கடவுளிடம் (மனந்) திரும்புங்கள்!!!
கடவுளிடம் மனந திரும்புங்கள் என்றால், நம் வாழ்வில் இது தவறு என எதையெல்லாம் நினைக்கின்றோமோ, அதை எல்லாம் விட்டு விலகுவது - பாவத்திலிருந்து திரும்புவது, பாவம் செய்யும் விருப்பத்தை விட்டு விடுவது.
பரிசுத்த வேதாகமத்தில் மனந்திரும்புதல் மனந்திரும்புதல் என்ற வார்த்தை அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டுத் தீர்கத்தரிசிகள் மக்களை மனந்திரும்பும்படி அழைப்பு விடுத்தனர். எசேக்கியேல் 4:6ல், "இஸ்ரவேல் வம்சத்தரே, உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; சகல அருவருப்புக்களையும் விட்டு உங்கள முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கின்றார்". மததேயு 3::2ல் யோவான்ஸ்நானகன், "மனந்திரும்புங்கள், பரலோக இராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது. என்று பிரசங்கம் பண்ணினான்" லூக்கா 13:3ல், இயேசு கிறிஸ்து, நீங்கள் மனந்திரும்பாமல் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப் போவீர்கள்' பேதுரு, நற்செய்தியை அறிவிக்கும்போது, அப்.3:38ல், நீங்கள் மனந்திரும்பி ஒவொருவரும் பாவ மன்னிப்புக்கென்று ஏசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்", பவுல் அப். 17:30ல் "அறியாமையுள்ள் காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்.; இப்பொழுதோ மன்ந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்", எனக் கூருகின்றார்.
இன்று நாம் மனந்திரும்ப வேண்டும்.மனந்திரும்பாமல் கடவுளிடம் நெருங்க முடியாது. அதிகமான ஆண்களும், பெண்களும் பாவத்திலே வாழ்ந்து உலகத்தின் வழியைப் பின்பற்றுகின்ரர்கள்\ உலகப் பொருள்கள் தங்களுக்கு திருப்தி தரும் என்று அதையே மையமாகக் கொண்டு வாழுகின்றனர். மற்றவர்களோ, ஒரு நாள் ஆண்டவரைச் சந்திக்க வேண்டும் என்பதை மறந்து வாழுகின்றனர். நிச்சயமகவே நாம் மனந்திரும்ப வேண்டும். கடவுளை நோக்கித் திரும்பவேண்டும். மனந்திரும்புவதில் இரண்டு வகை உண்டு. முதலாவது மனம் வருந்துவது, இரண்டாவது, மனந் திரும்புவதை விட சற்று மேலானது. பரிசுத்த வேதாகமத்தில் யூதாஸ் மனந்திரும்பியத்தை வாசிக்கிறோம். அது உண்மையான மனந் திரும்புதலில்லை.அடுத்த வகை மனந் திரும்புதல் என்பது உள்ளத்தின் அடிப்படை தன்மையே மாறுவது. இதைத்தான் இயேசு கிறிஸ்து தாம் பேசியபோதும் குறிப்பிட்டார். பவுலும், யோவானும் கூட இதையே பேசினர். மனந்திரும்புதல் என்பது கடவுளுக்குரிய மனவருத்தம். இது கடவுளைக் குறித்தும் பாவத்தைக் குறித்தும் உள்ள அடிப்படை மாற்றம். இது பாவத்திலிருந்து கடவுளிடம் திரும்புவதாகும்.
இயேசு கூறிய சிறு கதைகளில் ஒன்று: ஒரு மனிதருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்..தந்தை தனது மூத்த மகனிடம், "இன்று நீ திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று "வேலை செய்" என்றார் அவனோ "முடியாது" எனச் சொல்லிவிட்டு பின்பு மனஸ்தாபப் பட்டு வேலைக்குச் சென்றான். இளைய மகனிடமும் அவ்வாறே கூறினான். "இதோ போகிறேன்: எனக் கூறியும் செல்லவில்லை. "இதில் யார் தன தகப்பனின் சித்தத்தைச் செய்தது? என ஏசு கேட்டார். உடனே மக்கள் "மூத்த மகன்" என்றார்கள். காரணம் தன தகப்பன் என்ன கூறினாரோ அதைச் செதபடியல் . இதுதான் மனந்திரும்புதல். ஒரு மனிதன் பாவத்திலிருந்து மனந்திரும்பும்போது அந்த பாவத்தை விட்டு விடுகிறான். அதே நேரத்தில் ஆண்டவர் பக்கம் சேர்ந்து அப்பவத்திற்கு எதிர்த்து நிற்கின்றான்.
பரிசுத்த வேதாகமம் மனந்திரும்புதல் என்பது தேவனிடத்தில் சேருவது எனப் போதிக்கிறது. (அப்போ.20:21). ஏனெனில் பாவம் தேவனுக்கு எதிரானது. சாதரணமாக நாம் நினைப்பது, பாவம் - அதைச் செய்பவனுக்கு எதிரானது என்று. மட்டுமல்ல பாவம் தேவனுக்கும் எதிரானது.ஆகவே பாவம் மிகக் கொடிதானது தாவீது தன்னோடிருந்த மனிதனுக்கு விரோதமாகச் செயல்பட்டான். உரியாவின் மனைவியோடு மனைவியோடு விபச்சாரம் செய்தான்.அதை மறைக்க அவனை யுத்தகளத்திலே கொல்லக் கட்டளையிட்டான்.பின்பு பத்சேபாளை (உரியாவின் மனைவியை) தன் மனைவியாக்கிக்கொண்டான். பாவத்தை மறைத்து விட்டோம் என நினைத்தான். ஆனால் தாவீதின் பாவம் வெளியாக்கப் பட்டது. உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும். என்று நிச்சயமாய் அறியுங்கள்" (எண் 32:23) தன் பாவம் வெளிப்பட்ட பொழுது, தாவீது, "தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவங்க்செய்து உமது கண்களுக்கு முன்பாக போள்ளங்கனத்தை நடப்பித்தேன்" எனக் கதறினான். பாவம் தேவனுக்கு விரோதமான பகை.
பாவம் தேவனுக்கு விரோதமான பகை என்பதால் மனந்திரும்புதலும் தேவனிடத்தில் இருக்க வேண்டும். நாம் தேவனிடத்தில் மனந்திரும்பவில்லை என்றால் அது உண்மையான மனந்திரும்புதலாக இருக்க முடியாது. ஒரு கப்பல் ஒன்று புயலில் மாட்டிக் கொண்டது. அதில் பயணம் செய்த பயணிகளில் சிலர் குடித்துக்கொண்டும்,சிலர் சூதாடிக் கொண்டும், சிலர் ஒருவரோடு ஒருவர் இச்சையான் வார்த்தைகளைப் பேசிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும் இருந்தனர்.கப்பல் கேப்டன், "நாம் பிரச்சனைக்குள்ளக இருக்கிறோம். கப்பல் மூழ்கப்போகிறது" என அறிவித்தார். குடித்துக்கொண்டிருந்தவர்கள், பாட்டில்களை ஓரமாக வைத்தனர், சூதடிக்கொண்டிருந்தவர்கள், சீட்டுக்கட்டை ஓரமாக ஒதுக்கி வைத்தனர். மரண பயம் பயணிகளைப் பிடித்தது.கடவுளைத் தேட ஆரம்பித்தனர். கடவுளே எங்களைக் காப்பாற்றும் என் கதறினார். கடவுளே எங்களைக் காப்பாற்றும் எனக் கதறினார். நடனகூடம், ஆராதனைக் கூடமாக மாறியது.
சிறிது நேரத்தில் கேப்டன் வந்து, "இப்பொழுது எல்லாம் சரியாகிவிட்டது. நாம் கரையை நெருங்கி விட்டோம்" என அறிவித்தார். உடனே குடித்துக் கொண்டிருந்தவர்கள், மீண்டும் டம்ளரில் மதுவை ஊற்ற ஆரம்பித்தனர். சூதாடிக் கொண்டிருந்தவர்கள் மீண்டும் சீட்டுக் கட்டைக் கலைத்துப் போட ஆரம்பித்தனர். ஆராதனைக் கூடம் நடனக் கூடமாக மாறியது. இது உண்மையான மனந்திரும்புதல் இல்லை.
மேலும், உண்மையான மனந்திரும்புதல் என்பது ஒருவரிடத்தில் இருக்கும் கௌரவத்தில் இல்லை.ஒரு குடிகாரன் ஒருவன் இருந்தான். அவன் குடித்துவிட்டு தன மனைவி, பிள்ளைகளைப் போட்டு அடித்து இம்சை பண்ணினான். ஒரு நாள் போலீஸ் அவனைப் பிடித்து சிறையில் அடைத்தனர். அவன் அழுது கொண்ண்டே, என்னைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்? என்னுடைய கெளரவம் என்னாவது? எனக் கூறினான். பாருங்கள்! அவன் மனம் வருந்தினான். தான் குடித்ததற்காகவும், மனைவி பிள்ளைகளைப் போட்டு உதைத்ததற்காகவும் அல்ல. அவன் பிடிபட்டதரற்காகவே. உண்மையான மனந்திரும்புதல் என்பது,செய்த செயல்களுக்காக உண்மையாக மனஸ்தாபப் படுவது. வெளியே தெரிந்ததற்காக அல்ல.
ஒரு மனிதன் தான் செய்த பாவங்களுக்காக தண்டிக்கப் பட்டாலும், மனந்த்திரும்பாமல் இருக்கமுடியும். கடவுளுக்கு விரோதமாய் பாவம் செய்தேன் என் உள்ளத்தின் ஆழத்தில் நினைக்கும்வரைக்கும் ஒருவன் மனந்திரும்ப முடியாது.
நீங்கள் ஒரு வாகனத்தில் செல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம், ஒரு நான்கு முனைச் சந்திப்பில் உள்ள சிக்னலில் மஞ்சள் விளக்கு எரிந்து சிவப்புக்கு மாறுகிறது. அது உங்களை உடனே வாகனத்தை நிறுத்தச் சொல்லுகிறது. இதைப் போல குற்ற உணர்வு என்ற ஆவிக்குரிய சிக்னல் உள்ளத்தில் எரிந்து பாவ வாழ்க்கையை நிறுத்தச் சொல்லுகிறது. மனந்திரும்புதல் அதைத் தொடர்ந்து வருகின்றது. இயேசுவை மறுதலித்த பேதுருவும், மனந்திரும்பினான். வெளியே சென்று மனங்கசந்து அழுது செய்த பாவத்திலிருந்து மனந்திரும்பினான். "பாவியாகிய என் மேல் கிருபையாய் இரும்" எனக் கதறினான். குற்ற உணர்வு மனந்திரும்புதலின் ஆரம்பம். மனஸ்தாபம் என்பது மனந்திரும்புதலின் அடுத்த பகுதி.
இன்னொரு பகுதியும் இருக்கிறது, அது, அமெரிக்க்ச சுதந்தரப் போரில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஜெனரல் வாஷிங்க்டனும், அவரது வீரர்களும் பிராண்டி ஒயின் கிரீக் என்ற இடத்துக்கு வந்தார்கள். பின்பு அவர்களுக்குப் பின் இருந்த ஆற்றின் மரப் பாலத்தை எரித்து விடலாமா? வேண்டாமா? என விவாதித்த்தனர். அதில் ஒருவர் நாம் ஒருவேளை தோற்றுவிட்டால் இதன் வழியாகத் தப்பிவிடலாம் என்று ஆலோசனை கூறினார். உடனே வாஷிங்க்டன், "இல்லை, நாம் எரித்து விடலாம். நாம் ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி" எனக் கூறி எரித்துவிட ஆணையிட்டார். மனந்திரும்புதலும் இதைப் போலத்தான். மீண்டும் பழைய பாவ வாழ்க்கைக்குள்ளாக போக முடியாதபடி, நமக்குப் பின் இருக்கும் பாலத்தை அழித்துவிட வேண்டும்.
சிலர், நாங்கள் குடிக்க வில்லை, கொலை செய்யவில்லை, விபச்சாரம் செயவில்லை, வேசித்தனம் செய்யவில்லை பிறகு நான் ஏன் மனந்திரும்ப வேண்டும்? எனக் கூறுகின்றனர்.
பிறகு ஏன் பிறரைப் பற்றி உள்ளத்தில் கசப்புடன் இருக்கவேண்டும்? பிறரை மன்னிக்கத தன்மையுடன் இருக்கவேண்டும்? வியாபாரத்தில் ஏன் தில்லுமுல்லு? தன்னை உயர்த்தும்படி, குறிப்பிட்ட நபரைப் பற்றி மோசமான விமரிசனம் ஏன்? பேட்டர்ஸ் ஸ்பை என்ற எழுத்தாளர், தன்னுடைய "ஒரு மாலைப் பிரர்ர்த்தனை" என்ற புத்தகத்தில் இதை நன்றாக விளக்கியுள்ளார்.
இன்று நான் ஒரு உள்ளத்தைக் காயப்படுத்தியிருந்தால்,
நான் என் வழியைவிட்டு ஒரு அடி எடுத்து வைக்கக் காரணத்தை வைத்திருந்தால்
நான் என் சுய சித்த வழியில் நடந்திருந்தால்,
அன்பான தேவனே என்னை மன்னியும்!
நான் உபயோகமற்ற அர்த்தமில்லாத (கெட்ட) வார்த்தைகள் பேசியிருந்தால்,
பெருந்தன்மையிலிருந்து நான் விலகியிருந்தால்,
எனக்கு நானே பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தால்,
அன்பான தேவனே என்னை மன்னியும்!
நான் உம்மிடம் அறிக்கை செய்த பாவங்களை தயவாய் மன்னியும்;
நான் அறியாமல் செய்த பாவங்களையும் மன்னியும்;
என்னை வழி நடத்தும், என்னிடம் அன்பாயிரும். என்னைப் பாதுகாரும்,
இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.
Jesus loves you!!!
This message was translated from "Repentance toward God" published by "BIBLE HELPS"
KIRISTHAVA KUDUMPATHTHIL PIRANTHA YELLORUM KRISTHAVARKAL AAKA MUDIYATHU. KIRUSTAVAM ORU MATAMALLA, MARKKAM!! ENEVE NAM ANAIVARUM MANANTHIRUMBIYAGA VENDUM! NANRI! +91 9840836690.
ReplyDelete