Powered By Blogger

Friday, 27 January 2017

AHILAI SELVIN'S

Wednesday, 7 December 2016

EARN - ONLINE

BTCClicks.com Banner

வலைப்பின்னலில் சம்பாதிக்க மற்றுமொரு வாய்ப்பு (1):
நண்பர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்!
இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களுக்குத் தக்க உங்களுக்கு பிட் காயின் தரப்படுகின்றது.
ஒரு பிட் காயின் என்பது $756.62 என்ற மதிப்புக்குச் சமம். 
நான் இந்த வலைத்தளத்தில் 21/11/2016ல், சேர்ந்தேன். இன்றய தேதி:7/12/2016 இதுவரை, 121 விளம்பரங்களை பார்த்துள்ளேன். எனது கணக்கில், 0.01948 எம்.பி.டி.சி. உள்ளது.
இதற்காக நாள் முழுவதும் கணினியிலேயே உட்காரவில்லை.
இந்த வலைத்தளத்தில் நான் மிக குறைந்த நேரமே செலவிட்டேன். (தினமும் நீங்கள் எப்பொழுது கணினியில் உட்காருகிண்றீர்களோ, அந்த நேரத்தில் இந்த வலைத்தளத்தில் சென்று, விளம்பரங்களை பார்த்ததால் போதும். எனது நேரம் தினமும் காலை 6:00 மணி)நான் எனது வலைத்தளத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு கொண்டு செல்லவே இதில் இணைந்திருக்கின்றேன்.
உங்களுக்கு நேரம் இருக்கும் பட்சத்தில், மேலே உள்ள பேனரை சொடுக்கி உங்களை பதிவு செய்து, ரூபாயை சம்பாதிக்க ஆரம்பியுங்கள். மேலும் எளிதாக சம்பாதிக்கும் வலைத்தள தொடுப்புடன் உங்களை சந்திக்கின்றேன்.
(ஒருவேளை உங்கள் வீட்டுக்கே தங்க டாலர் வரும்படியான இந்திய வலைத்தள தொடுப்பு இதே வலைத்தளத்தில் வெளியாகும்) எனவே இலவசமாகவே இந்த வலைத்தளத்தின் சந்தாதாரர் ஆகுங்கள்.

வாழ்த்துக்களுடன்,
உங்கள் சகோதரன்,
செல்வின் துரை,
செல்லிட பேசி :9840836690

Wednesday, 20 April 2016

KINGS SHALL BE AMONG YOUR DESCENDANTS!!

"உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுக்கப் பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்"

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!

இந்த வசனத்தில் ஆபிரகாமுக்கு சொன்னவர் 17:16ல், சாராளுக்கும் இதே வாக்குத்தத்தத்தைக் கொடுக்கின்றார். பின்பு இவர்களின் பேரனாகிய யாக்கோபுக்கும் இதே வாக்குத்தத்தத்தைக் கொடுக்கின்றார். (ஆதி. 35:11) 

பொதுவாகவே ஆண்டவர் தமது வாக்குத்தத்தத்தை தமக்கு கீழ்படிகின்றவர்களுக்கே கொடுக்கின்றார். (ஆதி.12:1) மேலும் 17:1ல், எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாய் இரு எனக் கூறுகின்றார். ஆண்டவருக்குமுன் நீங்கள் உத்தமனாய் இருக்க பிரயாசப்படுங்கள். சக மனிதர்களிடம் பிரச்சனை இருக்கின்றதா? அந்த மனிதரையே நோக்கிக் கொண்டிராமல், ஆண்டவரோடு கூட உள்ள ஐக்கியம் எப்படி இருக்கிறது? எனப் பாருங்கள்!! பலுகிப் பெருகச்செய்வார். வெற்றி பெறும் பொழுது முதலாவது ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்! அது வெறுமனே வாயிலிருந்து வராமல் உங்கள் ஜெபத்திலிருந்து அதாவது ஆண்டவரிடத்தில் நீங்கள் உதவி கேட்ட இடத்திலிருந்து வரவேண்டும்.

யாக்கோபுக்கு வாக்கு கொடுத்தபொழுது, அவன் அந்நிய தெய்வங்களைப் புதைத்திருந்தான். கர்த்தருக்கு பலிபீடம் கட்டினான், குடும்பத்தில் இழப்பை சந்தித்திருந்தான். அப்பொழுது ஆண்டவர் அவனுக்கு தரிசனமானார். 

உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள் என்றால், என் பிள்ளைகள் அல்லது பிள்ளைகளின் பிள்ளைகள் உலக மக்களுக்கு மிகவும் பயன்படும் பொருட்களைக் கண்டுபிடிப்பார்கள்; குறிப்பாக அவர்களின் சொல் சபையிலே (மக்களால்) ஏற்றுக்கொள்ளப்படும்.

ஜெபிப்போமா?

அன்பின் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வருகின்றேன்! இந்த வாக்குத்தத்தத்திற்க்காக நன்றியும், துதியும் மகிமையையும் செலுத்துகின்றேன். வசனத்துக்கு கவனமாக இருந்து கீழ்படிய கிருபை செய்யும். பிள்ளைகளைப் பற்றிய கவலைகளை ஒழித்துவிட்டு நாங்கள் உமது வாக்குத்த்தத்தைப் பற்றிப் பிடித்தக் கொண்டு முன் செல்ல உதவி செய்யும். எங்கள் பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள், அவர்களுடைய சமாதானம் பெரிதாயிருக்கும் என்று அறிக்கையிட கிருபை செய்யும், இயேசுவின் மூலம் பிதாவே, ஆமென், ஆமென்.


Friday, 8 April 2016

TO-DAY'S MORNING PRAYER - 3

இன்றைய காலை ஜெபம் - 3 

என் தேவனே நீர் எனக்கு ஜீவனைக் கொடுத்திருக்கின்றீர், இன்று உமக்குப் பிரியமானதைச் செய்ய நீர் விரும்புகின்றீர் என்பதை நான் அறிவேன்,
எனது சரீரத்தை சரியான நிலையில் வைத்துக்கொள்ளவும்,
மனதை கூர்மையாக வைத்துக் கொள்ளவும், 
எனது நினைவுகளை பரிசுத்தமாக காத்துக் கொள்ளவும்,
எனது வாயின் வார்த்தைகளை சுத்தமாகவும் உண்மை உள்ளதாகவும் 
இருக்க கிருபை செய்யும்,
இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே, ஆமென், ஆமென்.

Saturday, 2 April 2016

TO-DAY'S MORNING PRAYER - 2

இன்றைய காலை ஜெபம் - 2

அன்புள்ள தேவனே,
இன்று நான் பயப்படும் காரியங்களை சந்திக்க எனக்கு தைரியத்தையும்;
நல்ல காரியங்களைச் செய்யவிடாமல், கெட்ட காரியங்களைச் செய்யத் தூண்டுகின்ற சோதனையை மேற்கொள்ள தேவையான பெலத்தையும்;
நான் செய்யும்படியாய் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை விடாமுயற்சியுடன் செய்யவும்,
எப்பொழுதும் பிறருக்கு உடனே உதவி செய்யும்படியான இரக்க குணத்தையும்;
 நீர் எப்பொழுதெல்லாம் என் உள்ளத்திலே பேசுகின்றீரோ அப்பொழுதெல்லாம் கீழ்ப்படியவும் 
என்னை இன்று உருவாக்கும்.
நான் பரிசுத்தமாய் வாழவும்,
உண்மை பேசவும்,
அன்பினால் கிரியை செய்யவும்
எனக்கு இந்த நாள் முழுவதும் உதவி செய்யும்...
இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே! ஆமென், ஆமென்.

Tuesday, 22 March 2016

TO-DAY'S MORNING PRAYER - 1

இன்றைய நாள் காலை ஜெபம் - 1 
என் தேவனே! இது உம்முடைய நாள் என்று நான் உணர்ந்து கொள்ள எனக்கு உதவி செய்யும்; மற்ற நாட்களைக்காட்டிலும் இந்த நாளை வித்தியாசமாக உபயோகிக்க கிருபை செய்யும்,
உம்மைப்பற்றி மேலும் கற்றுக்கொள்ளவும், அதிகமாய் அறிந்து கொள்ளவும் இந்த நாளை உபயோக்கிக்க உதவி செய்யும்;
உம்முடைய நண்பர்களோடு பாடவும், ஜெபிக்கவும், வசனத்தை கவனிக்கவும், ஆராதிக்கவும் இந்த நாளை உபயோகிக்க  உதவி செய்யும்;
வியாதியில் இருப்போர், வயதானவர்கள், தனிமையில் இருப்போர் இவர்களுக்கு ஏதாவது செய்யும்படி இந்த நாளை பயன்படுத்த உதவி செய்யும்; 
வாரம் முழுவதும் மேலான வாழ்க்கை வாழ உதவி செய்யும், 
இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே! ஆமென், ஆமென்.