Powered By Blogger

Monday, 15 October 2012

PRAYER NO: TWO

ஒரு மகன்/மகளது ஜெபம்: 
ஆண்டவரே நீர் எனக்குக் கொடுத்திருக்கிற இல்லத்துக்காக, பெற்றோருக்காக உமக்கு நன்றி,
நான் சிறுமியாக, சிறுவனாக இருந்த பொழுது, என்னை நானே பேணிப் பராமரிக்க முடியாத நாட்களில், நான் பெற்ற அன்பின் அரவணைப்புக்காக,
நான் சம்பாதித்து என்னுடைய தேவைகளை நானே சந்திக்காத வருடங்களுக்கு முன்பு, நான் பெற்ற உணவு, உடை, உறைவிடத்துக்காக,
என் பெற்றோர், நான் படிக்க, எனக்கு கொடுத்த கல்வி வாய்ப்புக்களுக்காக 
நான் அனுபவித்த நல்ல பாதுகாப்பிற்காக, வீட்டின் கதவு எனக்காக எப்போதும் திறந்திருந்ததர்க்காக, நான் காயப்பட்ட பொழுது, அல்லது தைரியமிழந்த பொழுது, அல்லது ஏமாற்றமடைந்த பொழுது, எனக்கு காட்டப் பட்ட பரிவு, அனுதாபத்திற்காக,
தேவரீர் உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.
நான் பிறந்ததில் இருந்து எங்கள் வீட்டில் என்னைச் சுற்றிலும், அன்பும், பாசமும் இருந்ததற்காக ஆண்டவரே உமக்கு நன்றி!
என் பெற்றோரை நான் புண்படுத்தியிருந்தால், வருந்தும்படி செய்திருந்தால், இயேசுவே உமது அன்பின் மிகுதியால், என்னை மன்னியும்,இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே. ஆமென். ஆமென்.

Saturday, 13 October 2012

TESTIMONY NO: TWO

சாட்சி எண் : இரண்டு.
பல ஆண்டுகளுக்கு முன் நமது ஊழியத்தில் நடந்த சம்பவமிது. சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் காக்ஸ் காலனியில் சிறுவர் ஊழியத்தை தொடங்கிய நேரம்.மே மாதம் சிறுவர் வேதகமப்பள்ளியை தொடங்கவேண்டிய நேரம். நூற்றுக்கும் அதிகமான பிள்ளைகளை கூட்டிச் சேர்த்து நடத்த வேண்டியதிருந்தது. அப்படிப் பட்ட இடம் நமக்குக் கிடைக்கவில்லை. அருகில் இருந்த ஹிந்து மத கோவிலில் இடம் கேட்க்க யாரோ ஒருவர் வழிநடத்தினார். அந்த கோவிலின் ஒரு தர்மகர்த்தாவை சந்தித்து, கேட்டேன். அவர் என் ஜாதியை அறிந்து கொண்டு, பக்கத்தில் நாடார் ஒருவர் இருக்கிறார். அவர் இந்த கோவிலுக்கு முன் இருந்த ஷெட்டை இலவசமாக போட்டுக் கொடுத்தார். அது பழுதாகி விட்டது. நான் இடம் தருகிறேன், நீங்கள் நடத்துங்கள், பழுதான ஷெட்டை ரிப்பேர் செய்து கொடுங்கள் என்றார். 
திங்கள் கிழமை நாங்கள் ஊழியத்தை ஆரம்பித்தோம். பல் வேறு சபைகளைச் சேர்ந்த வாலிபர்களை தன்னார்வ பணியாளராக சேர்த்திருந்தேன்.  பிள்ளைகள் எல்லாரும் அந்த ஹிந்து கோவிலில் (கொல்லாபுரி) கூடி வந்தனர். ஜெபம், பாடல்கள் மற்றும் அறிவிப்புக்குப் பின், வகுப்புக்களைப் பிரித்தபின் நமக்கு தெரிந்த வீடுகளில் நடத்தினோம். வகுப்புகள் முடிந்த பின் மீண்டும் அந்தக் கோவிலில் பிள்ளைகள் வந்து, தாங்கள் கற்றுக் கொண்ட பாடல்களைப் பாடுவார்கள். அந்த நாளிலே கற்றுக் கொடுத்த வசனங்களைக் கூறுகின்ற பிள்ளைகளுக்கு பரிசுகளைக் கொடுத்து, அறிவிப்புகளுக்குப் பின் ஜெபித்து அந்த நாளின் ஊழியத்தை முடிப்போம். இப்படியாக,
திங்கள், செவ்வாய், புதன், வியாழன்.....நேர்த்தியாக வகுப்புகள் நடந்தன. வெள்ளிக் கிழமை வந்தது. பிள்ளைகளுக்கு பாடல்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். கோவிலுக்குப் போட அந்தப் பகுதியில் இருந்த பெண்கள் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். பூடத்துக்குள் சென்று வழிபட ஆரம்பித்தனர். அந்த வருடம் மிக விரும்பி பாடப்பட்ட பாடல், 
வானம் பூமி படைத்தது யார்?  இயேசு.........               
வாழும் உயிர் கொடுத்தது யார்?  இயேசு...............
அவர் நம்மைக் காப்பவர், தினம் நடத்தி செல்பவர் 
அன்பாய் இருப்பவர் நம் இயேசு இரட்சகர்
நமக்காக மறித்தது யார்? இயேசு .................
உயிருடன் எழுந்தது யார்?   இயேசு............- அவர் நன்மைக் 
மீண்டுமாக வருவது யார்?  இயேசு........
ஜீவகிரீடம் தருவது யார்?   இயேசு............- அவர் நன்மைக் 

இந்த பாடலைக் கற்றுக் கொண்டிருந்தேன். நான் கேள்வி கேட்க பிள்ளைகள் பதிலளிப்பார்கள்.பூடத்துக்குள்ளே இயேசு, இயேசு என்று எதிரொலிக்கவே வந்தவர்கள், வெளியே போய், இவனை யார் உள்ளே விட்டது? என வேறொரு தர்மகர்த்தாவிடம் முறையிட, அவர் நான் பாடல் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கும் பொழுது வந்து, உன்னை யார் உள்ளே விட்டது? அறிவு இருக்கிறதா? இந்து கோவிலிலே வந்து, இயேசுவை சொல்லுகிறாயே? ............, ............... கெட்ட  வார்த்தைகளினாலே  திட்ட ஆரம்பித்தார். வந்த தன்னார்வ பணியாளர்கள் அனைவரும், பயந்து விலகி நிற்க ஆரம்பித்தனர். என் காதில் அவர் சொன்னது அரைகுறையாக விழுந்ததால், அவர் என்ன சொல்லுகிறார்? என  அறிய சற்று அருகில் சென்றேன். அப்பொழுது என் உள்ளத்தில் மகிழ்ச்சி அலை அலையாக பொங்க ஆரம்பித்தது. (நான் இரட்சிக்கப் பட்ட பொழுது எப்படி குமிழ் குமிழாக பொங்கியதோ அதைப் போல) 
பிள்ளைகளின் சப்தம் நின்றதால், இப்பொழுது அவர் திட்டியது, என் காதில் நன்றாக விழுந்தது. என்ன நீயும் சின்னப்பய மாதிரி இருக்க. உன்னை யார் உள்ளே விட்டது? "இராஜன்" அவன கூப்பிடு ..... அவன் எப்படி உன்னை உள்ளே விட்டான்? அவனுக்கு பணம் கொடுத்தாயா?..... மேலும் பல கெட்ட வார்த்தைகள்..... நீ முதல்ல வெளியே போ..... உடனே இடத்தை காலிபண்ணு..... (என் உள்ளத்திலோ மிகுந்த மகிழ்ச்சி)
"இன்னும் ஒரே ஒரு பாடல்தான்....." "ஏய் என்ன விளையாடுகிறாயா? போடா....... மீண்டும் கெட்ட வார்த்தைகள்...  நான் தன்னார்வ பணியாளர்களைப் பார்த்தேன். அவர்கள் மிரண்டிருப்பது தெரிந்தது. 
என் உள்ளத்தில் ஆண்டவர் பேச ஆரம்பித்தார், நாளைதான் கடைசி நாள், நான் தன்னார்வப் பணியாளர்களைப் பார்த்து, "எல்லாரும் அவரவர் வகுப்புகளுக்கு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள்." உடனே அந்த இடம் காலியாயிற்று. இன்று மதியம் அசெம்பிளி இல்லை, வகுப்பு முடிந்த உடனே அப்படியே பிள்ளைகளை வீடுகளுக்கு அனுப்பி விடுங்கள். நாளை காலை அசெம்பிளி இல்லை. வகுப்புகளிலே பாடல்களை கற்றுக் கொள்ளலாம். கடைசி நாள் நிகழ்ச்சிகளை ஆண்டவர் மிகவும் நேர்த்தியாக நடத்தித் தந்தார். இந்த ஊழியத்தில் விதைத்தவர்களும் ஆசீர்வதிக்கப் பட்டனர். 

இன்று,
காக்ஸ் காலனியில் இன்று அனேகர். ஆண்டவரின் பிள்ளைகள். குடும்பங் குடும்பமாக இரட்சிக்கப்பட்டுள்ளனர். குடிகாரர் குடும்பம் மனந்திரும்பியது. அப்பொழுது ஞயிறு பள்ளிப் பிள்ளைகள், இன்று வளர்ந்து பெரிய பிள்ளைகளாகி, என்னோடு கூட ஊழியம் செய்கிறார்கள். எனக்கு அனுமதி கொடுத்த இராஜன் சகோதரர் இரட்சிக்கப்பட்டு இருக்கிறார். அவருடைய பிள்ளைகள் ஆண்டவருடைய பிள்ளைகள். அவர் மனைவியும் கூட.
என்னைத் திட்டிய தர்மகர்த்தாவின் ஒரு பெண் குழந்தை புத்தி சுவாதீனமுள்ளவளாக இருந்தாள். இந்த நிகழ்ச்சிக்குப்பின் நான் ஞயிறு பள்ளி நடத்த செல்லும் போதெல்லாம், ஓடி வந்து என் கையைப் பிடித்துக் கொள்ளும். வகுப்பிலே உட்கார்ந்து பாடல்களைக் கற்றுக் கொள்ளும். நாங்கள் ஜெபித்தோம். இன்று பள்ளிக்கூடம் சென்று கொண்டு இருக்கிறாள். ஆறாவது வகுப்பு படிக்கிறாள்.
இதை வாசிக்கின்ற நீங்கள் இந்த ஊழியத்துக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். இன்னும் அனேக இடங்களில் சிறுவர் ஊழியம் ஆரம்பிக்கப் பட, சிறு பிள்ளைகள் மூலமாக பெற்றோர் இரட்சிக்கப்பட,

நன்றி!

Tuesday, 9 October 2012

From the "BIBLE HELPS" ...................

ஹைதர் காலத்துப் பெற்றோரும், நவயுக இளைஞர்களும்.....
கார் ஒன்று புறப்பட தயாராய் நின்றுகொண்டிருந்தது. ஒரு 17 வயது வாலிபன் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்து பொறுமையில்லாமல், தன தகப்பனது-எந்த வழியில் செல்லவேண்டும்?, யாரைப் பார்த்ததுப் பேசவேண்டும்? எங்கே போகக் கூடாது?  எந்த வேகத்தில் செல்லவேண்டும்? யோசனையைப் பொறுமையில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான். பின்பு போய் வருகிறேன் என கூறிய பொழுது கார் என்ஜின் ஆப் ஆகியது. பின்பு கார் சென்று கொண்டிருந்த பொழுது, "அப்பா சுத்த கர்நாடகம், அந்த காலத்திலேயே இருக்கிறார்" என்று தன்னோடு பயணித்த தன நண்பனிடம் கூறினான்.
மேலே உள்ள நிகழ்ச்சி வயதானவர்களுக்கும், இப்போதுள்ள் தலைமுறையினருக்கும் இடையே உள்ள பிரச்சனையைக் காட்டுகிறது. இப்பிரச்சனை இன்று நேற்றல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாகவே உள்ள   பிரச்சனை தான், 3,000 ஆண்டுகளுக்கு முன்பதாக ஒரு தகப்பன் பரத்திலிருந்து வந்த தேவ தூதனிடம், 
'குழந்தையை நான் எவ்வாறு வளர்க்க வேண்டும்?' என கேட்டான்.(நியா.13:12) 
(மிகச் சரியான மொழி பெயர்ப்பு: குழந்தைக்கு நான் எதைக் கட்டளையிட வேண்டும்?) தலைமுறை இடைவெளி என்பது காலாகாலமாக இருந்து வருகின்ற பிரச்சனைதான். பொதுவாக நாம் பேசும் பொழுதோ, கதை படிக்கும் போதோ பத்திரிகை மற்றும் எதைப் பார்த்தாலும் இப்படிப் பட்ட ஒரு புகாரைப் பார்க்கலாம், கேட்கலாம்: 'இப்ப உள்ள பசங்ககிட்ட நீ சரியானதை எதிர் பார்க்க முடியாது; தன வழியிலேதான் போக விரும்புவான்; யாருடைய புத்திமதியையும் கேட்கமாட்டான்; அவனோடு அறிவு பூர்வமாக பேசமுடியாது'. 
அடுத்த பக்கத்தில் இளைஞர்கள்,   தங்கள் பெற்றோரைப் பற்றிக் குறை கூருவர்கள்: 'என்னைப் புரிந்துகொள்ளுவதே இல்லை, தாங்கள் வளர்ந்த முறையிலேயே நாங்களும் வளர, எதிர் பார்க்கின்றார்கள். காலம் மாறிவிட்டது. 
அது உண்மைதான், காலம் மாறிவிட்டது. அந்தக் காலத்தில் ஆட்டோ மொபைல் இல்லை, ஏரோப்ளேன் இல்லை, தொலைக் காட்சிப் பெட்டி இல்லை, தொலை பேசி இல்லை, மின்சாரம் கிடையாது, உழவு இயந்திரம் இல்லை, கதிரடிக்க இயந்திரம் இல்லை, இப்பொழுதோ, எங்கு போக வேண்டுமானாலும் கார், பஸ் வசதி, உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சியானாலும், வீட்டுக்குள்ளே தொலைக் காட்சிப் பெட்டியில்.உலகில் யாரிடமும் எந்த நேரத்திலும் தொலை பேசியில் பேசும் வசதி, நேரடியாகப் பார்த்துப் பேசும் வசதி. 
மனிதனுடைய சாதனைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது, ஆனால் மாறாதது ஒன்று உண்டு, அது ஆண்டவருடைய வார்த்தை. இயேசு சொன்னார், 
"வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை" (மத். 24:35)
 வேதாகமத்தின் உண்மைகள், பல நூற்றாண்டு காலமாக மாறாமல் அப்படியே இன்னும் இருக்கிறது. வேதாகமம் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பல வழிமுறைகளை உள்ளடக்கியதாய் இருக்கிறது. அதில் அனேகமானவைகள் நீதிமொழிகளில் இருக்கிறது. ஆண்டவரது வழி நடத்துதலின்படி, சாலமோன் என்ற அரசன் அதை எழுதியுள்ளார்.
1. பெற்றோருக்கு சில கட்டளைகள்: 
முதலாவது, அன்புள்ள, திட்டமிட்ட பயிற்சி அவசியம். வேதாகமம் கூறுகிறது,  
"பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன்  முதிர் வயதிலும் அதை விடதிருப்பான்". 
இது, பிரம்பை வைத்து அடித்து சொல்லிக் கொடுப்பதிலும் மேலானது. 'வளர்க்க வேண்டிய விதம் என்பது,  கவனமாக கற்றுக் கொடுப்பது, மற்றும் வழி நடத்துவது என பொருள் படும். இதை தொடர்ந்து எபே.6:4ல்.வேதம் சொல்லுகிறது, 
"பிதாக்களே நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக".
"நன்கு கற்றுக் கொடுத்தல்" எப்பொழுதும் உறுதியான மாதிரியாய் இருக்கும். கவனமாய் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க அதிகமான வாய்ப்புக்களைப் பார்க்கின்றனர். உதாரணமாக 6 வயதுப் பையன் தான் வாசிக்கக் கற்றுக் கொண்டதற்காக மிகுந்த சந்தோஷப் பட்டான். அவனது வீட்டு வேலைக்காரிக்கு வாசிக்கத் தெரியாது எனவும் கண்டு பிடித்தான். தன தகப்பனாரின் அறைக்குள் சென்று சத்தமிட்டான். "அப்பா நம் வீட்டு வேலைக்காரிக்குப் படிக்கத்தெரியாது",  என்று. "அவள் என்னைப் பார்க்கிலும் பெரியவளாய் இருக்கிறாள் அல்லவா! 
அவனது தந்தை ஒரு புத்தகத்தை திறந்து கொடுத்து, இதை வாசிக்கத் தெரியுமா? என கேட்டார். அதை பார்த்த அந்தச் சிறுவன் வாய் பேசாமல் அப்படியே நின்றான்.அந்தப் புத்தகம் சீன மொழியில் எழுதப் பட்டிருந்தது.நடந்த சம்பவத்தை பல வருடங்களுக்குச் சொல்லும் பின் சொல்லும் பொழுது, 
"எப்பொழுதெல்லாம் பிறருடைய அறியாமையைக் குறித்து,தரக் குறைவாகப் பேசத் தூண்டப் படும்போழுது, என் தகப்பனார் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் என் நினைவுக்கு வரும்: எனக்கு சீனமொழி படிக்கத்  தெரியாது" 
 2. சிறு வயதிலேயே பாடத்தை ஆரம்பித்து விடுங்கள்: வேதம் கூறுகின்றது, 
 "நம்ம்பிக்கை இருக்குமட்டும், உன் மகனைச் சிட்சை செய்; அவனை அதிகமாய் கதறி அழ விட்டு விடாதே" நீதி. 19:18.
சிட்சை என்பது அடிப்பது அல்ல.சிறுவர்களுக்கு எது நல்லது? எது கேட்டது? என அறிய பயிற்ச்சி கொடுப்பது. ஏன் பயிற்சி கொடுக்க வேண்டும்? பிள்ளைகள் ஆண்ண்டவரால் கொடுக்கப் பட்ட வெகுமதிகள்.
3. பிள்ளைகலளோடு ஐக்கியம் கொள்ளாத படிக்கும், பயிற்ச்சி கொடுக்க முடியாத படிக்கும் நீங்கள் உங்கள் வேலைகளில் மூழ்கி விடாதிருங்கள். இந்த நாட்கள் மிகவும் விறுவிறுப்பான, சுறுசுறுப்பான நாட்கள். பிள்ளைகளும் மிக கூர்மையானவர்கள். பிள்ளைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்தைக் காட்டிலும் பணம் சம்பாதிப்பதற்கு, பெற்றோர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நீங்கள் பிள்ளைகளோடு ஐக்கியம் கொள்ளுவதற்கு அதிக நேரங் கொடுங்கள்.
4. மன ரம்மியமான சூழ்நிலையை ஏற்ப்படுத்துங்கள்: இதன் அர்த்தம் தரக் குறைவான ஜோக்குகள் கூறுவதில்லை. அது பைபிளில் ஏற்றுக் கொள்ளப் படவும் இல்லை. பைபிள் கூறுகின்றது:


நீதி.17:22ல், "மனமகிழ்ச்சி நல்ல அவ்ஷதம்; முறிந்த ஆவி எலும்புகளை உலரப் பண்ணும்".
பெற்றோர்கள்,  நம்ம்பிக்கையர்றற சூழ்நிலையிலும், கோபப் படுத்தும் சூழ்நிலையிலும், முகத்தில் புன்முறுவலைக் காட்டினால், அது ஒரு நல்ல சூழலை ஏற்ப்படுத்தும். 5 வயது பிள்ளை ஒரு பாட்டிலை கீழே தள்ளி உடைத்து தன அம்மாவுக்கு வேலை வைக்கும்பொழுது, பயத்தோடு இருக்கும் பிள்ளையை, ஒரு புன் முறுவலோடு பார்த்தால், ஒரு நல்ல சூழ்நிலையை நீங்கள் உருவாக்குகின்றீர்கள்.
முடிவாக, உங்கள் பிள்ளைகளிடம் எப்பொழுதும் உன்ன்மையுள்ளவர்களாய் இருங்கள்: ஏதோ ஒன்றை வாக்குக் கொடுத்தால் அதைக் காப்பாற்றுங்கள்.


நீதி.13:12ல், "காத்திருத்தல் இருதயத்தை இளைக்கப் பண்ணும்".
ஒரு தொட்டால் சிணுங்கி அம்மா, தன தொனதொனத்த பிள்ளைக்கு ஒரு குச்சி மிட்டாய் வாங்கித் தருவதாக வாக்குப் பண்ணினார்கள், பிள்ளை திரும்ப நினைவு படுத்திய பொழுது, "அதை இன்னுமா ஞாபகம் வைத்திருக்கிறாய்? அமைதியாய் இரு, நான் வாங்கித்தருகின்றேன்" என்றார்கள். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இவ்வளவு மோசமாக நடத்தக் கூடாது.
2. இளம் வாலிபர்களுக்கான கட்டளை: இளமையை நீ எப்படி செலவளிக்கிறாய்? என்பதைக் குறித்து, கணக்கு ஒப்புவிக்க வேண்டும். பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் என் பெற்றோருக்கு அறிவுறுத்துவது போல இளம் வாலிபரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. வாலிபம் என்பது விலைமதிக்க முடியாதது; திரும்ப வர முடியாத ஒரு நன்கொடை. ஒரே ஒரு விதிமுறை, பொறுப்புடையவர்களாய் இருக்க வேண்டும். இளம் வாலிபர் அடிக்கடி கூறுவது என் வாழ்க்கையை நானே பார்த்துக் கொள்ளுகின்றேன். ஆனால் வேதம் கூறுகிறது,


"வாலிபனே, உன் இளமையில் சந்தோஷப் படு; உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும், உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும், இவை எல்லாவற்றிநிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி. பிரசங்கி 11:9.


எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய்.
இரண்டாவதாக,  உன் பெற்றோர் சொல்லுவதை மரியாதைக்குரிய வார்த்தைகளாக ஏற்றுக் கொள்.


நீதிமொழிகள் 1:8ல், "என் மகனே உன் தகப்பன் புத்தியைக் கேள்; உன் தாயின் போதகத்தைக் தள்ளாதே".
ஒருவேளை உன் யோசனைகள் அவர்கள் சொல்லுவதைக் காட்டிலும், நல்லதாக தோன்றலாம்; அதை நடத்திக் காட்டவும் உன்னால் முடியும். ஆனால் இதை மறந்து போகாதே; நீ பயணப் படுவதற்கு, ரோடு போட்டவர்கள்; நீ இப்பொழுது இருக்கும் நிலைக்கு உன்னை உயர்த்தியவர்கள். பெற்றோரிடமிருந்து நீ கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. ஒருவேளை அவர்கள் செய்த சில தவறுகளைத் தவிர்த்து, மிகுந்த மரியாதைக் குரியவர்களாக அவர்களை நடத்து. அவர்கள் கொடுக்கும் ஆலோசனையை கவனமாக பரிசீலனை செய்.
மூன்றவதாக உன் நண்பர்களைக் குறித்து கவனமாக இரு:


நீதி.1:10,11,15ல், "என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும், நீ சம்மதியாதே; என் மகனே நீ அவர்களோடே வழி நடவாமல்,  உன் காலை அவர்களின் பாதைக்கு விலக்குவாயாக"
உனது விருப்பத்தை நிறைவேற்ற உண்மையிலிருந்து வழி விலகச்செய்யும் நபர்களை உன் நண்பனாக்காதே. சிலர் கூறுவார்கள், "ஏமாளிகள் தான் கடினமாக உழைப்பார்கள், நமக்கு அது தேவை இல்லை. எளிதாகச் சம்பாதிக்க வேண்டிய வழியில் நாம் செல்லலாம்". சிலர், தங்களைக் காட்டிலும், திறமையாக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு செயல்படும் நபர்களைப் பார்த்து பொறாமை கொள்ளுவார்கள், ஆனால் ஒன்றை நாம் மறந்து விடக் கூடாது,


திறமை என்பது அனேக ஆண்டுகள் வேலை செய்து கிடைப்பது. 'பொறுப்பு' என்பது தன்னால் ஒரு வேலையை நன்றாக செய்து முடிக்க முடியும்  என் நிரூபிப்பவர்களுக்கு கொடுக்கப் படுவது..
நான்காவது,  இளம் வாலிபர்கள் (ஆண்களும், பெண்களும்) தங்கள் வழி காட்டியாக வேதாகமத்தைக் கொள்ளவேண்டும்.
 இது நீதி.31:10-31ல், உள்ளது. பைபிளை திறந்து வைத்துக் கொள்ளவும், இங்கு பெண்களின் குணநலன்களைக் குறித்து, கூறப் பட்டுள்ளது. இதில்  ஆண்களுக்கான செய்தியும் உண்டு.
(1). நம்பகத்தன்மை, உண்மையுள்ள தன்மை, பொறுப்புள்ள தன்மை,(வ 11) இது ரூபாயைக் காட்டிலும் மேலானது.
(2) வீட்டை நிர்வகித்தல்.(வ 13,19,22,27) இன்றைய இளம் வாலிபர்கள் வீட்டை நிர்வகிப்பதிலே மிகவும் குறைந்த அறிவுடையவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் எதிர் பாலாரை கவர்ச்சிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர், வீட்டு நிர்வாகத்தில் திறமை இல்லையேல் மகிழ்ச்சியான வீட்டைக் கட்டுவதில் சிரமபடவேண்டியது வரும்.
(3) கவனமாய் இருப்பதும், கிரமமாய் இருப்பதும்: (வ27) கிரமமாய் செய்யப் படுகிற வேலையை ஆதரிக்க வேண்டும். காரியங்கள் கிராமமாய் இல்லாததால், நல்ல கணவரும் எதிர்ப்புக்குள்ளகிறார். அதனால் மனைவி மீதுள்ள ஈர்ப்புத் தன்மை குறைந்து போய்விடுகிறது. கவனமும் கிரமமும் இல்லாத கணவன் தன மனைவியின் வீட்டு வேலையில் இன்னும் பாரத்தை ஏற்றுகிறான். சிறு உதவி கூட அவனது மரியாதையை குறைக்கக் கூடும்.
(4) பெருந்தன்மை, அல்லது உதாரத்துவ குணம்: (வ 20) இது பெண்மையின் கிரீடம் அதே நேரத்தில் கிறிஸ்தவ குணம்.
(5) பேச்சில் ஞனமும், இரக்க குணமும்: (வ் 26) கொடூரமான நாவு ஒரு நல்ல மனிதனை அழித்து விடும்.
(6) சௌந்தர்யம்  வஞ்சனை உள்ளது.(வ 30) இதன் அர்த்தம் "சமுதாய கௌரவம்" இது வஞ்சனை உள்ளது. இது பொதுவாக பொறாமைக்குள்ளும், எல்லை மீறிய அலட்டலுக்குள்ளும் நடத்தி விடுகிறது. ஒரு புத்தியுள்ள வாலிபன் இதில் சிக்கிக் கொள்ள மாட்டான். அதே சமயம் அழகும் வீண் என் கூறுகிறது. நமது கல்வி, பொருளாதாரம் ஆகியவை குணத்தின் அழகைக் காட்டவேண்டிய இடத்தில் சரீர அழகை பெரிதாக கட்டுகின்றன.
மேலே உள்ள தன்மைகள்  மாறாதது, நமது பெற்றோர் வலிப வயதாய்  இருந்த போது இருந்ததைவிட நிலைமை வெகுவாக மாறிவிட்டது. மக்கள் மிக கொஞ்சமாக மாறியுள்ளனர். ஆண்டவர் மாறவே இல்லை. நம்முடைய பெற்றோர் காலத்தை விட நாம் வித்தியாசமாக நாம் பல காரியங்களைச் செய்கிறோம். ஆனால், நம்பிக்கைகள், மனிதனின் இயற்கையான தன்மைகள் கொடுக்கும் மகிழ்ச்சி, சமாதானம், திருப்தி ஆகியவைகள் மாறவே இல்லை.


நமது பெற்றோருக்கு வெற்றியையும், சமாதானத்தையும் கொடுத்த அதே விதிமுறைகளே நமக்கும் வெற்றியையும் சமாதானத்தையும் தருகின்றன.
இயேசு கிறிஸ்து உங்களுக்கு சமாதானத்தையும், வெற்றியையும் தந்தருளுவாராக.

Friday, 5 October 2012

FROM THE READING.............

படித்தவைகளில் இருந்து.................
குற்றம் கண்டுபிடிப்பதற்கு தனி திறமை தேவை இல்லை. நீங்கள் கிறிஸ்துவைப் போல் மாறவிரும்பினால், ஜனங்களின் பாவத்திற்காக நீங்கள் சாக வேண்டும். "திறப்பிலே நின்று" நீங்கள் பரிந்து பேச வேண்டும். 
"வனாந்திரத்தின் இன்னல்களில் தன்னை ஆராதிக்கும் ஒரு இருதயம், வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்திலும் தன்னை தொடர்ந்து ஆராதிக்கும்  என்பதை  தேவன் அறிந்திருக்கிறார்".
"குற்றங் கண்டுபிடித்தலுக்கு நாம் இடமளிக்கும்போதும், வீண் வதந்திகளையும், எதிர்மறையான குறை கூறுதலையும்  நாம் நியாயப் படுத்த முயற்சி செய்யும் போதும் , தேவனுக்கு முன்பாக பரிசுத்தவான்களுக்கு எதிராக குற்றம் சாட்டும் படி நமது வாய்களையே சாத்தான் பயன்படுத்த நாம் இடம் கொடுக்கிறோம்". 
 "நம்முடைய உள்ளத்திலிருந்து முதலாவது குற்றஞ்சாட்டுகின்றவன் தள்ளப் படவேண்டும். குற்றஞ்சாட்டுதலையும், குற்றங்கண்டு பிடித்தலையும் நாம் சகித்துக் கொள்ளக் கூடாது. நமது சகோதரர்களைப் பொறுத்த வரையில், நாம் தேவனுடைய இருதயங் கொண்டவர்களாய் இருக்கவேண்டும்".
"நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் ஒருவருக்கு மெய்யாய் தோன்றும் சில, மற்றவர்களுக்கு பொய்யாய் தோன்றக் கூடும்".
"எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கு ஏற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குவதற்கு, தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற, எல்லா மேட்டிமைகளையும் நிர்முலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறை பிடிக்கிறவர்களாயிருக்கிறோம்". (2கோரி.10:4,5)   
"ஒரு பெண் யேசபேலின் மேட்டிமையான குணத்தை, கிறிஸ்துவின் சாந்த குணத்தைத் தேடுவதின் மூலம் மேற்கொள்ளுகிறாள்".
"ஆவிக்குரிய அதிகாரம் என்பது, உங்கள் சித்தத்தை பிறர்மீது திணிப்பது அல்ல. நீங்கள் ஆவிக்குரிய அதிகாரங்களை  உடையவர்களாய் இருக்கும் போது, உங்கள் வாழ்வில் ஒரு காலத்தில் போராட்டமும் நெருக்கமும் நிறைந்த பகுதிகளில் இப்பொழுது தேவனுடைய சமாதானத்தை ஏற்ப்படுத்துவீர்கள்".
"சாத்தானைத் தோற்கடிப்பதை விட நமது வாழ்வில் தமது குமாரனாகிய இயேசு வருவதில்  பிதாவாகிய தேவன் அதிக அக்கறையுள்ளவராக இருக்கிறார்". 
"சாத்தானின் தாக்குதல்கள் உங்களை ஆண்டவரிடமிருந்து பிரித்து விடாமல், ஆண்டவரிடமே உங்களை நெருங்கச் செய்கிறது என்பதையும், உங்களுக்கு ஏற்ப்படும் சோதனைகள் யாவும், உண்மையில் கிறிஸ்துவின் சாயலுக்கு நேராக உங்களை நடத்துகிறது என்பதையும் சாத்தான் உணரும்பொழுது, அவன் உங்களை விட்டுப் பின் வாங்குவான். இது மாபெரும் சத்தியம்."
"நாம் கிறிஸ்துவைப்போல மருரூபமாவதை உடனடியாகப் பாதிக்காத வரை, நாம் போராட்டத்தின் மீதோ, சாத்தானின் மீதோ அதிகம் கவனம் செலுத்தத் தேவை இல்லை."
"ஆவிக்குரிய போராட்டம், மாம்சீகப் பிரகாரமாக, எனக்கு விரோதமாய் அவன் / அவள் என்ற எல்லைக்குள்ளே  இருக்காது. என்னோடிருக்கிறவர்களுக்கு விரோதமாக அவனோ(ளோ)டிருக்கிற வர்கள். என்ற ரீதியிலேதான் இருக்கும். உண்மையான பகுத்தறிதல் என்பது, சாத்தான் மண்டலத்தின் கிரியைகளை அறிந்த பூரணமாக அறிந்த  தேவதூதர்களின் திரள் கூட்டம் நம்மோடு உள்ளது என்பதையும், நமது எதிராளிகளின் சேனைகளை விட நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்பது மட்டுமல்ல, அவர்கள் பராக்கிரமம் மிகுந்தவர்கள் என்பதையும் அறிவதே உண்மையான பகுத்தறிதல் ஆகும்".
"நமது வெற்றியானது நமது அறிவாற்றலில் இருந்தோ, உணர்ச்சிகளில் இருந்தோ வருவதல்ல. நமது வெற்றியானது, கண்கள் காண்பதிலிருந்தும், காதுகள் கேட்பதிலிருண்தும், தீர்ப்பு செய்யாமல், தேவனுடைய வாக்குத்தத்தம் நிச்சயம் நிறைவேறும் என்பதிலிருந்தே வருகிறது."
"நமது சூழ்நிலைகளில் நாம் மனுஷீக பிரகாரமாக செயல்படுவதை நிறுத்தாத வரையில், கிறிஸ்துவின் வெற்றியின் பரிபூரணத்தை நாம் ஒருபோதும் அறியமுடியாது. ஏதாவது ஒன்றின் மீது உங்களுக்கு உண்மையாகவே அதிகாரம் இருப்பின், அந்தக் காரியத்தை பயமோ, கவலையோ இன்றிப் பார்ப்பீர்கள். நீங்கள் கொண்டிருக்கும் சமாதானமே உங்கள் வெற்றியின் அடையாளமாகும். சீறிவரும் புயலின் மீது இயேசுவுக்கு இருந்த அதிகாரமே (மத.8:23-27)  அவரின் சமாதானத்துக்குக் காரணம். அவர் புயலோடு போராடவோ, அதைக் கண்டு பயப்படவோ இல்லை.பூரண சமாதானத்துடன் கூடிய அதிகாரத்தினால் அதைக் கீழ் படுத்தினார்".
"எங்கெல்லாம் உங்களுக்கு சமாதானமில்லையோ அங்கெல்லாம் போர் நடக்கிறது. எங்கெல்லாம் சமாதனம் இருக்கிறதோ அங்கெல்லாம் வெற்றி இருக்கிறது. "நீங்கள் மருளாதிருக்கிறது, உங்கள் எதிராளிகள் கேட்டுப் போவதற்கும், நீங்கள் இரட்சிக்கப் படுவதற்கும் அத்தாட்சியாய் இருக்கிறது". (பிலி. 1:28) 
"ஆளுகைக்கு முன்னானது இளைப்பாறுதல், வல்லமைக்கு முன்னானது சமாதானம். நீங்கள் தேவனுடைய  ஆளுகைக்கு ஒப்புக் கொடாமல் சாத்தான் மீது ஆளுகை செய்ய முயற்சி செய்ய வேண்டாம்". நன்றி!!!

Thursday, 4 October 2012

PRAYER NO: ONE

பிறரை சார்ந்து இராத நிலைக்கான ஜெபம்:
அன்பான தேவனே, முணுமுணுத்தல் மற்றும் புலம்புவதிலிருந்து என்னைக் காத்தருளும்.
எப்பொழுதும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கும் நபரைக் காட்டிலும், நிலைமையைக் கடினமாக்க யாராலும் முடியாது என்பதை என் அனுபவங்களில் இருந்து நான் நன்றாக அறிந்திருக்கிறேன். என்னை விலக்கிக் காத்தருளும்,
என்னுடைய குரலிலும், முகத்திலும் மன நிறைவின்மையை அனுமதிக்காதிரும்,
என்னுடைய் வழியை அறிந்து கொள்ள முடியாத நிலையில் கோபம்              கொள்ளாமல் இருக்க உதவி செய்யும்.
நான் விரும்பியவற்றை நான் பெற்றுக் கொள்ளமுடியவில்லையானால், நான் பெற்றுக் கொண்டதிலும், என்னிடம் இருப்பதிலும் மனநிறைவு கொள்ள எனக்கு உதவி செய்யும்,
எல்லா நாளும் எந்த நேரமும் சம்பவங்களின் நல்லவைகளையே பார்க்க, மக்களிடம் இருக்கும் நல்ல தன்மைகளையே பார்க்க எனக்கு உதவி செய்யும்,
சகலமும் எனக்கு நன்மைக்கேதுவாகவே நடக்கிறது என்ற நிச்சயத்தோடு வாழ உதவி செய்யும், எதையும் நம்மிக்கையோடே ஏற்றுக் கொள்ளவும் இயேசுவின் நோக்கம் என்னில் நிறைவேறும்படி, காத்திருக்க உதவி செய்யும், இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே. ஆமென், ஆமென்.

Wednesday, 3 October 2012

TESTIMONY NO: ONE

சாட்சி எண் ஒன்று :
நமது ஊழியத்தில் நடந்த சம்பவத்தை ஆண்டவருடைய நாம மகிமைக்காய் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  ஒருமுறை நான் ஒரு கிராமத்தில் நடந்த ஊழியத்தில் கலந்து கொண்டுவிட்டு இரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அந்த ஊழியத்தை நடத்திக் கொண்டிருந்த சகோதரரும், நானும் பயணித்துக் கொண்டிருந்தோம். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் சூடாக செய்தித் தாளில் வெளி வந்து கொண்டிருந்த நேரம்!. டிரைனில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஊழலைப் பற்றி எல்லாரும் பேசிக் கொண்டு வந்தனர். நாட்டுப் பற்றே இல்லாமல் போய்விட்டது, எவ்வளவு தூரம் நாட்டைச் சுரண்ட முடியுமோ அவ்வளவு தூரம் சுரண்டி விட்டான். பதவி வெறியினாலே இப்படி எல்லாம் செய்கின்றார்கள். எப்பாடு பட்டாவது பதவிக்கு வந்துவிட வேண்டும். நேர்மை நீதி, ஒழுக்கம் எல்லாம் இல்லாமல் போய் விட்டது. நாட்டுப் பற்றே இல்லாமல் போய் விட்டது. இப்படியாக பேச்சு போய் கொண்டிருந்தது. டிரைனில் ஆண்டவரை அறியாத ஜனங்கள் அதிகமாக இருந்தனர். எனது கருத்துக்களைக் கூறவேண்டும் என ஆவியானவர் உணர்த்தியதால், நானும் எனது கருத்துக்களைக் கூற ஆரம்பித்தேன். உண்மையான அன்பு இல்லாமல் போய் விட்டது, எனவே சுயம் தலைவிரித்தாடுகின்றது. பிறர் உயரவேண்டும், நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்ற எண்ணம் பொதுவாக ஒருவரிடமே இல்லை. ஒருவர் சுயநலமின்றி பிறருடைய முன்னேற்றத்துக்காக உழைத்தால் அவரால், நமது நாடு முன்னேறும் எனக் கூறினேன். அதற்க்கு பணம் வேண்டும் சார்... என்றார் ஒருவர். விளம்பரப் படுத்த வேண்டும் என்றார் இன்னொருவர். தான் செய்கிற நல்ல முயற்ச்சியை விளம்பரப் படுத்த வேண்டாம், அவை தானாகவே வெளிவரும். என நான் கூறி முடித்த பொழுது, ட்ரைன் ஒரு நிலையத்திலே நின்றது. இன்னும் ஒரு சிலர் ஏறினர். 
ஒரு இரண்டாவது படிக்கும் பையனை எங்களுக்கு முன்னால் உட்கார்ந்து இருந்தவர்கள் மத்தியில் உட்காரவைக்க ஒரு தாய் முயற்சி செய்தார்கள். நான் சரியாக அவர்களைக் கவனிக்க வில்லை. என்னை கவனித்த அவர்கள், தன மகனைப் பார்த்து, சார் இருக்கிறார், ஸ்தோத்திரம் சொல்லு, என கூறினார்கள். நான் ஏறிட்டுப் பார்த்த பொழுது, எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஊழல் பற்றிய பேச்சு நின்றது. நான் மெதுவாக அந்தப் பையனிடம், "நீ எத்தனாவது படிக்கிறாய்?" என கேட்டேன். அவன் சரியாக கவனிக்க வில்லையாததால், சார் கேட்கிறார், சொல்லு என் கூறிவிட்டு, இரண்டாவது படிக்கிறான் சார் என என்னைப் பார்த்துக் கூறினார்கள். அந்தக் குடும்பம் கொருக்குப் பேட்டையில் இருக்கிறது என நினைத்து, (கொருக்குப் பேட்டையில் நமது ஜெப கோபுரம் இருக்கிறது) எந்த பள்ளியில் படிக்கிறாய்? என்றேன். அதற்கும் அந்த அம்மாதான் பதிலளித்தார்கள், "புனித அகஸ்டின்". அந்த பள்ளி சிந்தாதிரிப் பேட்டையில் இருக்கிறது, எனவே காக்ஸ் காலனிதானே? என்றேன்.அதற்க்கு அவன்  "இல்லை சார், ஐந்து குடிசைப் பகுதி". என்றான்.  ஐந்து குடிசைப் பகுதி அந்த பள்ளியில் இருந்து சற்று தூரத்தில் (காக்ஸ் காலனியைவிட) உள்ள பகுதி). "என்ன சார் இதுகூட தெரியவில்லையா?  ஸ்கூல் நடத்தி பிரைஸ் எல்லாம் கொடுத்தீர்களே..... என் மகன் கூட வாங்கினான்". எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. பிறருடைய நலனுக்காக  சுயநலமின்றி நான் உழைப்பதை அந்தக் கூட்டம் அறிந்து கொண்டபொழுது, என்னிடம் இருந்த கைப்பிரதிகளைக் கொடுக்க ஆரம்பித்தேன். நான் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதால்தான் என்பதை வாயைத் திறந்து கூறாமலேயே.

Tuesday, 2 October 2012

Vice of sexual moral

பாலியல் குற்றங்கள்: 
 நல்லது எது? கேட்டது எது என நாம் பாகுபாடு பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கு பார்த்தாலும் புதிய நம்பிக்கையைக் குறித்துக் கேள்விப்படுகிறோம். நமது சமுதாயத்தின் பெரும் பங்கு, மகிழ்ச்சியை மையமாகக் கொண்டிருக்கிறது. மன நிலையோ தராளமாயும், முரட்டுத்தனமாயும் இருக்கிறது. அடிப்படையில் பரிசுத்தத் தன்மை குறைவும், கடவுள் பக்திக் குறைவும் காணப்படுகிறது.சில 10 வருடங்களுக்கு முன் இருந்த, ஏற்றுக் கொண்ட உயர்ந்த தரத்தில் மாற்றமும் இப்போது வந்திருக்கின்றது. இப்போது நமது காலம் பாலியல் ஒழுக்க கேட்டால் நாற்றமெடுக்கிறது. பரிசுத்த வேதாகமம்  பாலியல் ஒழுக்கமின்மையைக் கடுமையாக கண்டிக்கிறது 

1கொரி.6:9ல், "அநியாயக்காரர் தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்பதை அறியீர்களா? வஞ்சிக்கப் படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்ரக ஆராதனைக்காரரும், விபச்சாரக்காரரும், சுயபுணர்ச்சிகாரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண் புணர்ச்சிக்காரரும், திருடரும், வெறியரும், உதாசீனரும், கொள்ளைக்காரரும், தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை".                                                         
அதே நேரத்தில், பாலியல் குற்றத்தைச் செய்தவர்கள், மனந்திரும்பும் பொழுது, இரட்சிக்கப் படுவார்கள்.

கொரி. 6:11ல், "உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாய்  இருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும். நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள்; பரிசுத்தமாக்கப் பட்டீர்கள்; நீதிமான்களாக்கப் பட்டீர்கள்".
7வது கட்டளை கூறுகின்றது,
"விபச்சாரம் செய்யாதிருப்பாயாக". யாத். 20:16. இதன் அடுத்த பக்கம் ஆண்டவர் கூறுகின்றார், "உன் ஊற்றுக் கண் ஆசீர்வதிக்கப் படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு; அவளே நேசிக்கப்படத்தக்க்ப் பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கி இருப்பாயாக".

நீதி. 5:18,19.

"உன் இளமையில் உன் மனைவியோடு மகிழ்ச்சியாய், இருப்பாயாக.அவளுடைய நினைவுகளே உன்னை  எப்பொழுதும் உற்ச்சாகப் படுத்துவதாக; பைபிளின் மிகச் சிறந்த பகுதி உடலுறவைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும், விபச்சாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். எபி.13:4. 
ஏன் திருமண பந்தத்துக்குள் உடலுறவு இருக்க வேண்டும்? முதலாவது காரணம், சரீர பிரகாரமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தொடர்பு. குழந்தைப் பிறப்பை உண்டாக்கும்; அப்படிப் பிறக்கும் குழந்தைக்கு தாய், தந்தையின் அன்பும், அரவணைப்பும் தேவை. என்பதை ஆண்டவர் அறிந்திருக்கிறார். எனவேதான் ஆண்டவர் திருமணத்துக்குள்ளான உடலுறவை ஆசீர்வதிக்கிறார். இங்கேதான் குழந்தைகள்  அதிகமான் அன்பையும் அரவணைப்பையும் பெறுகின்றன. எனவே திருமண பந்தத்துக்கு வெளியே உள்ள உடலுறவு, அசுத்தமாயும், குற்றமாயும் இருக்கிறது; இது ஆரோக்கியமற்ற, நிர்வாண, வெட்கத்துக்குறிய பாவமாகும். 
அ) விபச்சாரத்தின் வகைகள்: விபச்சாரத்தின் ஆங்கிலப் பெயர்,  "அடல்ற்றி" இதன் அர்த்தம் ஊழல், அசுத்தமக்குவது என் பொருள் தரும். இதன் முழு அர்த்தம் என்னவெனில், சரியான ஒன்றை தவறாகப் பயன் படுத்துவது, மற்றும் ஒழுக்கத்துக்குப் புறம்பான செயல் என் படும். விரிவாகப் பார்த்தோமானால் பாலியல் சம்பந்தமாக சரியானவற்றை மீறுவதாகும்.  இன்னும் கூடப் பிறந்த்வர்களிடத்தில் பாலியல் தொடர்பு கொள்ளுவது, பாலியல் பலாத்காரம், திருமண பந்தத்தில் இல்லாத இருவர் உடலுறவு கொள்ளுவது, வயதிலே மூத்தவர்களோடு உடலுறவு கொள்ள நினைப்பது, கணவன், மனைவி ஒருவருக்கொருவர் நம்பாமலிருப்பது, ஓரினச்சேர்க்கை, ஒரே நாளில் அடிக்கடி உடலுறவு கொள்ளுவது, பணம் கொடுத்து உறவு கொள்ளுவது இவையனைத்தும் ஒழுக்கத்துக்குப் புறம்பான உடலுறவாகும். 
ஆ) சரீர பிரகாரமான விபச்சாரம்: திருமணத்தில் இணைக்கப் படாத இருவர், உடலுறவு கொள்ளுவது. வேதாகமம்  லேவி.18:20ல், இதைப் பற்றித் தெளிவாகக் கூறுகிறது:                      
"பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப் படுத்திக் கொள்ளவேண்டாம்".        
 இது சரீர பிரகாரமான விபச்சாரமாகும். பழைய ஏற்பாட்டில் தாவீது விபச்சாரம் செய்த போதும் மன்னிக்கப்பட்டான். அவன் தன் சோகத்தை கல்லறைவரை கொண்டு சென்றான். உங்களில் சிலர் இந்தப் பாவத்தைச் செய்திருக்கலாம். புருஷர்களே நீங்கள் அடுத்தவர் மனைவியோடு படுக்கைக்குச் சென்றிருக்கலாம். சில சகோதரிகளும் தன் கணவருக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்து, அடுத்த மனிதனோடு படுக்கையைப் பகிர்ந்திருக்கலாம். உங்கள் பாவத்தை அறிக்கை செய்து, ஆண்டவரோடும், மனிதரோடும் சமாதானமாகாவிட்டால், கொஞ்ச நாட்களில், நீங்கள் கோபமான ஆண்டவருடைய கையில் இருப்பதை அறியலாம். ஆண்டவர் எல்லா வகையான் விபச்சாரத்தையும் நியாயந்தீர்ப்பார். ஒருவரும் தப்பிக்க முடியாது. 
இ) சட்டபூர்வமான விபச்சாரம்: உலகின் அநேக நாடுகள் விவாகரத்தையும், மறுவிவாகத்தையும் சட்டமியற்றி அங்கீகரிக்கின்றன. சின்னச் சின்ன காரணங்களால் கூட அமெரிக்க தேசத்தில் விவாக ரத்து நடைபெறுகிறது. ஆனால்  இயேசு  மிக நேர்த்தியாகக் கூறியிருக்கிறார்,  

"எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாக பாவம் செய்கிறவனாய் இருப்பான்". 
 மார்க்கு 10:11.  இதே வார்த்தைகள் பெண்களுக்கும் பொருந்தும். 
பவுலின் நாட்களில், ரோமர்களின் ஆட்சியில், விவாகரத்தும், மறு விவாகமும், சட்டபூர்வமான அங்கீகாரம் பெற்றிருந்தது. (யோவான் ஸ்நானகன் காலத்திலும்) ஆனால் யோவான் ஸ்நானகன் ஏரோது ராஜாவை நோக்கி:  

"நீர் உம்முடைய சகோதரன் மனைவியை  (பிலிப்புவின்) வைத்துக் கொள்ளுவது, நியாயமல்லவென்று, ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்து கட்டி காவலில் வைத்தான்".(மார்க்கு 8:16) 
ஆண்டவரின் சட்டத்தில் திருமணம் என்பது ஒரு மனிதனையும், பெண்ணையும் வாழ்நாள் முழுவதும் இணைத்திருப்பது ஆகும். சாவு ஒன்றுதான் அவர்களைப் பிரிக்கமுடியும். ஒரு நாட்டின் சட்டம், விவாகரத்து செய்தவரை மறுமணம் செய்யலாம் என் கூறினாலும், ஆண்டவருடைய பார்வையில் அது பாவம். 
ஈ) உள்ளத்தில் வரும் விபச்சாரம்: இது ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பதின் விழைவு. இதற்க்கு ஒரு பெண்ணை தொடவேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் ஒரு ஆபாச புத்தகத்தைப் படிப்பதினால், ஒரு ஆபாச படத்தைப் பார்ப்பதினால், தொலைக்காட்சி பார்ப்பதினாலும், பத்திரிகை         வாசிப்பதினாலும் வருகின்ற கற்பனை. அநேகர் பாவத்தைக் கனவு காண்கின்றார்கள், கற்பனை செய்கின்றார்கள், ஒரு வாய்ப்பு வரும் பொழுது பாவத்தில் விழுந்து விடுகிறார்கள். ஒரு ஆங்கிலப் பழமொழி கூறுகின்றது. "வாய்ப்பு வரும் வரைதான் கற்பு". இது மனிதனின் நிம்மதியைக் கெடுத்துப் போடும்.
நாம், நம்முடைய மனதில் பாவமான கற்பனையை அனுமதிக்கவே கூடாது. அது நமது வீட்டுக்குள்ளேயே குப்பையைக் கொட்டுவதர்க்குச் சமம். பறவை எங்கு வேண்டுமானாலும் கூடு கட்டட்டும். உன் தலையில் கட்டாமல் உன்னால் பார்த்துக் கொள்ளமுடியும். இயேசு கிறிஸ்து விபச்சாரம் செய்யும் செயலை மட்டுமல்ல, உள்ளத்தில் ஏற்ப்படும் இச்சையையும் கடுமையாக கண்டித்தார். மத்தேயு 5:28ல், 

 இயேசு கூறுகின்றார்: "நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்; ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிற எவனும், தன் இருதயத்தில் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று.
'இச்சையோடு பார்க்கிற' என்ற வார்த்தை  தொடர்ந்து செயல்படுவதைக் குறிக்கிறது. எல்லா விபச்சாரமும் இச்சையோடு பார்ப்பதில் ஆரம்பித்து, செயலில் முடிவடைகிறது. 
உணர்ச்சிகரமான விபச்சாரம்: யாரோ ஒருவர், இன்னொருவரோடு விபச்சர்ரம் செய்தது, இவரை விபச்சரத்திற்குள்ளக தள்ளிவிடுகிறது. ஒருவன் தான் செய்த தான் செய்த விபச்சாரத்தை, வருனிப்பத்தின் நிமித்தமாகவும் அசுத்தமான புஸ்த்தகங்களைப்  படிக்கக் கொடுப்பதினாலும், அவன் அந்த மற்றவனின் மனதை கெடுத்து, விபச்சாரம் செய்யத் தூண்டுபவனாயும் இருப்பான். எனவேதான் நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.அசுத்தமான குறுந்தகவல் அனுப்புவது, பிறரை கவர்ச்சிக்கக் கூடிய ஆடை அணிவது, ஆபாச ஜோக் கூறுவது, இப்படி எதிர்பாலாரைக் கவ்ர்ச்சிக்கின்றனர். இதைத்தான் பெரியவர்கள் கூறினார்கள், "மட்டஞ் சேர்ந்தால் நட்டம்" என்று. 
ஒருவன் ஒரு குற்றத்தில்  பங்காளியாய் இருந்தாலும், குற்றம் செய்ய தூண்டுபவனாய்  இருந்தாலும், அல்லது குற்றம் செய்ய உதவுபவனாய் இருந்தாலும், அல்லது நேரடியாக குற்றபுரிந்தாலும், குற்றஞ் செய்தவனே. அதே போல நேரடியாக ஈடுபடாவிட்டலும், செய்கையின் மூலம், ஆடையலங்காரம் மூலம், கவர்ச்சியான பேச்சுக்கள் மூலம், எதிர்பாலாரின் எண்ணங்களை கவர்ச்சியினால் ஈர்ப்பதும் விபச்சார பாவமே.
2. விபச்சாரத்தின் விளைவுகள்: விபச்சாரம் தவறு என்பதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன. முதலாவது அது ஆண்டவருடைய சட்டத்தை மீறுகிறது. மக்களைக் காயப்படுத்துகின்றது. எதிர்கால சந்ததியைப் பாதிக்கின்றது. விபச்சாரம் என்பது, மிகக் கொடிய பாவம். 
அ)  விபச்சாரம் சமுதாயத்தை சீரழிக்கின்றது: பாலியல் குற்றங்களும், அதை எளிதாக எடுத்துக் கொள்ளுவதும், தேசங்களை கெடுக்கின்றது. பைபிளில் உள்ள சோதோம், கொமாரா பட்டணங்களைப் போல, தேவ கோபாக்கினையைக் கொண்டு வருகின்றது. விபச்சாரம் சமுதாய ஒழுக்கத்தின் இதயத்தைப் பாதிக்கின்றது. முதலாவது இல்லத்தைப் பாதிக்கின்றது. இல்லம் பழுதடையும் பொழுது, சமுதாயம் சிதைகின்றது. ரோமப் பேரரசு, மற்றும் அரசாங்கங்கள் விபச்சாரத்தினால் வீழ்ந்திருக்கின்றன. ஏனெனில் விபச்சாரம் பயங்கரமானது. 
ஆ) விபச்சாரம் தனி மனிதனை குற்றவுணர்வுக்குள்ளாக்குகிறது: மனித ஒழுக்கத்துக்குப் புறம்பான உறவுகள், குற்றவுணர்வையும், அவமானத்தையும் கொண்டுவருகின்றது. மனிதனுடைய  சமாதானத்தைக் கொன்று விடுகிறது. மனிதனுடைய, சிந்தனைகளையும், செயல்களையும் தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. சங்கீதம் 51ல், சங்கீதக் காரன் தாவீதரசன், தான் பத்சேபாளுடன், விபச்சாரம் செய்ததினால், வந்தக் குற்ற உணர்வினால் ஆண்டவருடைய மன்னிப்பைத் தேடுகிறான். தாவீது விதைத்ததை அறுவடை செய்தான். ஏனெனில் அவன் பத்சேபாளிடம் பிரவேசித்த துணிகரத்துக்குப் பின், நிலைமை அமைதியாய் இல்லை. அவனுடைய வாழ்க்கையின்  பிற்காலங்களில், தன தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பனைப் போன்ற வாழ்வு இல்லை.
இ) விபச்சாரம் மற்றவர்களையும் பாதிக்கின்றது: சில நேரங்களில் ஒரு மனிதன்  தன்னுடைய பாவத்தைக் குறித்து, இப்படிக் கூறலாம்: இது என்னுடைய சொந்த விவகாரம், நீ என்ன சொல்லுவது? என்று. ஆனால் பாலியல் குற்றம் அப்படிப் பட்டதல்ல. இது மற்றவர்களையும் பாதிக்கின்றது. சிலர் கூறுகின்றார்கள், பாலியல் தொடர்பு உடலின் பசி, சாப்பிடுவது, குடிப்பது, தூங்குவது போன்றது. சரீரம் திருப்தி செய்யப்பட வேண்டும், மண்ணு தின்பதை மனுஷன் தின்றால் என்ன? ஆனால் ஒன்றை நாம் அறிந்து கொள்ள முடியும். சாப்பிடுவது, குடிப்பது, தூங்குவது எல்லாம் தனிப்பட்ட மனிதனைச் சார்ந்தது. ஆனால் விபச்சாரம் என்பது, இயற்கையாகவே,  இரு மனிதர்களிடையே  ஏற்ப்படும் உறவுப் பிரச்சனை சம்பந்தப் பட்டது. ஒருவரைக் காட்டிலும் இருவர் ஈடுபடுகின்றனர். என்வே இதைத் தவறாக உபயோகிக்கும் பொழுது, இது அனேக பக்க விளைவுகளை ஏற்ப்படுத்தி விடுகிறது. இதில் ஈடு படுகின்ற இருவரையுமே பாதிக்கின்றது. 
3. இந்த விபச்சார பாவத்தை சரி செய்தல்: இன்றைக்கு விபச்சாரஞ் செய்வதைத் தூண்டும் யோசனைகள் மண்டிக்கிடக்கிற உலகத்தில் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம். என்வே நாம் இந்த பாவத்தில் விழுந்துவிடாமல் இருக்க நமக்கு பாதுகாப்புக் கலை தேவை. அது இந்தச் சோதனையில் எதிர்த்து நிற்க்கக் கூடிய வலு நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
அ) நான் மிகவும் வித்தியாசமானவன் / ள் என்று இந்த உலகிற்கு சவாலிட வேண்டும் என்பதை உள்ளத்தில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். நான் வித்தியாசமானவன் / ள் இந்த உலகத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் இரட்சிக்கப் படாதவர்கள். (பக்கத்து வீட்டுக்காரர்கள், உடன் வேலை செய்பவர்கள், கூடப் படிக்கின்றவர்கள்) அவர்களிடத்தில் அன்பு செலுத்துகிறோம், அவர்களும் ஆண்டவர் அருளும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என ஆசைப் படுகின்றோம். நாம் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும், அவர்களிடம் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் மன்ன்திரும்பாத வாழ்க்கையில், வேறு ஆளுகைக்குள்ளாக இருக்கிறார்கள் வேறு இடத்தை நோக்கி வாழ்க்கைப் பயணத்தை நடத்துகின்றவர்கள். நமது  வாழ்க்கை அப்படி அல்ல நமது நடை, உடை, பேச்சு பிறரோடு பழகும் தன்மை அணுகுமுறை ஆகியவை அனைத்தும் பாவம் நிறைந்த இந்த உலகத்தின் வழியிலிருந்து வித்தியாசமாக, உயர்வாக இருக்க வேண்டும்.
ஆ) பிரச்சனைகளை உருவாக்கும் சூழ் நிலையில் இருந்து விலகவேண்டும்: பரிசுத்தத்தை விரும்புகின்றவர்களுக்கு ஆண்டவர் சொல்லுகிறார்:  
 "வேசித்தன்த்துக்கு விலகியோடுங்கள்; மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்துக்கு புறம்பாய் இருக்கும்; வேசித்தனஞ்செய்கிறவனோ, தன சுய சரீரத்துக்கு விரோதமாய் பாவஞ் செய்கிறான்" 1கொரி. 6:18 .
 மேலும் வேதம், 2கொரி. 2:19ல், 

 "கிறிஸ்துவின் நாமத்தை சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விலகக் கடவனென்பதும்......" என கூறுகிறது. 
நம்மை வழி விலகப் பண்ணுகின்ற, எந்தச் நபரையும், செயலையும், சூழ்நிலையையும் நாம் தவிர்க்க வேண்டும். யோபு 31:1ல், பைபிள் கூறுகிறது: 
 "என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான், ஒரு கன்னிகையின் மீது நினைப்பாயிருப்பது எப்படி?"
அசிங்கமான அசுத்தமான, தேவையற்ற இச்சையைத் தூண்டக்கூடிய உரையாடலைக் கேட்பதிலிருந்து உங்கள் செவிகளை விலக்குங்கள். டி.வி. பார்ப்பது மற்றும் இன்டெர் நெட்டில் சந்தேகத்துக்கிடமான கற்பனையை வளர்க்கும் எதையும் பார்க்காதீர்கள், படிக்காதீர்கள். தவறான நடவடிக்கை நடக்கும் இடங்களையும், அதற்க்கு நேராக வழிநடத்தும் எந்த நடவடிக்கைகளையும், தவிர்த்துவிடுங்கள்.
இ) கிறிஸ்த்துவிடம் (கருத்தாய் நடக்கக் கூடிய வரத்துக்காக) திரும்பு:  இயேசுவை தன ஆளுநராக, வழிகாட்டியாக ஒருவர் ஏற்றுக் கொண்ட பின் சோதனையைச் சந்திக்கையில் பரிசுத்தத்திற்கு சரி என்றும் இச்சைக்கு இல்லை என்றும் விலகப் பலப் படுத்துகின்றார். மேலும் இயேசுவை ஏற்றுக் கொள்ளும் பொழுது கூடவே பரிசுத்த ஆவியின் வரத்தையும் பெற்றுக் கொள்ளுகின்றார். அந்த பரிசுத்த ஆவியானவர் அவரது சரீரம் சுத்தமானதாக இருக்க பராமரிக்கின்றார். நாம் செல்லுமிடமெல்லாம் ஆண்டவருடைய பிரசன்னத்தைக் கொண்டுவரவேண்டும். நீதி.15:3ல்,  

"கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும், தீயோரையும் நோக்கிப் பார்க்கின்றது". "என் உள்ளம் பரிசுத்தமாயிருக்க, எப்பொழுதும் என்னைக் காத்தருளும்".என்று ஜெபிக்க வேண்டும். 
விபச்சாரம், வேசித்தனம், ஓரினச்சேர்க்கை இவற்றின் மூலம் உங்கள் நேரத்தையும், சரீர் சுகத்தையும் வீனடித்திருந்தீர்களானால், உங்களுக்கோர் நற்செய்தி: மேரி மகதலேனாள் என்ற  ஸ்திரி விபச்சாரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டு, தண்டனைக்குத் தயாரான பொழுது, இயேசு தலையிட்டு, அவளை தண்டனைக்கு விடுவித்துச் சொன்னது, "நானும் உன்னைத் தண்டிப்பதில்லை, போ, இனி பாவஞ் செய்யாதே" தன பாவத்தை உணர்ந்து இயேசுவிடம் அறிக்கை செய்து, தவறான உறவைத் துண்டித்து, சரியான் வாழ்க்கை வாழ வாஞ்சிக்கும் பொழுது, ஆண்டவர் மன்னித்து ஆவி, ஆத்துமா, சரீரத்தைச் சுத்தம் பண்ணுகிறார்; நீ கூட உனது பாவத்தின் வடுக்களைச் சுமந்து கொண்டு, இடுகாட்டுக்குப் போகும் வரை இப்படித்தான் இருக்கும் என் நினைத்துக் கொண்டிருக்கலாம், மேலே உள்ள வழிகளை ஏற்றுக் கொண்டால், 

இயேசு கிறிஸ்துவால் உன்னை விடுதலையாக்க முடியும்!
உன் வாழ்க்கையை இயேசுவுக்கு ஏன் அர்ப்பணிக்கக் கூடாது?
இயேசு உன்னை நேசிக்கிறார்!!

ஜெபிப்போமா? 
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உமது சமூகத்தில் வருகிறோம். மனிதனோ முகத்தைப் பார்க்கிறான்; தேவனோ இருதயத்தைப் பார்க்கிறார் என்று எழுதியிருக்கிறபடி, எங்களது இருதயத்தை ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவனே உம்மைத் துதிக்கிறேன். உம்மை மகிமைப் படுத்துகிறேன். நாங்கள் அறியாமல் நடிகையோடும், நடிகரோடும் எதிர் பாலாரோடும் கற்பனையில் செய்த விபச்சாரத்தை  மன்னியும்; இளமைத் துடிப்பில் பெண்களை தவறாக அணுகியதை எல்லாம் மன்னியும். இது அடுத்தவர்களுக்கு தெரியவா போகிறது? என் தைரியமாகச் செய்த பாவமான கற்பனைகளை அறிக்கை செய்கின்றோம், நீர் எங்களுக்காக எங்கள் பாவங்களுக்காக சிலுவையில் பட்ட பாடுகளை நினைத்து ஒருவிசை இறங்கும் படியாய், ஜெபிக்கிறோம். பாலியல் குற்றங்களுக்கு விலகி வாழ விரும்புகிறோம், இந்த செய்தியில் வாசித்ததைப் போல, விலகியோடவும், பரிசுத்த வாழ்க்கை வாழவும் எங்களை அர்ப்பணிக்கின்றோம். உமது பரிசுத்த ஆவியைத்தந்து எங்களைப் பலப்படுத்தும்படியாய் ஜெபிக்கிறோம், தேவையில்லாத நினைவுகளுக்கு விலகி வாழ் எங்களுக்கு உதவி செய்யும், பாலியல் குற்றங்களில் வாழும் எங்கள் நண்பர்களை அதிலிருந்து விடுவிக்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபங்கேளும், எங்கள் பிதாவே. ஆமென். ஆமென்.
நீங்கள் உண்மையாய செய்த இந்த வேண்டுதலைக் கேட்டு இயேசுகிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார். 

உங்கள் மனசாட்சியில் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தந்தருளுவாராக.          .             .    
.