இன்றைய காலை ஜெபம் - 2
அன்புள்ள தேவனே,
இன்று நான் பயப்படும் காரியங்களை சந்திக்க எனக்கு தைரியத்தையும்;
நல்ல காரியங்களைச் செய்யவிடாமல், கெட்ட காரியங்களைச் செய்யத் தூண்டுகின்ற சோதனையை மேற்கொள்ள தேவையான பெலத்தையும்;
நான் செய்யும்படியாய் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை விடாமுயற்சியுடன் செய்யவும்,
எப்பொழுதும் பிறருக்கு உடனே உதவி செய்யும்படியான இரக்க குணத்தையும்;
நீர் எப்பொழுதெல்லாம் என் உள்ளத்திலே பேசுகின்றீரோ அப்பொழுதெல்லாம் கீழ்ப்படியவும்
என்னை இன்று உருவாக்கும்.
நான் பரிசுத்தமாய் வாழவும்,
உண்மை பேசவும்,
அன்பினால் கிரியை செய்யவும்
எனக்கு இந்த நாள் முழுவதும் உதவி செய்யும்...
இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே! ஆமென், ஆமென்.

No comments:
Post a Comment