பிள்ளைகளின் படிப்பில் பெற்றோரின் பங்கு என்ன?
விழுப்புரம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து 10வது படித்த ஒரு மாணவன் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அவனது ஆசிரியர்கள், நீங்கள் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தால் இவனது எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றனர். அவனுடைய பெற்றோர் சென்னையில் எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என விசாரித்ததில் ஒரு சிலர் D .A .V . பள்ளியை சிபாரிசு செய்யவே சென்னைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். அருகில் ஒரு வீடடை வாடகைக்கு எடுத்து, தங்கிப் படித்தான்.
பின்பு அவன் தனக்கு டியூசன் தேவை என நினைத்ததால் டியூசன் எங்கு நன்றாக இருக்கும்? என் விசாரித்ததில் புரசைவாக்கத்தில் ஒரு டியூசன் மையம் அறிமுகமாகியது.
அந்த மையத்தில் விசாரித்ததில், நாங்கள் காலை 6 மணிக்கெல்லாம் பாடங்களை ஆரம்பித்து விடுவோம். எனவே முகப்பேரில் இருந்து இங்கு வந்து கற்றுக் கொள்ள முடியாது என்று கூறினர். (முகப்பேர் TO புரசைவாக்கம் 15 km) சரியென புரசைவாக்கத்தில் வாடகைக்கு வீடு பார்த்திருக்கிறார்கள். அஸ்பெஸ்டாஸ் போட்ட ஒரு அறை வீடுதான் கிடைத்திருக்கிறது. வாடகைக்கு எடுத்து (+1, +2 இரு ஆண்டுகளுக்கு) அம்மாவும் மகனும் தங்கினார்கள். படித்தான். இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து Maths , Physics, Chemisty, Biology என 4 பாடங்களுக்கும், ரூ 40,000/- கட்டினார்கள்.
+2 தேர்வு எழுதினான். அவன் எழுதிய அந்த வருடத்திலே கணக்கில் ஒரு மார்க் கேள்வி ஒன்று கடினமாக இருக்கவே, தேர்வு எழுதிய பின் தனது டியூசன் ஆசிரியருக்கு போன போட்டு, சார், நான் கணக்கில் 100/100 எடுக்க முடியாது என கூறி தனது பிரச்சனையைக் கூறினான். அதற்க்கு அவர், அந்த கேள்வியே தப்பு என்று உனக்குத் தெரியவில்லையா? அதை attend பண்ணி இருந்தாலே போதும். மதிப்பெண்கள் கிடைக்கும் என்றார்.
தேர்வு முடிவுகள் வந்தன. இப்பொழுது அவன் M.M.C யில் (மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில்) படித்துக் கொண்டிருக்கிறான். தமது பிள்ளைகளின் படிப்புக்காக இந்த பெற்றோரின் அர்ப்பணிப்பு எப்படி இருந்தது பார்த்தீர்களா?
யாரோ ஒருவர் இப்படி சொன்னார்: "நான் வாலிபனாக இருந்த பொழுது எனக்காக வாழ்ந்தேன், திருமணம் முடித்த பொழுது என் மனைவிக்காக வாழ்ந்தேன், பிள்ளைகள் பிறந்த பின் நாங்கள் பிள்ளைகளின் நலனுக்காக வாழ்கிறோம்".
நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது? பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.நமது அர்ப்பணம் நமது பிள்ளைகளுக்குத் தெரிந்தால்,எந்த காலத்திலும் அவர்கள் பெற்றோருக்கு ஆதரவாக இருப்பார்கள்.
எங்களது ஞாயிறு வேதாகம பள்ளியில், நாங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோரின் அருமையை சொல்லிக் கொடுக்கிறோம். பெற்றோரை நேசிக்கவும், அவர்களுக்கு கீழ்ப்படியவும், நிலைமையை விவாதிக்கவும் பைபிள் வசனத்தைக் கொண்டு கற்றுக் கொடுக்கிறோம். தன்னார்வப் பணியாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் எப்படி? எப்பொழுது? பிள்ளைகளுக்காக ஜெபிப்பது, என்பதைக் குறித்து கற்றுக் கொடுக்கிறோம். நீங்களும் பிள்ளைகளின் நல்வாழ்விற்காக ஞாயிறு பள்ளி இல்லாத சபைக்கு செல்லவேண்டாம். உங்கள் பிள்ளைகளை ஞாயிறு பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். நன்றி.

No comments:
Post a Comment