Powered By Blogger

Monday, 9 December 2013

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! ஏசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி  வரவேற்கின்றேன்! மிக நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை இந்த வலைத் தளத்தில் சந்திக்கின்றேன்! 
  கடந்த 12 வருடங்களாக  தமிழில் ஈ ஸ் கடோஸ்  என்ற பெயரில்  மாத  இதழை வெளியிட்டு வருகின்றோம். இதில் வேதாகம வினா - விடை போட்டி ஒன்றை கடந்த 9 மாதங்களாக வெளியிட்டு வந்தோம். இதில் குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்களும் கலந்து கொண்டு வேதத்தைப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வலைத்  தளத்திலும் வெளியிடுகின்றோம்.
வேதாகம வினாவிடைப் போட்டி (10)
(1இராஜாக்கள்) 
1.சாலமோன் யாரை கர்த்தருடைய ஆசாரியனாக இராதபடிக்கு தள்ளிப் போட்டான்? 
2. சாலமோனின்  பிரதான மந்திரி யார்?
3.  சாலமோன்  எந்த வருடம் எந்த மாதம் ஆலயத்தை கட்டத் தொடங்கினான்?
4. சாலமோன்  கர்த்தருக்கு சமாதான பலியாக எத்தனை ஆடு எத்தனை மாடுகளை பலியிட்டான்?
5. காபூல் நாடு - வாசிப்பது எங்கே?
6.சாலமோன் அவனைக் காரிய சமர்த்தனாக கண்டு........... - அவன் யார்?
7. யெரொபெயாமின் குமாரன்  யார்?
8. ஒபதியா என்பவன் யார்?
9. பெனாதாத்துக்கு உதவியாக வந்த இராஜாக்கள் எத்தனை பேர்?
10. எரிகோவை கட்டினவன் யார்? அவன் குமாரர் எத்தனை பேர்?
 விடைகள் 20/12/2013 வெள்ளிக்குள் வந்து சேரவேண்டும். சென்ற மாதம் திருமதி. ஜோதி தாமஸ் மதுரை அவர்கள்தான் பரிசை பெற்று இருக்கிறார்கள். கவனமாக வேதத்தைப் படியுங்கள். பதிலை அனுப்புங்கள். நன்றி! மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப் படும். 
உங்கள் முழு முகவரியோடு பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி:
zrmindia@gmail.com and copy to ddevanesan@hotmail.com
Thank you, God may bless you.
PROMISE OF THIS DECEMBRE















   

Tuesday, 27 November 2012

ZION REVIVAL MINISTRIES.......

Salvation, is the saving of the soul from sin and its consequences.It may also be called "deliverance" or "redemption" from sin and its effects.It is completely free.Salvation can't be obtained by the sacrifice of animals nor by shedding our hair.It can't be obtained by visiting pilgrims or by hurting ourselves with sharp things.
To be saved,we have to confess our sins to Jesus Christ.Then he will clense us from our sins,by his blood and purify us.No man on earth can save you,it can be done only by christ and the people of God will be able to guide you to be saved.Jesus said in Mark 16:15,16,

     “ And he said unto them, Go ye into all the world, and preach the gospel to every creature. He that believeth and is baptized shall be saved; but he that believeth not shall be damned”.

The expense of proclaiming the gospel to the gentiles is more. We can testify in the streets, distribute tracts and give gifts to children. It is also expensive to print and buy tracts. We are unable to do the gospel work without money.

          Let God bless those who donate towards this ministry.
We do these ministries,

1. ZION'S CHILDREN MINISTRY:
a. Training program for volunteers
b. Weekly Sunday Schools in villages also.
c. Children Re-treat.
c. Children Bible School in summer holidays
d. Cultural programs @ Christmas times.
2. “ESCHATOS”: A monthly magazine (trumpet of zion)
It’s subscription Rs.50/- per year. Rs.600/- Life in India
$ 10/- per year and $ 500/- Life.
3. TRACT PRINTING & PUBLISHING.
 We published 10 Tracts.
1. You have appointment with death.
 (ungalaiyum saavu santhikkum)
2. The truth about the lie.
 (poiyai pattrria oor unmai)
3. Repentance toward God
  (kadavulidam (manan)thirumpungal)
4. Old fashioned parents and modern age youth

  (hyder kaalaththu perrorum nava yuga izhaignarkalum)

These tracts are translated from “BIBLE HELPS” booklets and tracts

5. Christmas vaazhththukkal (Christmas greetings)
6. unagaluku oor iratchchakar (A savior for you)

These tracts are distributed in Tamilnadu and in few other countries to transform the Tamil community. If you want to pariticipate in the ministry to distribute tracts, please send  in your postal address to +919840836690. Sample tracts will be  sent to you freely. Thank you, God bless you.
Some tracts are yet to be printed,
1. “Vice of sexual immorality” (paaliyal kuttrrangal).

2. “The search for Happiness”(magizhchchiyai thedi).“Bible helps”

If you want be a part of this tract ministry,please donate Rs.20,000 for tracts to be printed and distributed all over the world in your family name.

4. VILLAGE MINISTRY: We do this ministry once in evrey month in villages nearby Chennai (government holidays).

Contact:

Bro.K.Selvin durai
zion house
#82/15, P.V.Kovil Street,
Kosapet, Chennai - 600 012
www.youtube.com/zion’schildrenbilbeschool
www.facebook.com/selvin.durai.1
Donation through bank:
Zion Revival Ministries, Indian Bank ottery branch, A/c No:441176777.


    “.......for God loveth a cheerful giver”. 2Cori.9:7


GOOD WORKS SUCCEED ONLY THROUGH SELF SACRIFICE

 


Monday, 12 November 2012

FROM HEARING..........No: TWO

பிள்ளைகளின் படிப்பில் பெற்றோரின் பங்கு என்ன? 
விழுப்புரம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து 10வது படித்த ஒரு மாணவன் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அவனது ஆசிரியர்கள், நீங்கள் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தால் இவனது எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றனர். அவனுடைய பெற்றோர் சென்னையில் எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என விசாரித்ததில் ஒரு சிலர் D .A .V . பள்ளியை சிபாரிசு செய்யவே சென்னைக்கு  கொண்டுவந்து சேர்த்தனர். அருகில் ஒரு வீடடை வாடகைக்கு எடுத்து, தங்கிப் படித்தான்.
பின்பு அவன் தனக்கு டியூசன் தேவை என நினைத்ததால் டியூசன் எங்கு நன்றாக இருக்கும்? என் விசாரித்ததில் புரசைவாக்கத்தில் ஒரு டியூசன் மையம் அறிமுகமாகியது. 
அந்த மையத்தில் விசாரித்ததில், நாங்கள் காலை 6 மணிக்கெல்லாம் பாடங்களை ஆரம்பித்து விடுவோம். எனவே முகப்பேரில் இருந்து இங்கு வந்து கற்றுக் கொள்ள முடியாது என்று கூறினர். (முகப்பேர் TO புரசைவாக்கம் 15 km) சரியென புரசைவாக்கத்தில் வாடகைக்கு வீடு பார்த்திருக்கிறார்கள். அஸ்பெஸ்டாஸ் போட்ட ஒரு அறை வீடுதான் கிடைத்திருக்கிறது. வாடகைக்கு எடுத்து (+1, +2 இரு ஆண்டுகளுக்கு) அம்மாவும் மகனும்  தங்கினார்கள்.  படித்தான். இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து Maths , Physics, Chemisty, Biology என 4 பாடங்களுக்கும், ரூ 40,000/- கட்டினார்கள். 
+2 தேர்வு எழுதினான். அவன் எழுதிய அந்த வருடத்திலே கணக்கில் ஒரு மார்க் கேள்வி ஒன்று கடினமாக இருக்கவே, தேர்வு எழுதிய பின் தனது டியூசன் ஆசிரியருக்கு போன போட்டு, சார், நான் கணக்கில் 100/100 எடுக்க முடியாது என கூறி தனது பிரச்சனையைக் கூறினான். அதற்க்கு அவர், அந்த கேள்வியே தப்பு என்று உனக்குத் தெரியவில்லையா? அதை attend பண்ணி இருந்தாலே போதும். மதிப்பெண்கள் கிடைக்கும் என்றார்.  
தேர்வு முடிவுகள் வந்தன. இப்பொழுது அவன் M.M.C யில் (மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில்)  படித்துக் கொண்டிருக்கிறான். தமது பிள்ளைகளின் படிப்புக்காக இந்த பெற்றோரின் அர்ப்பணிப்பு எப்படி இருந்தது பார்த்தீர்களா?
யாரோ ஒருவர் இப்படி சொன்னார்: "நான் வாலிபனாக இருந்த பொழுது  எனக்காக  வாழ்ந்தேன், திருமணம் முடித்த பொழுது என் மனைவிக்காக வாழ்ந்தேன், பிள்ளைகள் பிறந்த பின் நாங்கள் பிள்ளைகளின் நலனுக்காக வாழ்கிறோம்".
நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது? பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.நமது அர்ப்பணம் நமது பிள்ளைகளுக்குத் தெரிந்தால்,எந்த காலத்திலும் அவர்கள் பெற்றோருக்கு ஆதரவாக இருப்பார்கள்.
எங்களது ஞாயிறு வேதாகம பள்ளியில், நாங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோரின் அருமையை சொல்லிக் கொடுக்கிறோம். பெற்றோரை நேசிக்கவும், அவர்களுக்கு கீழ்ப்படியவும், நிலைமையை விவாதிக்கவும் பைபிள் வசனத்தைக் கொண்டு கற்றுக் கொடுக்கிறோம். தன்னார்வப் பணியாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில்  எப்படி? எப்பொழுது? பிள்ளைகளுக்காக ஜெபிப்பது, என்பதைக் குறித்து கற்றுக் கொடுக்கிறோம். நீங்களும் பிள்ளைகளின் நல்வாழ்விற்காக  ஞாயிறு பள்ளி இல்லாத சபைக்கு செல்லவேண்டாம். உங்கள் பிள்ளைகளை ஞாயிறு பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். நன்றி.

Sunday, 11 November 2012

WE WISH YOU A HAPPY CHRISTMAS!! (ENGLISH)

Why did JESUS come to this world?

“....... for I am not come to call the righteous, but sinners to repentance”. Math. 9:13

“.....I came not to call the righteous, but sinners to repentance”. Mark 2:17.
“This  is a faithful saying, and worthy of all acceptation, that Christ Jesus came into the world to save sinners;....1 Timothy 1:15 
What is sin?
"
All unrighteousness is sin: ....” 1 John 5:17
“Beware that there be not a thought in thy wicked heart, ........  and thine eye be evil against thy poor brother, and thou givest him nought; and he cry unto the LORD against thee, and it be sin unto thee”. Exodus.15:9

“In the multitude of words there wanteth not sin: but he that refraineth his lips  is wise”. Pro. 10:19 
“An high look, and a proud heart,  and the plowing of the wicked,  is sin”.  Pro. 21:4 
 "The thought of foolishness  is sin" :... Pro.24:9
“Then when lust hath conceived, it bringeth forth sin: and sin, when it is finished, bringeth forth death”. Jam.1:15.
“Therefore to him that knoweth to do good, and doeth  it not, to him it is sin”. James 4:17.
Is anybody live here, without sin? 
 “If they sin against thee, (for  there is no man that sinneth not,)....” 1 Kings 8:46. 
“For all have sinned, and come short of the glory of God;” Romans 3:23. 
 “If we say that we have no sin, we deceive ourselves, and the truth is not in us”. 1 John 1:8 
“...... and so death passed upon all men, for that all have sinned:” Romans 5:12 
How did our sins are forgiven? 
“........ who can forgive sins but God only?” Mark 2:7
“But that ye may know that the Son of man hath power on earth to forgive sins,........” Matthew 9:6
“ But that ye may know that the Son of man hath power on earth to forgive sins,......” Mark 2:10
 “But that ye may know that the Son of man hath power upon earth to forgive sins,.......” Luke 5:24
 “And ye know that he (JESUS) was manifested to take away our sins; and in him is no sin”. 1 John 3:5.
 “He that covereth his sins shall not prosper: but whoso confesseth (to JESUS) and forsaketh  them shall have mercy”. Proverbs 28:13.
 “If we confess our sins, he (JESUS) is faithful and just to forgive us  our sins, and to cleanse us from all unrighteousness”. 1 John 1:9.
Have I live without sin? 
Certainly!
“Thy word have I hid in mine heart, that I might not sin against thee”. Psalm 119:11.
We should read and meditate the words of Holy Bible, daily. The Holy Bible is the mirror of our heart. How the mirror shows the dust on our face, like that, The Holy Bible shows your heart. If you find any dust in your heart or mind please confess and oneness with God. This is ‘the life of Christians’.
 “therefore pray ye: Our Father which art in heaven,  Hallowed be thy name ....... And lead us not into temptation, but deliver us from evil:...” Matthew 9:6,13. 
“And forgive us our sins; for we also forgive every one that is indebted to us. And lead us not into temptation; but deliver us from evil”. Luke 11:4. 

We pray to JESUS daily. 
Finally,
“Neither is there salvation in any other: for there is none other name under heaven given among men, whereby we must be saved”. Acts 4:12.
“And they said, Believe on the Lord Jesus Christ, and thou shalt be saved, and thy house”. Acts. 16:31  


    

selvin12zion@gmail.com




Saturday, 10 November 2012

CHRISTMAS GREETINGS!!!

இயேசு ஏன் இந்த உலகிற்கு வந்தார்?

இயேசு, "நீதிமான்களை அல்ல: பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்" என்றார்.                   மத்தேயு  9 :13, மாற்கு 2:12
"பாவிகளை இரட்ச்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும், எல்லா அங்கிகரிப்புக்குப் பாத்திரமுமானது. 1தீமோத்தேயு 1:15
பாவம் என்றால் என்ன?
"அநீதியெல்லாம் பாவந்தான்". யோவான் 5:17
"......உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழை சகோதரனுக்கு கொடாமல் மறுத்து, அவன் மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்து கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும், எச்சரிக்கையாய் இரு: அப்படி செய்வாயானால் அது உனக்கு பாவமாகும்". உபாகமம் 15:9.

"சொற்களின் மிகுதியில் பாவமில்லாமல் போகாது". நீதிமொழிகள் 10:19.
"மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கன் போடும் வெளிச்சம் பாவமே". நீதிமொழிகள் 21:9.
"தீய நோக்கம் பாவமாம்". நீதிமொழிகள் 24:9
"இச்சையானது கர்ப்ந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது மரணத்தைப் பிறப்பிக்கும்". யாக்கோபு 1:5.
"ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாய் இருந்தும், அதை செய்யாமல் போனால், அது அவனுக்குப் பாவமாய் இருக்கும். யாக்கோபு 4:14                                                                                    
பாவமில்லாத பரிசுத்தவான்கள் உண்டா?

"பாவம் செய்யாத மனுஷன் இல்லையே". 1இராஜாக்கள் 8:46
"எல்லாரும் பாவஞசெய்து  தேவ மகிமையற்றவர்களாகி........." ரோமர் 3:23
"நமக்கு  பாவமில்லை     என்போமானால்     நம்மை    நாமே        வஞசிக்கிரவர்களாய் இருப்போம், சத்தியம் நமக்குள் இராது". 1யோவான் 1:8.
"எல்லா மனுஷரும் பாவம் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும்.........." ரோமர் 5:12
பாவம் எப்படி மன்னிக்கப்படும்?

"தேவன் ஒருவராலேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? மாற்கு 2:7

"பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு (இயேசுவுக்கு) அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறிய வேண்டும்". மத்தேயு 9:6, மாற்கு 2:10, மத்தேயு 5:24

"அவர் (இயேசு) நமது பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டார் என்று அறிவீர்கள். அவரிடத்தில் பாவமில்லை". யோவான் 3:5 
"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை (இயேசுவிடம்) அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ, இரக்கம் பெறுவான்". நீதிமொழிகள் 28:13

"நம்முடைய பாவங்களை நாம் (இயேசுவிடம்) அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியுமுள்ளவராய் இருக்கிறார்". 1யோவான் 1:9.
இனி பாவம் செய்யாமல் இருக்க முடியுமா?
"நான் உமக்கு விரோதமாய் பாவஞசெய்யாதபடிக்கு, உமது வாக்கை எனது இருதயத்தில் வைத்து வைத்தேன்". சங்கீதம் 119:1


இனி மேல் பாவம் செய்யாமலிருக்க பரிசுத்த வேதாகமத்தை வாசித்து தியானிக்க வேண்டும். கண்ணாடி எப்படி முகத்தில் உள்ள அழகை அல்லது அழுக்கை உள்ளது உள்ளபடி காட்டுகின்றதோ, அதைப் போல, பரிசுத்த வேதாகமம், நம் உள்ளத்தில் இருப்பதை காட்டுகின்றது. அழுக்கு இருந்தால், இயேசுவிடம் அறிக்கை செய்து விட்டுவிட வேண்டும். மீண்டும் அந்த பாவ சூழ்நிலை வந்தால், வெற்றி எடுக்க, தேவனிடம் கிருபையை கேட்டுப் பெற்றுக் கொள்ளவேண்டும். அழகு இருந்தால் ஆண்டவருக்கு நன்றி கூறவேண்டும். (இது தான் கிறிஸ்தவ் வாழ்க்கை)

இயேசு: நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது, பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே, .................. எங்களை சோதனைக்குள் உட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை விடுவித்துக் காத்துக் கொள்ளும்...... மத்தேயு 6:1-3, லூக்கா 11: 2- 14.

தினந்தோறும் இயேசுவை நோக்கி ஜெபிக்க வேண்டும். அந்த நாளுக்குரிய பாவத்தை மேற்கொள்ள வேண்டிய கிருபையை ஆண்டவர் தந்தருளுவார். ஆகையால் நாம் ஆண்டவருக்குப் பிரியமான் வாழ்க்கை வாழமுடியும். 
இறுதியாக,

"அவராலேயன்றி (இயேசுவாலேயன்றி) வேறொருவராலும் இரட்சிப்பு (விடுதலை) இல்லை. நாம் இரட்சிக்கப் படும்படிக்கு, வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசுவினுடைய) நாமமே அல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. அப்போஸ்த்தலர் 4:12.
"கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவை விசுவாசி: அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்ச்சிக்கப் படுவீர்கள். அப்போஸ்த்தலர் 16:31..  
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!!

Tuesday, 6 November 2012

FROM HEARING.....No:1

எங்களது சொந்த ஊர் அகிலாண்டபுரம் என்ற ஒரு கிராமம். இது இப்பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. இங்கே ஒரு ரோமன் கத்தோலிக்க சபையும், தெனிந்திய திருசபையும் உள்ளது. இந்த சபைக்கு பன்னீர் குளத்தில் இருந்து, போதகர் ஆராதனை நடத்த வருவார். பன்னீர் குளம் சர்க்கிள். இதில் அப்பொழுது பதினான்கு சபைகள் இருந்தன. இப்பொழுது பதினாறு சபைகள். ஒரே போதகர். 
ஒரு வாரத்திற்கு நான்கு சபைகள். எங்கள் ஊருக்கு மூன்றாவது வாரம், பதினோரு மணிக்கு நற்கருணை ஆராதனை. நான் அங்கிருந்த நாட்களில் அகஸ்டின் என்ற குருவானவர் ஊழியம் செய்து வந்தார். அவருடைய அனுபவ சாட்சியே இது. 
அந்த பதினான்கு சபைகளில் தெற்கு மயிலோடை கிராமத்தில் உள்ள சபையும் ஒன்று. அங்குள்ள சபை விசுவாசிகள் மூலமாக வந்த பிரச்சனை இது. இந்த குருவானவரை  அங்குள்ள விசுவாசிகளுக்குப் பிடிக்கவில்லை. இது இவருக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது. 
ஒரு ஞாயிறு அன்று இவர் ஊழியத்தை அந்த கிராமத்தில் முடித்து விட்டு, தனது பைக்கை எடுத்த பொழுது, அதின் பின் சக்கரத்தில் காற்று இல்லை. பஞ்சர் ஆக்கப் பட்டிருந்தது. பக்கத்தில் இருந்து பார்த்து சிரித்தார்கள். இவர் மீது மதிப்பு வைத்திருந்த ஒருவர் ஓடி வந்து, "ஐயா, எனது தொழுவில் வண்டியை விட்டு விடுங்கள். கயத்தாரில், இருந்து ஆள் அனுப்பி சரி செய்யுங்கள் எனக் கூறி பைக்கைத் தள்ளி தனது தொழுவத்தில் விட்டார். 
மதியம் இரண்டு மணி. சரியான வெயிலில், மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும். தன பையைத் தூக்கிக் கொண்டு ஆண்டவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே நடந்தார். ஒரு கிலோமீட்டர் நடந்தபின், முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர், அந்தப் பக்கம் பைக்கில் வந்தவர், தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு, கயத்தாறில் கொண்டுவந்து விட்டுவிட்டார். 
அடுத்த மாதம் மீண்டும் தெற்கு மயிலோடை செல்ல வேண்டிய ஞாயிறு. சகலத்தையும் ஆண்டவர் கரங்களில் ஒப்புக் கொடுத்து விட்டு, குறிப்பிட்ட நேரத்தில், போய் சேர்ந்தார். அன்று சபைக்கு இவரை எதிர்த்த ஒருவரும் வரவில்லை. ஆராதனை முடிந்த பின்பு, வந்திருந்த விசுவாசிகள், "ஐயா நேற்று மதியம், ஒரு கொலை நடந்து விட்டது. போலீஸ் வேன் இரவு வந்து உங்களை எதிர்த்த அத்தனை பேரையும், விசாரணைக்காக பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். அவர்கள் குடும்பத்தினர், அனைவரும் போலீஸ் ஸ்டேஷன் இல் அவர்களைப் பார்ப்பதற்காக சென்றிருக்கின்றனர்" என்றனர்.
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். 
எமது சில  வீடியோக்கள், www.youtube.com/zion’schildrenbibleschool என்ற முகவரியில் இருக்கிறது. பார்க்கலாம்.

Monday, 5 November 2012

TESTIMONY No: THREE

சாட்சி எண்: மூன்று  
ஒரு முறை, நமது சீயோன் ஜெப கோபுரத்தில் பள்ளியில் படிக்குன் மாணவ மாணவியருக்கான ஒரு சிறப்பு ஜெபக்கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தேன். ஜெப கோபுரத்திற்கு மின்சாரம் பக்கத்து வீட்டில் இருந்து எடுத்திருந்ததால் ஒரு நோட்டீசை அவருக்கு கொண்டு போய் கொடுத்து ஒலிபெருக்கி வைக்கப் போகிறேன், மின்சாரம் வேண்டும் எனக் கேட்டேன். அவர் குடித்திருந்தார். சரி நடத்துங்கள் என்று அனுமதி கொடுத்தார். வெளியே பாய் விரித்து, ஒலிபெருக்கியை வைத்ததிருந்தேன். யாரோ ஒருவர் போலீஸ்க்கு போன் போட்டு, ஒலிபெருக்கி இடையூறாய் இருக்கிறது என தெரிவிக்க, போலீஸ் வந்தது. வந்தவர்கள் சப்தத்தை குறைத்து வைத்து நடத்துங்கள் எனக் கூறவே, நான் அப்படியே செய்தேன். 
மின்சாரத்தை கொடுத்த அந்த பக்கத்து  வீட்டுக்காரர், குடித்துவிட்டு வந்து "இவர் நல்லது செய்கிறார், இதையும் போய் புகார் கொடுத்திருக்கிறார்களே என்று தெருவில் நின்று திட்டி இருக்கிறார். அவர் திட்டியது எனக்குத் தெரியாது. அதையும் ஒருவர் போலீசுக்கு தெரிவிக்கவே, போலீஸ் வந்து, ஒலிபெருக்கியை நிறுத்து. எதுவும் வெளியே இருக்கக் கூடாது எனக் கூறவே, ஒலிபெருக்கியை எடுத்து உள்ளே வைத்து, சப்தத்தை கோஞசமாக வைத்து, நடத்தினேன். திட்டியவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விட்டனர். அவரை அழைத்துச் சென்றது எனக்குத் தெரியாது. ஜெபக்கூட்டத்தின் இடையிலே ஒருவர்  வந்து, "உன்னால்தான் அவன் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறான், அவனை மீட்பதற்கு வழியைப் பார்" என்றார். நான் ஜெபக்கூட்டம் முடிந்தபின் போகிறேன் என கூறிவிட்டு, ஜெபத்தை நடத்தினேன். ஜெபம் எட்டரை மணிக்கு முடிந்தது. ஒரு சின்ன ஜெபம் செய்தேன். சிறுவர் வேதாகமப் பள்ளியில் உபயோகித்தது போக மீதியான புத்தகங்களை, வீட்டுக்கு கொண்டு செல்லலாம் என்று ஒரு மூட்டையாக கட்டினேன். அதை எடுத்து பைக்கில் வைத்தேன், நேராக ஸ்டேஷனுக்கு சென்றேன். புத்தக மூட்டையை ஸ்டேஷன் வாசலில் வைத்துவிட்டு, உள்ளே சென்றேன். அங்கிருந்த உதவி ஆய்வாளரிடம் பேசினேன். "இவர் திட்டியது எனக்குத் தெரியாது, தெரிந்திருந்தால் திட்டவிட்டிருக்க மாட்டேன். சிறு பிள்ளைகளுக்கான ஜெபக்கூட்டம் அது" என்றேன். "இவர் தெரியாமல் செய்துவிட்டார், மன்னியுங்கள்" எனக் கூறினேன். எனக்கு பதில் சொல்ல வாயை திறந்து பேசிய பொழுது, அவருக்கு திக்கு வாய் என அறிந்தேன். திக்குவாய் என அறிந்த பொழுது என் உள்ளம் உடைந்தது. அதை அவரும் அறிந்தார். 
உடனே ரைட்டர் பக்கம் திரும்பி, "அவரது மகனை ரேசன் கார்டு எடுத்து வரச் சொல்லுங்கள், இவரிடம் ஒரு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி விடுங்கள்" என்றார். என் பக்கம் திரும்பி, "நீங்க போங்க சார் நாங்க இவரை அனுப்பி வைக்கிறோம்" என்று திக்கிய படியே சொன்னார். 
"குடிப் பழக்கம் எவ்வளவு பிரச்சனையை ஏற்ப்படுத்துகின்றது, பார்த்தீர்களா? மத்திய அரசில் வேலை செய்கின்றீர்கள். ஜெயிலுக்குப் போனால், வேலை போய் விடும் தெரியுமா? இது நீங்கள் எனக்குச் செய்த உதவியே இல்லை. ஆண்டவருக்கு குடிப்பது பிடிக்காது என்று உங்களுக்கு தெரியதா? இனிமேல் குடிக்காதீர்கள்" என அந்த சகோதரனுக்கு கூறினேன். பின்பு உதவி ஆய்வாளருக்கு நன்றி கூறிவிட்டு வெளியே வந்தேன். வெளியே மதுரைமுத்து தெருவே நின்றிருந்தது. என்னிடம் வந்து என்ன ஆச்சி? எனக் கேட்டனர். ரேசன் கார்டை எடுத்துக் கொண்டு கொடுக்கச் சொல்லுங்கள், மன்னிப்புக் கடிதம் வாங்கிக் கொண்டு விட்டு விடுவார்கள்" என்று கூறிவிட்டு, புத்தக மூட்டையை எடுத்துக் கொண்டு பைக்கை கிளப்பினேன். 
நடந்த இந்த சம்பவத்தில் இருந்து என்ன அறிந்து கொண்டீர்கள். எங்கே உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்.........