin: but he that refraineth his lips is wise”. Pro. 10:19
“An high look, and a proud heart, and the plowing of the wicked, is sin”. Pro. 21:4
"The thought of foolishness is sin" :... Pro.24:9
“Then when lust hath conceived, it bringeth forth sin: and sin, when it is finished, bringeth forth death”. Jam.1:15.
“Therefore to him that knoweth to do good, and doeth it not, to him it is sin”. James 4:17.
Is anybody live here, without sin?
“If they sin against thee, (for there is no man that sinneth not,)....” 1 Kings 8:46.
“For all have sinned, and come short of the glory of God;” Romans 3:23.
“If we say that we have no sin, we deceive ourselves, and the truth is not in us”. 1 John 1:8
“...... and so death passed upon all men, for that all have sinned:” Romans 5:12
How did our sins are forgiven?
“........ who can forgive sins but God only?” Mark 2:7
“But that ye may know that the Son of man hath power on earth to forgive sins,........” Matthew 9:6
“ But that ye may know that the Son of man hath power on earth to forgive sins,......” Mark 2:10
“But that ye may know that the Son of man hath power upon earth to forgive sins,.......” Luke 5:24
“And ye know that he (JESUS) was manifested to take away our sins; and in him is no sin”. 1 John 3:5.
“He that covereth his sins shall not prosper: but whoso confesseth (to JESUS) and forsaketh them shall have mercy”. Proverbs 28:13.
“If we confess our sins, he (JESUS) is faithful and just to forgive us our sins, and to cleanse us from all unrighteousness”. 1 John 1:9.
Have I live without sin?
Certainly!
“Thy word have I hid in mine heart, that I might not sin against thee”. Psalm 119:11.
We should read and meditate the words of Holy Bible, daily. The Holy Bible is the mirror of our heart. How the mirror shows the dust on our face, like that, The Holy Bible shows your heart. If you find any dust in your heart or mind please confess and oneness with God. This is ‘the life of Christians’.
“therefore pray ye: Our Father which art in heaven, Hallowed be thy name ....... And lead us not into temptation, but deliver us from evil:...” Matthew 9:6,13.
“And forgive us our sins; for we also forgive every one that is indebted to us. And lead us not into temptation; but deliver us from evil”. Luke 11:4.
We pray to JESUS daily.
Finally,
“Neither is there salvation in any other: for there is none other name under heaven given among men, whereby we must be saved”. Acts 4:12.
“And they said, Believe on the Lord Jesus Christ, and thou shalt be saved, and thy house”. Acts. 16:31
![]() |
| selvin12zion@gmail.com |
Saturday, 10 November 2012
CHRISTMAS GREETINGS!!!
இயேசு ஏன் இந்த உலகிற்கு வந்தார்?
இயேசு, "நீதிமான்களை அல்ல: பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்" என்றார். மத்தேயு 9 :13, மாற்கு 2:12
"பாவிகளை இரட்ச்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும், எல்லா அங்கிகரிப்புக்குப் பாத்திரமுமானது. 1தீமோத்தேயு 1:15
பாவம் என்றால் என்ன?
"அநீதியெல்லாம் பாவந்தான்". யோவான் 5:17
"......உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழை சகோதரனுக்கு கொடாமல் மறுத்து, அவன் மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்து கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும், எச்சரிக்கையாய் இரு: அப்படி செய்வாயானால் அது உனக்கு பாவமாகும்". உபாகமம் 15:9.
"சொற்களின் மிகுதியில் பாவமில்லாமல் போகாது". நீதிமொழிகள் 10:19.
"மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கன் போடும் வெளிச்சம் பாவமே". நீதிமொழிகள் 21:9.
"தீய நோக்கம் பாவமாம்". நீதிமொழிகள் 24:9
"இச்சையானது கர்ப்ந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது மரணத்தைப் பிறப்பிக்கும்". யாக்கோபு 1:5.
"ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாய் இருந்தும், அதை செய்யாமல் போனால், அது அவனுக்குப் பாவமாய் இருக்கும். யாக்கோபு 4:14
பாவமில்லாத பரிசுத்தவான்கள் உண்டா?
"பாவம் செய்யாத மனுஷன் இல்லையே". 1இராஜாக்கள் 8:46
"எல்லாரும் பாவஞசெய்து தேவ மகிமையற்றவர்களாகி........." ரோமர் 3:23
"நமக்கு பாவமில்லை என்போமானால் நம்மை நாமே வஞசிக்கிரவர்களாய் இருப்போம், சத்தியம் நமக்குள் இராது". 1யோவான் 1:8.
"எல்லா மனுஷரும் பாவம் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும்.........." ரோமர் 5:12
பாவம் எப்படி மன்னிக்கப்படும்?
"தேவன் ஒருவராலேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? மாற்கு 2:7
"பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு (இயேசுவுக்கு) அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறிய வேண்டும்". மத்தேயு 9:6, மாற்கு 2:10, மத்தேயு 5:24
"அவர் (இயேசு) நமது பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டார் என்று அறிவீர்கள். அவரிடத்தில் பாவமில்லை". யோவான் 3:5
"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை (இயேசுவிடம்) அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ, இரக்கம் பெறுவான்". நீதிமொழிகள் 28:13
"நம்முடைய பாவங்களை நாம் (இயேசுவிடம்) அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியுமுள்ளவராய் இருக்கிறார்". 1யோவான் 1:9.
இனி பாவம் செய்யாமல் இருக்க முடியுமா?
"நான் உமக்கு விரோதமாய் பாவஞசெய்யாதபடிக்கு, உமது வாக்கை எனது இருதயத்தில் வைத்து வைத்தேன்". சங்கீதம் 119:1
இனி மேல் பாவம் செய்யாமலிருக்க பரிசுத்த வேதாகமத்தை வாசித்து தியானிக்க வேண்டும். கண்ணாடி எப்படி முகத்தில் உள்ள அழகை அல்லது அழுக்கை உள்ளது உள்ளபடி காட்டுகின்றதோ, அதைப் போல, பரிசுத்த வேதாகமம், நம் உள்ளத்தில் இருப்பதை காட்டுகின்றது. அழுக்கு இருந்தால், இயேசுவிடம் அறிக்கை செய்து விட்டுவிட வேண்டும். மீண்டும் அந்த பாவ சூழ்நிலை வந்தால், வெற்றி எடுக்க, தேவனிடம் கிருபையை கேட்டுப் பெற்றுக் கொள்ளவேண்டும். அழகு இருந்தால் ஆண்டவருக்கு நன்றி கூறவேண்டும். (இது தான் கிறிஸ்தவ் வாழ்க்கை)
இயேசு: நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது, பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே, .................. எங்களை சோதனைக்குள் உட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை விடுவித்துக் காத்துக் கொள்ளும்...... மத்தேயு 6:1-3, லூக்கா 11: 2- 14.
தினந்தோறும் இயேசுவை நோக்கி ஜெபிக்க வேண்டும். அந்த நாளுக்குரிய பாவத்தை மேற்கொள்ள வேண்டிய கிருபையை ஆண்டவர் தந்தருளுவார். ஆகையால் நாம் ஆண்டவருக்குப் பிரியமான் வாழ்க்கை வாழமுடியும்.
இறுதியாக,
"அவராலேயன்றி (இயேசுவாலேயன்றி) வேறொருவராலும் இரட்சிப்பு (விடுதலை) இல்லை. நாம் இரட்சிக்கப் படும்படிக்கு, வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசுவினுடைய) நாமமே அல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. அப்போஸ்த்தலர் 4:12.
"கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவை விசுவாசி: அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்ச்சிக்கப் படுவீர்கள். அப்போஸ்த்தலர் 16:31..
![]() |
| கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!! |
Tuesday, 6 November 2012
FROM HEARING.....No:1
எங்களது சொந்த ஊர் அகிலாண்டபுரம் என்ற ஒரு கிராமம். இது இப்பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. இங்கே ஒரு ரோமன் கத்தோலிக்க சபையும், தெனிந்திய திருசபையும் உள்ளது. இந்த சபைக்கு பன்னீர் குளத்தில் இருந்து, போதகர் ஆராதனை நடத்த வருவார். பன்னீர் குளம் சர்க்கிள். இதில் அப்பொழுது பதினான்கு சபைகள் இருந்தன. இப்பொழுது பதினாறு சபைகள். ஒரே போதகர்.
ஒரு வாரத்திற்கு நான்கு சபைகள். எங்கள் ஊருக்கு மூன்றாவது வாரம், பதினோரு மணிக்கு நற்கருணை ஆராதனை. நான் அங்கிருந்த நாட்களில் அகஸ்டின் என்ற குருவானவர் ஊழியம் செய்து வந்தார். அவருடைய அனுபவ சாட்சியே இது.
அந்த பதினான்கு சபைகளில் தெற்கு மயிலோடை கிராமத்தில் உள்ள சபையும் ஒன்று. அங்குள்ள சபை விசுவாசிகள் மூலமாக வந்த பிரச்சனை இது. இந்த குருவானவரை அங்குள்ள விசுவாசிகளுக்குப் பிடிக்கவில்லை. இது இவருக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது.
ஒரு ஞாயிறு அன்று இவர் ஊழியத்தை அந்த கிராமத்தில் முடித்து விட்டு, தனது பைக்கை எடுத்த பொழுது, அதின் பின் சக்கரத்தில் காற்று இல்லை. பஞ்சர் ஆக்கப் பட்டிருந்தது. பக்கத்தில் இருந்து பார்த்து சிரித்தார்கள். இவர் மீது மதிப்பு வைத்திருந்த ஒருவர் ஓடி வந்து, "ஐயா, எனது தொழுவில் வண்டியை விட்டு விடுங்கள். கயத்தாரில், இருந்து ஆள் அனுப்பி சரி செய்யுங்கள் எனக் கூறி பைக்கைத் தள்ளி தனது தொழுவத்தில் விட்டார்.
மதியம் இரண்டு மணி. சரியான வெயிலில், மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும். தன பையைத் தூக்கிக் கொண்டு ஆண்டவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே நடந்தார். ஒரு கிலோமீட்டர் நடந்தபின், முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர், அந்தப் பக்கம் பைக்கில் வந்தவர், தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு, கயத்தாறில் கொண்டுவந்து விட்டுவிட்டார்.
அடுத்த மாதம் மீண்டும் தெற்கு மயிலோடை செல்ல வேண்டிய ஞாயிறு. சகலத்தையும் ஆண்டவர் கரங்களில் ஒப்புக் கொடுத்து விட்டு, குறிப்பிட்ட நேரத்தில், போய் சேர்ந்தார். அன்று சபைக்கு இவரை எதிர்த்த ஒருவரும் வரவில்லை. ஆராதனை முடிந்த பின்பு, வந்திருந்த விசுவாசிகள், "ஐயா நேற்று மதியம், ஒரு கொலை நடந்து விட்டது. போலீஸ் வேன் இரவு வந்து உங்களை எதிர்த்த அத்தனை பேரையும், விசாரணைக்காக பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். அவர்கள் குடும்பத்தினர், அனைவரும் போலீஸ் ஸ்டேஷன் இல் அவர்களைப் பார்ப்பதற்காக சென்றிருக்கின்றனர்" என்றனர்.
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.
எமது சில வீடியோக்கள், www.youtube.com/zion’schildrenbibleschool என்ற முகவரியில் இருக்கிறது. பார்க்கலாம்.
எமது சில வீடியோக்கள், www.youtube.com/zion’schildrenbibleschool என்ற முகவரியில் இருக்கிறது. பார்க்கலாம்.
Monday, 5 November 2012
TESTIMONY No: THREE
சாட்சி எண்: மூன்று
ஒரு முறை, நமது சீயோன் ஜெப கோபுரத்தில் பள்ளியில் படிக்குன் மாணவ மாணவியருக்கான ஒரு சிறப்பு ஜெபக்கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தேன். ஜெப கோபுரத்திற்கு மின்சாரம் பக்கத்து வீட்டில் இருந்து எடுத்திருந்ததால் ஒரு நோட்டீசை அவருக்கு கொண்டு போய் கொடுத்து ஒலிபெருக்கி வைக்கப் போகிறேன், மின்சாரம் வேண்டும் எனக் கேட்டேன். அவர் குடித்திருந்தார். சரி நடத்துங்கள் என்று அனுமதி கொடுத்தார். வெளியே பாய் விரித்து, ஒலிபெருக்கியை வைத்ததிருந்தேன். யாரோ ஒருவர் போலீஸ்க்கு போன் போட்டு, ஒலிபெருக்கி இடையூறாய் இருக்கிறது என தெரிவிக்க, போலீஸ் வந்தது. வந்தவர்கள் சப்தத்தை குறைத்து வைத்து நடத்துங்கள் எனக் கூறவே, நான் அப்படியே செய்தேன்.
மின்சாரத்தை கொடுத்த அந்த பக்கத்து வீட்டுக்காரர், குடித்துவிட்டு வந்து "இவர் நல்லது செய்கிறார், இதையும் போய் புகார் கொடுத்திருக்கிறார்களே என்று தெருவில் நின்று திட்டி இருக்கிறார். அவர் திட்டியது எனக்குத் தெரியாது. அதையும் ஒருவர் போலீசுக்கு தெரிவிக்கவே, போலீஸ் வந்து, ஒலிபெருக்கியை நிறுத்து. எதுவும் வெளியே இருக்கக் கூடாது எனக் கூறவே, ஒலிபெருக்கியை எடுத்து உள்ளே வைத்து, சப்தத்தை கோஞசமாக வைத்து, நடத்தினேன். திட்டியவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விட்டனர். அவரை அழைத்துச் சென்றது எனக்குத் தெரியாது. ஜெபக்கூட்டத்தின் இடையிலே ஒருவர் வந்து, "உன்னால்தான் அவன் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறான், அவனை மீட்பதற்கு வழியைப் பார்" என்றார். நான் ஜெபக்கூட்டம் முடிந்தபின் போகிறேன் என கூறிவிட்டு, ஜெபத்தை நடத்தினேன். ஜெபம் எட்டரை மணிக்கு முடிந்தது. ஒரு சின்ன ஜெபம் செய்தேன். சிறுவர் வேதாகமப் பள்ளியில் உபயோகித்தது போக மீதியான புத்தகங்களை, வீட்டுக்கு கொண்டு செல்லலாம் என்று ஒரு மூட்டையாக கட்டினேன். அதை எடுத்து பைக்கில் வைத்தேன், நேராக ஸ்டேஷனுக்கு சென்றேன். புத்தக மூட்டையை ஸ்டேஷன் வாசலில் வைத்துவிட்டு, உள்ளே சென்றேன். அங்கிருந்த உதவி ஆய்வாளரிடம் பேசினேன். "இவர் திட்டியது எனக்குத் தெரியாது, தெரிந்திருந்தால் திட்டவிட்டிருக்க மாட்டேன். சிறு பிள்ளைகளுக்கான ஜெபக்கூட்டம் அது" என்றேன். "இவர் தெரியாமல் செய்துவிட்டார், மன்னியுங்கள்" எனக் கூறினேன். எனக்கு பதில் சொல்ல வாயை திறந்து பேசிய பொழுது, அவருக்கு திக்கு வாய் என அறிந்தேன். திக்குவாய் என அறிந்த பொழுது என் உள்ளம் உடைந்தது. அதை அவரும் அறிந்தார்.
உடனே ரைட்டர் பக்கம் திரும்பி, "அவரது மகனை ரேசன் கார்டு எடுத்து வரச் சொல்லுங்கள், இவரிடம் ஒரு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி விடுங்கள்" என்றார். என் பக்கம் திரும்பி, "நீங்க போங்க சார் நாங்க இவரை அனுப்பி வைக்கிறோம்" என்று திக்கிய படியே சொன்னார்.
"குடிப் பழக்கம் எவ்வளவு பிரச்சனையை ஏற்ப்படுத்துகின்றது, பார்த்தீர்களா? மத்திய அரசில் வேலை செய்கின்றீர்கள். ஜெயிலுக்குப் போனால், வேலை போய் விடும் தெரியுமா? இது நீங்கள் எனக்குச் செய்த உதவியே இல்லை. ஆண்டவருக்கு குடிப்பது பிடிக்காது என்று உங்களுக்கு தெரியதா? இனிமேல் குடிக்காதீர்கள்" என அந்த சகோதரனுக்கு கூறினேன். பின்பு உதவி ஆய்வாளருக்கு நன்றி கூறிவிட்டு வெளியே வந்தேன். வெளியே மதுரைமுத்து தெருவே நின்றிருந்தது. என்னிடம் வந்து என்ன ஆச்சி? எனக் கேட்டனர். ரேசன் கார்டை எடுத்துக் கொண்டு கொடுக்கச் சொல்லுங்கள், மன்னிப்புக் கடிதம் வாங்கிக் கொண்டு விட்டு விடுவார்கள்" என்று கூறிவிட்டு, புத்தக மூட்டையை எடுத்துக் கொண்டு பைக்கை கிளப்பினேன்.
நடந்த இந்த சம்பவத்தில் இருந்து என்ன அறிந்து கொண்டீர்கள். எங்கே உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்.........
Tuesday, 23 October 2012
A CONVERSATION.......
நமது சிறுவர் ஊழியத்தில் நடந்த ஓர் உரையாடல்
சிறுவர்களிடம் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி: நீங்கள் பெரியவர்களானதும் என்னவாகப் போகின்றீர்கள்? என்பது.
ஒரு குறிப்பிட்ட நாளில் அப்படி கேட்ட பொழுது,
ஒரு குறிப்பிட்ட நாளில் அப்படி கேட்ட பொழுது,
நான்: பெரியவர்கள் ஆனதும் நீங்கள் என்னவாகப் போகின்றீர்கள்?
(எல்லாப் பிள்ளைகளும் பதிலளித்தார்கள்)
அன்றுதான் புதிதாக வந்த சிறுவன்: சார், நான் போலீஸ் ஆகப் போகிறேன்.
நான்: (அவன் சொல்லியவிதம் வித்தியாசமாக இருக்கவே) போலீஸ் ஆகி என்ன செய்யப் போகிறாய்?
பு.வ.சிறுவன்: (சைகையோடு) சீல் வைப்பேன் சார்.... இப்பொழுதே டெய்லி காலையில் போய் சீல் வைக்கிறேன் சார்...
நான்: (ஆச்சரியத்துடன்) எதற்கு சீல் வைக்கிறாய்?
பு.வ.சிறுவன்: அந்தப் பக்கம் இருக்கிற டாஸ்மார்க் கடைக்கு சார்... நான் போலீஸ் ஆகி எல்லா டாஸ்மார்க் கடைகளையும் மூடிவிடுவேன் சார்...
மற்ற பிள்ளைகள்: சார் அவன் அப்பா குடித்தே செத்துப் போய்விட்டார் சார்....
நான்: அப்படியா?
பு.வ.சிறுவன்: (ஆமாம் என்பதுபோல தலையை ஆட்டினான்... )
நான் இப்போதுள்ள போலிசால் ஏன் அதை செய்ய முடியவில்லை?
பு.வ.சிறுவன்: (அமைதியாக நின்றான்)
நான்: போலீஸ் ஆகி அதை நிறுத்த முடியாது. நாம் இன்றே ஒன்று செய்யலாம். ஆண்டவரால் மாற்ற முடியும். ஆண்டவரோடு கூட செய்யமுடியாத காரியம் ஒன்றுமில்லை.. நாம் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளுவோம். ஆண்டவரிடம் வேண்டும்பொழுது குடிப்பவர்கள் மனந்திரும்புவார்கள். நாம் வேண்டிக்கொள்ளும் பொழுது ஆண்டவர் அதைச் செய்வார்.நாம் இப்பொழுதே ஜெபிப்போமா?
(நாங்கள் இருவரும் மற்ற ஞாயிறு பள்ளிப் பிள்ளைகளோடு ஜெபித்தோம்)
இந்த ஊழியத்துக்காக நீங்கள் ஜெபிக்க மறவாதீர்கள். மேலும் அறிந்து கொள்ள கிவ்.... என்ற தலைப்பை சொடுக்குங்கள்! நன்றி
Sunday, 21 October 2012
PRAYER No: FOUR
நண்பர்களுக்கான ஜெபம்.
பரலோக பிதாவே என்னை நான் புரிந்து கொண்டதைப் பார்க்கிலும், என்னை நன்கு புரிந்து வைத்துள்ள நான் தோல்வி அடைந்த சூழ்நிலையிலும் என்னை நன்கு அறிந்து அன்பு செலுத்திய, மன்னிக்க மாட்டார்கள் என்று எதிர் பார்த்த சூழ்நிலையில் என்னை மன்னித்து ஏற்றுக் கொண்ட நண்பருக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்,
என் நண்பர்களுக்கு உண்மையுள்ளவனாய் இருக்க எனக்கு உதவி செய்யும்,
நான் அலட்சியப் படுத்தி முறைகேடாக நடந்து பிரிந்த என் நண்பர்களை மீண்டும் அவர்களோடு தொடர்பு கொள்ள முதல் முயற்சி எடுக்க, எனக்கு எனக்கு உதவி செய்யும்,
மேலும் கசப்பு உணர்வு இல்லாமல், மன்னிக்கும் தன்மையுடன், என்னை எதிர்த்த நண்பர்களைச் சந்திக்க எனக்கு உதவி செய்யும்.
இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே. ஆமென், ஆமென்.
எனது குறிப்பு: இந்த ஜெபத்தை அப்படியே ஜெபிக்க அவசியமில்லை. எலியா கருத்தாய் ஜெபித்தான், ஆண்டவர், மழையைப் பொழிந்தருளினார், இது கருத்தாய் ஜெபிக்க உங்களை வழி நடத்தும்.
![]() | |
| நன்றி! |
வாழ்க , வளர்க உங்கள் நட்பு. நன்றி
உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கின்றேன்.
Friday, 19 October 2012
FROM THE READING.........TWO
யாருக்கு பரலோகம்
காட்சி 1
பங்கு பெறுகிறவர்கள்: இரண்டு தேவ தூதர்கள். மாணவன்.
இடம் (பரலோகத்தின் நுழைவாயில்: இரண்டு தேவ தூதர்கள் இருக்கின்றார்கள். அங்கே ஒரு கல்லூரி மாணவன் செல்லுகிறான். அவன் மூச்சிறைக்க ஓடி வந்து பரலோகத்தில் நுழைய முயற்ச்சிக்கிறான். தேவதூதர்கள் தடுக்கின்றனர்).
தேவதூதன் 1 : நண்பரே என்ன வேண்டும்? என்ன விஷயமாக வந்தீர்?
மாணவன்: உங்கள் கேள்வியே அசட்டுத்தனமாக இருக்கிறது. பரலோகத்திற்க்குள் நான் செல்ல வேண்டும். என்னைத் தடுக்க வேண்டாம்.
தேவதூதன் 2: உம்முடைய அவசரம் எனக்குப் புரிகிறது. ஆனால் பரலோகத்திற்குள்ளே நுழைய சில தகுதிகள் வேண்டும். பூமியில் வாழும் பொழுது சில காரியங்களைச் செய்திருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்களை மட்டுமே உள்ளே அனுப்பச் சொல்லி பிதாவாகிய தேவன் கட்டளையிட்டிருக்கிறார்.
மாணவன்: (சற்று கோபத்துடன்) யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டீர். தகுதியைப் பற்றி என்னிடமா கேட்கின்றீர். நான் +2 படித்த பொழுது மாநிலத்திலேயே முதலாவது வந்தேன். பேச்சுப் போட்டி,விளையாட்டுப் போட்டி எல்லாவற்றிலேயும் முதலாவது வந்து தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளேன்.
தேவதூதன் 1: ஆச்சரியமாக உள்ளதே மேலும் உன் சாதனைகளைக் கூறு.
மாணவன்: (பெருமையுடன்) டாக்டருக்கு படிக்க இடம் கிடைத்தது, அதிலும் நான் முதலிடம் பெற்று அமெரிக்காவில் மேல் படிப்பு படித்துள்ளேன். இதைவிட என்ன தகுதி வேண்டும் எனக்கு.
தேவதூதன் 1: இயேசு கிறிஸ்துவைப் பற்றி உனக்கு தெரியுமா? எங்கே அவர் பிறந்தார் என்று சொல்ல முடியுமா?
மாணவன்: (திரு திருவென விழித்தல்) எங்க கல்லூரியில் நிறைய பேர் சொல்லி இருக்காங்க, என் நண்பன் கூட கிறிஸ்தவன்தான். ஏசுவைப் பற்றி சொல்லியிருக்கிறான். நான் கவனிப்பதே இல்லை. எல்லாரையும் போல அவரும் ஒரு கடவுள் தானே. இயேசு எங்கே பிறந்தார் என்று எனக்குத் தெரியாது. அதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.
தேவதூதன் 1: (மற்ற தேவதூதனைப் பார்த்து) ஜீவ புஸ்த்தகத்தில் இவர் பெயர் இருக்கிறதா? என்று பாரும்.
தேவடூதன் 2: (ஜீவ புஸ்த்தகத்தைப் புரட்டுகிறார்.) ஜீவ புஸ்த்தகத்தில் எங்கேயும் இவர் பெயர் எழுதப்பட வில்லை. இவரை தூக்கி அக்கினி எரிகின்ற எரி நரகத்திலே போடுங்கள்.
காட்சி 2.
பங்குபெறுவோர்: இரு தேவ தூதர்கள், விஞ்ஞா னி
விஞ்ஞானி: தூதரே வணக்கம்! ஒளிமயமான பரலோகம். தங்கமயமாக ஜொலிப்பது என்னை வியக்க
வைக்கிறது. தூதர்களின் பாடலும் இசையும் என்னை வா! வா! என அழைக்கிறது. நான்
பரலோகத்திற்குள் செல்லுகிறேன், தூதரே நீர் வாசலிலேயே நில்லும்.
தேவ தூதன் 1: உமது ஆசை நல்லதுதான். அனைத்தையும் கற்றறிந்த ஞானியே, நீர் பரிசுத்த வேதாகமத்தை கற்று இருக்கிறீரா?
விஞ்ஞானி: தூதரே நான் யார் என்று தெரியாமல் பேசுகின்றீர். அனைத்தையும் கற்றறிந்த விஞ்ஞானி நான். எத்தனையோ கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளேன். பூமியில் என்னைத் தெரியாத மக்களே கிடையாது.
:தேவ தூதன் 1 அனைத்தையும் கற்றறிந்த ஞானியே நீர் வேதாகமத்தை கற்றறிந் தீரா?
விஞ்ஞானி: எனது நண்பர் வேதாகமத்தை எனக்கு அன்பளிப்பாக கொடுத்தார். ஆனால் வேதாகமம் ஒரு கட்டுக்கதை என்று அதைப் படித்ததே கிடையாது.
தேவ தூதன் 1: இயேசு எங்கே பிறந்தார் தெரியுமா?
விஞ்ஞானி: தூதரே நான் முதலாவது உண்டாக்கிய சோதனைக் குழாய் குழந்தை எங்கே எப்போது பிறந்தது? என கேளும். எயிட்ஸ் நோய்க்கு நான் எப்போது மருந்து கண்டுபிடித்தேன் என்று கேளும். நான் சொல்லுகிறேன், இயேசுவைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
தேவ தூதன் 1 (மற்ற தூதனைப் பார்த்து) தூதரே, ஜீவ புஸ்தகத்தில் இவர் பெயர் இருக்கிறதா பார்த்து சொல்லும்.
தேவ தூதன் 2: (ஜீவ புஸ்த்தகத்தைப் புரட்டிப் பார்க்கிறார்.) இந்த விஞ்ஞானியின் பெயர் எழுதப் பட வில்லை. எனவே இவரை நரகத்திலே தூக்கி எறியுங்கள்.
காட்சி 3
பங்கு பெறுவோர்: (2 தேவ தூதர்கள், பணம் படைத்த அரசியல்வாதி.)
அரசியல்வாதி: தூதரே என்னை சீக்கிரம் இந்த பரலோகத்திற்க்குள் விடும்.
தேவ தூதன் 1:என்ன தகுதி இருக்கிறது?
அரசியல்வாதி: (உரக்க சிரிக்கிறார்) நான் புகழ் பெற்ற அரசியல் வாதி. எல்லா அரசியல் கட்சியிலும் இருந்திருக்கிறேன். சுவிஸ் வங்கியிலும், வெளிநாட்டு வங்கியிலும், எனக்கு பணம் இருக்கிறது. இதை விட எனக்கு என்ன தகுதி வேண்டும்? உமக்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன், என்னைப் பலோகத்துக்குள் நுழைய அனுமதி கொடும்.
தேவ தூதன் 1:வேறு என்ன சாதனை செய்தீர்? சொல்லமுடியுமா?
அரசியல்வாதி: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்களை வெட்டி கடத்தியவன் நான். பல இடங்களில் பாலங்கட்டுவதற்க்கு கொடுத்த பணத்தில் எனக்கு பங்களாக்களை கட்டியுள்ளேன். பணம் வாங்கிக்கொண்டு வெளியே தெரியாமல் பல ஆட்சிகளைக் கவிழ்த்துள்ளேன், படிப்பறிவே இல்லாமல் பல கோடிகளைச் சம்பாதித்துள்ளேன்.
தேவ தூதன் 1:இயேசு கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
அரசியல்வாதி: இயேசு கிறிஸ்துவா? யார் அவர்? அவர் என்ன ஆளும் கட்சியா? எதிர்க் கட்சியா? இல்லை சுயேட்ச்சையா? தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாரா? இயேசுவைப் பற்றி கேள்விப் பட்டதே இல்லை.
தேவ தூதன் 1:அவர் எங்கே பிறந்தார்? என்று சொல்லமுடியுமா?
அரசியல்வாதி: நான் பிறந்த டேட்டே எனக்குத் தெரியாது. இதுல இயேசு எப்பப் பிறந்தார் என்று நான் எங்கே போய் கண்டுபிடிக்க? தூதரே இந்த ஏ.டி. எம். கார்டை வைத்துக் கொள்ளும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும். என்னை மட்டும் பரலோகத்திற்குள் அனுப்பிவிடும்.
தேவ தூதன் 1: (அடுத்த தூதரைப் பார்த்து) ஜீவ புஸ்த்தகத்தில் அரசியல் வாதியின் பெயர் இருக்கிறதா? பாருங்கள்.
தேவ தூதன் 2: (ஜீவ புஸ்த்தகத்தை புரட்டுகிறார்) ஜீவ புஸ்த்தகத்தில் இவர் பெயர் எழுதப்படவில்லை, இவரைத் தூக்கி நரகத்தில் எறியுங்கள்.
காட்சி 4:
பங்கு பெறுவோர்: (2 தேவ தூதர்கள், ஒரு பிரபலமான தமிழ் புலவர்)
தமிழ் புலவர்: தூதரே இனிய வணக்கம்! தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க!! தமிழினம் வளர்க!
தேவ தூதன் 1: என்ன வேண்டும் உமக்கு?
தமிழ் புலவர்: பரலோகத்திற்குள்ளே செல்ல தங்களின் மேலான அனுமதி வேண்டும்.
தேவ தூதன் 1:கேள்விகளை நான் கேட்ப்பேன், பதிலை நீர் தரவேண்டும். தடையின்றி பதில் தந்தால் தாராளமாக அனுமதி தருவோம்.
தமிழ்ப்புலவர்: தமிழ் மொழியில் புலமை பெற்றவன் நான். பல புத்தகங்களை கரைத்துக் குடித்தவன் நான், அறிவில் முந்தினவன், திறமையில் எதிரிகளும் மெச்சினவன். சொற்களில் சிலம்பம் ஆடுபவன் நான், கேள்வியை ஆரம்பியும் தூதரே.
தேவ தூதன் 1:எங்கும் நிறைந்திருப்பவன்.....
தமிழ்ப்புலவர்: இறைவன்
தேவ தூதன் 1 இறைவனை அறியாதவன்....:
தமிழ்ப்புலவர்: மூடன்
தேவ தூதன் 1:சுறுசுறுப்பில் சிறந்தது.....
தமிழ்ப்புலவர்: எறும்பு
தேவ தூதன் 1:சுவைக்க சுவைக்க இனிப்பது.....
தமிழ்ப்புலவர்: கரும்பு
தேவ தூதன் 1: குடும்பத்தை சிதைப்பது....
தமிழ்ப்புலவர்: கோபம்
தேவ தூதன் 1: குடும்பத்தை இணைப்பது......
தமிழ்ப்புலவர்: பாசம்
தேவ தூதன் 1:அனைவரும் இரசிப்பது....
தமிழ்ப்புலவர்: ராகம்
தேவ தூதன் 1:கலையக் கூடியது...
தமிழ்ப்புலவர்: வேஷம்
தேவ தூதன் 1 சபாஷ் புலவரே நீர் கற்றறிந்த ஞானி என நிரூபித்து விட்டீர், இன்னும் ஒரே ஒரு கேள்வி இதற்குறிய பதில்தான் உம்மைப் பரலோகத்தில் நுழைய வைக்கும்.
தமிழ்ப்புலவர் திருநெல்வேலிக்கே அல்வாவா? மனப்பாறைக்கே முறுக்கா? காஞ்சிபுரத்துக்கே பட்டா? எனக்கே கேள்வியா?.... ம் .....சீக்கிரம்......
தேவ தூதன் 1: இரட்சிப்பு குறித்து உமது கருத்து என்ன?.
தமிழ்ப்புலவர்: நான் மல்லிகைப்பூ, முல்லைப்பூ, ரோஜாப்பூவை அறிவேன், அது என்னய்யா இரட்ச்சிப்...... பூ அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
தேவ தூதன் 1: (மற்ற தூதரைப் பார்த்து) புலவரின் பெயரை ஜீவ புஸ்த்தகத்தில் பார்த்து சொல்லும்,
தேவ தூதன் 2: இயேசு கிறிஸ்து பற்றியும் அவர் அருளும் இரட்ச்சிப்பு பற்றியும் அறியாத புலவரின் பெயர் ஜீவபுஸ்த்தகத்தில் எழுதப் படவில்லை. எனவே இவரை தூக்கி எரி நரகத்திலே போடுங்கள்.
காட்சி 5
பங்கு பெறுவோர்: (2 தேவ தூதர்கள், ஒரு சாதாரண மனிதன்)
கையில் பைபிளுடன் பாடல் பாடிக்கொண்டு வருகிறார்.
மனிதன்:
சந்தோஷம் பொங்குதே, சந்தோசம் பொங்குதே, சந்தோசம் என்னில் பொங்குதே, இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
சந்தோசம் என்னில் பொங்குதே.....
ஆஹா....பரலோகம் என்ன அழகு...... மனம் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது? தூதரே உங்களுக்கு ஸ்தோத்திரம்! என்னை உள்ளே செல்ல அனுமதியுங்கள்
தேவ தூதன் 1: எங்கள் கேள்விக்கு பதில் கூறும். பின்பு நாங்கள் உம்மை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என முடிவெடுப்போம். உமக்கு இயேசுவைத் தெரியுமா?
மனிதன்: (முக மலர்ச்சியுடன்) ஓ !.....மிக நன்றாக தெரியுமே!
தேவ தூதன் 1 இயேசு எங்கே பிறந்தார் என்று கூறமுடியுமா?
மனிதன்:: யூதேயாவில் உள்ள பெத்தலேஹெமில் பிறந்தார் ஐயா.....
தேவ தூதன் 1: சரி, மேலும் கூறும்...
மனிதன்: என் பாவத்திற்க்கான தண்டனையை தன மேல் ஏற்றுக் கொண்டு எனக்காக இரத்தம் சிந்தி மரித்து, மூன்றாம் நாளில் எனக்காக உயிரோடு எழும்பினார் ஐயா ........ அதற்காகவே உலகத்தில் வந்தார், ஐயா .....
தேவ தூதன் 2: இவருடைய பெயர் ஜீவ்புஸ்த்தகத்திலே எழுதப் பட்டுள்ளது. வாருங்கள் உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கும் பரலோகத்திற்க்குள் பிரவேசியுங்கள்.
உங்கள் மேலான பதிவை எதிர் பார்க்கிறேன், நன்றி.
சகோதரன். செலவின் துரை
Wednesday, 17 October 2012
PRAYER No: THREE
பொறுப்புணர்வுக்கான ஜெபம்:
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே பொறுப்புணர்வை எனக்குத் தாரும்,
இயேசுவே நீர் எனக்குக் கொடுத்த திறமைகளை, தாலந்துகளை ஒரு போதும் வீணாக்கி விடாதபடிக்கு, எனக்கு நானே பொறுப்புள்ளவனாய் இருக்க,
நான் பெற்றுக்கொண்ட அரவணைப்பு மற்றும் அன்பை திருப்பிச் செலுத்த, எனது பெற்றோருக்கு பொறுப்புள்ளவனாய் இருக்க,
எனக்கு பொறுமையாய் கற்றுக் கொடுத்தவைகள், வீணாய் போய் விடாதபடி, எனது ஆசிரியர்களுக்கு நான் பொறுப்புள்ளவனாய் இருக்க,
நான் ஒருபோதும் ஏமாற்றம் அடையச் செய்யமலிருக்க என் நண்பர்களுக்கு பொறுப்புள்ளவனாய் இருக்க,
நான் விடுதலையோடும், சுதந்திரமாகவும் வாழுவதற்குக் கொடுத்த விலைக்கிரயத்தை மறக்காமல். தலைமுறை, தலைமுறையாக வந்த பாரம்பரியத்தை இன்னும் மேன்மைப்படுத்த என் முன்னோர்களுக்கு பொறுப்பாய் இருக்க,
என்னுடைய வாழ்க்கையில் நான், எடுப்பதை காட்டிலும் அதிகமாய் கொடுப்பதில், இந்த உலகத்திற்கு பொறுப்புள்ளவனாய் இருக்க,
நீர் என்னை நேசிப்பதையும், எனக்காக உம்மையே கொடுத்ததையும் ஒரு போதும் மறக்காமல் நினைவு கூர்ந்து, இயேசுவாகிய உமக்கு பொறுப்புள்ளவனாய் இருக்க,
நான் என்ன பெற்றுக் கொண்டேனோ, அதை நினைவுபடுத்தவும், என்னிடத்தில் இருப்பதை உபயோகப் படுத்தவும், அதன் மூலம் என் வாழ்க்கையை விலையேறப் பெற்றதாய் மாற்ற எனக்கு உதவி செய்யும். இயேசுவின் அன்பின் நிமித்தம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே. ஆமென் ஆமென்.
Monday, 15 October 2012
PRAYER NO: TWO
ஒரு மகன்/மகளது ஜெபம்:
ஆண்டவரே நீர் எனக்குக் கொடுத்திருக்கிற இல்லத்துக்காக, பெற்றோருக்காக உமக்கு நன்றி,
நான் சிறுமியாக, சிறுவனாக இருந்த பொழுது, என்னை நானே பேணிப் பராமரிக்க முடியாத நாட்களில், நான் பெற்ற அன்பின் அரவணைப்புக்காக,
நான் சம்பாதித்து என்னுடைய தேவைகளை நானே சந்திக்காத வருடங்களுக்கு முன்பு, நான் பெற்ற உணவு, உடை, உறைவிடத்துக்காக,
என் பெற்றோர், நான் படிக்க, எனக்கு கொடுத்த கல்வி வாய்ப்புக்களுக்காக
நான் அனுபவித்த நல்ல பாதுகாப்பிற்காக, வீட்டின் கதவு எனக்காக எப்போதும் திறந்திருந்ததர்க்காக, நான் காயப்பட்ட பொழுது, அல்லது தைரியமிழந்த பொழுது, அல்லது ஏமாற்றமடைந்த பொழுது, எனக்கு காட்டப் பட்ட பரிவு, அனுதாபத்திற்காக,
தேவரீர் உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.
நான் பிறந்ததில் இருந்து எங்கள் வீட்டில் என்னைச் சுற்றிலும், அன்பும், பாசமும் இருந்ததற்காக ஆண்டவரே உமக்கு நன்றி!
என் பெற்றோரை நான் புண்படுத்தியிருந்தால், வருந்தும்படி செய்திருந்தால், இயேசுவே உமது அன்பின் மிகுதியால், என்னை மன்னியும்,இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே. ஆமென். ஆமென்.
Saturday, 13 October 2012
TESTIMONY NO: TWO
சாட்சி எண் : இரண்டு.
பல ஆண்டுகளுக்கு முன் நமது ஊழியத்தில் நடந்த சம்பவமிது. சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் காக்ஸ் காலனியில் சிறுவர் ஊழியத்தை தொடங்கிய நேரம்.மே மாதம் சிறுவர் வேதகமப்பள்ளியை தொடங்கவேண்டிய நேரம். நூற்றுக்கும் அதிகமான பிள்ளைகளை கூட்டிச் சேர்த்து நடத்த வேண்டியதிருந்தது. அப்படிப் பட்ட இடம் நமக்குக் கிடைக்கவில்லை. அருகில் இருந்த ஹிந்து மத கோவிலில் இடம் கேட்க்க யாரோ ஒருவர் வழிநடத்தினார். அந்த கோவிலின் ஒரு தர்மகர்த்தாவை சந்தித்து, கேட்டேன். அவர் என் ஜாதியை அறிந்து கொண்டு, பக்கத்தில் நாடார் ஒருவர் இருக்கிறார். அவர் இந்த கோவிலுக்கு முன் இருந்த ஷெட்டை இலவசமாக போட்டுக் கொடுத்தார். அது பழுதாகி விட்டது. நான் இடம் தருகிறேன், நீங்கள் நடத்துங்கள், பழுதான ஷெட்டை ரிப்பேர் செய்து கொடுங்கள் என்றார்.
திங்கள் கிழமை நாங்கள் ஊழியத்தை ஆரம்பித்தோம். பல் வேறு சபைகளைச் சேர்ந்த வாலிபர்களை தன்னார்வ பணியாளராக சேர்த்திருந்தேன். பிள்ளைகள் எல்லாரும் அந்த ஹிந்து கோவிலில் (கொல்லாபுரி) கூடி வந்தனர். ஜெபம், பாடல்கள் மற்றும் அறிவிப்புக்குப் பின், வகுப்புக்களைப் பிரித்தபின் நமக்கு தெரிந்த வீடுகளில் நடத்தினோம். வகுப்புகள் முடிந்த பின் மீண்டும் அந்தக் கோவிலில் பிள்ளைகள் வந்து, தாங்கள் கற்றுக் கொண்ட பாடல்களைப் பாடுவார்கள். அந்த நாளிலே கற்றுக் கொடுத்த வசனங்களைக் கூறுகின்ற பிள்ளைகளுக்கு பரிசுகளைக் கொடுத்து, அறிவிப்புகளுக்குப் பின் ஜெபித்து அந்த நாளின் ஊழியத்தை முடிப்போம். இப்படியாக,
திங்கள், செவ்வாய், புதன், வியாழன்.....நேர்த்தியாக வகுப்புகள் நடந்தன. வெள்ளிக் கிழமை வந்தது. பிள்ளைகளுக்கு பாடல்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். கோவிலுக்குப் போட அந்தப் பகுதியில் இருந்த பெண்கள் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். பூடத்துக்குள் சென்று வழிபட ஆரம்பித்தனர். அந்த வருடம் மிக விரும்பி பாடப்பட்ட பாடல்,
வானம் பூமி படைத்தது யார்? இயேசு.........
வாழும் உயிர் கொடுத்தது யார்? இயேசு...............
அவர் நம்மைக் காப்பவர், தினம் நடத்தி செல்பவர்
அன்பாய் இருப்பவர் நம் இயேசு இரட்சகர்
நமக்காக மறித்தது யார்? இயேசு .................
உயிருடன் எழுந்தது யார்? இயேசு............- அவர் நன்மைக்
மீண்டுமாக வருவது யார்? இயேசு........
ஜீவகிரீடம் தருவது யார்? இயேசு............- அவர் நன்மைக்
இந்த பாடலைக் கற்றுக் கொண்டிருந்தேன். நான் கேள்வி கேட்க பிள்ளைகள் பதிலளிப்பார்கள்.பூடத்துக்குள்ளே இயேசு, இயேசு என்று எதிரொலிக்கவே வந்தவர்கள், வெளியே போய், இவனை யார் உள்ளே விட்டது? என வேறொரு தர்மகர்த்தாவிடம் முறையிட, அவர் நான் பாடல் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கும் பொழுது வந்து, உன்னை யார் உள்ளே விட்டது? அறிவு இருக்கிறதா? இந்து கோவிலிலே வந்து, இயேசுவை சொல்லுகிறாயே? ............, ............... கெட்ட வார்த்தைகளினாலே திட்ட ஆரம்பித்தார். வந்த தன்னார்வ பணியாளர்கள் அனைவரும், பயந்து விலகி நிற்க ஆரம்பித்தனர். என் காதில் அவர் சொன்னது அரைகுறையாக விழுந்ததால், அவர் என்ன சொல்லுகிறார்? என அறிய சற்று அருகில் சென்றேன். அப்பொழுது என் உள்ளத்தில் மகிழ்ச்சி அலை அலையாக பொங்க ஆரம்பித்தது. (நான் இரட்சிக்கப் பட்ட பொழுது எப்படி குமிழ் குமிழாக பொங்கியதோ அதைப் போல)
பிள்ளைகளின் சப்தம் நின்றதால், இப்பொழுது அவர் திட்டியது, என் காதில் நன்றாக விழுந்தது. என்ன நீயும் சின்னப்பய மாதிரி இருக்க. உன்னை யார் உள்ளே விட்டது? "இராஜன்" அவன கூப்பிடு ..... அவன் எப்படி உன்னை உள்ளே விட்டான்? அவனுக்கு பணம் கொடுத்தாயா?..... மேலும் பல கெட்ட வார்த்தைகள்..... நீ முதல்ல வெளியே போ..... உடனே இடத்தை காலிபண்ணு..... (என் உள்ளத்திலோ மிகுந்த மகிழ்ச்சி)
"இன்னும் ஒரே ஒரு பாடல்தான்....." "ஏய் என்ன விளையாடுகிறாயா? போடா....... மீண்டும் கெட்ட வார்த்தைகள்... நான் தன்னார்வ பணியாளர்களைப் பார்த்தேன். அவர்கள் மிரண்டிருப்பது தெரிந்தது.
என் உள்ளத்தில் ஆண்டவர் பேச ஆரம்பித்தார், நாளைதான் கடைசி நாள், நான் தன்னார்வப் பணியாளர்களைப் பார்த்து, "எல்லாரும் அவரவர் வகுப்புகளுக்கு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள்." உடனே அந்த இடம் காலியாயிற்று. இன்று மதியம் அசெம்பிளி இல்லை, வகுப்பு முடிந்த உடனே அப்படியே பிள்ளைகளை வீடுகளுக்கு அனுப்பி விடுங்கள். நாளை காலை அசெம்பிளி இல்லை. வகுப்புகளிலே பாடல்களை கற்றுக் கொள்ளலாம். கடைசி நாள் நிகழ்ச்சிகளை ஆண்டவர் மிகவும் நேர்த்தியாக நடத்தித் தந்தார். இந்த ஊழியத்தில் விதைத்தவர்களும் ஆசீர்வதிக்கப் பட்டனர்.
இன்று,
காக்ஸ் காலனியில் இன்று அனேகர். ஆண்டவரின் பிள்ளைகள். குடும்பங் குடும்பமாக இரட்சிக்கப்பட்டுள்ளனர். குடிகாரர் குடும்பம் மனந்திரும்பியது. அப்பொழுது ஞயிறு பள்ளிப் பிள்ளைகள், இன்று வளர்ந்து பெரிய பிள்ளைகளாகி, என்னோடு கூட ஊழியம் செய்கிறார்கள். எனக்கு அனுமதி கொடுத்த இராஜன் சகோதரர் இரட்சிக்கப்பட்டு இருக்கிறார். அவருடைய பிள்ளைகள் ஆண்டவருடைய பிள்ளைகள். அவர் மனைவியும் கூட.
என்னைத் திட்டிய தர்மகர்த்தாவின் ஒரு பெண் குழந்தை புத்தி சுவாதீனமுள்ளவளாக இருந்தாள். இந்த நிகழ்ச்சிக்குப்பின் நான் ஞயிறு பள்ளி நடத்த செல்லும் போதெல்லாம், ஓடி வந்து என் கையைப் பிடித்துக் கொள்ளும். வகுப்பிலே உட்கார்ந்து பாடல்களைக் கற்றுக் கொள்ளும். நாங்கள் ஜெபித்தோம். இன்று பள்ளிக்கூடம் சென்று கொண்டு இருக்கிறாள். ஆறாவது வகுப்பு படிக்கிறாள்.
இதை வாசிக்கின்ற நீங்கள் இந்த ஊழியத்துக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். இன்னும் அனேக இடங்களில் சிறுவர் ஊழியம் ஆரம்பிக்கப் பட, சிறு பிள்ளைகள் மூலமாக பெற்றோர் இரட்சிக்கப்பட,
நன்றி!
Tuesday, 9 October 2012
From the "BIBLE HELPS" ...................
ஹைதர் காலத்துப் பெற்றோரும், நவயுக இளைஞர்களும்.....
கார் ஒன்று புறப்பட தயாராய் நின்றுகொண்டிருந்தது. ஒரு 17 வயது வாலிபன் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்து பொறுமையில்லாமல், தன தகப்பனது-எந்த வழியில் செல்லவேண்டும்?, யாரைப் பார்த்ததுப் பேசவேண்டும்? எங்கே போகக் கூடாது? எந்த வேகத்தில் செல்லவேண்டும்? யோசனையைப் பொறுமையில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான். பின்பு போய் வருகிறேன் என கூறிய பொழுது கார் என்ஜின் ஆப் ஆகியது. பின்பு கார் சென்று கொண்டிருந்த பொழுது, "அப்பா சுத்த கர்நாடகம், அந்த காலத்திலேயே இருக்கிறார்" என்று தன்னோடு பயணித்த தன நண்பனிடம் கூறினான்.
மேலே உள்ள நிகழ்ச்சி வயதானவர்களுக்கும், இப்போதுள்ள் தலைமுறையினருக்கும் இடையே உள்ள பிரச்சனையைக் காட்டுகிறது. இப்பிரச்சனை இன்று நேற்றல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாகவே உள்ள பிரச்சனை தான், 3,000 ஆண்டுகளுக்கு முன்பதாக ஒரு தகப்பன் பரத்திலிருந்து வந்த தேவ தூதனிடம்,
'குழந்தையை நான் எவ்வாறு வளர்க்க வேண்டும்?' என கேட்டான்.(நியா.13:12)
(மிகச் சரியான மொழி பெயர்ப்பு: குழந்தைக்கு நான் எதைக் கட்டளையிட வேண்டும்?) தலைமுறை இடைவெளி என்பது காலாகாலமாக இருந்து வருகின்ற பிரச்சனைதான். பொதுவாக நாம் பேசும் பொழுதோ, கதை படிக்கும் போதோ பத்திரிகை மற்றும் எதைப் பார்த்தாலும் இப்படிப் பட்ட ஒரு புகாரைப் பார்க்கலாம், கேட்கலாம்: 'இப்ப உள்ள பசங்ககிட்ட நீ சரியானதை எதிர் பார்க்க முடியாது; தன வழியிலேதான் போக விரும்புவான்; யாருடைய புத்திமதியையும் கேட்கமாட்டான்; அவனோடு அறிவு பூர்வமாக பேசமுடியாது'.
அடுத்த பக்கத்தில் இளைஞர்கள், தங்கள் பெற்றோரைப் பற்றிக் குறை கூருவர்கள்: 'என்னைப் புரிந்துகொள்ளுவதே இல்லை, தாங்கள் வளர்ந்த முறையிலேயே நாங்களும் வளர, எதிர் பார்க்கின்றார்கள். காலம் மாறிவிட்டது.
அது உண்மைதான், காலம் மாறிவிட்டது. அந்தக் காலத்தில் ஆட்டோ மொபைல் இல்லை, ஏரோப்ளேன் இல்லை, தொலைக் காட்சிப் பெட்டி இல்லை, தொலை பேசி இல்லை, மின்சாரம் கிடையாது, உழவு இயந்திரம் இல்லை, கதிரடிக்க இயந்திரம் இல்லை, இப்பொழுதோ, எங்கு போக வேண்டுமானாலும் கார், பஸ் வசதி, உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சியானாலும், வீட்டுக்குள்ளே தொலைக் காட்சிப் பெட்டியில்.உலகில் யாரிடமும் எந்த நேரத்திலும் தொலை பேசியில் பேசும் வசதி, நேரடியாகப் பார்த்துப் பேசும் வசதி.
மனிதனுடைய சாதனைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது, ஆனால் மாறாதது ஒன்று உண்டு, அது ஆண்டவருடைய வார்த்தை. இயேசு சொன்னார்,
"வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை" (மத். 24:35)
வேதாகமத்தின் உண்மைகள், பல நூற்றாண்டு காலமாக மாறாமல் அப்படியே இன்னும் இருக்கிறது. வேதாகமம் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பல வழிமுறைகளை உள்ளடக்கியதாய் இருக்கிறது. அதில் அனேகமானவைகள் நீதிமொழிகளில் இருக்கிறது. ஆண்டவரது வழி நடத்துதலின்படி, சாலமோன் என்ற அரசன் அதை எழுதியுள்ளார்.
1. பெற்றோருக்கு சில கட்டளைகள்:
முதலாவது, அன்புள்ள, திட்டமிட்ட பயிற்சி அவசியம். வேதாகமம் கூறுகிறது,
"பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடதிருப்பான்".
இது, பிரம்பை வைத்து அடித்து சொல்லிக் கொடுப்பதிலும் மேலானது. 'வளர்க்க வேண்டிய விதம் என்பது, கவனமாக கற்றுக் கொடுப்பது, மற்றும் வழி நடத்துவது என பொருள் படும். இதை தொடர்ந்து எபே.6:4ல்.வேதம் சொல்லுகிறது,
"பிதாக்களே நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக".
"நன்கு கற்றுக் கொடுத்தல்" எப்பொழுதும் உறுதியான மாதிரியாய் இருக்கும். கவனமாய் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க அதிகமான வாய்ப்புக்களைப் பார்க்கின்றனர். உதாரணமாக 6 வயதுப் பையன் தான் வாசிக்கக் கற்றுக் கொண்டதற்காக மிகுந்த சந்தோஷப் பட்டான். அவனது வீட்டு வேலைக்காரிக்கு வாசிக்கத் தெரியாது எனவும் கண்டு பிடித்தான். தன தகப்பனாரின் அறைக்குள் சென்று சத்தமிட்டான். "அப்பா நம் வீட்டு வேலைக்காரிக்குப் படிக்கத்தெரியாது", என்று. "அவள் என்னைப் பார்க்கிலும் பெரியவளாய் இருக்கிறாள் அல்லவா!
அவனது தந்தை ஒரு புத்தகத்தை திறந்து கொடுத்து, இதை வாசிக்கத் தெரியுமா? என கேட்டார். அதை பார்த்த அந்தச் சிறுவன் வாய் பேசாமல் அப்படியே நின்றான்.அந்தப் புத்தகம் சீன மொழியில் எழுதப் பட்டிருந்தது.நடந்த சம்பவத்தை பல வருடங்களுக்குச் சொல்லும் பின் சொல்லும் பொழுது,
"எப்பொழுதெல்லாம் பிறருடைய அறியாமையைக் குறித்து,தரக் குறைவாகப் பேசத் தூண்டப் படும்போழுது, என் தகப்பனார் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் என் நினைவுக்கு வரும்: எனக்கு சீனமொழி படிக்கத் தெரியாது"
"நம்ம்பிக்கை இருக்குமட்டும், உன் மகனைச் சிட்சை செய்; அவனை அதிகமாய் கதறி அழ விட்டு விடாதே" நீதி. 19:18.சிட்சை என்பது அடிப்பது அல்ல.சிறுவர்களுக்கு எது நல்லது? எது கேட்டது? என அறிய பயிற்ச்சி கொடுப்பது. ஏன் பயிற்சி கொடுக்க வேண்டும்? பிள்ளைகள் ஆண்ண்டவரால் கொடுக்கப் பட்ட வெகுமதிகள்.
3. பிள்ளைகலளோடு ஐக்கியம் கொள்ளாத படிக்கும், பயிற்ச்சி கொடுக்க முடியாத படிக்கும் நீங்கள் உங்கள் வேலைகளில் மூழ்கி விடாதிருங்கள். இந்த நாட்கள் மிகவும் விறுவிறுப்பான, சுறுசுறுப்பான நாட்கள். பிள்ளைகளும் மிக கூர்மையானவர்கள். பிள்ளைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்தைக் காட்டிலும் பணம் சம்பாதிப்பதற்கு, பெற்றோர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நீங்கள் பிள்ளைகளோடு ஐக்கியம் கொள்ளுவதற்கு அதிக நேரங் கொடுங்கள்.
4. மன ரம்மியமான சூழ்நிலையை ஏற்ப்படுத்துங்கள்: இதன் அர்த்தம் தரக் குறைவான ஜோக்குகள் கூறுவதில்லை. அது பைபிளில் ஏற்றுக் கொள்ளப் படவும் இல்லை. பைபிள் கூறுகின்றது:
நீதி.17:22ல், "மனமகிழ்ச்சி நல்ல அவ்ஷதம்; முறிந்த ஆவி எலும்புகளை உலரப் பண்ணும்".பெற்றோர்கள், நம்ம்பிக்கையர்றற சூழ்நிலையிலும், கோபப் படுத்தும் சூழ்நிலையிலும், முகத்தில் புன்முறுவலைக் காட்டினால், அது ஒரு நல்ல சூழலை ஏற்ப்படுத்தும். 5 வயது பிள்ளை ஒரு பாட்டிலை கீழே தள்ளி உடைத்து தன அம்மாவுக்கு வேலை வைக்கும்பொழுது, பயத்தோடு இருக்கும் பிள்ளையை, ஒரு புன் முறுவலோடு பார்த்தால், ஒரு நல்ல சூழ்நிலையை நீங்கள் உருவாக்குகின்றீர்கள்.
முடிவாக, உங்கள் பிள்ளைகளிடம் எப்பொழுதும் உன்ன்மையுள்ளவர்களாய் இருங்கள்: ஏதோ ஒன்றை வாக்குக் கொடுத்தால் அதைக் காப்பாற்றுங்கள்.
நீதி.13:12ல், "காத்திருத்தல் இருதயத்தை இளைக்கப் பண்ணும்".ஒரு தொட்டால் சிணுங்கி அம்மா, தன தொனதொனத்த பிள்ளைக்கு ஒரு குச்சி மிட்டாய் வாங்கித் தருவதாக வாக்குப் பண்ணினார்கள், பிள்ளை திரும்ப நினைவு படுத்திய பொழுது, "அதை இன்னுமா ஞாபகம் வைத்திருக்கிறாய்? அமைதியாய் இரு, நான் வாங்கித்தருகின்றேன்" என்றார்கள். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இவ்வளவு மோசமாக நடத்தக் கூடாது.
2. இளம் வாலிபர்களுக்கான கட்டளை: இளமையை நீ எப்படி செலவளிக்கிறாய்? என்பதைக் குறித்து, கணக்கு ஒப்புவிக்க வேண்டும். பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் என் பெற்றோருக்கு அறிவுறுத்துவது போல இளம் வாலிபரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. வாலிபம் என்பது விலைமதிக்க முடியாதது; திரும்ப வர முடியாத ஒரு நன்கொடை. ஒரே ஒரு விதிமுறை, பொறுப்புடையவர்களாய் இருக்க வேண்டும். இளம் வாலிபர் அடிக்கடி கூறுவது என் வாழ்க்கையை நானே பார்த்துக் கொள்ளுகின்றேன். ஆனால் வேதம் கூறுகிறது,
"வாலிபனே, உன் இளமையில் சந்தோஷப் படு; உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும், உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும், இவை எல்லாவற்றிநிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி. பிரசங்கி 11:9.
எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய்.இரண்டாவதாக, உன் பெற்றோர் சொல்லுவதை மரியாதைக்குரிய வார்த்தைகளாக ஏற்றுக் கொள்.
நீதிமொழிகள் 1:8ல், "என் மகனே உன் தகப்பன் புத்தியைக் கேள்; உன் தாயின் போதகத்தைக் தள்ளாதே".ஒருவேளை உன் யோசனைகள் அவர்கள் சொல்லுவதைக் காட்டிலும், நல்லதாக தோன்றலாம்; அதை நடத்திக் காட்டவும் உன்னால் முடியும். ஆனால் இதை மறந்து போகாதே; நீ பயணப் படுவதற்கு, ரோடு போட்டவர்கள்; நீ இப்பொழுது இருக்கும் நிலைக்கு உன்னை உயர்த்தியவர்கள். பெற்றோரிடமிருந்து நீ கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. ஒருவேளை அவர்கள் செய்த சில தவறுகளைத் தவிர்த்து, மிகுந்த மரியாதைக் குரியவர்களாக அவர்களை நடத்து. அவர்கள் கொடுக்கும் ஆலோசனையை கவனமாக பரிசீலனை செய்.
மூன்றவதாக உன் நண்பர்களைக் குறித்து கவனமாக இரு:
நீதி.1:10,11,15ல், "என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும், நீ சம்மதியாதே; என் மகனே நீ அவர்களோடே வழி நடவாமல், உன் காலை அவர்களின் பாதைக்கு விலக்குவாயாக"உனது விருப்பத்தை நிறைவேற்ற உண்மையிலிருந்து வழி விலகச்செய்யும் நபர்களை உன் நண்பனாக்காதே. சிலர் கூறுவார்கள், "ஏமாளிகள் தான் கடினமாக உழைப்பார்கள், நமக்கு அது தேவை இல்லை. எளிதாகச் சம்பாதிக்க வேண்டிய வழியில் நாம் செல்லலாம்". சிலர், தங்களைக் காட்டிலும், திறமையாக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு செயல்படும் நபர்களைப் பார்த்து பொறாமை கொள்ளுவார்கள், ஆனால் ஒன்றை நாம் மறந்து விடக் கூடாது,
திறமை என்பது அனேக ஆண்டுகள் வேலை செய்து கிடைப்பது. 'பொறுப்பு' என்பது தன்னால் ஒரு வேலையை நன்றாக செய்து முடிக்க முடியும் என் நிரூபிப்பவர்களுக்கு கொடுக்கப் படுவது..நான்காவது, இளம் வாலிபர்கள் (ஆண்களும், பெண்களும்) தங்கள் வழி காட்டியாக வேதாகமத்தைக் கொள்ளவேண்டும்.
இது நீதி.31:10-31ல், உள்ளது. பைபிளை திறந்து வைத்துக் கொள்ளவும், இங்கு பெண்களின் குணநலன்களைக் குறித்து, கூறப் பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கான செய்தியும் உண்டு.
(1). நம்பகத்தன்மை, உண்மையுள்ள தன்மை, பொறுப்புள்ள தன்மை,(வ 11) இது ரூபாயைக் காட்டிலும் மேலானது.
(2) வீட்டை நிர்வகித்தல்.(வ 13,19,22,27) இன்றைய இளம் வாலிபர்கள் வீட்டை நிர்வகிப்பதிலே மிகவும் குறைந்த அறிவுடையவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் எதிர் பாலாரை கவர்ச்சிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர், வீட்டு நிர்வாகத்தில் திறமை இல்லையேல் மகிழ்ச்சியான வீட்டைக் கட்டுவதில் சிரமபடவேண்டியது வரும்.
(3) கவனமாய் இருப்பதும், கிரமமாய் இருப்பதும்: (வ27) கிரமமாய் செய்யப் படுகிற வேலையை ஆதரிக்க வேண்டும். காரியங்கள் கிராமமாய் இல்லாததால், நல்ல கணவரும் எதிர்ப்புக்குள்ளகிறார். அதனால் மனைவி மீதுள்ள ஈர்ப்புத் தன்மை குறைந்து போய்விடுகிறது. கவனமும் கிரமமும் இல்லாத கணவன் தன மனைவியின் வீட்டு வேலையில் இன்னும் பாரத்தை ஏற்றுகிறான். சிறு உதவி கூட அவனது மரியாதையை குறைக்கக் கூடும்.
(4) பெருந்தன்மை, அல்லது உதாரத்துவ குணம்: (வ 20) இது பெண்மையின் கிரீடம் அதே நேரத்தில் கிறிஸ்தவ குணம்.
(5) பேச்சில் ஞனமும், இரக்க குணமும்: (வ் 26) கொடூரமான நாவு ஒரு நல்ல மனிதனை அழித்து விடும்.
(6) சௌந்தர்யம் வஞ்சனை உள்ளது.(வ 30) இதன் அர்த்தம் "சமுதாய கௌரவம்" இது வஞ்சனை உள்ளது. இது பொதுவாக பொறாமைக்குள்ளும், எல்லை மீறிய அலட்டலுக்குள்ளும் நடத்தி விடுகிறது. ஒரு புத்தியுள்ள வாலிபன் இதில் சிக்கிக் கொள்ள மாட்டான். அதே சமயம் அழகும் வீண் என் கூறுகிறது. நமது கல்வி, பொருளாதாரம் ஆகியவை குணத்தின் அழகைக் காட்டவேண்டிய இடத்தில் சரீர அழகை பெரிதாக கட்டுகின்றன.
மேலே உள்ள தன்மைகள் மாறாதது, நமது பெற்றோர் வலிப வயதாய் இருந்த போது இருந்ததைவிட நிலைமை வெகுவாக மாறிவிட்டது. மக்கள் மிக கொஞ்சமாக மாறியுள்ளனர். ஆண்டவர் மாறவே இல்லை. நம்முடைய பெற்றோர் காலத்தை விட நாம் வித்தியாசமாக நாம் பல காரியங்களைச் செய்கிறோம். ஆனால், நம்பிக்கைகள், மனிதனின் இயற்கையான தன்மைகள் கொடுக்கும் மகிழ்ச்சி, சமாதானம், திருப்தி ஆகியவைகள் மாறவே இல்லை.
நமது பெற்றோருக்கு வெற்றியையும், சமாதானத்தையும் கொடுத்த அதே விதிமுறைகளே நமக்கும் வெற்றியையும் சமாதானத்தையும் தருகின்றன.
இயேசு கிறிஸ்து உங்களுக்கு சமாதானத்தையும், வெற்றியையும் தந்தருளுவாராக.
Friday, 5 October 2012
FROM THE READING.............
படித்தவைகளில் இருந்து.................
குற்றம் கண்டுபிடிப்பதற்கு தனி திறமை தேவை இல்லை. நீங்கள் கிறிஸ்துவைப் போல் மாறவிரும்பினால், ஜனங்களின் பாவத்திற்காக நீங்கள் சாக வேண்டும். "திறப்பிலே நின்று" நீங்கள் பரிந்து பேச வேண்டும்.
"வனாந்திரத்தின் இன்னல்களில் தன்னை ஆராதிக்கும் ஒரு இருதயம், வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்திலும் தன்னை தொடர்ந்து ஆராதிக்கும் என்பதை தேவன் அறிந்திருக்கிறார்".
"குற்றங் கண்டுபிடித்தலுக்கு நாம் இடமளிக்கும்போதும், வீண் வதந்திகளையும், எதிர்மறையான குறை கூறுதலையும் நாம் நியாயப் படுத்த முயற்சி செய்யும் போதும் , தேவனுக்கு முன்பாக பரிசுத்தவான்களுக்கு எதிராக குற்றம் சாட்டும் படி நமது வாய்களையே சாத்தான் பயன்படுத்த நாம் இடம் கொடுக்கிறோம்".
"நம்முடைய உள்ளத்திலிருந்து முதலாவது குற்றஞ்சாட்டுகின்றவன் தள்ளப் படவேண்டும். குற்றஞ்சாட்டுதலையும், குற்றங்கண்டு பிடித்தலையும் நாம் சகித்துக் கொள்ளக் கூடாது. நமது சகோதரர்களைப் பொறுத்த வரையில், நாம் தேவனுடைய இருதயங் கொண்டவர்களாய் இருக்கவேண்டும்".
"நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் ஒருவருக்கு மெய்யாய் தோன்றும் சில, மற்றவர்களுக்கு பொய்யாய் தோன்றக் கூடும்".
"எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கு ஏற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குவதற்கு, தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற, எல்லா மேட்டிமைகளையும் நிர்முலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறை பிடிக்கிறவர்களாயிருக்கிறோம்". (2கோரி.10:4,5)
"ஒரு பெண் யேசபேலின் மேட்டிமையான குணத்தை, கிறிஸ்துவின் சாந்த குணத்தைத் தேடுவதின் மூலம் மேற்கொள்ளுகிறாள்".
"ஆவிக்குரிய அதிகாரம் என்பது, உங்கள் சித்தத்தை பிறர்மீது திணிப்பது அல்ல. நீங்கள் ஆவிக்குரிய அதிகாரங்களை உடையவர்களாய் இருக்கும் போது, உங்கள் வாழ்வில் ஒரு காலத்தில் போராட்டமும் நெருக்கமும் நிறைந்த பகுதிகளில் இப்பொழுது தேவனுடைய சமாதானத்தை ஏற்ப்படுத்துவீர்கள்".
"சாத்தானைத் தோற்கடிப்பதை விட நமது வாழ்வில் தமது குமாரனாகிய இயேசு வருவதில் பிதாவாகிய தேவன் அதிக அக்கறையுள்ளவராக இருக்கிறார்".
"சாத்தானின் தாக்குதல்கள் உங்களை ஆண்டவரிடமிருந்து பிரித்து விடாமல், ஆண்டவரிடமே உங்களை நெருங்கச் செய்கிறது என்பதையும், உங்களுக்கு ஏற்ப்படும் சோதனைகள் யாவும், உண்மையில் கிறிஸ்துவின் சாயலுக்கு நேராக உங்களை நடத்துகிறது என்பதையும் சாத்தான் உணரும்பொழுது, அவன் உங்களை விட்டுப் பின் வாங்குவான். இது மாபெரும் சத்தியம்."
"நாம் கிறிஸ்துவைப்போல மருரூபமாவதை உடனடியாகப் பாதிக்காத வரை, நாம் போராட்டத்தின் மீதோ, சாத்தானின் மீதோ அதிகம் கவனம் செலுத்தத் தேவை இல்லை."
"ஆவிக்குரிய போராட்டம், மாம்சீகப் பிரகாரமாக, எனக்கு விரோதமாய் அவன் / அவள் என்ற எல்லைக்குள்ளே இருக்காது. என்னோடிருக்கிறவர்களுக்கு விரோதமாக அவனோ(ளோ)டிருக்கிற வர்கள். என்ற ரீதியிலேதான் இருக்கும். உண்மையான பகுத்தறிதல் என்பது, சாத்தான் மண்டலத்தின் கிரியைகளை அறிந்த பூரணமாக அறிந்த தேவதூதர்களின் திரள் கூட்டம் நம்மோடு உள்ளது என்பதையும், நமது எதிராளிகளின் சேனைகளை விட நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்பது மட்டுமல்ல, அவர்கள் பராக்கிரமம் மிகுந்தவர்கள் என்பதையும் அறிவதே உண்மையான பகுத்தறிதல் ஆகும்".
"நமது வெற்றியானது நமது அறிவாற்றலில் இருந்தோ, உணர்ச்சிகளில் இருந்தோ வருவதல்ல. நமது வெற்றியானது, கண்கள் காண்பதிலிருந்தும், காதுகள் கேட்பதிலிருண்தும், தீர்ப்பு செய்யாமல், தேவனுடைய வாக்குத்தத்தம் நிச்சயம் நிறைவேறும் என்பதிலிருந்தே வருகிறது."
"நமது சூழ்நிலைகளில் நாம் மனுஷீக பிரகாரமாக செயல்படுவதை நிறுத்தாத வரையில், கிறிஸ்துவின் வெற்றியின் பரிபூரணத்தை நாம் ஒருபோதும் அறியமுடியாது. ஏதாவது ஒன்றின் மீது உங்களுக்கு உண்மையாகவே அதிகாரம் இருப்பின், அந்தக் காரியத்தை பயமோ, கவலையோ இன்றிப் பார்ப்பீர்கள். நீங்கள் கொண்டிருக்கும் சமாதானமே உங்கள் வெற்றியின் அடையாளமாகும். சீறிவரும் புயலின் மீது இயேசுவுக்கு இருந்த அதிகாரமே (மத.8:23-27) அவரின் சமாதானத்துக்குக் காரணம். அவர் புயலோடு போராடவோ, அதைக் கண்டு பயப்படவோ இல்லை.பூரண சமாதானத்துடன் கூடிய அதிகாரத்தினால் அதைக் கீழ் படுத்தினார்".
"எங்கெல்லாம் உங்களுக்கு சமாதானமில்லையோ அங்கெல்லாம் போர் நடக்கிறது. எங்கெல்லாம் சமாதனம் இருக்கிறதோ அங்கெல்லாம் வெற்றி இருக்கிறது. "நீங்கள் மருளாதிருக்கிறது, உங்கள் எதிராளிகள் கேட்டுப் போவதற்கும், நீங்கள் இரட்சிக்கப் படுவதற்கும் அத்தாட்சியாய் இருக்கிறது". (பிலி. 1:28)
"ஆளுகைக்கு முன்னானது இளைப்பாறுதல், வல்லமைக்கு முன்னானது சமாதானம். நீங்கள் தேவனுடைய ஆளுகைக்கு ஒப்புக் கொடாமல் சாத்தான் மீது ஆளுகை செய்ய முயற்சி செய்ய வேண்டாம்". நன்றி!!!
Thursday, 4 October 2012
PRAYER NO: ONE
பிறரை சார்ந்து இராத நிலைக்கான ஜெபம்:
அன்பான தேவனே, முணுமுணுத்தல் மற்றும் புலம்புவதிலிருந்து என்னைக் காத்தருளும்.
எப்பொழுதும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கும் நபரைக் காட்டிலும், நிலைமையைக் கடினமாக்க யாராலும் முடியாது என்பதை என் அனுபவங்களில் இருந்து நான் நன்றாக அறிந்திருக்கிறேன். என்னை விலக்கிக் காத்தருளும்,
என்னுடைய குரலிலும், முகத்திலும் மன நிறைவின்மையை அனுமதிக்காதிரும்,
என்னுடைய் வழியை அறிந்து கொள்ள முடியாத நிலையில் கோபம் கொள்ளாமல் இருக்க உதவி செய்யும்.
நான் விரும்பியவற்றை நான் பெற்றுக் கொள்ளமுடியவில்லையானால், நான் பெற்றுக் கொண்டதிலும், என்னிடம் இருப்பதிலும் மனநிறைவு கொள்ள எனக்கு உதவி செய்யும்,
எல்லா நாளும் எந்த நேரமும் சம்பவங்களின் நல்லவைகளையே பார்க்க, மக்களிடம் இருக்கும் நல்ல தன்மைகளையே பார்க்க எனக்கு உதவி செய்யும்,
சகலமும் எனக்கு நன்மைக்கேதுவாகவே நடக்கிறது என்ற நிச்சயத்தோடு வாழ உதவி செய்யும், எதையும் நம்மிக்கையோடே ஏற்றுக் கொள்ளவும் இயேசுவின் நோக்கம் என்னில் நிறைவேறும்படி, காத்திருக்க உதவி செய்யும், இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே. ஆமென், ஆமென்.
Subscribe to:
Posts (Atom)








