நற்செய்தி
உற்பத்தி:
"ஆதியிலே கடவுள் விண்ணையும் மண்ணையும் படைத்தார்" (ஆதி.1:1)
"மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன. பூவுலகும் அதில், வாழும் குடிகள் யாவரும் அவர் தம் உடைமையே" (சங். 23:1)
"இவ்வாறு கடவுள் மனிதனைத் தனது சாயலாகப் படைத்தார். தெய்வ சாயலாகவே அவனைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
கடவுள் அவர்களை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகிப் பூமியை நிறப்பி அதனைக் கீழ் படுத்துங்கள். கடல் மீன்களையும் வானத்துப் பறவைகளையும், பூமியின் மீது அசையும் உலாவும் உயிரினங்கள் அனைத்தையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றார்" (ஆதி. 1:27, 28)
"ஏனெனில் வானத்தைப் படைத்த ஆண்டவர் கூறுகின்றார்: (அவரே கடவுள் அவர்தான் பூமியை உருவாக்கினார். அதைப் படைத்து நிலைநாட்டினார்; வெறுமையாய் இருக்கும்படி அதை உண்டாக்கவில்லை, அதில் மனிதர் வாழவே அதை உருவாக்கினார்) "நாமே ஆண்டவர், வேறு எவனுமில்லை; (இசையாஸ் ஆகமம் 45:18)
"யாருக்கு எம்மை ஒப்பிடுவீர்கள்? யாருக்கு சமமாக்குவீர்கள் என்கிறார் பரிசுத்தர்" (இசையாஸ் ஆகமம் 40:25)
"அப்போது கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கினார். அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் சேர்ந்து ஆறாம் நாள் ஆயிற்று" (ஆதி.1:31)
பாவம்
"ஒரே மனிதனால், பாவமும், பாவத்தால் சாவும் இந்த உலகத்தில் நுழைந்தது போலவும், இவ்வாறு எல்லாரும் பாவஞ்செய்தமையால் எல்லா மனிதருக்குள்ளும் சாவு பரவியது போலவும்," (உரோமையர் 5:12)
"எல்லாருமே கடவுளது மாட்சிமையின் சாயலின்றி உள்ளனர். (உரோமையர் 3:23)
"இதயம் அனைத்தையும் விட வஞ்சனையுள்ளது; மிகவும் கேட்டுப் போனது; அதனை அறிகிறவன் எவன்?" (எரேமியாஸ் ஆகமம் 17:9)
"மேலும் "மனிதனுக்குள்ளிருந்து வருவதே அவனை மாசுபடுத்தும்.
ஏனெனில் மனிதர் உள்ளத்தினின்றே, தீய எண்ணம், மோகம்,
களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், கபடு, கெட்ட நடத்தை, பொறாமை, பழிச்சொல், செருக்கு, மதிகேடு, ஆகியவை வெளிவரும்" (மாற்கு 7:20-23)
"எல்லாரும் நெறி தவறிப் போயினர். ஒருங்கே கெட்டழிந்தனர்: நன்மை செய்கிறவனே இல்லை, இல்லவே இல்லை; ஒருவன் கூட இல்லை. (சங். 13: 3)
"ஆனால் உங்கள் அக்கிரமங்கள்தான் உங்களுக்கும் ஆண்டவருக்கும் பிரிவு ஏற்ப்படுத்தின; உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதபடி உங்களிடமிருந்து அவரது முகத்தை மறைத்தன" (இசையாஸ் ஆகமம் 59:2)
"நம்மிடம் பாவமில்லை என்போமானால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம்; உண்மை என்பது நம்மிடம் இல்லை. (1 அருளப்பர் 1:8)
மன்னிப்பு
"மாறாக, அவர் ஒளியில் இருப்பது போல நாமும் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புணர்வு கொண்டவர்களாவோம். அப்போது அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மை தூய்மைப் படுத்துகின்றது. (1 அருளப்பர் 1:7)
பாவத்தை யார் மன்னிக்க முடியும்?
"தன்னைத்தானே விடுவித்துக் கொள்பவன் ஒருவனுமில்லை; தன் மீட்புக்குறிய விலையைக் கடவுளுக்குத்தர யாராலும் இயலாது.
அந்த மீட்புக்குரிய விலை மிக உயர்ந்தது" (சங். 48:7,8)
"ஏனெனில், மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாக தம் உயிரை அளிக்கவும் வந்தார்" (மாற்கு 10:45)
"அவர்கள் புதியதொரு பாடலைப் பாடினர்: சுருளை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைக்கவும் தகுதியுள்ளவர் நீரே; ஏனெனில், நீர் பலியாக்கப்பட்டு உமது இரத்தத்தால் எல்லாக் குலத்தையும் மொழியையும் இனத்தையும் நாட்டையும் சார்ந்த மக்களைக் கடவுளுக்காக மீட்டீர். (திரு வெளிப்பாடு 5:9)
"மாசு மறுவற்ற செம்மறி போன்ற கிறிஸ்துவின் விலைமதிப்பில்லாத இரத்தமே" (1 இராயப்பர் 1:19)
"கிறிஸ்துவைப் பாருங்கள்; நீதியுள்ள அவர், அநீதருக்காக இறந்தார்; நம்மைக் கடவுளிடம் சேர்க்க, பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார்; ஊன் உடலில் சாவுக்குள்ளானார்;" (1 இராயப்பர் 3 :18)
பரிசுத்தம்
"இறைவா, உம் இரக்கத்திற்கேற்ப என்மீது இரக்கம் வையும்; உம் இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைப் போக்கிவிடும்.
ஈஸ்சோப் புல்லால் என் மேல் தெளித்தருளும், நான் தூய்மையாவேன்: நீர் என்னைக் கழுவியருளும், வெண் பனியிலும் வெண்மையாவேன்" (சங். 5௦:1,7)
"மாறாக நம் பாவங்களை ஏற்றுக் கொள்ளுவோமானால், அவர் நம்பிக்கைக்குரியவர், நீதியுள்ளவர் என விளங்குவார். நம் பாவங்களை மன்னிப்பார்; எல்லா அநீதியினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்" (1 அருளப்பர் 1:9)
அசுத்தமான மனது சுத்தமாக முடியும்
"ஆண்டவரது மலைமீது ஏறிச் செல்ல தகுந்தவன் யார்? அவரது திருத்தலத்தில் நிற்க்கக் கூடியவர் யார்?
மாசற்ற செயலினன், தூய உள்ளத்தினன், பயனற்றத்தில் மனதைச் செலுத்தாதவன்: தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன்" (சங். 24:3,4)
"தூய உள்ளத்தோர் பேறு பெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்" (மத்தேயு 5:8)
"நாம் பாவங்களை அப்புறப்படுத்தி இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் வாழ, கழுமரத்தின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். அவருடைய காயங்களால் நீங்கள் குணமானீர்கள்" (1 இராயப்பர் 2:24)
"கிறிஸ்துவோடு நான் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். இனி, வாழ்பவன் நானல்ல; என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே. இப்போது ஊனுடலோடு நான் வாழ்வது கடவுளின் மகன் மேல் உள்ள விசுவாசத்தின் வாழ்வாகும். இவரே என்மேல் அன்பு கூர்ந்தார்; எனக்காக தம்மையே கையளித்தார்" (கலாத்தியர் 2:2௦)
ஸ்வர்க்கம்
"நமக்கோ வானகமே தாய்நாடு. அங்கிருந்து மீட்பர் வருவாரெனக் காத்திருக்கிறோம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே அந்த மீட்பர். அவர் அனைத்தையும் தமக்குக் கீழ்ப்படுத்த வல்ல ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை, மாட்சிமைக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார்" (பிலிப்பியர் 3:20,21)
"அவர்களுடைய கண்ணீரனைத்தையும் துடைத்துவிடுவார்; இனிச் சாவில்லை, புலம்பலில்லை, அழுகையில்லை, நோவில்லை, முன்னிருந்தவை மறைந்து போயின" என்றது." (திருவெளிப்பாடு 21:4) இயேசுவின் மகிமையில் கலந்து கொள்ளமுடியும்:
"தந்தாய், நானிருக்கும் இடத்திலே நீர் என்னிடத்தில் ஒப்படைத்தவர்களும் என்னோடிருக்கும்படி விரும்புகிறேன். இதனால் உலகம் உண்டாகுமுன்பு நீர் என் மேல் அன்பு வைத்து எனக்களித்த மகிமையை அவர்கள் காண்பார்கள்" (அருளப்பர் 17:24)
"சாபத்துக்குள்ளானதெதுவும் அங்கு இல்லை. கடவுளும் செம்மறியானவரும் வீற்றிருக்கும் அரியணை அங்கே இருக்கும். அவருடைய ஊழியர்கள் அவரைத் தொழுவார்கள்.
அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்கள் நெற்றியில் எழுதியிருக்கும்" (திருவெளிப்பாடு 22:3,4)
"இம்மைக் காலத்தில் நாம் படும் துன்பங்கள் நம்மிடம் வெளிப்படப் போகிற மகிமையோடு ஒப்பிடவும் தகுதியற்றவை என எண்ணுகிறேன்" (உரோமையர் 8:18)
"நான் போய் உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்தபின், திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்ளுவேன்; அப்போது, நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள்.
நான் போகும் இடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்"
இயேசு அவரிடம் கூறியதாவது: நானே வழியும் உண்மையும் உயிரும். என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை" (அருளப்பர் 14:3,4,6)
இதுவே இரட்சிப்பின் வழி!
இதுவே நற்செய்தி!
இதுவே உங்களை ஸ்வர்க்கத்தில் கொண்டு சேர்க்கும்!!
வாழ்க வளமுடன்......

No comments:
Post a Comment