1. கைப்பிரதி கொடுத்து ஊழியம் செய்வோர், முத்தலாவது நீங்கள் கொடுக்கின்ற கைப்பிரதியைப படித்துப் பாருங்கள். படிக்கத்தெரியாதவர்கள், (மொழி தெரியாதவர்கள்) தெரிந்தவர்களை படிக்கச் சொல்லி, கவனமாக கேளுங்கள். ஒரு முறை நான் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் கைப் பிரதி கொடுத்துக் கொண்டிருந்தேன். மனதுக்குள் ஒரு சந்தோஷம், உலக அதிசயங்களில் ஒன்றிலே நான் ஊழியம் செய்கின்றேன் என்று! ஒரு வாலிபன் வந்தான் "ஈசு ஆப்கோ பியார் கர்த்தாஹே" எனக் கூறி ஒரு கைப்பிரதியைக் கொடுத்தேன். அதை வாங்கி என் முன்னாலேயே படிக்க ஆரம்பித்தான். எனக்கு மகிழ்ச்சி! சில வரிகள் வாசித்துவிட்டு வீசி அடித்தான்.எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தக் கைப்பிரதியின் முதல் பக்கத்தில் ஒரு வயதான தம்பதியினரின் படம் அச்சிடப்பட்டு இருந்தது. பின்பு அதை எடுத்து வைத்துக் கொண்டேன். அடுத்து வந்த வயதானவரிடம் கொடுத்தேன். அவர் சில வரிகள் படித்து விட்டு, நன்றாயிருப்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டிப் படித்துக்கொண்டே சென்றார். பின்பு ஹிந்தி தெரிந்த என் உறவினரிடம் விசாரித்தேன். அந்தக் குறிப்பிட்ட கைப்பிரதியை வயதானவர்களுக்கே கொடுங்கள் என்று கூறினார்கள். தயவு செய்து கைப்பிரதியில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியாமலேயே நோட்டிஸ் கொடுப்பது போலக் கொடுக்காதீர்கள்.
2. அதில் உள்ள வசனங்களைக் கவனியுங்கள்! படித்து மனப்பாடம் செய்யுங்கள் ! கைப்பிரதியில் உள்ள எல்லாவற்றைக் காட்டிலும் வசனம் கிரியை செய்யும். பின்பு கதைகள, சம்பவங்களை நினைவு கூறுங்கள்.) எல்லாவற்றையும் மனதில் வைத்து இக் கைப்பிரதியைப் படிக்கிற யாவரும் மனந்திரும்ப ஜெபியுங்கள்! கொடுக்கும் பொழுது ஆவியானவர் வழி நடத்தும்படியாய் ஜெபித்துக் கொடுங்கள்!!.
3. கைப்பிரதி கொடுக்கும் பொழுது தலைப்பைச் சத்தமாகச் சொல்லிக் கொடுங்கள். அது என்ன? என்று விசாரிப்பவரிடம் இயேசு உங்களை நேசிக்கிறார் என்று சுவிஷேசத்தைச் சொல்லிக் கொடுங்கள். (ஒரு சபையில் உள்ள வாலிபர்கள், கைப்பிரதியைக் கொடுத்துவிட்டு சபைக்கு வாருங்கள் என் அழைத்ததாக அந்த சபையின் போதகரே கூறி வருத்தப் பட்டார்.) கைப்பிரதிகள் சபைக்கு வரும்படி கொடுக்கப் படும் அழைப்பிதழ் அல்ல. விநியோகிப்போர் முகவரி இருக்கும் இடத்தில் சீல் இருந்தால், முகவரி நன்கு தெரியும்படி அடித்துக் கொடுங்கள். இல்லையெனில் தொடர்பு முகவரிக்கு தொடர்பு கொள்ளும்படி விட்டுவிடுங்கள். விசாரிக்கிறவர்களுக்கு நீங்கள் எங்கே இருந்து வருகின்றீர்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள்.
4.கைப்பிரதியை விலையேறப் பெற்றதாய் நினையுங்கள். யாரெல்லாம் வாங்கி கீழே போட்டுவிடுவார்கள் என்று நினைக்கின்றீர்களோ அவர்களிடம் "உங்கள் நண்பருக்குக் பிரயோஜனமாய் இருக்கும்" எனக் கூறிக் கொடுங்கள். அப்பொழுதுதான் வாங்குபவர்களுக்கு கைப்பிரதியின் அருமை தெரியும். படிப்பார்கள்! இரட்ச்சிக்கப் படுவார்கள்!! ஒரே இடத்தில் இருந்து கைப்பிரதி கொடுப்பீர்களானால், கொடுத்து முடிந்த பின், கைப்பிரதி அருகில் எங்காவது கீழே கிடைக்கின்றதா? என் பார்த்து எடுங்கள். தூசியைத் தட்டி அடுத்த முறைக் கொடுப்பதற்க்கென்று சேர்த்து வையுங்கள். கீழே கிடந்த கிழிந்து போன கைப்பிரதியைப் படித்து இரட்ச்க்கப் பட்டு, சபை வைத்து ஊழியம் செய்யும் சகோதரனை எனக்குத் தெரியும். எனவே திரும்மக் கொடுக்க முடியாதபடி கிழிந்திருந்தால் வருத்தப்படாதிருங்கள்! விட்டுவிடுங்கள்!!.
5. கிருஸ்தவராகிய உங்களுக்கு ஒருவர் கைப்பிரதி கொடுத்தால், நான் கிறிஸ்தவன்தான் என கூறாமல் உற்சாகப் படுத்துங்கள். உங்கள் ஊழியத்தை ஆண்டவர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன் என்க கூறலாம். ஒரு டீ வங்கிக் கொடுக்கலாம். அல்லது ஒரு நல்ல காணிக்கைகூடக் கொடுக்கலாம். என்னால்தான் செய்ய முடியவில்லை, நீங்களாவது நன்றாகச் செய்யுங்கள். எனக் கூறி உற்சாகப்படுத்துகின்ற அநேக கிறிஸ்தவர்களைச் சந்திக்கிறேன். இயேசுவுக்கு சாட்சியாக் வாழுவதைக் குறித்து அவர்களோடு பேசுகின்றேன். ஜெபக் குறிப்புக் கொடுத்தார்களானால் அவர்களுக்காக என் தனி ஜெபத்தில் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். இதைப் போல செய்யுங்கள் ஆண்டவர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார்.
6. சிறுவர்கள் மூலமாக கைப்பிரதி ஊழியம் செய்யலாமா? இது ஒரு நல்ல கேள்வி! எங்கள் சிறுவர் ஊழியத்தில் கிருஸ்துமஸ் அன்று எங்கள் சிறுவர் ஊழிய மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எல்லாத் தெருக்களிலும் 'கேரல்' பாடல்களைப் பாடி பிள்ளைகள் மூலமாக கைப்பிரதி கொடுப்பதுண்டு. முதலாவதே அவர்களுக்கு என்ன சொல்லி கைப்பிரதியைக் கொடுக்க வேண்டும் என பாடம் நடத்துவதுண்டு. ஞாயிறு பாடசாலைப் பிள்ளைகளே பாடல்களைப் பாடுவார்கள், வசங்களைக் கூறுவார்கள், இனிப்புடன் கைப்பிரதியும் வழங்குவார்கள். எல்லாவற்றுக்கும் பயிர்ச்சி கொடுப்பேன். நானும் கூடச் செல்லுகிறபடியால் சார் கொடுக்கச்சொன்னார் என கூறுவார்கள். மற்றபடி பிள்ளைகளை வைத்துக் கொடுத்தால் மதிக்க மாட்டார்கள். சிறு பிள்ளைகளுக்குக் கொடுப்பதும் அறிவுடைமை ஆகாது. சிறு பிள்ளைகள் எனக்குக் கொடுங்கள் என கேட்டால் உங்கள் ஜெபத்தை நினைவு கூர்ந்து கொடுங்கள். கொடுக்கும் பொழுது உன் அம்மாவிடம் கொடு, அப்பாவிடம் கொடு, என கூறிக் கொடுங்கள்.
என்னுடைய சில அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். டெல்லியில் பொதுவாக மக்களைச் சந்திக்க வேண்டுமானால், வாரக் கடைசியில் பொதுவாக "பார்க்"கில் தான், சந்திக்க முடியும். மாலைப் பொழுதைக் குடும்பமாக களிப்பர்கள். நானும் ஹிந்தி கைப்பிரதிகளைக் கொடுப்பதுண்டு. குடும்பத்தில் முதியவர்கள், தங்களைப் போன்ற முதியவர்களோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். பெண்கள் ஒரு பக்கம். வாலிபர்கள் ஒரு பக்கம் பந்து விளையாடுவார்கள். சிறுவர்கள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒரு முதியவர் நடை பாதையில் வந்து கொண்டிருந்தார். ஒரு கைப்பிரதியை அவரிடம் கொடுத்தேன். அதைப் பார்த்தவுடன் அதைக் கிழித்தெறிந்தார். உடனே அவரை ஏறிட்டுப் பார்த்தேன். உடனே அவர் முகத்தில் தான் செய்தது தவறு என உணர்ந்ததைப் பார்த்தேன். ஒரு விநாடியில் அவர் அந்த இடத்தை விட்டு வேகமாகச் சென்றுவிட்டார். தூரத்திலே தன நண்பர்களோடு உட்கார்ந்து என் பக்கம் கையை நீட்டிப் பேசிக் கொண்டிருந்தார். நான் அவர்கள் பேசும் சப்தம் கேட்கும் இடத்தில் உட்கார்ந்து போவோர், வருவோருக்குக் கைப்பிரதி கொடுத்துக் கொண்டிருந்தேன். பின்பு வீட்டிற்க்குச் செல்லலாம் என் நினைத்து, வேறொரு வழியாக பார்க்கை விட்டு வெளியே வரும் பொழுது உள்ளே வருபவர்களிடமெல்லாம், கொடுத்துக் கொண்டே வந்தேன். அதில் ஒருவர், எனது முகவரி அச்சிட்ட பகுதியைப் பார்த்து விட்டு, ஒ..மதராஸ் வாலே ... என்று ஆரம்பித்து ஹிந்தியில் காச், மூச்சென்று கத்தினார். அவர் திட்டியதில் ஓரிரு வார்த்தைகள் புரிந்தது. போலிஸ் ஸ்டேஷன் புரிந்தது. அவர் திட்டிவிட்டுச் சென்றுவிட்டார். நான் கைப்பிரதியை கொடுத்துக் கொண்டே வெளியே வந்தேன். வெளியே அருகில் இருந்த பஸ் நிலையத்தில் நின்ற ஒருவரிடம் கைப்பிரதி கொடுத்து விட்டு, இங்கு எங்கு போலிஸ் ஸ்டேஷன் இருக்கிறது? என ஆங்கிலத்தில் கேட்டேன். அவர் கைகாட்டவே, நேராக போலிஸ் ஸ்டேஷனுக்குள் சென்றேன். அங்கிருந்த ஆய்வாளரிடம் "ஈசு ஆப்கோ பியார் கர்த்தா
ஹே". அவர் எழுந்து, இரு கைகளையும் நீட்டி கைப்பிரதியைத் தொட்டு வணங்கி, வாங்கிக் கொண்டார். பின்பு அங்கிருந்த பிற காவலர்களுக்கும் கொடுத்தேன். அதே பணிவோடு வாங்கிக் கொண்டார்கள். ஆண்டவருக்கு நன்றி கூறிக் கொண்டே வீடு திரும்பினேன்.
முன்பு வாரமொருமுறை சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில், நானும், ஒரு நண்பரும் சேர்ந்து கைப்பிரதி ஊழியம் செய்து வந்தோம். வெளியூர் செல்லும் அனைத்து ரயில்களிலும் கைப்பிரதி கொடுப்போம். எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சந்திக்கிறோம் என். ஒருநாள் கைப்பிரதி கொடுத்துவிட்டு வரும் பொழுது, ஒரு வாலிபன், எங்களிடம் "என்ன எல்லாப் போஸ்டர்களிலும், குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர்கள் கேட்கின்ர்ரர்கள்; செத்தவர்கள் உயிரோடு எழும்புகிறார்கள், என போடுகிறீர்களே எங்காவது யாரையாவது உயிரோடே எழுப்பினீ ர்களா? செத்தவனை உயிரோடே எழுப்பு, நான் இயேசுவை ஏற்றுக் கொள்ளுகிறேன், இல்லையானால் நீ பைபிளைப் படிக்கக் கூடாது, தூக்கவே கூடாது" என்றான். நான் அவனுக்கு என்ன பதில் கூறுவது என யோசித்த வேளையில், என் நண்பர் பேச ஆரம்பித்தார், "ஆண்டவர் தம்முடைய நேரத்தில் செய்வார், அவருடைய சித்தமிருந்தால் அதைச் செய்வார்" என கூறினார். நான், "யாரும் செத்தவர்களை அந்த்தக் கூட்டத்திற்கு கொண்டு சென்றிருக்க மாட்டார்கள், ஆகவே எழுப்பவில்லை" என கூறினேன். அவன் நாங்கள் சொல்லுவதைக் கேட்பதாக இல்லை. மீண்டும் மீண்டும் அவன் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். "நாம் ஒரு கூட்டம் போடுவோம், நீ இயேசுவைப் பற்றிப் பேசு; இயேசு இருக்கிறார் என்பதை நிரூபி; நான் இயசுவை ஏற்றுக்கொள்ளுகிறேன்; இல்லாவிட்டால் நீ பைபிளை எடுக்கக் கூடாது" என்றான். நாங்கள் கூறுவதைக் கேட்பதாக இல்லை. மீண்டும், மீண்டும் தான் சொல்லுவதையே சொல்லிக் கொண்டிந்தான். நான் சற்று என் சத்தத்தை உயர்த்தி, "இங்க பாரு... உன் கண் முன்னாடியே ஒரு செத்த பிணம் இயசுவின் நாமத்தினாலே உயிரோடு எழும்பும். எனக் கூறினேன். பின்பு என் இடது பக்கமாக வந்த அவனைப பார்க்கத் திரும்பினேன். அவனைக் காணோம். எங்கே என்று தேடிய பொழுது, அவன் முகம் தூரத்திலே கூட்டத்தின் மத்தியில் தெரிந்தது., நான் கையைத் தூக்கி இங்கே வா என சைகை செய்தேன். அவன் ஓடியே போய்விட்டான்.
ஒரு முறை டெல்லி, 'இந்தியா கேட்' பகுதியில் ஹிந்தி கைப்பிரதி கொடுத்துக் கொண்டுருந்தேன். மாலை 6 மணிக்கு ஆரம்பித்தேன் எனோடு வந்த என் குடும்பத்தினரும், உறவினர்களும் ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நான் அதைச் சுற்றிலும் வந்து, டூரிஸ்டுகளுக்கும், உள்ளுர்க்காரர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருந்தேன். 4 தலைப்புகளில் என்னிடம் கைப்பிரதிகள் இருந்தது. எல்லாவற்றையும் கொடுத்து முடித்துவிட வேண்டும் என ஜெபத்தோடு பிரயாசப்பட்டுக் கொன்டிருந்தேன். 8 மணியாகி விட்டது. கூட்டம் குறைய ஆரம்பித்தது. எனவே, மீதி கொஞசம் இருந்த கைப்பிரதியோடு வீட்டிற்க்குக் கிளம்ப ஆரம்பித்தேன். அப்பொழுது ஒரு தம்பதியினர், ஒரு 5 வயதுப் பையனோடு என்னைத் தேடி வந்து கைப்பிரதி கேட்டனர், "கையில் இருந்தவைகளில் ஒன்றைக் கொடுத்தேன்; இது அல்ல, வேறொன்று. அடுத்ததைக் கொடுத்தேன், இது அல்ல, வேறொன்று. இரண்டு தலைப்புகளில் மட்டுமே இருந்தது. இது தான இருக்கிறது என்றேன். அவர்கள் முகத்தில் எமாற்றம். குறிப்பாக அந்தச் சிறுவனின் முகத்தில். அவர்கள் சொன்னதில் இருந்து, தெரிந்தது, அவர்கள் கேட்டது, "எ ஹேங் சுப் சந்தேஷ்" என்ற கைப்பிரதி. அது "ஸ்கிரிப்சர் கிபிட் மிஷன்" வெளியிட்ட மிக அருமையான கைப்பிரதி. பொதுவாக எப்பொழுதும் சிறுவர் மத்தியில் ஊழியம் செய்யும் ஊழியர்கள் வார்த்தை இல்லாப் புத்தகம் ஒன்றைக் கையில் வைத்திருப்பார்கள். அட்டை பச்சை, அடுத்து கருப்பு, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறங்களில் அந்தப் புத்தகம் இருக்கும். அதை வைத்து, எப்பொழுது வேண்டுமானாலும் சுவிஷேசத்தை அறிவிக்கலாம். அந்தக் கைப்பிரதி அதே நிறங்களில் ஆனால் வேத வசனங்களோடும், படங்களோடும் மிக நேர்த்தியாய் இருக்கும். அந்த சிறு பையனின் விருப்பத்தை நிறைவேற்றும் படியாக என்னைத் தேடி அலைந்து பிடித்து விட்ட மகிழ்ச்சி, கடைசியில் ஏமர்ற்றமாக முடிந்து விட்டதைப் பார்த்து எனக்கும் மிகுந்த வருத்தம். அந்தச் சிறுவனின் மூலமாக அந்தக் குடும்பம் முழுவதும் சத்தியத்தை அறிந்து கொண்டிருக்கும் என் நினைத்தேன். மற்ற இரு தலைப்புகளில் இருந்த கைப்பிரதிகளைக் கொடுத்து அனுப்பினேன். அந்தக் குடும்பம் இயசுவை ஏற்றுக் கொள்ளவேண்டும் என் ஜெபித்தேன்.
உங்கள் கைப்பிரதி ஊழியத்தின் மூலமாக கூட்டங் கூட்டமாக மக்கள் சத்தியத்தை அறிந்து இயேசுவை ஏற்றுக்கொள்ள வாழ்த்துகின்றேன் நன்றி!!!
http://www.youtube.com/watch?v=cXbANmkaMoI&feature=colike
http://www.youtube.com/watch?v=cXbANmkaMoI&feature=colike

No comments:
Post a Comment