காதல் கடிதங்கள் மண்ணில்........
ஒவ்வொரு அலையிலும் உடைகிறது
காதல் கடிதங்கள் மண்ணில் கிடக்கின்றது"
புதைக்கப்பட்ட உணர்வுகளை கிருபை மீண்டும் எழுப்புகிறது
அன்பு நிறைந்த உள்ளத்தால் தொடப்பட்டது, பாசத்தால் எழுப்பப்பட்டது
மீண்டும் உடைந்து போன சுரங்கள் இசை மீட்டின.
ஒவ்வொரு விசுவாசிக்கும் ஆண்டவரின் உறுதி மொழி;
இழிவான, ஒழுக்கக்கேடான்வன் உண்மையாக விசுவாசிக்கும் பொழுது,
அந்த கனப்பொழுதில் இயேசுவிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்"
இது :"பைபிள் ஹெலப்" நிறுவனத்தின் வெளியீடாகும்.
காதல் கடிதங்களைப் பற்றிய நினைவுகள், அனேக மகிழ்ச்சியான் பழைய நிகழ்சிகளை நினைவுக்குக் கொண்டு வாருகின்றன. ஒருவரை ஒருவர் அதிகமாய் மதிக்கின்ற, நேசிக்கின்ற இருவரும் வெகுதூரத்தில் இருக்கும் பொழுது அவை தொடர்பை ஏற்படுத்த உதவுகின்றன. எங்கே சந்திப்பது? என்ன கிப்ட் கொடுப்பது? போன்ற தகவல்களை இடைவெளி இல்லாமல் இக்கடிதங்கள் பகிர்ந்து கொள்ளுகின்றன. உங்களில் சிலருக்குக் கூட பல வருடங்களுக்கு முன் எழுதிய காதல் கடிதங்களை கட்டுக்கட்டாக பத்திரப்படுத்தி வைத்து, பரனிலிருந்து எடுத்து மீண்டும் படித்துப் பார்ப்பதில் விருப்பமாய் இருக்கிறது. ஒரு சிறு குழந்தையைப் பற்றிய ஒரு குருங்க்கதை இப்படிக் கூறுகிறது : அவள் வீட்டுக்கு வெளியே விளையாடிவிட்டு வீட்டுக்குள் வந்து தன தாயிடம் தான் புதிதாக கண்டு பிடித்த விளையாட்டைப் பற்றிக் கூறியது. அந்த விளையாட்டுக்கு "தபால் நிலையம்" எனப் பெயர் வைத்தது. பரணில் இருந்த ஒரு கட்டுக் கடிதங்களை எடுத்து, அந்தத் தெருவில் இருந்த ஒவ்வொரு வீட்டுத் தபால் பெட்டியிலும் போட்டு விட்டு வந்தது. ஒரு பாடலின் வரிகள் இப்படிச் சொல்லுகிறது:
"எனது குட்டி இதயம் இப்பொழுது வலிக்கிறது ஒவ்வொரு அலையிலும் உடைகிறது
காதல் கடிதங்கள் மண்ணில் கிடக்கின்றது"
கடற்கரையில் சந்தித்த இரு காதலர்களின் படம் இது. அவர்கள், தங்களது காதலை சிறிய செய்திகளாக கடற்கரை மணலில் எழுதிய உடன் அவைகள் கடல் அலைகளால் அழிக்கப் பட்டு விடுகின்றன.எழுத எழுத அலைகள் திரும்பத் திரும்ப வந்து ஒவ்வொரு முறையும் அழித்து விடுகின்றன. ஆனால் காதலைப் பற்றிய நமது இன்றைய செய்தி காலத்துக்கும் அழிக்க முடியாதவை. உனக்குக் காதல் கடிதம் தேவையா? ஆண்டவர் உன் இதயத்துக்கு ஏற்ற ஒன்றை வைத்திருக்கிறார்.
காதல் கடிதம் தேவைப் பட்ட ஒரு பெண்ணிருந்தாள். அவளைக் குறித்து யோவான்8:11ல், குறிப்பிடப்பட்டுள்ளது. அவளுடைய குற்ற உணர்வைக் குறித்து எந்தக் கேள்வியும் இல்லை. அவள் விபச்சரத்திநிமித்தம் பிடிக்கப் பட்டு, பரிசேயர்களால் அதிகாலையிலேயே இயேசுவிடம் கொண்டுவரப் பட்டாள்.வசனம் 2 சொல்லுகிறது,இது நடந்தது எருசலேம் தேவாலயத்துக்கு அருகில். அது சட்டத்தைப் பற்றியும் சட்டத்தின் மேன்மையைக் குறித்தும், அதைக் கடைப் பிடிக்க வேண்டிய உறுதியைக் குறித்தும் கூறும் இடம். வசனம் 3 அவளுடைய வாழ்க்கைப் பதிவு செய்கிறது. மோசேயின் சட்டம் கூறுகின்றது, இவளைக் கல்லெறிந்து கொள்ளவேண்டும் என்று. நீர் என்ன சொல்லுகின்றீர்? அங்கே குற்றம் சாட்டுவதில் வல்லுனர்கள் இருந்தார்கள். அவர்கள் தீர்ப்பை எதிர் பார்த்தார்கள். அவளுடைய பிறப்பு வளர்ப்பைப் பற்றி எந்தவிதமான குறிப்பும் இல்லை.அவளுடைய பழைய வாழ்க்கை தெளிவாக இல்லை. ஆனால் , அந்தக் காலை வேளையில் அவள் நியாயத்தீர்ப்புக்கு தயாராய் கொண்டுவரப் பட்டாள். சிலர் கற்களை கையில் எடுத்து ரெடியாக நின்றனர். இயேசு ஒரு வாரத்தை கூறிய உடன் அந்த பாவியன் ஸ்திரீயை முடித்துவிட ஆர்வமாய் இருந்தனர்.
பதில் சொல்லுவதற்குப் பதிலாக, வேதம் சொல்லுகிறது: இயேசுவோ குனிந்து விரல்களினால் மண்ணில் எழுதினர். இயேசு என்ன எழுதுகிறார் என்பதைக் குறித்து அநேகருக்கு ஆச்சரியம். நமக்கும் அவர் என்ன எழுதினர் என்பது தெரியாது.ஆனால் அது தனிப்பட்ட மற்றும் குறிப்பான் செய்தி. வெளிப் படையாக, பொது மக்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும் என் திட்டமிடாத செய்தி. இதே விரல்கள் பல்வேறு காலங்களில் எழுதியவைகள், நாம் கற்றுக் கொல்ளுவதற்காக்வும், நம்மை ஒழுக்கத்தில் மேம்படச் செய்யவும் வேத புத்தகத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ளது. இதே விரல்கள் 10 கட்டளைகளை எழுதியது. இயேசு கிறிஸ்துவின் விருப்பங்கள் நற்செய்தி நூல்களிலும் வெளிப்படுத்தின விஷேசத்திலும், கொரிந்தியருக்கு எழுதியத்திலும் இருப்பதை நாம் அறிவோம். இங்கு நாம் யூகிக்கவே முடியும். என்ன எழுதியிருந்தாலும், அது அவளது கண்ணீரைத் துடிப்பதாகவும், பயத்தை நீக்கி அமைதிப் படுத்த்துவதாயும், அவளுடைய வாழ்க்கையையே மற்றியமைப்பதாயும் நிச்சயமாய் இருந்திருக்கும். இயேசு மண்ணில் எழுதிய செய்தி என்ன என்பதைக் குறித்து நாம் மிகச் சரியாக அறியாவிட்டாலும், நான் 3 கருத்துக்களை இயேசு எழுதியிருக்கலாம் என் நினைத்து உங்கள் முன் வைக்கிறேன்.
1 ஆண்டவர் பூரனமில்லாத மனிதர்களை நேசிக்கிறார்: . இயேசுகிறிஸ்து குனிந்து மண்ணில் எழுதிய பொழுது அவருக்கு முன்பாக இருந்த காட்சியை ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது, அவர் பிதாவின் அளவற்ற அன்பைப் பற்றிய அறிவினால் நிறைந்திருக்க வேண்டும். என் நான் நினைக்கின்றேன்.இயேசு உன்னதமான ஆண்டவருடைய சிங்காசனத்திளிருந்து வந்த பொழுது உண்மையான, தெய்வீகமான, களங்கமற்ற / கரையற்ற, பரலோக அன்பும் இறங்கி வந்தது. நான் அவருக்கு முன்பாக இருந்த தேவையிலுள்ள ஆத்துமாவுக்கு அவர் எழுதிய காதல் கடிதமாக அதை நினைக்கின்றேன். அவர் மத்தேயு 21ல் எழுதியுள்ளார், ஆயக்காரரும், வேசிகளும் உங்களுக்கு முன்பாக தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள்......." கிறிஸ்துவின் அன்பு, இயேசுவை நெருக்கி தவறுகள் மற்றும் அவமானத்தால் உடைக்கிகப்பட்ட வாழ்க்கையின் ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கம்வரை சென்று (வாழ்க்கையை) புனிதப் படுத்த சாத்தியமாக்கஊகிறது.:
எப்பொழுதுமே தங்களை நல்லவர்கள் என்று நினைக்கின்றவர்களுக்கு உதவி செய்வது கடினமானது. அவர்களுக்கு வைத்தியன் தேவை இல்லை ஆனால் வியாதியோடே இருப்பார்கள்.அந்த நாளில வியாதி பிடித்த ஆத்துமா ஒன்று இயேசுவின் முன்னே நின்றிருந்தது. அவளது அருவருக்கத் தக்க, கீழ்த்தரமான வாழ்க்கையினாலே ஆத்துமா வியதிப்பட்டிருந்தது. சமுதாயத்திற்கு தன் சரீரத்தை விற்றிருந்தாள். அவளுக்கு வைத்தியன் தேவையே ஒழிய குற்றம் சாட்டுகிறவர்கள் அல்ல. தேவகுமாரன் ஒருவரே அவளுடைய உள்ளத்தின் ஆசை, இச்சைகளின் ஆழத்தைக் காணமுடியும். அவர் மட்டுமே அவளுடைய உள்ளத்தின் உள்ள ஆற்றல்களைக் பார்க்க முடியும். எத்தனை வருடங்களை பாழாக்கியிருக்கிறாள். என்பதை தேவகுமாரன் ஒருவரே அறிய முடியும். இயேசு அவளை விடுதலையாக்குவதற்கான ஏதோ ஒரு தகுதியை அவளிடம் கண்டார்.யோவான் 8:10ல், அவளை "ஸ்திரியே" என் அழைத்தார். அவர் அவளுக்குள்ளிருந்த பெண்மையைப் பார்த்தார். அதை வெளிக்கொண்டு வர விரும்பினர். மகதலேனா மரியாளைப பற்றி லூக்கா 8:1-3ல், ஏழு பிசாசுகள் அவளது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருந்தது. இயேசு கிறிஸ்து ஒரு மர்ற்றத்தைக் கொண்டு வந்தார். "கேட்டுப் போனவர்களை மீட்குதல்" என்ற பாடல் இயேசு கிறிஸ்துவின் அன்பைப் பற்றிக் கூறும்போழுது,
மெல்லிறகைப் போன்ற மனித உள்ளம், சோதனைகளால் பிழியப்ப்படும்போது புதைக்கப்பட்ட உணர்வுகளை கிருபை மீண்டும் எழுப்புகிறது
அன்பு நிறைந்த உள்ளத்தால் தொடப்பட்டது, பாசத்தால் எழுப்பப்பட்டது
மீண்டும் உடைந்து போன சுரங்கள் இசை மீட்டின.
அநேகர் இன்று பாவத்த்னால் பிழியப் பட்டுள்ளனர். கேலியினாலும், ஏளனப் பேச்சாலும் தனிமைப்படுத்தப் பட்டதாக உணருகின்றார். சங்கீதக்காரன் தாவீது, சங்கீதம் 51:8ல் "நான் சந்தோஷமும் , மகிழ்ச்சியும் கேட்கும்படிக்குச் செய்யும். அப்பொழுது நீர் நொறுக்கிய எலும்புகள் களிகூரும்" அவன் மீது ஒரு ரோடு போடும் இயந்திரம் சென்றதைப் போன்று நசுக்கப்பட்டவனாய் கதறுகிறான். அவனுக்கு ஒரு காதல் கடிதம் தேவைப் படுகிறது. விழுந்து போனவர்களை எழுப்பியும், உடைந்து போன உள்ளங்களை சுகப்படுத்தியும், சாம்பலுக்கு சிங்கரத்தையும்க் கொடுப்பதுவுமே இயேசுவுக்கு முழு மனமூன்றிச் செய்யும் தொழிலாய் இருந்தது. ஆங்கில வேதாகமத்தில் உள்ள வசனம் என்னவெனில் "தேவன் அன்பாகவே இருக்கிறார்" இயேசுகிறிஸ்து மண்ணில் எழுதியதாக கருதப்பட்ட வசனம் இந்த 14 எழுத்துக்களைக் கொண்டதாக இருந்திருக்கலாம்.என எடுத்துக்கொள்ள முடியாது. கடந்த 19 நூற்றாண்டு காலமாய் அவர் மண்ணில் எழுதிய வாசகங்களின் பொருளின் ஆழத்தை அறியாமலும், அதன் ஆசீர்வதங்க்களைப் பெற்றுக் கொள்ளாமலும் இந்த உலகம் உள்ளது. இயேசு இப்போழுதுங்க்கூட உனக்காகவே காதல் கடிதத்தை வைத்திருக்கிறார்.
இந்தப் பெண்ணுக்கு அன்பும் ஆதரவும் தேவையாய் இருந்தது. குர்ற்றங்காணு தலும், தீர்ப்புக் கூறுவதும் அல்ல. யோவான் 3:17 கூறுகிறது: "உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்ச்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினர்". இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனால் இந்த உலகிற்கு அனுப்பப்பட்டவர். எல்லோருடைய முகவரியும் ஆண்டவருக்கு நன்கு தெரியும். பைபிள் கூறுகிறது, இயேசு இதோ வாசற்படியில் நின்று தட்டுகிறேன்..." நமது முதல் கருத்து என்னவெனில், ஆண்டவர் பூரணமில்லாத மனிதர்களை நேசிக்கிறார்.
2.ஆண்டவர் பூரனமில்லாத மனிதர்களின் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுகின்றார்: பூரனமில்லாத மனிதர்களுக்குத்தான் மன்னிப்பு அவசியம்.தேவைப்படுகின்றது. இயேசு அவளுக்குச் சொல்லும்பொழுது, "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாக தீர்கிறதில்லை." (வ 1). இந்த வார்த்தை பிழைகளைப் பொறுத்துக்கொல்லுவதைக் குறிக்கிறது. பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுவது என்றால், மன்னித்தல், குற்றத்திற்கான தண்டனையைக் குறைத்தல், என் பொருள்படும். நயவஞசகமான இந்த உலகத்தின் பாவங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து. மிகப் பிரமாண்டமாக குவித்து வைக்கப்பட்டிருப்பதாக நீ நினைக்கும் பொழுது, அன்பான, பரிசுத்தமுள்ள ஆண்டவரின் நற்செய்தியில் உள்ள மிக அழகான வார்த்தை என்னவெனில், "பிழைகளைப் பொருத்தருளுதல்". குனிந்து அவர் மண்ணிலே எழுதும் பொழுது, அவரது உள்ளம் ஒவ்வொரு மீறுதலுக்கும், பாவத்திற்கும் முன்னேற்பாடு இருக்கிற பரலோகத்தில் உள்ள பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுவதை நோக்கி உயர்ந்தது. அவர் 1யோவான் 1:9ல், எழுதினார்: "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" சீற்றத்துடன் இருந்த குற்றஞசாட்டுகின்றவர்களிடம், அவளுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ளக்கூடிய தன்மை இல்லை. ஆனால் இயேசு எழுதிய வார்த்தைகளில் அது இருந்தது.
ஆதியாகமம் 38ல், இயேசு தன முன்னோர்களில் தாமாரைப் பற்றிய அழுக்கான சம்பவத்தை எழுதிவைத்தார். அது யூதாவின் குடும்பத்திலே நடந்தது. யாக்கோபின் மகன்களில் ஒருவனாகிய யூதா என்பவன் சூவா என்ற பெண்ணை மணமுடித்து, மூன்று பிள்ளைகளுக்குத் (ஏர், ஓனான், சேலா) தகப்பனானான். வாலிபப் பருவம் வந்தபோது, ஏருக்கு தாமார் என்ற பெண்ணைத் திருமணம் பண்ணிவைத்தான். அவனுடைய பாவத்தினிமித்தம் கர்த்தர் அவனை அடித்தார். அவன் மரித்தான். அந்த நாட்களின் பழக்கப்படி குழந்தை இல்லாமல் ஆண் இறந்து போனால், அவனுக்குத் திருமணமாகாத சகோதரன் இருந்தால், அந்த விதவை மனைவியின் கணவனின் பொறுப்பை அடுத்தவன் ஏற்றுக்கொண்டு இறந்து போன தமையனுக்கு அந்த விதவையின் மூலமாக வரிசைப் பெற்றுத் தர வேண்டும்.(உபாகமம் 25:5,6) எனவே இரண்டவது மகனுக்கு (ஓனான் ) தாமார் திருமணம் செய்து வைக்கப்பட்டாள். ஆனால் அவனுடைய விசுவாசமற்ற / உண்மையில்லாத தன்மையினால் ஆண்டவர் அவனையும் கொன்று போட்டார். மீண்டும் தாமார் குழந்தையில்லா விதவையானாள். இன்னும் ஒரு இளைய பையன் சேலா இருந்தான். யூதா தாமாரிடம், தனது இளைய மகன் சிறு பையனாய் இருக்கிறான், எனவே வளர்ந்தபின் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன், அவன் மூலமாக குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என் உறுதியளித்தான். குழந்தையில்லாத ஒரு பெண்ணின் நிலை தான் இது.
சில வருடங்கள் கழிந்தன. யூதாவின் மனைவி சூரா மறித்தாள். நாட்கள் கடந்தன. சேலா நன்கு வளர்ந்தும் அவனை தாமாருக்குக் கொடுக்க வேண்டும் என்று யூதா நினைக்கவே இல்லை. இது தாமாருக்கு சங்கடமாக இருந்தது. ஒரு நாள் யூதா தன மந்தைகளின் நிலைமையைப் பார்த்துவர, திம்னாத்துக்குப் போய்க் கொண்டு இருந்த போது, வழியில் ஒரு விலைமகளைப் போல ஆடை அணிந்து உட்கார்ந்து இருந்தாள். அவள் தன்னுடைய மருமகள் என்பதை அறியாமல், அவளுடன் பேசி, அவளுக்கு ஒரு விலை பேசி சில ஆபரணங்களைக் கொடுத்து அவளோடு சயனித்தான். விபச்சாரம் செய்தான். அதனால் அவள் கருவுற்றாள்.
மூன்று மாதங்கள் கழிந்தன. தாமார் கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தி எங்கும் பரவியது. யூதாவிற்கு செய்தி எட்டிய பொழுது தாமார் அழைக்கப்பட்டு எரிக்கபட வேண்டும் என ஆணையிட்டான். ஆனால் தானே அதில் சிக்கியிருக்கிறான் என்பதை அவன் அறியவில்லை. அவள், அவன் கொடுத்த விலையை காட்டிய பொழுது அவனுடைய சின்னஞ்சிறு உலகம் உடைந்து சின்னாபின்னமகியது. அது அவனுக்கென வைத்திருந்த பொருட்கள். இந்தப் பொருட்களை உடையவனால்தான் நான் கர்ப்பந்தரித்தேன் எனக் கூறி கைக்காப்பு, முத்திரை மோதிரம், தடி எனக் காட்டினாள். "யூதா அவைகளைப் பார்த்தரிந்து; என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்கு கொடாமற் போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. (ஆதி.38:26). அவளுடைய பிரசவ காலத்தில் அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவைகளுக்கு பாரேஸ், சேரா எனப் பேரிடப்பட்டது.
புதிய ஏற்பாடு, மத.1:1-3ல், "ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு:
"ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும், அவன் சகோதரரையும், பெற்றான்; யூதா பாரேசையும், சாராவையும், தாமாரிடத்தில் பெற்றான்; பாராஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;...." இந்த வம்சத்திலேதான் இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றினர். பரிசுத்த வேதாகமத்தை எழுதியவர்களை ஆண்டவர், பழைய ஏற்பாட்டுப பரிசுத்தவான்களின் தவறுகளை விரிவாக எழுதும்படி ஊக்கமளித்தார். காரணம், நாம் மனந்திரும்பும்போது எவ்வளவு தூரம் அவர் நம்மை மன்னிக்க விரும்புகின்றார் என்பதை நமக்குக் காண்பிக்கவே. இதை நான் இங்கு குறிப்பிடக் காரணம் யூதாவைப் போலவே நாமும் இந்தக் குற்றங்களைச் செயயலாம் என் ஊக்கப்படுத்துவதற்காக அல்ல; ஆண்டவருடைய பரந்த உள்ளத்தில் உள்ள பொறுத்துக் கொள்ளும் மனப்பான்மையை நாம் மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான். இயேசு தமது வம்சாவழியில் இன்னொன்றையும் எழுதினார். அது மத்தேயு 1:6ல் "ஈசாய் தாவீது இராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாய் இருந்தவளிடத்தில் சாலமோனைப் பெற்றான் ;..." அதுதான் ஒவ்வொருவரும் சத்தியத்தை கருப்பு வெள்ளையில் காண முடியும். பத்சேபாளுடன் தாவீது நடத்திய லீலைகள் மிக மோசமானவைகளாகத் தெரியும். ஏனெனில் அவை மதிப்புக்குரிய கதாபாத்திரங்கள். அப்.13:22ன்படி, "...தாவீதை என் இதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்;..." என் ஆண்டவரே கூறுகின்றார். ஆனால், அவன் அடுத்தவன் மனைவியுடன் விபச்சாரம் செய்தான் என் நாம் பார்க்கிறோம்(2சாமு.11). அதனால் தவறாகப் பிறந்த குழந்தை, கொலையும் கூட. அவனது உயர்வான் உள் நோக்கங்கள் மற்றும் அவன் அவன் அறிமுகமான தன்மையிலிருந்து அவன் விழுந்து விடுகின்றதைப் பார்க்கின்றோம். சுவிஷேசத்தில் ஆண்டவரின் பொறுத்துக் கொள்ளுதல் என்ற நற்செய்தி, தாவீது மற்றும் பத்சேபாளுடன் சேர்த்து ஆண்டவரின் கிருபையாக இருக்கிறது. தாவீதின் உயர்ந்த தன்மையானது, சங்கீதம் 51ல் உள்ளபடி தனது பாவத்துக்காக கதறி அழுது ஆண்டவருடைய கிருபைக்காக கெஞசியதுதான்.
யோவான் 8ல், விபச்சாரத்தில் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட பெண்ணை என்ன செய்ய வேண்டும் என் ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, இயேசு சொன்னார்: "உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி....." அவருடைய வற்புறுத்தல்கள் எல்லாம் தன்னை நேருக்குநேர் சந்தித்தவர்கள் அனைவரும் பூரணாயிருக்க வேண்டும் என்பதுதான். அவருடைய வழிகாட்டும் நெறிகளின் படி, இயேசு ஒருவர்தான் பாவமில்லாதவராக இருந்தார். அவளின் மேல் கல்லெறிய தகுதியுடையவராயுமிருந்தார். அவர் கல்லெறிவதற்குப் பதிலாக கீழே குனிந்து, பொருத்துக்கொள்ளுவதைப் பற்றியா காதல் கடிதம் எழுதினார்.
"ஓ பரிபூரணமாக பாவத்திலிருந்து விடுதலை, இரத்தத்தின் கொள்முதல் ஒவ்வொரு விசுவாசிக்கும் ஆண்டவரின் உறுதி மொழி;
இழிவான, ஒழுக்கக்கேடான்வன் உண்மையாக விசுவாசிக்கும் பொழுது,
அந்த கனப்பொழுதில் இயேசுவிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்"
எனவே நாம் ஒரு முடிவிற்கு வருகின்றோம், ஆண்டவர் பூரனமில்லாத நபர்களை நேசிக்கிறார் அல்லது ஆண்டவர் பூரனமில்லாத மனிதர்களை பொறுத்துக் கொள்ளுகின்றார்.
3. ஆண்டவர் பூரனமில்லாத மனிதர்களைப் பயன் படுத்துகிறார்:
யோவான் 8:11ல், இயேசு சொன்னார்: "நீ போ, இனி பாவஞசெய்யதே என்றார்".தேவனுடைய இராஜ்யததில் அவர் பூரணமில்லாத மனிதர்களை உபயோகப்படுத்தவில்லையானால், உண்மையாகவே வேலை செய்கின்ற மனுஷர்களை குறித்து வேதாகமத்தில் எந்தக் குறிப்புமே இல்லை. இயேசுவின் பார்வையில், இந்த உலகத்தில் எப்பொழுதுமே பூரணமில்லாத நபர்கள்தான் இருந்தனர், இருக்கின்றனர். அவர்கள் அவளைப் பயனற்றவர்கள் என் நினைத்தனர். பாவம் நீக்கப்பட்ட அவளை பற்றிக் கற்றுக் கொள்ள அவர்களுக்குத் தேவை இருந்தது. மீண்டும் பயனுள்ள, மதிப்புக்குரியவளாக மாற முடியும். நமது பாவம் நம்மை நரகத்தில் தள்ளுவதை விட, நம்மை வெட்கப்படச் செய்வது மேலானது. அநேகர் தங்கள் பாவங்களையும் பூரனமில்லாத தன்மையையும் மறைத்து, மற்றவர்களிடமும், ஆண்டவரிடமும் நன்மையைப் பெற்றுக் கொள்ளலாம் என் நினைக்கின்றனர். ஆனால் வேதம் கூறுகின்றது: தன பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இறக்கம் பெறுவான்." இப்பொழுது நான் பாவத்தினால் வரும் வெட்கத்தை பொறுமையோடு தாங்கிக் கொண்டு, நியாயத்தீர்ப்புக்கு அனுப்பி, இயேசுவின் இரத்தத்திற்கு கீழாக கொண்டுவந்து வைப்பதற்கு மாறாய் ஒருவரும் அறியாதவாறு மறைத்து வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தால், நியாயத்தீர்ப்பு வரை அது என்னைப் பின் தொடர்ந்து வந்து, அடுத்த உலக வாழ்க்கையிலும் தண்டிக்கக் கூடியதாய் இருக்கும். ஒருவரும் இந்த பைபிள் பகுதியை சரியாக விரிவுபடுத்தவில்லையாததால், விபச்சாரத்தை இயேசு இலகுவாக எடுத்துக் கொள்ளுவார் என் நினைக்கின்றனர். அவர் சொல்லுகிறார், "போ, இனி பாவ ஞ செய்யாதே"
இயேசு இந்த வசனத்தை மண்ணில் எழுதியிருக்கலாம்..(எபிரெயர் 11:31) "விசுவாசத்தினாலே ராகப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக் கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்" இங்கே ஒரு வேசி. இவள் எரிகோ பட்டணத்தின் அனைத்து மக்களிலும் தேவனால் பயன்படுத்தப்பட்டவள். அந்தப் பட்டணம் ஒழுக்கக் கேடுகளினால் நிறைந்திருந்தது. அவளை யாரும் அவளது பாவத்திற்காக ஒரு போதும் பிடித்துக் குற்றம் சாட்டியதில்லை.ராகாப்பின் முந்தைய வாழ்க்கை அவளுக்கு ஒரு பெயரைப் பெற்றுத்தந்தது. அது ராகப் என்னும் வேசி. இந்தத் தழும்பு புதிய ஏற்பாட்டிலும் மாறவில்லை. அதிலும் இந்தப் பெயருடனே அழைக்கப் படுகிறாள். இரட்சிப்பு என்பது சமுதாயத்தில் உள்ள உயர்ந்த நிலையில் இல்லை என்பதை அவள் அறிவாள். அவள் ஒருபோதும் இப்படி, "நான் அந்தப பரிசெயனைப்போல் இல்லை, இந்த வேசியைப் போல இல்லை, இந்தத் திருடனைப் போல இல்லை எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றேன்" என்று ஜெபித்ததில்லை.
பாவங்கள் மன்னிக்கப் படுவதைத் தவிர, சுவிஷேசமனது நம்மை புதிய உயர்வான நிலைக்கு அழைத்துச் செல்லுகிறது. ஆண்டவர் பூரணமில்லாத நபர்களை உபயோகப் படுத்துகின்றார். பாவத்தைக் குறித்த அறிவினாலே நாம் அனைவரும் பிடிக்கப் பட்டிருக்கிறோம். இயேசுவோ நாம் ஆண்டவருடைய நாம மகிமைக்காக வாழ் அழைக்கிறார். பெண்கள் இந்தக் குற்றத்திற்காக தண்டிக்கப் படும் பொழுது ஆண்கள் நிலை என்ன? எங்கே அவன்? அவளைக் குற்றஞசுமத்திஅழைத்து வந்த இந்தப் பொல்லாத மனிதர்கள் கூட அவளது பாவத்தின் பங்காளிகளாக இருந்து அவர்களின் இச்சைகள் திருப்தி செய்யப்பட்டபின் அவளை குப்பையைத் தூக்கி எரிய வாய்ப்பு இருக்கலாம் அல்லவா?
ஆண்டவர் எப்பொழுதும் காதல் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பதில்லை. தானியேல் 5ம் அதிகாரத்தை நீங்கள் வாசித்துப் பார்த்தீர்களானால், பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்கள் 1000 பேரோடு விருந்தில் குடித்துக் கொண்டிருந்தான். அந்த விருந்தில் உச்சகட்டமாக, யூதர்களின் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டு வந்த பொன், வெள்ளிப் பாத்திரங்களில், தன பிரபுக்களுக்கும் தன் மனைவிகளுக்கும் தன வைப்பாட்டிகளுக்கும் மதுபானங்களை ஊற்றிக் கொடுத்தான். மேலும் தங்கள் நாட்டின் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள். வேதம் சொல்லுகிறது, "அந்த நேரத்திலே மனுஷ கை விரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரண்மனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின கையுருப்பை ராஜா கண்டான். அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுக்கள் தளர்ந்தது. அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டது." (தானி.5:5,6) அந்த இரவே பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான். அந்தக் கை சுவரிலே எழுதியது இதுதான்; "நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்"
யோவான் 8ல், உள்ள கடைசிக்காட்சியை நாம் விட்டுவிடப் போவதில்லை. 9ம் வசனத்தின் கடைசிப் பகுதி இது. "இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரி நடுவே நின்றாள்". நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்ளுகிறேன், இயேசுவோடு தனித்து இருக்கக் கூடிய வாய்ப்பு இது. மற்றவர்கள் உன்னைக் கல்லெறியலாம், தகாத வார்த்தைகள் பேசலாம். இயேசு உன்னைக் கேட்பதற்கு அக்கறையுள்ளவராய் இருக்கிறார். இக் கைப்பிரதி உனக்குத் தெரிவிப்பது என்னவென்றால் இயேசு உனக்காக ஒரு காதல் கடிதத்தை வைத்திருக்கிறார். மனதுருக்கத்தின் கடிதம், பொறுத்துக் கொள்ளும் கடிதம், உன்னை உபயோகிக்கும் கடிதம். இன்று உன் இருதயம் என்ற தபால் பெட்டியைத் திறப்பாயா? - ஜேம்ஸ். எப். மையர்.
இது :"பைபிள் ஹெலப்" நிறுவனத்தின் வெளியீடாகும்.
