Powered By Blogger

Tuesday, 23 October 2012

A CONVERSATION.......

நமது சிறுவர் ஊழியத்தில் நடந்த ஓர் உரையாடல் 
சிறுவர்களிடம் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி: நீங்கள் பெரியவர்களானதும் என்னவாகப் போகின்றீர்கள்? என்பது.
ஒரு குறிப்பிட்ட நாளில் அப்படி கேட்ட பொழுது,
நான்: பெரியவர்கள் ஆனதும் நீங்கள் என்னவாகப் போகின்றீர்கள்?
(எல்லாப் பிள்ளைகளும் பதிலளித்தார்கள்) 
அன்றுதான் புதிதாக வந்த சிறுவன்: சார், நான் போலீஸ்  ஆகப் போகிறேன்.
நான்: (அவன் சொல்லியவிதம் வித்தியாசமாக இருக்கவே) போலீஸ் ஆகி என்ன செய்யப் போகிறாய்?   
பு.வ.சிறுவன்: (சைகையோடு) சீல் வைப்பேன் சார்.... இப்பொழுதே டெய்லி காலையில் போய் சீல் வைக்கிறேன் சார்...
நான்: (ஆச்சரியத்துடன்) எதற்கு சீல் வைக்கிறாய்?
பு.வ.சிறுவன்: அந்தப் பக்கம் இருக்கிற டாஸ்மார்க் கடைக்கு சார்... நான் போலீஸ் ஆகி எல்லா டாஸ்மார்க் கடைகளையும் மூடிவிடுவேன் சார்...
மற்ற பிள்ளைகள்: சார் அவன் அப்பா குடித்தே செத்துப் போய்விட்டார் சார்....
நான்: அப்படியா?
பு.வ.சிறுவன்: (ஆமாம் என்பதுபோல தலையை ஆட்டினான்... )
நான் இப்போதுள்ள போலிசால் ஏன் அதை செய்ய முடியவில்லை?
பு.வ.சிறுவன்: (அமைதியாக நின்றான்)
நான்: போலீஸ் ஆகி அதை நிறுத்த முடியாது. நாம் இன்றே ஒன்று செய்யலாம். ஆண்டவரால் மாற்ற முடியும். ஆண்டவரோடு கூட செய்யமுடியாத  காரியம் ஒன்றுமில்லை.. நாம் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளுவோம். ஆண்டவரிடம் வேண்டும்பொழுது குடிப்பவர்கள் மனந்திரும்புவார்கள். நாம் வேண்டிக்கொள்ளும் பொழுது ஆண்டவர் அதைச் செய்வார்.நாம் இப்பொழுதே ஜெபிப்போமா? 
(நாங்கள் இருவரும் மற்ற ஞாயிறு பள்ளிப் பிள்ளைகளோடு ஜெபித்தோம்)
 இந்த ஊழியத்துக்காக நீங்கள்  ஜெபிக்க மறவாதீர்கள். மேலும் அறிந்து கொள்ள கிவ்.... என்ற தலைப்பை சொடுக்குங்கள்! நன்றி

No comments:

Post a Comment